என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 25, 2011

21 கலைஞரும் ஜெயலலிதாவும் எம்புட்டு நல்லவுங்களா இருக்காக......



வாசு என்ன திடீர்ன்னு வந்திருக்கே?

அரசியல் செய்தி வச்சிருக்கேன்...அதான் உன்கிட்ட சொல்லலாம்ன்னு?

போன வாரம்....கலைஞர் திருவாரூர் போனத பத்தி ஒரு மாதிரியும்,   ஜெயலலிதா ஸ்ரீரங்கம் போனது பத்தி வேறமாதிரியும்  நீ சொன்னது ஒருதலை பட்சமா இருக்குன்னு கொஞ்சம் எதிர்ப்பா போச்சே....

அட....இப்பவும் சொல்றேன்பா 2002- ஆண்டு  ஆண்டிப்பட்டில ஜெயலலிதா போட்டியிட்டப்போ 41 ஆயிரம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாங்க....அடுத்த 2006 தேர்தல்ல வாக்கு வித்தியாசம் 25 ஆயிரமா கொறஞ்சிருச்சாம்.இப்ப நடந்த நாடாளு மன்ற தேர்தல்ல பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியிலே அந்த வாக்கு வித்தியாசமும் இன்னும் கணிசமா கொறஞ்சு போச்சுங்கற தகவல்கள் அடிப்படையில்தான்  சொன்னேன். ஆனா, கலைஞர் விஷயம் வேறு....அவரு முதல் முதல்ல  1957-தேர்தல்ல போட்டியிடறப்போ திருவாரூர் தொகுதியே இல்லே....அதான் குளித்தலையில போட்டியிட்டாராம். அடுத்த தேர்தல்ல 1962-ல தான் திருவாரூர் தொகுதியே உருவாச்சு....அப்ப அங்க போட்டிபோட நினைச்சப்போ....ஏற்கனவே 1957-ல ஜெயிச்ச தி.மு.க-எம்.எல்.ஏ-க்கள் பதினஞ்சு பேரையும் தோற்கடிக்கனும்னு காமராஜர் வரிஞ்சு கட்டிக்கு வேலைபார்த்தாரு....அந்த நேரத்துல கலைஞர் திருவாரூர்ல போட்டியிட்டா அவரு ஜெயிச்சாலும் ஜெயிச்சுடுவாருன்னு நினைச்சு அதை ரிசர்வ் தொகுதியா ஆக்கிட்டாங்களாம் காங்கிரஸ் காரங்க....அதான் கலைஞரு தஞ்சாவூர்ல நின்னு பரிசுத்த நாடார ஜெயிச்சாராம். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா அன்னைக்கு1952-தேர்தல்ல   ஜெயிச்ச 15 பேர்ல, 1962-தேர்தல்ல  கலைஞர் தவிர எல்லோரும் தோத்துட்டாங்கலாம். அண்ணா கூட காஞ்சிபுரத்துல தோத்துட்டாராம். ஆனாலும் அந்த தேர்தல்ல தி.மு.க 50- இடம் ஜெயிச்சுச்சாம். ஏறக்குறைய அம்பது வருசத்துக்கப்புறம் இப்பத்தான் திருவாரூர் பொது தொகுதியா ஆயிருக்குன்னு இப்ப போட்டி போடறாரு....

அடேங்கப்பா இவ்வளவு விஷயம் இருக்கா? தேர்தல் அறிக்கையில ஆளாளுக்கு இலவசங்களை அள்ளி ஏறச்சிருக்காங்க போல...

அத ஏன் கேக்கறே?....தி.மு.க-வுடைய தேர்தல் அறிக்கையிலிருந்து 90 சதவிகிதம் காப்பி பண்ணி அண்ணா தி.மு.க தேர்தல் அறிக்கை விட்டிருக்கிறதா சொல்லறாங்கப்பா....

அப்போ...கதாநாயகிய காலிபண்ண வந்த வில்லன்னு சொல்லு...

அது வில்லனா கதாநாயகனான்னு தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும்...

அத சொல்லு....கலைஞரும் நல்லவரா இருக்காரு....ஜெயலலிதாவும் நல்லவங்களா இருக்காங்க நம்ம இப்ப யாருக்குத்தான் வோட்டு போடறது?

நமக்கே இவ்வளவு குழப்பம் இருக்கும்போது மக்களுக்கு? என்னவோ போ...தேர்தலுக்கு தேர்தல் தான் மக்களை நினைக்குறாங்க இவங்க....அஞ்சு வருசத்துக்கு ஒருதடவை டி.வி-யும், மிக்சியும் கிரைண்டரும் கொடுத்து மக்களை சைலண்டாக்கிட்டு இவங்க கோடி கோடியா அடிச்சுடுறாங்க...பாவம் மக்கள் இது தெரியாம இலவசங்களை யாரு அதிகமா கொடுக்கறாங்கன்னு ஆங்காங்கே பட்டிமன்றம் நடத்திக்கு இருக்காங்க....

ஏப்பா....எனக்கொரு சந்தேகம்? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி குடுக்கும்போதே அது நல்ல அரிசியில்ல....யாரும் சாப்பிட முடியல...புழு பூச்சி இருக்குன்னு குற்றம் சொன்ன ஜெயலலிதா இப்ப இலவசமா அரிசி கொடுக்கறதா சொல்லியிருக்காங்களே....இவங்க என்ன அரிசி போடுவாங்க?.....

வேறென்ன பொன்னியும் சீரக சம்பாவுமா போடப்போறாங்க....எல்லாம் அதே அரிசியத்தான்....அதுக்குத்தான் கூடவே இருபது லிட்டர் தண்ணியும் கொடுக்கறாங்களே?

அது எதுக்குப்பா?

வேறெதுக்கு அந்த அரிசிய சமைச்சு சாப்பிடும்போது  தொண்டையில  அடைச்சுக்கிட்டா தண்ணி குடிக்கனும்ல அதுக்குத்தான்.

அதுவும் சரிதான்.....ஜெயலலிதா இனிமே என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க  மேடம்னு கூப்பிட்டாலே போதும்ன்னு  சொல்லிட்டாங்க போல...

நேத்து வேட்பு மனு தாக்கல் முடிஞ்சு தேர்தல் அறிக்கை வெளியிடும்போது நிருபர்கள் எல்லோரும் அம்மா அம்மான்னு கூப்பிட்டாங்களாம். அவங்களுக்காக சொன்னது அது....

நான் என்னவோ கட்சிக்காரங்களுக்கு சொன்னதுன்னு நினைச்சேன். இப்பத்தான் அண்ணா.தி.மு.க வேட்பாளர்கள் எல்லோரும் நிம்மதியா இருப்பாங்க....

எதுக்கு இப்படி சொல்றே?

அதான் வேட்புமனு தாக்கல் முடிஞ்சுச்சு இல்ல.....இனிமேல வேட்பாளர்கள மாத்த மாட்டாங்கல்ல....

அட நீ வேற....நேத்து வேட்பு மனு தாக்கலுக்கு  அப்புறமும் கூட  ஒரு  வேட்பாளர மாத்திருக்காங்க.....

அந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் யாருப்பா?

முதன்முதல்ல ஜெயலலிதா வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது தூத்துக்குடி வேட்பாளரா அறிவிக்கப்பட்டிருந்து முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஜெனிபர் சந்திரன்...கூட்டணி குழப்பத்துக்கு அப்புறம் ஜெயலலிதா வெளியிட்ட லிஸ்டுல தூத்துக்குடி வேட்பாளரா அறிவிக்க பட்டிருந்து ஜெனிபருக்கு பதிலா ஏ.பால்ங்கறவர்.ஆனா நேத்து மதியம் திடீர்ன்னு அவரையும் மாத்திட்டு செல்லபாண்டியன்னு ஒருத்தரை வேட்பாளரா  அறிவிச்சிருக்காங்க....

என்னவோ போ.....வேட்புமனு தாக்கல் முடியும் கடைசி நாள்  வரை இந்த வேட்பாளருக்கு கண்டம்தான்...வேறென்ன சொல்ல....

இது புதுசில்லைப்பா அங்கே.....அந்த கட்சியில அவைத்தலைவரா இருக்கும் மதுசூதனனுக்கே ஆர்.கே.நகர்ல சீட் கொடுத்து பறிச்சிக்கிட்டாங்க....மத்தவங்களெல்லாம் எம்மாத்திரம்? ...சரிப்பா நான் கிளம்பறேன்....மீண்டும் சந்திப்போம்
நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக....


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. கலைஞரை விட அம்மா மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அவங்க தேர்தல் அறிக்கையை பார்த்ததும் அதுவும் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
  2. சீர் வரிசை மாதிரி ஆரம்பிச்சிட்டாங் என்ன பண்றது எங்க போய் முடியுதுன்னு பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. கருவாட்டு கடை மாதிரி ஆயிடிச்சிங்க..

    பதிலளிநீக்கு
  4. ஒரு தாரம் சீ ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம் ஹிஹி!

    பதிலளிநீக்கு
  5. மே மாதம் எப்போடா வரும் என்று இருக்குது.... இவங்க அறிக்கைகள் எல்லாம் முற்று புள்ளி பெறுமே

    பதிலளிநீக்கு
  6. yday both jaya and mk filed their nominations, both of them declared assets of worth 50cr and 51 crs respectively, i heard mk said he didnt have anything other than gopalapuram home is that true, and he also has crminal case pending against him, and jj got 10 cases pending against her

    பதிலளிநீக்கு
  7. as far as i concern mk is not better than jj, and jj not worst than mk, end of the day both evils killing innocent tamils, both dont have any thing proactive for people, my suggestion is create mass 49(0)

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ரஹீம் - என்ன செய்வது - நீ அதிகம் கொடுக்கறியா நான் அதிகம் கொடுக்கறேனே = வாக்காளர்களக் குழப்புறது இதெல்லாம்...... என்னென்னவோ பண்ற தேர்தல் கமிஷன் இத ஒண்ணும் பண்ண முடியாதா ? ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  9. ஃஃஃஃஃஃகதாநாயகிய காலிபண்ண வந்த வில்லன்னு சொல்லு...ஃஃஃஃ

    அட ஆசை நரைச்சாலும் மீசை நரைக்கலியோ... ஹ..ஹ.. (றிப்பீட்டு..)


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    பதிலளிநீக்கு
  10. திருவாரூர் தொகுதில இவ்ளோ இருக்கா ? இப்பத்தான் படிக்கிறேங்க.
    அப்புறம் ADMK இலவசத் திட்டங்கள் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு ..
    ஆடு மாடு எல்லாம் தரதா சொல்லிருக்காங்க .. அப்புறம் தண்ணி வேற தராங்களாம் :-)

    என்னவோ வெறும் இலவசங்கல்தான் அதிகமா இருக்கு .. யார் வந்தாலும் இலவசம் தருவாங்கன்கிற நிலை வந்திடுச்சு :-(

    பதிலளிநீக்கு
  11. பாவம் விஜயகாந்த்.. கலைஞர் இலவசத்தை கொடுத்து கொள்ளை அடிக்கிறார் என ஜெயலலிதாவிடம் கூட்டணி சேர்ந்தார். ஆனால் அவரும், இலவசத்தை கொடுத்து கொள்ளையடிக்கப் போகிறாரே? என்ன செய்ய போகிறார் விஜயகாந்த்?

    எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

    பதிலளிநீக்கு
  12. அட போங்கப்பா எல்லாம் கரன்ட்டுல ஓடுற பொருள் இனிமேல் எட்டு மணி நேர மின்வெட்டு இருக்கும் போல

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா25 மார்., 2011, 1:43:00 PM

    நல்ல அலசல் கட்டுரை

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா25 மார்., 2011, 1:44:00 PM

    சந்தைகடை ஆயிடுச்சி

    பதிலளிநீக்கு
  15. //ஜெயலலிதா இனிமே என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க மேடம்னு கூப்பிட்டாலே போதும்ன்னு சொல்லிட்டாங்க போல...// அம்மான்னா வயசான ஃபீலிங் வருதுல்ல....

    பதிலளிநீக்கு
  16. அத சொல்லு....கலைஞரும் நல்லவரா இருக்காரு....ஜெயலலிதாவும் நல்லவங்களா இருக்காங்க //

    கொடுத்துவச்ச மக்கள்!

    பதிலளிநீக்கு
  17. present, past, future... ( ஹி ஹி நீங்க மட்டும் தான் குழப்புவீங்களா?)

    பதிலளிநீக்கு
  18. இரண்டு பெரும் குப்பை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால், யார் அதிகமாக இலவசங்கள் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு! இது தான் மக்கள் மனநிலை (நான் பேசியவர்களின் படி) பார்க்கலாம். இன்னும் கொஞ்ச நாள் தான்!

    பதிலளிநீக்கு
  19. எது என்ன யார் எப்படி ..எல்லாம் செய்தாலும் இந்த இருவரில் ஒருவர் என்ற பாவப்பட்ட நிலையில்தான் தமிழன் என்றும் ....:-(.

    பதிலளிநீக்கு
  20. \\அப்போ...கதாநாயகிய காலிபண்ண வந்த வில்லன்னு சொல்லு...
    அது வில்லனா கதாநாயகனான்னு தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும்...\\
    மக்களுக்கு நல்லது பண்ண யாராச்சும் நினைச்சா அவங்களை கதாநாயகன்/கதாநாயகி என்று சொல்லலாம். இதுங்க அப்படியில்லையே. எவ்வளவுதான் பொறுத்திருந்து பார்த்தாலும் வில்லனா, வில்லியா என்றுதான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.