என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மார்ச் 28, 2011

22 இதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ உங்க இஷ்டம்.

free twitter icons

எல்லோருக்கும் ரெண்டு 
நேர் பதங்கள் உண்டு......
நல்லவன்- மகாநல்லவன்
யோக்கியன்- மகாயோக்கியன் 
அரசியல்வாதிகளை 
பொறுத்தவரை
திருடன்- மகாதிருடன்

===================================

இன்னும் எவ்வளவு 
இலவசங்கள் 
கொடுத்தாலும் 
வாங்கிக் கொள்வான்
தமிழன்...
தான் சுரண்டப்படும்
சுரணை இல்லாமல்.....

==================================

டாஸ்மாக்கை எதிர்த்து 
போராடும் தாய்மார்கள் 
அந்த வருமானத்திலிருந்து 
வரும் இலவசங்களை
மட்டும் எப்படி 
வாங்கி கொள்கிறார்கள்


நேற்று படிக்காமல் தவற விட்டவர்களுக்காக........

அய்யய்யோ....108 ஆம்புலன்சை "அதுக்கு" பயன்படுத்தாதீங்க...



Post Comment

இதையும் படிக்கலாமே:


22 கருத்துகள்:

  1. என்னமோ சொல்ற ஆனா புரியல ஹிஹி!

    பதிலளிநீக்கு
  2. பதிவு ஓக்கே.. டைட்டில் இன்னும் நல்லா யோசிச்சு இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. குறுங்கவிதைகள் அபாரம் கஸாலி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. காட்டமான கவிதைகள். சூப்பர்!

    பதிலளிநீக்கு
  5. தங்களின் பதிவு நச்! ஆட்சியமைத்த, அமையவிருக்கின்ற, அமைக்க ஆசைபடுகின்ற அனைத்துக் கட்சிகளுமே இலவசங்களை அள்ளித்தர தயாராக உள்ள நிலையில் எவரைக் குறை கூறுவதென்றே தெரியவில்லை. ஆனால் புரிந்தவர்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. முன்வந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தகுதியான கட்சி என ஒன்றுமேயில்லை.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் ஒத்துழையாமை இயக்கம் சிறக்க வாழ்த்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  7. யோக்கியன்- மகாயோக்கியன்
    அரசியல்வாதிகளை
    பொறுத்தவரை
    திருடன்- மகாதிருடன்//

    மந்திரியை பொறுத்தவரை கொள்ளை - பெரும்கொள்லையா?

    பதிலளிநீக்கு
  8. இன்னும் எவ்வளவு இலவசங்கள் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான்தமிழன்...தான் சுரண்டப்படும்சுரணை இல்லாமல்.....




    மிகச் சரி

    பதிலளிநீக்கு
  9. இதை கவிதையென்று சொல்வதோ...ட்வீட்டென்று சொல்வதோ............////////////என்ன சொல்ல தமிழகத்தின் அவலம் என்று சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  10. நாம் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறோம்.
    "இன்னும் எத்தனை தந்தாலும் தமிழன் வாங்கிக் கொண்டேதான் இருப்பான்" என்கிற தங்களது கூற்றை தயவு செய்து மாற்றிக்கொள்ளவேண்டும்.
    இலவசங்களைதந்தவர்கள்கல்வியை,
    வேலைவாய்பை,ஸ்திரத்தன்மையற்ற வாழ்க்கை நிலைமையையயும் சேர்த்துக் கொள்ளலாமே/

    பதிலளிநீக்கு
  11. எல்லோருக்கும் ரெண்டு
    நேர் பதங்கள் உண்டு......
    நல்லவன்- மகாநல்லவன்
    யோக்கியன்- மகாயோக்கியன்
    அரசியல்வாதிகளை
    பொறுத்தவரை
    திருடன்- மகாதிருடன்//

    வணக்கம் சகோ, முதல் கவிதையே உச்சியில் சம்மட்டி கொண்டு மந்திரிகளுக்கு அடிப்பது போல உள்ளது,
    இவை நிச்சயாமாய் கவிதைகள் தான்.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் எவ்வளவு
    இலவசங்கள்
    கொடுத்தாலும்
    வாங்கிக் கொள்வான்
    தமிழன்...
    தான் சுரண்டப்படும்
    சுரணை இல்லாமல்....//

    தற்கால யதார்த்தம், இலவசம் வாங்குவோருக்கு சுர்,,,,,,,,,ருன்னு ஏறும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. டாஸ்மாக்கை எதிர்த்து
    போராடும் தாய்மார்கள்
    அந்த வருமானத்திலிருந்து
    வரும் இலவசங்களை
    மட்டும் எப்படி
    வாங்கி கொள்கிறார்கள்//

    எம்மவர்களில் யாராவது பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கிறார்களா இல்லைத் தானே. ஆதலால் போராட்டம் பேச்சில் மட்டும் தான். இலவசம் செயலில் அல்லவா.

    உங்களின் குறுங் கவிகள் இக் காலத் தமிழகத்து தேர்தலை ஆழமாகப் பேசி நிற்கின்றது.

    பதிலளிநீக்கு
  14. அதென்ன சகோ[ma]
    பின்னூட்டமிடும்போது [ma] சேர்த்து அதாவது [ma]உங்கள் கமென்ட்[/ma] என்று எழுதுங்கள்.ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.