என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, பிப்ரவரி 18, 2012

23 அம்புலி 3D- ஒரு மாறுபட்ட விமர்சனம்..



நம்ம கேப்டன் நடிப்பில் என்பதுகளின் மத்தியில் வெளியான அன்னை பூமி திரைப்படத்திற்கு பிறகு வெளிவரும் நேரடி தமிழ் முப்பரிமானப்படம் அம்புலி. மைடியர் குட்டிச்சாத்தான், மேஜிக் மேஜிக் போன்ற இந்திய மொழி படங்களும், அவதார், ஃபைனல் டெஸ்டினேஷன் போன்ற ஆங்கில மொழிப்படங்களும் அவ்வப்போது வெளிவந்து தமிழ் பேசினாலும், தமிழுக்கென்று நவீன உத்திகளுடன் ஓரளவு நேர்த்தியுடன் வெளிவந்திருக்கும் படம்தான் அம்புலி.

3D படம் என்றாலே எல்லோருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். அதற்கு காரணம், பிம்பங்கள் திரையில் நடமாடுவது போலில்லாமல் நம் கண்முன்னே உலாவுவது போல் இருக்கும் என்பதுதான். அப்படிப்பட்ட ஒரு அம்சத்தோடு அருமையான ஒளிப்பதிவும், மிரட்டும் இசையும் இருப்பதால் அம்புலி டீம் ஜெயிக்க சாத்தியம் உண்டு.

சரி....படத்தின் கதை என்ன? சின்ன வயசில் படித்த அம்புலிமாமா கதைதான் இதுவும்.
பூமாடாந்திபுரம் என்றொரு கிராமம். மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் போல....எந்த நேரமும் இருட்டில் இருக்கிறது. ஆம்...அதுதான் படத்தின் தேவையும் கூட....

அந்தக் கிராமத்தில் இருக்கும் காட்டுவழியே பயணிக்க எல்லோருக்கும் பயம். அதனால் அந்த ஊரை சுற்றி ஒரு பெரிய மதிலை எழுப்பி அதற்குள் வசிக்கிறார்கள் கிராமத்தினர்.
எதற்காக இப்படி ஒரு பயம்?



எல்லாம் அம்புலிக்காகத்தான்.மொட்டை ராஜேந்திரனுடன், அவர் மகளும் அம்புலி உலாவும் காட்டுவழியே போகும்போது அவரை அடித்துவிட்டு, அவரின் அந்த சின்னஞ்சிறு குழந்தையை அம்புலி இழுத்துக்கொண்டு போகிறது. அப்போதே துவங்கிவிடுகிறது அம்புலியின் ஆட்டம்.

 அந்த காட்டுவழியே பயணிப்பவர்களை எல்லாம் அம்புலி ஸ்வாகா செய்துவிடுகிறது. இந்த விஷயங்களை அறியாத கல்லூரி மாணவன் ஒருவன் பூமாடாந்திபுரத்தில் இருக்கும் தன் காதலியை சந்தித்துவிட்டு திரும்புகையில் அம்புலியின் ரத்தவெறிக்கு ஜஸ்ட் மிஸ்சாகி விடுகிறான். அடுத்த நாள் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க தன் நண்பனுடன் மீண்டும் அந்த காட்டுவழியே போகிறான். இந்த முறை அம்புலியிடமிருந்து இருவரும் தப்பித்து நடுக்காட்டில் இருக்கும் மரவீட்டில் தங்குகிறார்கள். அந்த வீடு பார்த்திபனுடையது.

பார்த்திபனின் நடை உடை பாவனைகளை வைத்து இவர்தான் அம்புலி என்று முடிவு செய்கிறார்கள்.ஆனால், அம்புலி என்பது பார்த்திபனில்லை என்று தம்பி ராமையா மூலம் அறிந்த அவர்கள் பின்னர்  அம்புலியைப்பற்றி   தீவிர தேடலில் இறங்குகிறார்கள். அம்புலியை பற்றி அறிந்த தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரிக்கிறார்கள். அம்புலி இல்லை, இருக்கு, கட்டுக்கதை, டுபாக்கூர் என்று ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள்.
கடைசியில் அம்புலியை கண்டுபிடித்தார்களா? அம்புலி என்றால் யார்  என்பதை திகில் கலந்து  சொல்லியுள்ளார்கள் புதிய இயக்குனர்களான இரட்டையர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி சங்கரும்.இப்படி ஒரு கதையை 3D-யில் எடுக்க நினைத்த இயக்குனர்களுக்கும், எடுக்க துணிந்த தயாரிப்பாளரின் தைரியத்திற்கும் பாராட்டுக்கள்.

பார்த்திபன்,  ஊர் பெரியவர் என்று யாரைப் பார்த்தாலும் இவர்தான் அம்புலியாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. இதுதான் ஒரு சஸ்பென்ஸ்,த்ரில்லர் படத்தின் வெற்றியும் கூட.....

நண்டு ஜெகன் தன்னந்தனியாளாக அம்புலியை தேடிப்போய் பார்க்கும் காட்சியையும், அம்புலியின் வரைபடத்தை கதாநாயகர்கள் பார்க்கும் காட்சியையும் ஒரே புள்ளியில் இணைத்திருப்பது அருமை.

அம்புலி இருப்பதாக காட்டும் அந்த குகையும், பாழடைந்த மண்டபமும் அழகு. லொக்கேஷனை தேடிப்பிடித்த அம்புலி குழுவினருக்கு ஒரு ஷ்பெஷல் பொக்கே....
அம்புலி குழுவினர்


சாதாரண குழந்தை அம்புலியாக எப்படி உருவானது என்று வெள்ளைக்கார டாக்டர் + கலைராணி சொல்வது சுவாரஸ்யம்.

அம்புலி எப்படியிருப்பான் என்று படம்பிடித்துவரும்படி போலீசால் கொடுக்கப்படும் கேமராவில் அம்புலியைத்தவிர மற்ற எல்லாவற்றையும் எடுத்து தள்ளுகிறார்கள் கதாநாயகர்கள். ஒரு இடத்தில் பார்த்திபனை அம்புலி என்று முடிவுசெய்து போட்டோவும் எடுக்கிறார்கள் இருவரும். அதன்பின்  அதை எப்போது போலீசிடம் காட்டினார்கள்?
க்ளைமேக்சில் அம்புலியை தேடி ஒரு போலீஸ் படையே வருவது எந்த அடிப்படையில் என்று காட்டவேயில்லை.எல்லாம் டைரக்டர்களுக்கே வெளிச்சம்.

இப்படிப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் வேகத்திற்கு தடையாக இருப்பது பாடல்கள் தான் என்றால் மிகையில்லை. இந்தப்படத்திற்கும் அப்படிப்பட்ட விதிவிலக்குகள் உண்டு. க்ளைமேக்சிற்கு முன் ஒரு ஊர்மக்கள் எல்லாம் உணர்ச்சி பிழம்பாய் பாடும் பாடல் கதையோடு ஒன்றிவருவதால் பாதகமில்லை.  தவிர மற்ற இரு டூயட்டும் இடைச்சொருகல் போல்தான் இருக்கிறது.

மொத்தத்தில் சில லாஜிக் மீறல்கள்  இருப்பினும் அம்புலி (3D-யில்) கண்களை குளிர்விக்கும் பவுர்ணமி நிலவு.







Post Comment

இதையும் படிக்கலாமே:


23 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்
    http://www.tamilogy.com

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா18 பிப்., 2012, 6:03:00 PM

    உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கிறது உங்கள் விமர்சனம் கஸாலி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு விமர்சனம்..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. பார்க்கலாம் அண்ணே.... டெக்னாலஜியில் சும்மா மிரட்டியிருக்கிறார்கள்.

      நீக்கு
  5. ////(படம்பார்க்கும் பழக்கம் இல்லாததால் விமர்சனம் எழுதும் கலையும் எனக்கு கைவரவில்லை. குறையிருப்பின் மன்னிக்கவும்////

    இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கு....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனத்தில் இருக்கும் குறைகளை இந்த வரி போக்கிவிடும் என்று நினைத்தேன். பரவாயில்லை அந்த வரியை தூக்கிவிடுகிறேன்

      நீக்கு
  6. வணக்கம் நண்பரே,
    நேர்மையான விமர்சனத்தை குறைநிறைகளோடு எழுதியமைக்கு மிக்க நன்றி..! நிறைகளை நேர்த்தியாகவும், குறைகளை குறைத்துக்கொண்டும் அடுத்த வரும் படைப்புகளை கையாள்கிறேன்...

    அன்புடன்
    ஹரீஷ் நாராயண்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்புலியின் இயக்குனராகிய உங்கள் வருகைக்கும், விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டமைக்கும் நன்றி நண்பரே.....

      நீக்கு
  7. இன்னிக்குதான் இந்த படம் பார்த்தேன்...அருமை...உங்க விமர்சனமும் அருமை

    பதிலளிநீக்கு
  8. நல்ல அலசல்! படம் சூப்பராக இருக்கும் போல ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  9. சென்னையில் இருக்குறீர்களோ?படத்தின் இயக்குனரே பின்னூட்டம் அளித்துள்ளார்...இதுதான் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நான் ஊரில் தான் இருக்கிறேன். அன்று நான் பிலாத், சவுக்கத் ஆசாத் மற்றும் நண்பர்கள் அனைவரும் படம் பார்த்தோம். இயக்குனரிடமும் படத்தை பற்றி கருத்து கூறினோம்

      நீக்கு
  10. பெயரில்லா20 பிப்., 2012, 9:33:00 AM

    இரண்டு பாடல்களையாவது கட் செய்திருக்கலாம். மற்றபடி சிறந்த முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தலைல இருந்து எப்ப கைய எடுப்பீங்க. அந்த கொழப்பம் இன்னும் தீரலையா???

      (இந்த கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்கன்னு நான் ஒரு பதில் நினைத்து வைத்து இருக்கேன். பார்ப்போம் சின்க் ஆகுதான்னு)

      நீக்கு
    2. இரண்டு பாடல்களையாவது கட் செய்திருக்கலாம். மற்றபடி சிறந்த முயற்சி.

      அதுதான் என் கருத்தும் சிவா...

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.