என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மே 23, 2011

22 நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி


தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல  நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது.   பலத்த கெஞ்சலுக்கு  பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி..........

கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே?

வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது  பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க....

கேள்வி: என்னது சூட்டிங்கா? அப்புறம் எதுக்கு விஜயகாந்த திட்டினீங்க?
வடிவேலு: நான் எப்பன்னே...விஜயகாந்த திட்டினேன். அவரு எங்க ஊர்காரரு..எல்லாம் ஒன்னுக்கு ஒண்ணா மண்ணுக்கு மன்னா மதுரையில சுத்திக்கிட்டு திரிஞ்சோம்...சின்னக்கவுண்டர் படத்துல நான் அவருக்கு பிடிச்ச கொடையைக்கூட இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்..நான் போயி அவர திட்டுறதா?

கேள்வி: அப்படின்னா....தண்ணில மிதக்கற கப்பல ஓட்டுறவன் பேருதான் கேப்டன்னு சொன்னதெல்லாம்?
வடிவேலு: ஒ...நீங்க அத கேக்குறீங்களா?நான் கேப்டன்னு சொன்னது விஜயகாந்த இல்ல....மேலே பறக்குதே பிளேனு அத ஓட்டுறவன சொன்னேன்....


கேள்வி: என்னது பிளைட் ஓட்டறவன சொன்னீங்களா?
வடிவேலு: ஆமாண்ணே...சத்தியமா நான் அவனைத்தானே சொன்னேன்...ஒருநாளு நான் லண்டனுக்கு சூட்டிங் போறதுக்காக பிளேனுல பறந்துக்கு இருந்தேன். அப்பா நடு வானத்துல பிளேனு கிடுகிடுன்னு ஆடுச்சு. மாரியாத்தா என்னை காப்பாத்துன்னு நேரா பிளேனு ஓட்டுற கேப்டன்கிட்ட போயி எப்பா பாத்து ஓட்டக்கூடாதா? எம்புட்டு பச்ச புள்ளைக வருதுக...இப்படி பொறுப்பில்லாம பள்ளம் மேட்டுல விட்டு பிளேன ஓட்டு றியேன்னு தான் கேட்டேன். அந்த நாதாரி தண்ணி போட்டுருப்பான் போல...விட்டான் பாருங்க ஒரு அறை...என் கன்னம் பழுத்து போச்சு. என்ன ஒரு வில்லத்தனம் பயபுள்ளைக்கு...அந்த கடுப்புலே இருந்தேன். திருவாரூர் கூட்டத்துல கலைஞர் அய்யா முன்னாடி பேச நின்னப்போ அந்த நேரம்பாத்து ஒரு பிளேனு வானத்துல பறந்துச்சு.எனக்கு அடி வாங்குன யாவுகம் வந்திருச்சு...அதான் அப்படி பேசிட்டேன்.

கேள்வி: பிளைட் ஓட்டறவன் பேரு கேப்டன் இல்லியே...பைலட்ல?
வடிவேலு: அப்படியா....பாத்தீங்களா நான் இவ்வளவு நாளா பிளேனு ஓட்டறவன் பேருதான் கேப்டன்னு நினைச்சுக்கு இருந்தேன்.நான் என்ன உங்க மாதிரி படிச்ச ஆளா? கிராமத்துக்காரன் வெள்ளாந்தியான ஆளுண்ணே....

கேள்வி: அப்படின்னா நிஜமாவே நீங்க விஜயகாந்த திட்டலியா?

வடிவேலு: நான் திரும்ப திரும்ப சொல்றேன்...விஜயகாந்து அண்ணன நான் திட்டவே இல்லே...அவரு எம்புட்டு நல்லவரு தெரியுமா? நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்கறதுக்கு அவருதான் காரணம்.

கேள்வி: அப்படியா...எப்படி?

வடிவேலு: அது பழைய கதைன்னே.... சின்னக்கவுண்டர் படம் எனக்கு ரெண்டாவது படம்ண்ணே...அதுல  நான் விஜயகாந்துக்கு கொடை பிடிச்சுக்கே படம் முழுக்க வருவேன். அப்புடி கொடை பிடிக்கும் பொது ஒரு தடவ கொடக்கம்பி அவரு கண்ணுல லேசா குத்திருச்சு.உடனே அவரு ஆத்திரமாகி நங்கு நங்குன்னு நடு மண்டையில குட்டிட்டாரு...அப்ப என் தெய்வம்  டைரக்டரு ஆர்.வி.உதயகுமாரு அண்ணன் ஓடியாந்து ஏப்பா இந்த பச்ச மண்ணைப்போட்டு இப்படி அடிச்சேன்னு எனக்காக விஜயகாந்து அண்ணன்கிட்ட நாயம் கேட்டாரு...அதுக்கு நம்ம விஜயகாந்து அண்ணன்   என்கிட்டே அடிவாங்குனவன் மகாராஜன் ஆகிடுவான்னு சொன்னாரு...அவரு வாய் முகூர்த்தம் பலிச்சிருச்சு....

கேள்வி: உங்கள அடிச்சதுக்கு நீங்க ஏதுமே சொல்லலியா?
வடிவேலு: இல்லை...எனக்கு அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிச்சு. அன்னையிலிருந்து எனக்கு ஏறுமுகம் தான். அவரு சொன்ன மாதிரி இப்ப நான் மகாராஜன் ஆகிட்டேன்.

கேள்வி: அப்புறம் எதுக்கு அவரு கட்சிக்கு பிரச்சாரத்துக்கு போகாம..தி.மு.க-வுக்கு போனீங்க?

வடிவேலு: அவ்வ்வ்வவ்...எத்தனை தடைவைன்னே சொல்றது அது பிரச்சாரம் இல்லே...சூட்டிங்க்ன்னு. ஒரு நாளு அழகிரி அண்ணன் என்னை கூப்பிட்டு சன் பிக்சர்ஸ் ஒரு படம் எடுக்கறாங்க...நீதான் ஹீரோ. இந்தாருக்கு டயலாக் பேப்பரு...படிச்சுப்பாரு...ரெண்டு நாள்ல வேன் வரும் ஏறி சூட்டிங் போயிடுன்னு சொன்னாரு..சொன்ன மாதிரியே ரெண்டுநாள்ல ஒரு வேனை அனுப்பி இதுல ஏறி உக்காந்துக்கங்கன்னு சன் டீவிக்கரங்க சொன்னாங்க...நானும் சூட்டிங் தானேன்னு நம்பி ஏறி உக்காந்தேன். அவங்களும் ஊர் ஊரா கூட்டிக்கு போயி..சந்துக்கு சந்துக்கு நிக்கவச்சு பேச சொன்னாங்க....சுத்தி கேமரா வச்சுக்கு படமெல்லாம் எடுத்தாங்க....

கேள்வி: உங்களுக்கு சந்தேகம் வரலியா?

வடிவேலு: எனக்கும் லேசா ஒரு சந்தேகம் வந்துச்சு.டப்பிங் தனியாவுள்ள பேசுவோம். இவங்க மைக்லாம் கொடுத்து பேச சொல்றாங்கலேன்னு....அவங்க கிட்டேயும் கேட்டேன்.அதுக்கு ஒருத்தன் சொன்னான்...இது டைரக்டு டப்பிங்க்ன்னு...ஆனா அதுல ஒருத்தன் அப்பவே சொன்னான்..

கேள்வி: என்னன்னு சொன்னான்?

வடிவேலு: நாம என்ன சொன்னாலும் நம்புறாரு...இவரு ரொம்ப நல்லவருன்னான்.

கேள்வி: அப்படியா அவங்க உங்கள ஏமாத்திட்டாங்க....இப்ப என்ன பண்ணப்போறீங்க?

வடிவேலு: நேரா விஜயகாந்து அண்ணன பாத்து அவரு கால்ல விழுந்து  மன்னிப்பு கேக்கணும். நான் வரட்டா...

இத்துடன் பேட்டி நிறைவு பெறுகிறது.



Post Comment

இதையும் படிக்கலாமே:


22 கருத்துகள்:

  1. செம காமெடி பாஸ்! விஜயகாந்த் படிச்சா மனம் விட்டு சிரிப்பாரு! ஹா........ஹா.......!!!

    பதிலளிநீக்கு
  2. நான் என்னவோ பதிவோட தலைப்பை பார்த்து சீரியஸ் மேட்டர்ன்னு வந்தா, காமெடியா?

    பதிலளிநீக்கு
  3. சான்சே இல்ல... செம நக்கல்..

    பதிலளிநீக்கு
  4. Super comedy . . But last paragraph nadakka chance undu

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் கற்பனை கஸாலி!!

    பதிலளிநீக்கு
  6. ஹா.......... ஹா......... ஹா.......... உண்மையிலேயே செம கலக்கலான காமெடி.. கற்பனையில பின்றீங்க... தல..!

    பதிலளிநீக்கு
  7. இன்னும் வீர வசனம் பேசிகொண்டிரிகும் வடிவேலு ,இப்படியும் கூட பேசுவாரோ ? நல்ல நக்கலு தான்

    பதிலளிநீக்கு
  8. சீரியஸ்னு நெனச்சு வந்தா, சிரிக்க வச்சுட்டீங்க...

    பதிலளிநீக்கு
  9. பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்.....ஓட்டும் போட்டேன்...

    பதிலளிநீக்கு
  10. நடந்தாலும் நடககும்
    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    ஒரு காதல் கதை
    http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

    பதிலளிநீக்கு
  11. என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க....>>>>

    ஹா...ஹா.. செம நக்கல் கேள்வி பதில்கள்.

    எனது வலைப்பூவில்:
    மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

    பதிலளிநீக்கு
  12. உண்மையிலேயே செம கலக்கலான காமெடி.. கற்பனையில பின்றீங்க...

    பதிலளிநீக்கு
  13. காலத்திற்கேற்ற நல்ல ரசனையான ரகளையான ரணகள கற்பனை ரஹீம் மனம் லேசானது உங்கள் பதிவை படித்துநன்றி

    பதிலளிநீக்கு
  14. போங்கடா வெண்ணை கல

    பதிலளிநீக்கு
  15. உண்மையிலேயே கால்சீட் கொடுத்துத் தானே வந்தாரு..நல்ல காமெடி கஸாலி.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா24 மே, 2011, 11:32:00 AM

    செம லந்து!

    பதிலளிநீக்கு
  17. உங்க பேட்டி அள்ளுது ...
    கெளப்புங்க ...

    பதிலளிநீக்கு
  18. உண்மையாவே நடந்தாலும் நடந்திடும்........ ஹஹஹா

    பதிலளிநீக்கு
  19. காமெடி பீசு நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.