என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மார்ச் 24, 2011

17 நாங்களும் இலவசங்களை வாரி இறைப்போம்ல....-அண்ணா.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு




திருச்சி: திமுகவுக்குப் போட்டியாக அதிரடியான அறிவிப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில், இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.

- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.

- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.

- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

- நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

- +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

- தனியார் கேபிள் அரசுடமையாக்கப்படும்.  அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும். 
 
- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.

- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.

- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.

- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. எல்லாமே நல்லாத்தாங்க சொல்லி இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  2. ///// ‘’பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் அளிக்கப்படும். //////


    பதிவர்களுக்கு?

    பதிலளிநீக்கு
  3. உபயோகமான சலுகைகள் 2 பேரும் தரவில்லை
    ஓட்டுக்கு தான் சலுகைகள்

    பதிலளிநீக்கு
  4. செல்லத்தா எங்க மாரியாத்தா!

    பதிலளிநீக்கு
  5. அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..

    பதிலளிநீக்கு
  6. அப்படியே திருவோடு ஒன்னையும் இலவசமா கொடுத்திட்டா பொருத்தமா இருக்கும்ல...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா24 மார்., 2011, 2:02:00 PM

    செம போட்டி

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா24 மார்., 2011, 2:02:00 PM

    மக்களுக்கு குசி..யாரு வந்தாலும் இலவசம் உண்டு

    பதிலளிநீக்கு
  9. இலவசத்தில் முழ்கும் உரிமை தமிழனக்கு மட்டுமே உள்ளது

    பதிலளிநீக்கு
  10. இணையம் படுத்தி எடுத்ததில் இப்போதுதான் வர முடிந்தது..யாராவது ஹை-ஸ்பீட் நெட் கனெக்சன் ஃப்ரீயாக் கொடுக்காங்களா?

    பதிலளிநீக்கு
  11. இந்தியா 2010ல் எல்லாம் வல்லரசு ஆகுவதெல்லாம் பொய். இலவசங்களுக்கு கை நீட்டும் பிச்சைக்கார நாடாக மாறாவிட்டால் சரி?

    பதிலளிநீக்கு
  12. ??????? 2010?? ??????? ??????? ???????????? ????. ????????????? ?? ???????? ??????????? ????? ???????????? ????

    பதிலளிநீக்கு
  13. குஜராத் முதல் அமைச்சர் (நரேந்திரா மோடி) தேர்தலுக்கு முன் "இலவச மின்சாரம் தர மாட்டோம்;
    பழைய மின்சார கட்டண நிலுவையை வசூல் செய்வோம். " என்று அறிக்கை வெளியிட்டார்; தேர்வு பெற்றார் என கேள்வியுறுகிறோம். தமிழ்நாட்டிற்கும் அவ்வாறு ஒரு முதல்வர் எப்போ வருவாரோ?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.