என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 18, 2011

26 முடிவுக்கு வரும் மூன்றாவது அணி நாடகம்(அரசியல் பக்கங்கள்)

"அடடே வாப்பா வாசு......ரொம்ப நாளாச்சு பார்த்து? எப்படி இருக்கே....."

"இருக்கேன்பா....அரசியல் கடுமையா சூடு பிடிச்சுருச்சு போல...."

"ஆமாப்பா....ஜெயலலிதா ஏதோ தன்னிச்சையா  வேட்பாளரு அறிவிச்சிட்டாங்கன்னு ஒரே ரகளையா  இருக்குப்பா....ஏதோ மூணாவது அணி அமைய போகுதாம்...."

"அட நீ வேற...அப்படில்லாம் ஒன்னும் நடக்காது....."

"அப்புறம் எதுக்குப்பா..எல்லாரும் விஜயகாந்த் ஆபீசில கூடுனாங்க?"

"அதுவா அது ஒரு நாடகம்பா...."

"நாடகமா?"

"ஆமாம்....ஜெயலலிதாட்ட கேட்ட தொகுதிய அவங்க ஒதுக்கலியா? மூணாவது அணி அமைச்சா  ஓட்டு பிரியும், அதனால ஜெயலலிதாவுக்குத்தான் நட்டம்.அதான் மூணாவது அணின்னு  பூச்சாண்டி காட்டினா மிரண்டுருவாங்க....   கேட்ட தொகுதிய கொடுத்துருவாங்கன்னு மிரட்டி பாக்குறாங்க....."

"நான் கூட உண்மையா இருக்குமோன்னு நினைச்சேன்."

"தமிழ்நாட்டுல மூணாவது அணி அமைஞ்சா அது எடுபடாதுன்னு அவங்களுக்கே நல்லா தெரியும். அப்படி அமைஞ்சா அது கலைஞர் ருக்குத்தான் சாதகம்ன்னு தெரியாமலா இருக்கும். நீ வேண்ணா பாரு... நாளைக்கு ஜெயலலிதா நிறைய இடத்துல அண்ணா.தி.மு.க வேட்பாளர வாபஸ் வாங்க சொல்லிருவாங்க..."

"அப்படி மாத்துனா வேட்பாளருங்க அப்செட் ஆகிட மாட்டாங்களா? "

"அத பத்தி என்ன இருக்கு...வேட்பாளர மாத்துறதும் மந்திரிய மாத்துறதும், நிர்வாகிகள மாத்தறதும்  ஜெயலலிதாவுக்கு ஒன்னும் புதுசில்லையே ...."

"அப்படி எல்லோரும் சமரசம் ஆகிட்டா....வைகோ கதி...."

"இங்கே அவரப்பத்தி எந்த தலைவரு கவலை படப்போறாரு....எல்லோருக்கும் அவங்க கேட்ட தொகுதி கெடைச்சா சரிதான் "

"பாவம்பா வைகோ"...

"அவர் நிலைமை இப்படி ஆகக்கூடாது.....அவரு நிலைய விட்டு இறங்கி அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே மறந்துட்டு எந்த நேரமும் அண்ணா தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் போல நடந்துக்கிட்டாரு....இப்ப அவருக்கு ஒரு கட்சி இருக்கதையே ஜெயலலிதாவும் மறந்துட்டாங்க....."

"அதுக்காக இப்படியா....அஞ்சு வருசமா கூடவே இருந்தாரு....இப்படி நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாங்களே...."

"அதான் ஜெயலலிதா....நாளைக்கு இப்ப கூட்டணி வச்சிருக்க தலைவர்களுக்கும் இதுதான் கதி."

"ஒருவேளை அவரு கூட இருந்த தலைவருங்களெல்லாம் விலகிட்டதால சீட்டு கொடுக்க யோசிச்சிருப்பாங்களோ...."

"எப்போதுமே வைகோவுக்கு தலைவர்களாலே ஒரு பலமும் இல்லை. இவரோட பேச்சு திறமைக்குத்தான் ஒரு கூட்டம் கட்டுண்டு இருக்கு...."

"அது தெரியாமலா இருக்கும் ஜெயலலிதாவுக்கு...."

"அதான் விஜயகாந்த் இருக்காரேன்னு நினைச்சிருக்கலாம். என்னைக்கு திருமங்கலம் இடைதேர்தல் வந்துச்சோ...அப்போதிலிருந்து இந்த அவமானம் தொடருது...."

"இனி அவரு தி.மு.க பக்கமும் போகமுடியாது "

"எப்படி போக முடியும் அங்கேருந்து ஒரே ஒரு சீட்டு பிரச்சினையில இங்கே வந்தவருதானே....இப்போ ஒண்ணுமே கிடைக்காத இடத்துக்கு எப்படி போவாரு...."

"வேறென்ன பண்ணுவாரு "

"எனக்கென்ன தெரியும் அவருக்கு ஆதரவா இருக்க தொகுதியில தனியா நின்னு ஓட்ட பிரிக்கலாம்.....அவருக்கு சீமான் நெடுமாறன்னு தமிழ் ஈழ அதவாளர்கள் அதரவு தரலாம். "

"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே சாதகமான தொகுதியாசே ஆண்டிப்பட்டி....அப்புறம் எதுக்கு தொகுதி மாறுறாங்க?"

"அதுவா.....எல்லாம் அழகிரி பயம்தான். 2002-ல ஜெயலலிதா போட்டியிட்டப்போ கிடைச்ச வோட்டு வித்தியாசத்தை விட 2006 தேர்தல்ல ரொம்ப கொறஞ்சிருச்சாம்...அப்புறம் 2009 நாடாளுமன்ற தேர்தல்ல அதைவிட ஒட்டு வித்தியாசம் இன்னும் கொறைச்சு போச்சாம்....அதான் இந்த தடவை அழகிரி ஏதும் அதிரடி பண்ணிருவாரோன்னு பிராமின் அதிகம் இருக்க ஸ்ரீரங்கத்துல போட்டியிடுறாங்கலாம்..."

"ஓ..இதுதான் காரணமா? அங்கே தி.மு.க-வுல வெயிட்டான கேண்டிடேட்டா போடலை போலையே"

"ஆனந்துன்னு  ஒரு 29 வயசு இளைஞரை நிறுத்தியிருக்காரு கலைஞர்.பாப்போம் யானை காதுல இந்த எறும்பும்  புகுதான்னு....."

"கலைஞர் தொகுதி மாறியதுக்கும் பயம்தான் காரணமா?"

"ஏற்கனவே தமிழ்நாட்டுல பல்வேறு தொகுதியில போட்டியிட்டு ஜெயித்த பெருமை கலைஞருக்கு இருக்கு....இப்போ அவரோட சொந்த தொகுதியில நிக்கறார்  அவ்வளவுதான்....ஓகேப்பா நான் கிளம்பறேன்...."

"போன தடவை மாதிரி இல்லாமல் அடிக்கடி வாப்பா....."

"அதான் தேர்தல் வந்துடுச்சுல்ல இனி  அடிக்கடி வருவேன்....."

"ஏன்பா....பிரச்சாரத்துக்கு வர்ற தலைவருங்க மாதிரியா?"

"அப்படித்தான் வச்சுக்கவே....."

"அப்படின்னா தேர்தல் முடிஞ்சா   அடுத்த தேர்தல் வரை வரவே மாட்டேன்னு சொல்லு...."

"ஹா...ஹா...."
 


Post Comment

இதையும் படிக்கலாமே:


26 கருத்துகள்:

  1. //மூணாவது அணி அமைச்சா ஓட்டு பிரியும், அதனால ஜெயலலிதாவுக்குத்தான் நட்டம்

    விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தால் எந்த லாபமும் இல்லை. ஆனால் பிரிந்து விட்டால் நட்டம் என்று சில நாட்களுக்கு முன் நான் சொன்னபோது தெளிவாக குழப்புகிறீர்கள் என்று சொன்னீர்களே?

    நான் சொன்னதற்கு இதுதான் அர்த்தம்.

    காங்கிரசும் தேமுதிகவும் சேராமல் இருப்பதற்கு அம்மா போட்ட திட்டமாமே இது?

    பதிலளிநீக்கு
  2. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்திலே...

    பதிலளிநீக்கு
  3. அரசியலுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் அதனால் வோட்டு மட்டும் போட்டுவிட்டேன் சகோ

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்கீங்க மூனாவது அணியேல்லாம் வராது சும்மா இப்படி சத்தம் போட்டுவிட்டு ஜெயா கொடுக்குற சீட் வாங்கிட்டு போயிட்டே இருக்கணும்....அங்கே ஜெயலளித்தாவை பார்த்தாலே குத்தம் ....

    பதிலளிநீக்கு
  5. நண்பா சரியான செக் மேட் இது பாப்போம் ஹிஹி!

    பதிலளிநீக்கு
  6. அதாவது ஜெயலலிதா தொகுதி மாறினா அவருக்கு பயம், கருணாநிதி தொகுதி மாறினா அது சாதாரணம், இல்லையா? நல்லா 'நடுநிலயாத்தான்' எழுதறீங்க!

    பதிலளிநீக்கு
  7. உங்க கணிப்பு சரியா பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க நண்பா.. பார்க்கலாம்.. என்ன நடக்குதுன்னு..

    பதிலளிநீக்கு
  9. 3 வது அணி எல்லாம் அமையாது... உல்லாம் அம்மா அணி தான்...

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே தமிழ்நாட்டுல பல்வேறு தொகுதியில போட்டியிட்டு ஜெயித்த பெருமை கலைஞருக்கு இருக்கு....இப்போ அவரோட சொந்த தொகுதியில நிக்கறார் அவ்வளவுதான்..////அவ்ளோதானா?..... ஜெயலலிதா மாறினா பயம் .... கலைஞர் மாறினா ஹி ஹி .....

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா18 மார்., 2011, 11:28:00 AM

    கான்கிரஸ்-திமுக நாடகத்தை விடவா?

    பதிலளிநீக்கு
  12. அம்மா மறுபடியும் தன் வேலைய காட்ட ஆரம்பிச்சுருச்சு. அம்மாவும் திருந்த போறது இல்ல, அம்மாவோட கூட்டணி அமைக்கிற இந்த தலைவர்களும் திருந்த போறது இல்ல. அட போங்கப்பா... அனால் வைக்கோவிற்கு அம்மா செய்தது மன்னிக்க முடியாத நயவஞ்சகத்தனம். வைக்கோ தன் வரலாற்றை மறந்து விட்டு அம்மாவின் காலைச் சுற்றியதற்கு இது தேவையான ஒன்றுதான். இருந்தாலும் தான் ஒரு நம்பத்தகுந்த தலைவர் இல்லை என்பதை அம்மா மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார். இன்னும் நிரூபிப்பார்... இது வைக்கோ விற்கு பின்னடைவு இல்லை மாறாக எதிர்கால நோக்கில் அம்மாவிற்குத்தான் பின்னடைவு. இது ஒரு நல்ல அலசல் கசாலி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா18 மார்., 2011, 11:49:00 AM

    இன்று மாலைதான் ரிசல்ட் தெரியும்

    பதிலளிநீக்கு
  14. பதிவிற்கு தொடர்பில்லாதது. மன்னிக்கவும்.

    நீங்கள் தற்பொழுது வசிப்பது அரசர்குளத்திலா? புதுக்கோட்டையிலா? ஒரு சிறு உதவி வேண்டி இந்தத் தகவல் அறிய விரும்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. நேர்மையான,வெளிப்படையான தேர்தலே மக்களுக்கும்,அரசியல்வாதிக்கும் பயன் தரும்.

    நாடக அரசியலில் எனக்கு உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  16. மறுபடியும் அரசியல் பதிவா??
    தமிழக அரசியல் ஒழிக..ஹிஹி
    தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  17. அம்மா எப்பத் தான் திருந்தப் போகுதோ..

    பதிலளிநீக்கு
  18. //மூன்றாவது அணி என்பது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நாடகம் போல ஆகிவிட்டது ஏமாற்றம் தான். கலைஞர் அல்லது ஜெயலலிதா என்பது தான் தமிழகத்தின் எதிர்காலம் போல. எப்படியாயினும் காங்கிரஸ் ஜெயித்துவிடக்கூடாது என்பதாவது நிறைவேறுமா ?
    //

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் கணித்தது போலவே மூன்றாவது அணியின் நிலைமை ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  20. இந்த பதிவுக்கு ஏன் நெகட்டிவ் ஓட்டு என்பது புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  21. ஒரு வழியா இந்த கூட்டணி பங்கீடு முடிஞ்சா தான், இவனுங்களோட விளையாட்ட ஆரம்பிப்பாங்க...

    வேடிக்கை என் வாடிக்கைனு இப்போவே எல்லாரும் ரெடியாகலாம்....

    பதிலளிநீக்கு
  22. வழக்கம் போலவே கலக்கிட்டீங்க பங்காளி, போஸ்ட் சூப்பர்.

    இருந்தாலும் இன்னும் தமிழ்நாட்டுல நம்மல நம்பறதுக்கு ஆளு இருக்குன்னு நினைச்சுக்கிட்டு தனக்கு தெரியாமல் லிஸ்ட் வெளியே வந்துருச்சுன்னு சொல்றதுக்கும் ஒரு தில்லு வேணும் அம்மாவுக்கு.

    ஆமாம் நம்ம விஜய்யோட நிலைமை என்னா ஆச்சு??

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.