என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, மார்ச் 26, 2011

20 அய்யய்யோ....108 ஆம்புலன்சை "அதுக்கு" பயன்படுத்தாதீங்க...



வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை கடுமையான குற்றமாக பார்த்து வருகிறது தேர்தல் ஆணையம்.ஒவ்வொரு பகுதியின் எல்லையிலும் வாகனங்கள்  சோதனைக்கு உட்படுத்த படுகிறது. இதுவரை சுமார் முப்பது கோடி ரூபாய் சிக்கியதாக தெரிகிறது. ஆனால்,  புது  புது வழிகளை யோசித்து மக்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். அதேநேரம் அவர்களின் வழிகளையெல்லாம் கண்டுபிடித்து அடைத்து வருகிறது தேர்தல் ஆணையம். போலீசாரின் கண்ணில் மண்ணை தூவ தற்போது அரசியல் கட்சிகள் 108 ஆம்புலன்ஸை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்சில் சைரனை போட்டுக் கொண்டால் போலீசார் அதனை நிறுத்தி சோதனை செய்வதில்லை. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் எடுத்துச் சென்று வருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு கொடுக்க ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்பட்டு வருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். தேவைப்பட்டால், சந்தேகம் வந்தால் 108 ஆம்புலன்ஸ உள்பட அனைத்து ஆம்புலன்களையும் கூட சோதனையிடலாமா என்பது குறித்து அதிகாரிகள் யோசித்து வருகிறார்களாம்.

அய்யா....அரசியல் வாதிகளே....தயவு செய்து ஆம்புலன்ஸை அதுக்கு பயன் படுத்தாதீர்கள். பணம் கொடுக்க வேறு என்ன எலவையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் பாடு, தேர்தல்கமிசன் பாடு. அதை விடுத்து  நீங்கள் ஆம்புலன்ஸை பயன்படுத்துவதாக இருந்தால் அதனால் எத்தனை உயிர்போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிஜமாகவே ஒருவர் அடிபட்டோ,அல்லது   உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போதோ  அவர்களை அவசரமாக அழைத்துசெல்லும் ஆம்புலன்ஸ்களை நீங்கள் பணம் கடத்துவதாக நினைத்து போலீசார் சோதனையிடும் அந்த 10  நிமிடமோ, 15 நிமிடமோ கால இடைவெளியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். உயிர் போகும் சாத்தியம் கூட உண்டு...

நீங்கள் பணம் கொடுக்க உயிரோடு  விளையாடாதீர்கள். மக்களுக்கு உதவ நீங்கள் தேர்தல் நேரத்தில் காட்டும் ஈடுபாட்டில் ஒரு ஐம்பது  சதவீதத்தை தேர்தலுக்கு பிறகும் காட்டினால் மக்களின் தரம் இன்னும் உயரும்....அதற்காக புது புது வழிகளை யோசியுங்கள். வருங்கால சந்ததியினர் உங்களை வாழ்த்துவார்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. பொதுவா பதிவு எப்படி இருந்தாலும் டைட்டில் செம கிளாமரா இருக்கனும்.. இந்த விஷயத்தில் அண்ணன் ரஹீம் கஸாலி பி ஹெச் டி வாங்கிட்டார்..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கஸாலி - செந்திலின் மறுமொழியினை வழி மொழிகிறேன். அரசியல் வாதிகள் கஸாலியின் வேண்டுகோளை ஏற்க நானும் வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள் கஸாலி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ஏன்யா மாப்ள நீ என்னமோ அஜால் மேட்டரு போட்டு இருக்கன்னு சிபி சொன்னாரு ஆனா பொதுப்பிரச்சனைய போட்டு இருக்கன்னு சொல்லலியே..............
    நல்லாத்தான்யா சொல்லி இருக்கீரு!

    பதிலளிநீக்கு
  5. //நீங்கள் பணம் கொடுக்க உயிரோடு விளையாடாதீர்கள்.//நச்-னு சொன்னீங்க கஸாலி.

    பதிலளிநீக்கு
  6. இவங்களுக்கு மனித உயிர்களை விட பதிவேய முக்கியமாபோச்சி..

    இன்னும் என்னன்ன செய்ய போராங்களோ...

    பதிலளிநீக்கு
  7. அட அதுக்கா??நானும் எதுக்கொனு நெனைச்சு வந்திட்டேன்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் பாஸ்....

    சுவாரசியமா தலைப்பு போடுறதில சிபி,கசாலி தான் முன்னோடி!!
    அம்புலன்ஸ் ஒழிக!!

    அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

    தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  9. அவசியமான கருத்து! உறைக்கரமாதிரி சொல்லி இருக்கீங்க!!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா26 மார்., 2011, 1:15:00 PM

    கச்சிதமா மாட்டிகிட்டானுவ..இன்னும் கோழி லாரி,முட்டை லாரி,பால்வணியையும் பிடிங்க அதுல இருக்கு சரக்கு

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா26 மார்., 2011, 1:16:00 PM

    இவனுக கைகாரனுக பாஸ்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா26 மார்., 2011, 1:16:00 PM

    தொழில் தெரிஞ்சவனுக பிடிக்கிறது கஷ்டம்

    பதிலளிநீக்கு
  13. Breaking News: New Twist in ADMK & DMDK Alliance, After the last day for filling nominations, Jaya has changed her original campaign plan by Excluding DMDK constituencies, even skipping Vijaykant’s Rishivandiam. Jaya is NOT going to campaign in majority of DMDK constituencies. Jaya is NOT going to do any joint campaign meetings along with any alliance parties.

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50959

    Jaya’s plan is clear,
    1. No alliance with DMDK or other parties.
    2. To ensure that DMDK Not contesting in 160 ADMK constituencies and Split DMK Opposition Votes, she has made Vijaykat to believe that ADMK is having alliance with DMDK.
    3. Now, the filling of nominations is closed and in 160 ADMK constituencies, there won’t be any 3rd party to split DMK Opposition votes.
    4. In 41 DMDK constituencies, cooperation from ADMK will be poor or minimal.
    5. Finally Vijaykant has become a comedy & dummy piece.

    DMDK supporters need to see Jaya & ADMK attitude and take right decision.

    பதிலளிநீக்கு
  14. //இதுவரை சுமார் முப்பது கோடி ரூபாய் சிக்கியதாக தெரிகிறது.//இதில் அதிக பணம் மதுரை மாவட்டத்தில் சிக்கியதாக தேர்தல் கமிஷன் தகவல்.

    பதிலளிநீக்கு
  15. //பணம் கொடுக்க வேறு என்ன எலவையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் பாடு, தேர்தல்கமிசன் பாடு.//

    மாங்கு மாங்குன்னு எழுதி விட்டு இப்படி கோட்டை விட்டா எப்பூடீ?

    பதிலளிநீக்கு
  16. மக்கள் எப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து மீழ்வார்களோ ! கடவுளே ! காப்பாற்று தமிழ் மக்களை !த. பன்னீர்செல்வம்

    பதிலளிநீக்கு
  17. உங்க அனுமதியின்றி மேலே உள்ள இந்த செய்தியை பேஸ்புக்கில் போட்டு விட்டேன் மன்னிக்கவும். ஆனால் உங்களுக்கு நன்றி சொல்லி விட்டேன். அருமையான செய்தி. பகிர்வுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.