என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மார்ச் 16, 2011

41 விஜயகாந்த் + அண்ணா தி.மு.க-கூட்டணி= பலமா? பலவீனமா? (நேற்றைய தொடர்ச்சி)

 கடந்த பதிவில் தே.மு.தி.க- வின் வளர்ச்சி பற்றி பார்த்தோம்.....இனி.....இந்த கூட்டணியால் யாருக்கு பலமென்று பார்ப்போம்....


தே.மு.தி.க கடந்த சட்டமன்றத்தேர்தலில் பெற்றிருந்த மொத்த வாக்குகளில் நான்கு வகையினருக்கு பங்குண்டு.


அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா.தி.மு.க-வின் அதிருப்தி வோட்டுகள் +  ரசிகர் மன்றத்தினர் வாக்குகள் + ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் வெறுத்து போயிருந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் வாக்குகள் + நடுநிலையாளர்களின் வாக்குகள் எல்லாம் சேர்த்துதான் அந்த 27,64,223 வாக்குகளும், 8.32%  சதவிகிதமும். அதே வாக்குகள் இப்போதும் விஜயகாந்திற்கு அப்படியே  கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே....ஒவ்வொன்றாக பார்த்துவிடுவோம்.

 கடந்த முறை ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க-வின் அதிருப்தி  வாக்குகளை தி.மு.க வும் விஜயகாந்தும் பங்கிட்டு கொண்டது போல...இந்த முறை ஆட்சியிலிருப்பது தி.மு.க என்பதால் இப்போதைய அதிருப்தி வாக்குகளை அண்ணா.தி.மு.க வும், விஜயகாந்தும் பங்கிட்டு கொள்ளலாம். விஜயகாந்த் கூட்டணியில் இல்லாவிட்டாலும் அந்த வாக்குகளில் கணிசமான வாக்குகள் அண்ணா.தி.மு.க-விற்குத்தான் போகும்.

அடுத்து, ரசிகர் மன்றத்தினர் வாக்குகள். தமிழகம் முழுவதும் விஜயகாந்திற்கு 30,000 ரசிகர் மன்றம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு ரசிகர் மன்றத்திற்கு நூறு வாக்குகள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் 30,000 X 100 = 30,00000 வாக்குகள் பெற்றிருக்கலாம். 

அதன் பிறகு அதிருப்தி வாக்குகள், நடுநிலையாளர் வாக்குகள் என்று மொத்தமாக ஏறக்குறைய  40 லட்சம் வாக்குகள் பெற்றிருக்கலாம். ஆனால், 27 லட்சம் வாக்குகள்தான் மொத்தமாக கிடைத்தது. ரசிகர்களின் வாக்குகளிலேயே ஏறக்குறைய 3 லட்சம் வாக்குகள் குறைகிறதே?

அப்படியானால் யார் வாக்களிக்கவில்லை? நிச்சயம் நடுநிலையாளர்களும், அதிருப்தியாளர்களும் வாக்களித்திருப்பார்கள். வாக்களிக்காமல் விட்டது ரசிகர் மன்றத்தினர்தான்.

ரசிகர்களில் பாதி  பேர்தான் வாக்களித்துள்ளார்கள். ரசிகர்கள் முழுமையாக விஜயகாந்திற்கு வாக்களிக்காமல் போனது ஏன்? காரணம் இருக்கிறது.


விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தி.மு.க- வின் அனுதாபியாகவே பார்க்கப்பட்டதால் தி.மு.க.வினரில் கணிசமான பேர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்திலும் இருந்தார்கள். அதெல்லாம் நடிகராக இருந்தவரைதான். கட்சி ஆரம்பித்த போது அவர்கள் விலகி கொண்டாகள்.  அதையும் மீறி ஒரு சிலர் வாக்களித்திருக்கலாம்.

இந்த முறை அண்ணா.தி.மு.க-வுடன் கூட்டணி என்றதும் அவர்கள் விலகலாம்.
(என் நண்பர்களில் சிலர் விஜயகாந்த் ரசிகர்களாக  இருக்கிறார்கள்.அவர்கள் தி.மு.க- அனுதாபிகளும் கூட...கடந்த முறை 4 பேரை தவிர அவர்கள் யாரும் விஜயகாந்திற்கு வாக்களிக்கவில்லை. இந்த முறை அந்த நான்கு பேரில் ஒருவர்  விஜயகாந்திற்கு வாக்களிக்க போவதில்லை என்கிறார். காரணம் கேட்டபோது நாங்கள் போனமுறை கேப்டன் தனியாக நின்றதால் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் கேப்டனுக்கு வாக்களித்தோம். ஆனால் இந்த முறை கூட்டணி போட்டுவிட்டார். கேப்டன் முதலமைச்சராக வேண்டுமானால் போராடலாம். எதுக்கு ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.மற்ற மூவர் விஜயாகந்துக்குத்தான் எங்கள் ஓட்டு என்று சொல்கிறார்கள்.  இது சில ரசிகர்களின் மனநிலைதான்.அனைத்து ரசிகர்களுக்கும் இது பொருந்தாது.)   இப்போதும் அப்படி ஏதும் நடக்கலாம்.

அடுத்து, எம்.ஜி.ஆர்-பெயரை அவரின் பிறந்த நாள், இறந்தநாள்,தேர்தல்  நாளின் போது மட்டும் கறிவேப்பிலை போல பயன்படுத்தி, மற்ற நாட்களில் அவரை பற்றிய நினைவே இல்லாமல் இருந்த  ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்கினால் மனம் வெறுத்து போயிருந்த எம்.ஜி.ஆர். விசுவாசிகள்.
அவர்களை எம்.ஜி.ஆர். தான் என் தலைவர், அவர் வழியில் என் ஆட்சி என்று சொல்லி ஜானகி அம்மையார் கொடுத்த எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை பயன்படுத்தி  விஜயகாந்த் கவர்ந்ததால் நமக்கு நல்ல தலைவன் கிடைத்துவிட்டார் என்று நினைத்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவை பிடிக்காமல்தான் விஜயகாந்திற்கு வாக்களித்தார்கள். அவர்களை மீண்டும் ஜெயலலிதாவின் பக்கம் திருப்புவது சிரமம்.



அடுத்து தி.மு.க வினரின் ஆட்சியையும் - அண்ணா.தி.மு.க ஆட்சியையும்  மாறி மாறி பார்த்துவிட்டு வெறுத்து போயிருந்த நடுநிலையாளர்கள்.
இரு கழகத்திற்கும் மாற்றாக விஜயகாந்த் வருவார் என்று நம்பி வாக்களித்த இவர்களின் நம்பிக்கை பொய்த்து போனதால் இவர்கள் வேறு வேட்பாளர்களை நாடக்கூடும், அல்லது  49 ஓ-வை பயன்படுத்தக்கூடும்.

மொத்தத்தில் விஜயகாந்த் வருகையால் அண்ணா.தி.மு.க-கூட்டணிக்கு லாபமுமில்லை, பலனுமில்லை. மாறாக, விஜயகாந்திற்கே பலம்.


காரணம், கடந்த முறை ஒரு தொகுதியில் ஜெயித்ததால் அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எத்தனை ஜெயித்தாலும் அவர்களின் கணக்கில் அது வரவுதான்.

கடந்த முறை போலல்லாமல் இம்முறை அண்ணா.தி.மு.க-வாக்கு வங்கியின் உதவியுடன் சில தொகுதிகள் ஜெயிக்கலாம். அது லாபத்தின் கணக்கில் ஏறும். அதேநேரம் ஒரு முதல்வர் வேட்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவர் இப்போது இன்னொருவரை முதல்வராக்க பாடுபடுவது விஜயகாந்தை பொறுத்தவரை பின்னடைவே....

தன்னை முதல்வராக முன்னிறுத்தி,அதை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்  கூட்டணி அமைத்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். அல்லது வாழ்வா சாவா என்று ஜெயிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ஜெயலலிதாவிடம் குறைந்த பட்சம் துணை முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலாவது கூட்டணி சேர்ந்திருக்கலாம்.

  மொத்தத்தில் இந்த முறை கணிசமான எம்.எல்.ஏ-க்களை பெற்று கட்சியை காப்பாற்றி விடுவார் விஜயகாந்த்.  அதேநேரம் எதிர்காலத்தில் இன்னொரு வைகோ வாகவும் தமிழக அரசியலில் நீடித்து இருப்பார்.    இனி முதலமைச்சர் நாற்காலி என்பது சினிமாவில் மட்டுமே  விஜயகாந்திற்கு  சாத்தியம்.

நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக 


Post Comment

இதையும் படிக்கலாமே:


41 கருத்துகள்:

  1. விதியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் - இப்படிக்கு ஓட்டாளன்

    பதிலளிநீக்கு
  2. அவரோட கெப்பாகுட்டிக்கு இதுவே அதிகம்!

    பதிலளிநீக்கு
  3. இந்த படம் ஓடாது. விரைவில் கேப்டன் வெளியேறுவார் என தெரிகிறது. இல்லைஎன்றாலும் தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முறிவு உறுதி

    பதிலளிநீக்கு
  4. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல அலசல் ஆனால் எது நடக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. maஎன்னங்க அது வித்தியாசம்?/ma

    பதிலளிநீக்கு
  7. தன்னை முதல்வராக முன்னிறுத்தி,அதை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும்.

    இந்த முறையில் கேப்டன் முயன்றிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  8. ஏற்க்கனவே ட்ரவுசர் கிழிஞ்சிருக்கு அது இன்னும் பெருசா கிழிய போகுது

    பதிலளிநீக்கு
  9. நல்ல அலசல். எனது கருத்துக்களும் இதுதான். விஜயகாந்த் இருப்பதால் அதிமுகவுக்கு லாபமில்லை. ஆனால் அவர் இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  10. விஜயக்காந்தும் இதை உணர்கிறாரா என்று பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  11. பொருத்திருந்து பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  12. //////
    உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
    மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
    /////

    என்ன இது..


    http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  13. தெளிவான அலசலும் ..
    விரிவான விளக்கமும்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா16 மார்., 2011, 3:03:00 PM

    ஓட்டு போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா16 மார்., 2011, 3:04:00 PM

    நல்ல அலசல்

    பதிலளிநீக்கு
  16. வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    பதிலளிநீக்கு
  17. விக்கி உலகம் said... 1 விதியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் - இப்படிக்கு ஓட்டாளன்////
    வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  18. வேடந்தாங்கல் - கருன் said... 2 கலக்கரீங்க நண்பரே...
    ரொம்ப நன்றி சார்

    பதிலளிநீக்கு
  19. செங்கோவி said... 3 அவரோட கெப்பாகுட்டிக்கு இதுவே அதிகம்!
    அப்படியா சொல்றீங்க....

    பதிலளிநீக்கு
  20. சங்கவி said... 4 நல்ல அலசல்...
    நன்றி சார்

    பதிலளிநீக்கு
  21. ஜீவன்சிவம் said... 5 இந்த படம் ஓடாது. விரைவில் கேப்டன் வெளியேறுவார் என தெரிகிறது. இல்லைஎன்றாலும் தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முறிவு உறுதி
    அது தெரிந்ததுதான்....ஒரு உறையில ரெண்டு கத்தி எப்படி இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  22. சென்னை பித்தன் said... 6 பார்க்கலாம்! போட்டாச்சு!ம்...ம்...பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  23. உளவாளி said... 7 பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...////
    பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  24. FARHAN said... 10 தன்னை முதல்வராக முன்னிறுத்தி,அதை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். இந்த முறையில் கேப்டன் முயன்றிருக்கலாம்///
    எல்லாம் கைநழுவி போய் விட்டது

    பதிலளிநீக்கு
  25. அஞ்சா சிங்கம் said... 11 ஏற்க்கனவே ட்ரவுசர் கிழிஞ்சிருக்கு அது இன்னும் பெருசா கிழிய போகுது////
    கிழியட்டும் கிழியட்டும்

    பதிலளிநீக்கு
  26. பாலா said... 12 நல்ல அலசல். எனது கருத்துக்களும் இதுதான். விஜயகாந்த் இருப்பதால் அதிமுகவுக்கு லாபமில்லை. ஆனால் அவர் இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.//
    தெளிவா குழப்புறீங்க பாலா

    பதிலளிநீக்கு
  27. rajatheking said... 13 I thing you underestimate the power of vijaykanth
    ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  28. பன்னிக்குட்டி ராம்சாமி said... 14 விஜயக்காந்தும் இதை உணர்கிறாரா என்று பார்ப்போம்!
    எங்கே பண்ணி சார் உணர்ந்தார்

    பதிலளிநீக்கு
  29. பாட்டு ரசிகன் said... 16 பொருத்திருந்து பார்ப்போம்..
    ஆமா சார்

    பதிலளிநீக்கு
  30. அரசன் said... 18 தெளிவான அலசலும் .. விரிவான விளக்கமும்//
    வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  31. ஆர்.கே.சதீஷ்குமார் said... 19 ஓட்டு போட்டாச்சு///
    நன்றி

    பதிலளிநீக்கு
  32. ஆர்.கே.சதீஷ்குமார் said... 20 நல்ல அலசல்
    நன்றியோ நன்றி

    பதிலளிநீக்கு
  33. tharuthalai said... 21

    வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

    இது என்ன பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமா இருக்கு....

    பதிலளிநீக்கு
  34. எப்படி ஓட்டு போடுவது?.

    பதிலளிநீக்கு
  35. கேப்டன் எடுத்த முடிவு தப்புதான்.. ஆனா அவருக்கு வேற வழி இல்ல..

    பதிலளிநீக்கு
  36. கூட்டணிக்குள்ளார ஏதோ கசமுசான்னு நியூஸ் வந்துட்டு இருக்கு தல....

    பதிலளிநீக்கு
  37. நல்ல அலசல், கலக்கரீங்க நண்பரே.வைகோ இல்லாத நிலையில், அதிமுக வின் பலம் பலவீனம் என்ன ?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.