என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், மார்ச் 02, 2011

38 இது என்னடா பைத்தியக்காரத்தனம்?




தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக, அதாவது ஏப்ரல் மாதம் 18,23,27ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3,7,10 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

ஐந்து மாநிலங்களிலும் மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 5 மாநிலங்களிலும் நடத்தை விதி அமலுக்கு வந்தது. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

மேற்கு வங்கத்தின் 6 கட்ட வாக்குப்பதிவினால்தான் தமிழக வாக்கு எண்ணிக்கை தேதி தள்ளி வைக்கப்படுகிறதாம்.


என்ன எழவுப்பா இது? என்னைக்கும் இல்லாத புதுமையா இருக்கு....தேர்தல் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு வோட்டு எண்ணிக்கையாம்?
அந்த ஒரு மாசமும் வாக்குபதிவு எந்திரத்தை பாதுகாத்து வைக்கணுமே......ஓரிரு நாட்கள் வைத்திருந்தாலே...ஓராயிரம் பிரச்சினைகள் நடக்கும். இந்த லட்சணத்தில் ஒரு மாசம் என்றால் கேட்கவே வேணாம்.

வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் அந்தந்த இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பை மக்களின் வரிப்பணத்தில் போடவேண்டும். இதையெல்லாம் மீறி வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு கட்சி ஜெயித்தால் இன்னொரு கட்சி தேர்தல் கமிஷன் மீதே சந்தேகத்தை கிளப்பும். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிசினையே மாற்றிவிட்டார்கள் என்று கூப்பாடு போடுவார்கள். 

ஒரு மாதம் வித்தியாசத்தில் வாக்கு எண்ணிக்கையை வைக்க இது என்ன நாடாளுமன்ற தேர்தலா?, அதில் தான் ஒரு மாநிலத்தேர்தல் முடிவுகளை உடனே விட்டால் இன்னொரு மாநிலத்தை பாதிக்கும் என்று சொல்லாம். சட்டமன்ற தேர்தலில் என்ன இருக்கு பாதிக்க..கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தொகுதியின் தேர்தல் முடிவுகள் அஸ்ஸாமையும், மேற்கு வங்கத்தையும் எப்படி பாதிக்கும் என்று தெரியவில்லை. 

அதற்கு பேசாமல் தமிழக தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கும். எப்படியோ ஒரு சர்ச்சைக்கு வித்திடுகிறது தேர்தல் ஆணையம்.

##########################################################



Post Comment

இதையும் படிக்கலாமே:


38 கருத்துகள்:

  1. ஆரம்பமே அமக்களமா இருக்கேப்பா இன்னும் தேர்தல் டைம்ல எத்தன தல உருளுமோ யப்பா!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா2 மார்., 2011, 8:20:00 AM

    இதிலிருந்து ஒன்று புரிகிறது. தமிழகத்தில் முதல் கட்டம் அதிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது என்றால் தமிழகம் அமைதிப் பூங்கவாகத்தான் இருக்கிறது என்று. நல்ல சந்தேகம் தான் உங்களது.

    பதிலளிநீக்கு
  3. அதற்கு பேசாமல் தமிழக தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கும். எப்படியோ ஒரு சர்ச்சைக்கு வித்திடுகிறது தேர்தல் ஆணையம்.///

    நானும் அதே தான் யோசித்தேன் தேர்தலை தேர்தலை மே 3 அந்த மாதரி தேதிகளில் தள்ளி வைத்து விடலாம்....ஒரு மாதம் என்றால் பாதுகாப்பது சிரமம்....

    பதிலளிநீக்கு
  4. >>>தமிழ்மணம் மகுடம்
    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    கலைஞரின் பேச்சும் எடைக்கு மடக்கான எனது கேள்விகளும்(ரஹீம் கஸாலி) - 31/31
    Who Voted?ரஹீம் கஸாலி


    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அடுத்து தமிழ்மணத்தில் மகுடம் பெறுவது எப்படி என ஒரு பதிவு போட்டால் என்னைப்போன்ற இளைய பதிவர்களுக்கும், வளரும் பதிவர்களுக்கும் நல்ல வழி காட்டிப்பதிவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. >>>அதற்கு பேசாமல் தமிழக தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கும். எப்படியோ ஒரு சர்ச்சைக்கு வித்திடுகிறது தேர்தல் ஆணையம்.

    ம் ம்

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சு வோட்டு எண்ணிக்கையாம்? /// ஏதோ உள்குத்து இருக்கு தல - டவுட்டு

    பதிலளிநீக்கு
  8. ஆமாங்க பேசாம மே மாசத்துக்கு தள்ளி வச்சிடலாம். ஏன்னா, இவங்களால என்னோட பரிட்சை தளிப்போகுமோனு ஒரு பயம்.
    இத முடிச்சிட்டு வெளியே போலாம்னு பார்த்த காலேஜுலேயே இருக்க வச்சிருவ்வங்க போல....

    பதிலளிநீக்கு
  9. இவங்க ஏதோ ப்ளான் பண்ணிட்ட மாதிரி இருக்கு தல..!

    பதிலளிநீக்கு
  10. தேர்தல் என்றாலே சர்ச்சை தானே பாஸ்..
    ஹிஹி ஆட்டுக்கும் மாட்டுக்கும் கனெக்சன் குடுக்குறாங்க..

    தப்சி-HOT பயோடேட்டா
    http://kaviyulagam.blogspot.com/2011/03/hot.html

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா2 மார்., 2011, 9:30:00 AM

    சபாஷ் ! அப்பத்தானே ஐபிஎல் ஏலம் போல தேர்தல் ஏலமும் நடைபெறும் ............ இந்த மண்ணுக்குத்தான் எலக்ஷ்னே தேவை இல்லை.... ஏலமாவே நாட்டைக் குத்தகைக்கு விடலாம்னு ஒரு ஐடியா சொன்னேன் ! எங்க கேட்கிறீங்க !

    பதிலளிநீக்கு
  12. அந்த ஒரு மாசமும் வாக்குபதிவு எந்திரத்தை பாதுகாத்து வைக்கணுமே......ஓரிரு நாட்கள் வைத்திருந்தாலே...ஓராயிரம் பிரச்சினைகள் நடக்கும். இந்த லட்சணத்தில் ஒரு மாசம் என்றால் கேட்கவே வேணாம்.


    .....சரிதான்... ஒரே மர்மமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் இது மிக பெரிய சர்ச்சையை கிளப்பும்

    பதிலளிநீக்கு
  14. என்ன நடக்கப்போவுதோ..?! இதெல்லாம் யோசிக்க மாட்டாங்களா..?! தேர்தல் ஆணையம் இதுவரை நடந்த தேர்தல்களில் இருந்து கொஞ்சமாச்சும் ஏதாவது படிப்பினை வேணாமா.?! அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை பண்ணாங்களான்னு தெரியல...எதோ சதி இருக்குன்னு நெனைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அதைப்போல்..
    ஏப்ரல் 13-ல் திருச்சியில் ஒரு ரயில் வே ஆள் எடுப்பு..
    ஏப்ரல் 14 சித்திரை திருநாள்..
    ஏப்ரல் 31 வரை பள்ளிகள் வேலைநாள் (1 to 5)
    இப்படியிருக்க எதைவைய்த்து தேர்தல் தேதி இப்படி என்று புரிய வில்லை..

    வரி பணம் தானே..

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா2 மார்., 2011, 11:41:00 AM

    பொட்டியை மாத்த அவ்வளவு நாள் வேணுமா?

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் சொல்வது போல ஒருமாசம் காவலில் வைத்தால் பிர்ச்சனைகள் பல உண்டு

    பதிலளிநீக்கு
  18. // நானும் அதே தான் யோசித்தேன் தேர்தலை தேர்தலை மே 3 அந்த மாதரி தேதிகளில் தள்ளி வைத்து விடலாம்....ஒரு மாதம் என்றால் பாதுகாப்பது சிரமம்....//

    பாதுகாப்பது இருக்கட்டும், அதற்கு ஆகுமான செலவு ???

    பதிலளிநீக்கு
  19. ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடக்குமோ!

    பதிலளிநீக்கு
  20. என்னமோ நடக்குது உலகத்துல பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது..

    பதிலளிநீக்கு
  21. //ஒரு மாதம் வித்தியாசத்தில் வாக்கு எண்ணிக்கையை வைக்க இது என்ன நாடாளுமன்ற தேர்தலா?, அதில் தான் ஒரு மாநிலத்தேர்தல் முடிவுகளை உடனே விட்டால் இன்னொரு மாநிலத்தை பாதிக்கும் என்று சொல்லாம். சட்டமன்ற தேர்தலில் என்ன இருக்கு பாதிக்க..கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தொகுதியின் தேர்தல் முடிவுகள் அஸ்ஸாமையும், மேற்கு வங்கத்தையும் எப்படி பாதிக்கும் என்று தெரியவில்லை. //

    அதே தான்....
    எனக்கும் ஒண்ணும் புரியலே

    பதிலளிநீக்கு
  22. //அதற்கு பேசாமல் தமிழக தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைத்து விட்டால் பிரச்சினையில்லாமல் இருக்கும்//

    நல்ல யோசனை தான்! எனக்கும் இதே தான் தோணிச்சு.
    ஆனால் அவங்க எல்லாம் என்னென்ன கணக்கு போட்டு வச்சியிருக்காங்களோ

    பதிலளிநீக்கு
  23. யாராவது கோர்ட்டுக்குப் போகலாம்...!

    பதிலளிநீக்கு
  24. [ma]நீங்கள் சொல்வது சரி தான்.. என் இப்டி செய்யுறாங்க நு தெரியலே !!!
    [/ma]
    சுரேஷ்

    பதிலளிநீக்கு
  25. இதுனால அரசியல்வாதிக்கு மட்டும்தான் வயிற்றை கலக்கும் நாம் வேடிக்கை பார்போமே.

    பதிலளிநீக்கு
  26. என்ன தலைவா...

    தேர்தல களம் போல பதிவு களமும் சூடு பிடிச்சுடுச்சு போல இருக்கே!!!

    பதிலளிநீக்கு
  27. சரியான கருத்து தான் ,.,..
    சிந்திக்கணும் தேர்தல் ஆணையம்

    பதிலளிநீக்கு
  28. பொறுத்திருந்து பார்ப்போம் வேடிக்கையை...

    பதிலளிநீக்கு
  29. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  30. ஸலாம் சகோ.கஸாலி,

    சூப்பர் கேள்வி கேட்டீங்க.

    ///"இது என்னடா பைத்தியக்காரத்தனம்?"///
    ---தலைப்புக்காகவே ஓட்டு போடலாம்..!

    பதிலளிநீக்கு
  31. உண்மை உண்மை - சரியானதொரு கருத்து தான். என்ன செய்வது ....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.