என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 04, 2011

44 ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....


தேர்தல் வந்துவிட்டாலே பத்திரிகைகளுக்கு ஒரு குஷி வந்துவிடும். ஆளாளுக்கு கருத்துக்கணிப்பு, கருத்து திணிப்பு என்று ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் நேற்றைய விகடனும் தன் பங்கிற்கு ஒரு கணக்கை வெளியிட்டிருக்கிறது. முதலில் ஆனந்த விகடன் போட்டிருக்கும் கணக்கை பார்ப்போம்.

தி.மு.க-கூட்டணி

தி.மு.க = 24.46 %
காங்கிரஸ் = 8.38 %
பா.ம.க = 5.65 %
வி.சி = 1.29 %
மொத்தம் = 41.78 %



அ.தி.மு.க.கூட்டணி

அ.தி.மு.க= 32.64 %
தே.மு.தி.க = 8.38 %
மதி.மு.க = 5.98 %
சி.பி.எம்.= 2.65 %
சி.பி.ஐ = 1.61 %
மொத்தம் = 51.26 %

இந்த கணக்குகள் சரிதானா என்று பார்த்தோமேயானால்.....

எந்த ஒரு கட்சியும் அதன் போட்டியிட்ட தொகுதிகளில் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் தான் வாக்கு சதவிகிதம் கணக்கிடப்படுகிறது. அப்படி பார்த்தால் கடந்த தேர்தலில் தி.மு.க போட்டியிட்ட தொகுதிகள் = 130 , அதில் வெற்றி பெற்றது= 96.அதன் அடிப்படையில் 130 தொகுதிகளில் பெற்ற சராசரி வாக்கு சதவிகிதம்= 26.46 %

அ.தி.மு.க போட்டிட்ட தொகுதிகள் =182, அதில் வெற்றி பெற்றது =61, அதன் அடிப்படையில் அந்த கட்சி 182 தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளின் சராசரி = 32.64

தி.மு.க போட்டியிட்ட இடங்களை விட அ.தி.மு.க போட்டியிட்டது 52 கூடுதலான  தொகுதிகளில். அப்படி இருக்கும்போது விகடனின் கணக்கு எப்படி சரியாக வரும்.
இந்த முறை அ.தி.மு.க அதே 182 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமானால் அந்த வாக்கு விகிதம் ஏறக்குறைய ஒத்துவரும். ஆனால், அது நடக்காத காரியம்.

விகடனின் கணக்கு ரொம்ப சிம்பிள் தமிழ்நாட்டில் இன்னொரு முன்னணி வார  இதழான குமுதம் தி.மு.க ஆதரவு நிலையில் இருப்பதால், விகடன் அண்ணா.தி.மு.க ஆதரவு நிலையை எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அடிப்படையிலேயே இந்த கணக்கு....

இன்னும் கொஞ்சம் விரிவாக வரும் நாட்களில் பார்க்கலாம்.





Post Comment

இதையும் படிக்கலாமே:


44 கருத்துகள்:

  1. //விகடனின் கணக்கு ரொம்ப சிம்பிள் தமிழ்நாட்டில் இன்னொரு முன்னணி வர இதழான குமுதம் தி.மு.க ஆதரவு நிலையில் இருப்பதால், விகடன் அண்ணா.தி.மு.க ஆதரவு நிலையை எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

    Yes..இது சரிதான்..

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த விகடன் தரமான இதழ் என்று பெயர் வாங்கியிருக்கிறது. ஆனால் குமுதம் தான் அதிகமாக விற்பனையாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. தேர்தல் வந்து விட்டால் ஊடகங்களை தங்களின் திறமைக்கேற்ப, தங்கள் கருத்தை மக்கள் மீது திணிக்கும் என்பது தான் கடந்த காலங்கள் காட்டும் உண்மை.

    பதிலளிநீக்கு
  4. நான் கணக்குல கொஞ்சம் வீக்..!! :)

    பதிலளிநீக்கு
  5. [ma]மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..[/ma]

    பதிலளிநீக்கு
  6. அத்தனை தொகுதிகளிலும் நேர்மையாக(?!?!?) தேர்தல் நடக்கும் பட்சத்தில், திமுக கூட்டணி மண்ணைக் கவ்வப் போவது உறுதி..

    அப்படி செய்தால் தான் நாம் சொரணை உள்ளவர்கள் என்று அர்த்தம்.

    ஆனால் அதிமுக கூட்டணி கடந்த ஆட்சிகளில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.

    ஆனாலும் தற்போதைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லை என்றால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இவர்களின் குடும்ப வாரிசுகள் தமிழ்நாட்டையே முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள்..

    கருத்துக் கணிப்புகளின் புள்ளி விவரகங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.. மக்களின் மனோ நிலைமையைக் கருத்துக் கணிப்புகளால் சொல்ல இயலாது...

    பதிலளிநீக்கு
  7. கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வருதான்னு..

    பதிலளிநீக்கு
  8. கணக்கே கணக்கா.............துட்டு அண்ணே துட்டு துட்டு மட்டும்தான்னே!

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்கணிப்பெலாம் சரிதான். யாரு ஆட்சிக்கு வந்தாலும் சாமான்யன் நிலைமையில் எந்தமுன்னேற்றமும் இருக்காதுதான்.

    பதிலளிநீக்கு
  10. இவர்கள் என்ன சொல்வது எல்லாம் மக்கள் கையில்தான். என்றாலும் திமுகாவும் காங்கிரஸ்-ம் நாட்டைவிட்டே விரட்டப்படவேண்டிய சூடு சுரணை இல்லாத கட்சி.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா4 மார்., 2011, 11:21:00 AM

    நானும் கூட்டி கழிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா4 மார்., 2011, 11:25:00 AM

    கஸாலி, இதைப் பற்றி நேற்று ஆர்.கே. சதீஷ்குமார் எழுதிய பதிவில் இந்தக் கணக்கு தவறு என்று விரிவாகவும், விளக்கமாகவும் மறுமொழி இட்டுள்ளேன். நீங்கள் விரும்பினால் அதை இங்கு லிங்க் கொடுக்கிறேன். அல்லது நீங்கள் பார்த்திருந்தாலும் சரிதான்.

    பதிலளிநீக்கு
  13. 2006 ல் இருந்த சூழல் வேறு...

    இன்று இருக்கும் சூழல் வேறு...

    பதிலளிநீக்கு
  14. நீங்க சொல்றதும் சரி தான்

    பதிலளிநீக்கு
  15. The deciding foctor for winning party is no of seats alotted for congress. Because DMK and ADMK will work against cong.

    பதிலளிநீக்கு
  16. என்னத்த சொல்லுறது எல்லாம் "அவன் செயல்"இவன்அறிமுகம் இல்லாத நண்பர் ஜெமிநிவிவேக்.கே

    பதிலளிநீக்கு
  17. உங்கள் கணக்குல பெட்ரோல் ஊத்தி கொலுத்த இதுக்கு தாணப்பு நாங்க 234 தொகுதிலும் நிக்கப்போரோம் .

    பதிலளிநீக்கு
  18. பாஸ் எதோ அரசியல் போட்ட மாதிரி இருக்கே??
    அம்மா சத்தியமா இது அரசியலா பாஸ்??

    பதிலளிநீக்கு
  19. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா


    "எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
    உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


    http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. Lakshmi said... 11கருத்துக்கணிப்பெலாம் சரிதான். யாரு ஆட்சிக்கு வந்தாலும் சாமான்யன் நிலைமையில் எந்தமுன்னேற்றமும் இருக்காதுதான்................//////////சரி சாமானியர்கள் உயரோடாவது இருக்கணும் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  21. [ma]கொள்ளிக்கட்டை எடுத்து தலை சொரிதல் என்று தமிழில் ஒரு வழக்கு மொழி உண்டு. ஜெவை ஆதரிப்பது இதற்க்கு ஈடானதுதான். கடந்த ஆட்சியில் அவர் சாதித்தது என்ன?
    எந்த அமைச்சருக்கும் சுயமாக செயல் பட முடியாத நிலை.
    எதற்க்கு எப்போது அம்மா என்ன சொல்வாரோ என்ற பயம்.
    அரசுப்பணிகளில் பணி நியமனம் இல்லை
    அரசு ஊழிய்ர்கள் படிகள் நிறுத்தம்
    புதிய வேலை வாய்ப்புகள் இல்லை
    எவருக்கும் அம்மாவை பார்க்க முடியாது.
    எவருக்கும் அம்மாவிடம் பேச பயம்
    எவருக்கும் சுயமாக சிந்திக்க உரிமை இல்லை
    இதற்க்காக நான் தி மு க அனுதாபி அல்ல
    கலைஞரும் ஜெ செய்த ஒரு தவறைத் தான் செய்கிறார்
    ஜெ கெட்டது சசியாலே என்றால்
    இவர் கெடுவது இவர் மகளாலே
    மற்றபடி கலைஞர் ஆட்சி எவ்வளவோ மேல்
    [/ma]

    பதிலளிநீக்கு
  22. கொள்ளிக்கட்டை எடுத்து தலை சொரிதல் என்று தமிழில் ஒரு வழக்கு மொழி உண்டு. ஜெவை ஆதரிப்பது இதற்க்கு ஈடானதுதான். கடந்த ஆட்சியில் அவர் சாதித்தது என்ன?
    எந்த அமைச்சருக்கும் சுயமாக செயல் பட முடியாத நிலை.
    எதற்க்கு எப்போது அம்மா என்ன சொல்வாரோ என்ற பயம்.
    அரசுப்பணிகளில் பணி நியமனம் இல்லை
    அரசு ஊழிய்ர்கள் படிகள் நிறுத்தம்
    புதிய வேலை வாய்ப்புகள் இல்லை
    எவருக்கும் அம்மாவை பார்க்க முடியாது.
    எவருக்கும் அம்மாவிடம் பேச பயம்
    எவருக்கும் சுயமாக சிந்திக்க உரிமை இல்லை
    இதற்க்காக நான் தி மு க அனுதாபி அல்ல
    கலைஞரும் ஜெ செய்த ஒரு தவறைத் தான் செய்கிறார்
    ஜெ கெட்டது சசியாலே என்றால்
    இவர் கெடுவது இவர் மகளாலே
    மற்றபடி கலைஞர் ஆட்சி எவ்வளவோ மேல்

    பதிலளிநீக்கு
  23. இந்த கணக்குகளை விட நம் மக்கள் போடும் உண்மையான கணக்குகளை நேர்ம்மையுடன் அணுகினால் நல்ல விடயங்கள் கிடைக்கும் அனால் இதை எந்த அரசியல் அமைப்பும் செய்வதில்லை .செய்தல் தேவை அனால் செய்து என்பதே உண்மை .

    பதிலளிநீக்கு
  24. இந்த கணக்குகளை விட நம் மக்கள் போடும் உண்மையான கணக்குகளை நேர்மையுடன் அணுகினால் நல்ல விடயங்கள் கிடைக்கும் அனால் இதை எந்த அரசியல் அமைப்பும் செய்வதில்லை .செய்தல் தேவை அனால் செய்யாது என்பதே உண்மை .

    பதிலளிநீக்கு
  25. நமக்கு அரசியல் கொஞ்சம் ஆவாதுங்க! ஓட்டுப் போட்டுட்டேன்! கெளம்புறேன்!!



    ஆனா நம்ம விஜய் படிச்ச பாட்டு ஒன்னு ஞாபகம் வருது!



    " தி மு க ஆண்டால் என்ன ?

    அதிமுக ஆண்டால் என்ன?



    உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு! "





    ஸோ நாம நம்ம வேலையப் பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  26. அண்ணாத்தை நிங்களும் தொடர்ந்த அரசியல் பதிவாவே போடுறிங்க நானும் தொடர்ந்து வாக்கோடு எஸ்கேப்...

    பதிலளிநீக்கு
  27. இவங்களை பற்றி கதைச்சாலே வாய் நாறுது....

    பதிலளிநீக்கு
  28. விழுந்த ஓட்டுகளும் அந்த கட்சிக்கு மட்டுமே சொந்தமில்லை..அந்த ஓட்டுகளில் கூட்டணிக்கட்சிக்காரன் ஓட்டும் அடக்கம்..அதனால தான் நான் அதை கண்டுக்கிறதே இல்லை..

    பதிலளிநீக்கு
  29. நல்ல முடிவு தான் இப்படியே இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  30. அப்புறம் இன்ட்லி ல ஒரு ஓட்டு தமிழ் 10 ல ஒரு ஓட்டு கூடவே இந்த கமென்ட் போதுமா

    பதிலளிநீக்கு
  31. பொதுவாக திமுக எதிர்ப்பு என்பது அதிகமாக உள்ளது. மேலும் இமலாய ஊழல் என்பதும் ஒரு அங்கம் வகிக்க போகிறது. பார்போம் யார் வெல்ல போகிறார்கள் என்று

    பதிலளிநீக்கு
  32. அடியேன் திமுக ஆதரவாளனில்லை ஆனாலும் ;
    மக்களுடனும் கடவுளுடனுமே கூட்டணி; அவரும் குடும்ப அரசியல் நடத்துகிறார்; குடிகாரன் , பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுத்தவர்- இவர் கடந்தகால ஊழல்; மெகா திருமணம்; மன்னார்குடி ஆதிக்கம்- இதையெல்லாம் மக்கள் கணக்கில் எடுத்து கழித்துக் கட்டி ; எல்லாம் பேய்தான் பழகிய பேயுடனே வாழ்வோம் என முடிவுகட்ட மாட்டார்களா?
    திமுக...எல்லாவீட்டுக்கும் இணைய இணைப்பும் ஒரு கணனியும் இலவசமாகக் கொடுக்க உள்ளதாமே உண்மையா?

    பதிலளிநீக்கு
  33. நல்லாவே கணக்கு பண்ணியிருக்கீங்க(போட்டுருக்கீங்க)

    :))

    பதிலளிநீக்கு
  34. நீங்க சொல்வதும் சரிதான். பத்திரிக்கைகளின் இந்த முடிவை வைத்து தேர்தல் முடிவை கணித்து விட முடியாது. நம்மாட்கள் கடைசி நேரத்தில் அந்தர் பல்டி அடித்தாலும் அடித்து விடுவார்கள்...

    பதிலளிநீக்கு
  35. தல உங்களுக்கும் கணக்கு நல்லாத்ததான் வருது...!!!! சூப்பரான விளக்கம்..!!!

    பதிலளிநீக்கு
  36. cong and PMK both got 50% vote approx in their contested assemblies. Then do you say that they each have around 50% vote in all assemblies in tamilnadu.

    பதிலளிநீக்கு
  37. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...!

    பதிலளிநீக்கு
  38. இந்த வாரம் நீங்க கலக்கலான தமிழ்மணம் மகுடம் 3 முறை பெற்று அதிக ஹிட்ஸ் வாங்கியதற்கும், நாளை தமிழ்மணம் நெம்பர் 1 இடம் பிடிக்கப்போவதாக வரும் கிசு கிசுவுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. இந்த முறை அம்மா ஆட்சியை பிடிப்பாங்க.. ஆனா தமிழனுக்கு தோல்விதான்.யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்பாவி மக்களுக்கு விடிவு காலம் வரப்பொவதில்லை

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சார்.நலம்தானே?ரொம்ப வேடிக்கையாயிருக்கு/

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.