என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், மார்ச் 07, 2011

51 இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை.



ஒரு ஊர்ல ஒரு ராஜா...ராஜான்னதும் ராஜ்ஜியம் இழந்து திகாரில் களிதின்னும் ராஜாவ நினைக்காதீங்க.....
நான் சொல்ற ராஜா நாட்ட ஆண்ட ராஜா.......அவரு மக்களுக்கு நல்லதும் செஞ்சாரு...கெட்டதும் செஞ்சாரு.....மக்கள்ட்ட நூத்துக்கு இருபது ரூவான்னு வரி போட்டாரு....

மக்கள்லாம் கதறுனாங்க.....அய்யோ...அம்புட்டு வரிய எங்களால கட்ட முடியாது....கொஞ்சம் கொறச்சுக்கங்கன்னு....
ராஜா யாருக்கும் அசஞ்சு கொடுக்கல.....

குடிமக்கள் எல்லோரும் அவர திட்டி தீர்த்தாங்க....இந்த சனியன் பிடிச்ச மன்னன் எப்பத்தான் தொலைவானோ....நமக்கெல்லாம் எப்பத்தான் விடிவுகாலம் வருமோன்னு கடவுள வேண்டினாங்க...

ஒரு நாளு பக்கத்து நாட்டு ராஜா அந்த நாட்டுமேல படையெடுத்து போர் தொடுத்து அந்த நாட்ட கைப்பற்றினான். மக்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்.அப்பாடா....சனியன் பிடிச்ச ராஜா தொலஞ்சான்.இனிமேல நிம்மதியா இருக்கலாம்ன்னு பட்டாசு வெடிச்சு  கொண்டாடுனாங்க.....

புது ராஜாவும் தனக்கு பதில் தனது மனைவியை பதவியில் அமத்தினான் . புது ராணியும் கொஞ்ச நாளு சந்தோசமா மக்களை வச்சுருந்தா.. மக்களும் அடடா நம்ம புது ராணி  எம்புட்டு நல்லவளா  இருக்கான்னு நெனைச்சுகிட்டாங்க....எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்....

இப்ப புது ராணி  ஒரு அறிவிப்பு செஞ்சால் . இந்த நாட்ட நிர்வகிக்க நிதி இல்லாததால எல்லோரும் நூத்துக்கு அம்பது சதவீதம் வரி கட்டனும்...யாரும் கட்டாம விட்டா அவங்க சிறைத்தண்டனை பெறுவாங்கன்னு பறை போட சொல்லிட்டாள்...

தலையில தூக்கிவச்சு கொண்டாடுன மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. சே பழைய ராஜா எம்புட்டு நல்லவரா இருந்தாரு இந்த ராணி  மோசமானவளா இருக்களே ன்னு திட்டினாங்க....ரோட்டுல எறங்கி போராடுனாங்க....ஆனா புது ராணி  அசைஞ்சே கொடுக்கலியே...போராடுனவங்க எல்லாரையும் கேள்வியே இல்லாம ஜெயில்ல அடச்சா....

மறுபடியும் மக்கள்  கடவுள்ட்ட வேண்டினாங்க....கடவுளே இந்த சனியன் புடிச்ச ராணி  ஒழியனும் பழைய படி எங்க நாட்ட பழைய ராஜாவ ஆளனும்,  இவளுக்கு  அவரு எவ்வளவோ தேவலன்னு.....


டிஸ்கி: இந்த கதை என் சின்ன வயசுல படிச்சது....அத....நம்ம பாணியில கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேன்....
 டிஸ்கி: இந்த கதைக்கு எதுக்கு அரசியல்வாதிகள் படம்ன்னு கேட்பவர்களுக்கு.....சும்மா ஒரு எ ஃபெக்டுக்குத்தான்  


Post Comment

இதையும் படிக்கலாமே:


51 கருத்துகள்:

  1. இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை.புரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. மறுபடியும் மக்கள் கடவுள்ட்ட வேண்டினாங்க....கடவுளே இந்த சனியன் புடிச்ச ராஜா ஒழியனும் பழைய படி எங்க நாட்ட பழைய ராஜாவ ஆளனும், இவனுக்கு அவரு எவ்வளவோ தேவலன்னு..... //
    மனதில் இருப்பது வெளிவருகிறதா?

    பதிலளிநீக்கு
  3. tamil10, ulavu - ல் சீக்கிரம் சேருப்பா..

    பதிலளிநீக்கு
  4. கருண் நீங்க ரொம்ப பாஸ்டு தல....

    பதிலளிநீக்கு
  5. மக்களாட்சியிலும் இதே லட்சணம் தான்..:)

    பதிலளிநீக்கு
  6. Effect நல்லா இருக்குது!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா7 மார்., 2011, 10:40:00 AM

    இந்த கதைல இன்னும் ஒரு எப்சோட் பாக்கி இருப்பது போல தோணுது. அதையும் எழுதிட்டிங்கன்னா, இன்றைய தேதி வரை டேலி ஆகிடும்.

    பதிலளிநீக்கு
  8. அண்ணே! சந்து கேப்புல பிளைட் ஓட்டியிருக்காப்புல தெரியுது.

    எனது வலைபூவில் இன்று:
    இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

    பதிலளிநீக்கு
  9. இந்த கதைல வர்ற ராணி ஒட்டியாணம் போட்ட போட்டோ போடலியே ஹி ஹி!

    பதிலளிநீக்கு
  10. மேலோட்டமாக நகைசுவையாக இருந்தாலும் நாட்டில் மக்கள் முழு கேணைகளாக இருபதில்தான் அவர்களுக்கும் திருப்தி. ராஜா, ராணிகளுக்கும் நிம்மதி போலும்.
    வாழ்க சன நாயகம்.

    பதிலளிநீக்கு
  11. //டிஸ்கி: இந்த கதை என் சின்ன வயசுல படிச்சது....அத....நம்ம பாணியில கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேன்....
    டிஸ்கி: இந்த கதைக்கு எதுக்கு அரசியல்வாதிகள் படம்ன்னு கேட்பவர்களுக்கு.....சும்மா ஒரு எ ஃபெக்டுக்குத்தான்

    கம்முனு இருக்குமா நாயி அதை நோண்டிக்கெடுக்கமாம் பேயி

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்லா விளங்கிரிச்சி ...............இனிமேல் மக்கள் அந்த ராஜா வோட பையன் வரணும்ன்னு வேண்டுவாங்க அதுக்கப்புறம் ..........அட போங்கப்பா

    பதிலளிநீக்கு
  13. மெய்யாலுமே கதைக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லீங்கோ!

    கதை நல்லாயிருக்கு; ஆட்சி அப்படியா இருக்கு? :-)

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா7 மார்., 2011, 1:11:00 PM

    ராசா யாருன்னு புரியுது அவரு சிறையில இருக்காரு....ராணின்னு யாரை சொல்றீஙக்...கனியா ஹிஹி

    பதிலளிநீக்கு
  15. இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

    பதிலளிநீக்கு
  16. ராசாவுக்கும்,ராணிக்கும் வயசாயிடுச்சாம்.புதுசா ஒரு இளைஞன் குதிரையில் பவனி வந்தானாம்.

    பதிலளிநீக்கு
  17. கதைக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நான் நம்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  18. சரியான நேரத்தில் சரியான கதை..ஆமா, அப்போ நாங்க என்னதான் பண்றது?

    பதிலளிநீக்கு
  19. //ஃஇந்த கதைக்கும் அந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை//

    நான் நம்பீட்டேன்!

    பதிலளிநீக்கு
  20. சமுத்ரா said... 9 மக்களாட்சியிலும் இதே லட்சணம் தான்..:)/////
    ஆமா சார்...

    பதிலளிநீக்கு
  21. Chitra said... 10 Effect நல்லா இருக்குது!/////
    நன்றிங்கக்கா

    பதிலளிநீக்கு
  22. கொக்கரகோ... said... 11 இந்த கதைல இன்னும் ஒரு எப்சோட் பாக்கி இருப்பது போல தோணுது. அதையும் எழுதிட்டிங்கன்னா, இன்றைய தேதி வரை டேலி ஆகிடும்.
    இல்லிங்கோ....அம்புட்டுத்தாங்கோ////

    பதிலளிநீக்கு
  23. தமிழ்வாசி - Prakash said... 12 அண்ணே! சந்து கேப்புல பிளைட் ஓட்டியிருக்காப்புல தெரியுது.
    கண்டு பிடிச்சுட்டீங்களே....

    பதிலளிநீக்கு
  24. விக்கி உலகம் said... 13 இந்த கதைல வர்ற ராணி ஒட்டியாணம் போட்ட போட்டோ போடலியே ஹி ஹி!
    நம்மள வம்புல மாட்டிவிட்டுடுவீங்க போல

    பதிலளிநீக்கு
  25. கக்கு - மாணிக்கம் said... 14 மேலோட்டமாக நகைசுவையாக இருந்தாலும் நாட்டில் மக்கள் முழு கேணைகளாக இருபதில்தான் அவர்களுக்கும் திருப்தி. ராஜா, ராணிகளுக்கும் நிம்மதி போலும். வாழ்க சன நாயகம்.////
    கேனையனாக வைத்திருப்பதில் என்றுதிருத்திக் கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  26. Speed Master said... 15

    //டிஸ்கி: இந்த கதை என் சின்ன வயசுல படிச்சது....அத....நம்ம பாணியில கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேன்....
    டிஸ்கி: இந்த கதைக்கு எதுக்கு அரசியல்வாதிகள் படம்ன்னு கேட்பவர்களுக்கு.....சும்மா ஒரு எ ஃபெக்டுக்குத்தான்

    கம்முனு இருக்குமா நாயி அதை நோண்டிக்கெடுக்கமாம் பேயி
    நாயி...பேயின்னு நீங்க என்னை திட்டல தானே....

    பதிலளிநீக்கு
  27. அஞ்சா சிங்கம் said... 16 ரொம்ப நல்லா விளங்கிரிச்சி ...............இனிமேல் மக்கள் அந்த ராஜா வோட பையன் வரணும்ன்னு வேண்டுவாங்க அதுக்கப்புறம் ..........அட போங்கப்பா////
    அதே...

    பதிலளிநீக்கு
  28. சேட்டைக்காரன் said... 17 மெய்யாலுமே கதைக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லீங்கோ! கதை நல்லாயிருக்கு; ஆட்சி அப்படியா இருக்கு? :-)
    என்னத்த சொல்ல....

    பதிலளிநீக்கு
  29. பிரவின்குமார் said... 18 ஹா...ஹா..ஹா.. ரைட்டு.
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  30. சென்னை பித்தன் said... 19 கதை நல்லாருக்கு!///
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  31. ஆர்.கே.சதீஷ்குமார் said... 20 ராசா யாருன்னு புரியுது அவரு சிறையில இருக்காரு....ராணின்னு யாரை சொல்றீஙக்...கனியா ஹிஹி
    எதுக்கு என்மேல இந்த கொலை வெறி?

    பதிலளிநீக்கு
  32. //ரஹீம் கஸாலி said...
    நோண்டிக்கெடுக்கமாம் பேயி
    நாயி...பேயின்னு நீங்க என்னை திட்டல தானே....


    ஐய்யயோ நான் அப்படியெல்லாம் சொல்லைலங்கோ

    பதிலளிநீக்கு
  33. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... 21 இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!நீங்க வந்தாலே சரிதான்

    பதிலளிநீக்கு
  34. பன்னிக்குட்டி ராம்சாமி said... 22 ம்ம்ம்...வெளங்கிருச்சு...........!
    உங்களுக்கு விளங்காம இருக்குமா தல....

    பதிலளிநீக்கு
  35. ராஜ நடராஜன் said... 23 ராசாவுக்கும்,ராணிக்கும் வயசாயிடுச்சாம்.புதுசா ஒரு இளைஞன் குதிரையில் பவனி வந்தானாம்.
    இது என்ன புதுக்கதையா இருக்கு

    பதிலளிநீக்கு
  36. பாலா said... 24 கதைக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. நான் நம்பிட்டேன்.///
    நம்பித்தானே ஆகணும்

    பதிலளிநீக்கு
  37. செங்கோவி said... 25 சரியான நேரத்தில் சரியான கதை..ஆமா, அப்போ நாங்க என்னதான் பண்றது?
    எதையாவது பண்ணித்தான் ஆகணும் செங்கோவி

    பதிலளிநீக்கு
  38. சி.பி.செந்தில்குமார் said... 26 ம் ம் போட்டுத்தாக்குங்க
    இன்னைக்கு நீங்க ரொம்ப லேட்டு....பெஞ்சு மேல ஏறி நில்லுங்க...

    பதிலளிநீக்கு
  39. தமிழ் 007 said... 27 //ஃஇந்த கதைக்கும் அந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை// நான் நம்பீட்டேன்!
    நீங்களும் நம்பிட்டீங்களா

    பதிலளிநீக்கு
  40. Speed Master said... 41 ஐய்யயோ நான் அப்படியெல்லாம் சொல்லைலங்கோ
    நான் நம்பிட்டேன்

    பதிலளிநீக்கு
  41. பழைய கதைக்கு பழைய ராணி(!)யின் படத்தைப்
    போட்டீங்க பாருங்க... அது சூப்பரு! 
    -கலையன்பன்.


    (இது பாடல் பற்றிய தேடல்!)
    'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது...)

    பதிலளிநீக்கு
  42. இவளுக்கு அவரு எவ்வளவோ தேவல- மறுபடியும் மக்கள் கடவுள்ட்ட வேண்டினாங்க-

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.