என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

13 என்கவுண்டர் சரியா?தவறா?- வாருங்கள் விவாதிப்போம்.......



என்கவுண்டர்.....குற்றவாளிகளை கொல்வதற்காக போலீஸ் பயன்படுத்தும் சொல். இந்த வார்த்தை எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது.
என்கவுண்டர் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது.

என்கவுண்டர்  சரிதான்,அப்போதுதான் குற்றங்கள் குறையும்  என்று ஒரு தரப்பினரும்,

இல்லை, இது மனிதாபிமானமற்ற ஒரு செயல், அது ஒரு திட்டமிட்ட படுகொலை,குற்றவாளிகளை என்கவுண்டரில் கொலை செய்தால் சட்டமும் கோர்ட்டும் தேவையில்லையே என்று ஒரு தரப்பினரும் கூறிவருகிறார்கள்.

அதைப்பற்றி நாமும் விவாதிப்போம் வாருங்கள். என்கவுண்டர் சரியா? தவறா? என்று உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் வழியாக கூறுங்கள்....(விவாதம் ஆரோக்கியமானதாக இருக்கட்டும். வார்த்தைகள் எல்லை மீறினால் நீக்கப்படும்)


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. அருமையான விவாத தலைப்பு கஸாலி! கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து இவ்விவாதத்தில் பங்கெடுக்க முயல்கிறேன்!

    என்கவுண்டர் என்பது தவறான ஒரு விஷயம் என்பது எனது கருத்தாகும்! மிகவும் கொடுமை செய்த ஒருவனை, நாலுபேர் மத்தியில் வைத்து, நாயைச் சுடுவதைப் போல சுட்டுக் கொல்வது, அவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிம்மதியையும், தற்காலிக மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை!

    ஆனால், ஒரு மனிதனை, ஏனைய சகமனிதர்களுக்கு முன்னால் வைத்து கொல்வது என்பது, மனித இனத்துக்கே கேவலமானது - அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும்!

    மேலும், யாருமே இல்லாத ஒரு இடத்தில் வைத்து ஒருவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டாலும் கூட அது தவறே தான்!

    ஏனைய நண்பர்களின் விவாதங்களைப் படித்துவிட்டு மீண்டும் தொடருகிறேன்.....! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மௌனகுருக்களே என்கவுண்டர்களில் கொல்லப்படுகின்றனர்.
    ஏன் கஸாப்பை "போட்டுதள்ளவில்லை"?
    ஏன் ராஜாவையோ அல்லது கல்மாடியையோ ஒன்றும் பண்ணமுடியவில்லை?
    தேவையென்றால் வீரப்பனிடமும் பேசமுடிகிறது.
    அவன் பேசுவது பிடிக்கவில்லையென்றால் என்கவுண்டரா?
    நம் காவல்துறையின் நம்பகத்தன்மை குறைந்ததாலேயே இப்படியெல்லாம் பேசவைக்கிறது. காவல்துறை நம் நண்பனாக இருக்கும் பட்சத்தில் நாமே அவர்களுக்கு ஆதரவும் கொடுப்போம். அது அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கும்வரை, அவர்களின் நற்செயல்களும் சந்தேகமாகவே பார்க்கப்படும்

    பதிலளிநீக்கு
  3. எவரையும் விசாரணைக்குப் பின் தண்டனை கொடுக்கலாம். ஆனால், எண்கவுண்டர் சரியல்ல.

    பதிலளிநீக்கு
  4. கசாலி நானா,

    இதற்கு என்னால் ஆம் என்றும் சொல்ல முடியவில்லை, இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. நான் சில என்கவுண்டர்களை ஆதரிக்கிறேன். உதாரணம் நன்கு அறிமுகமான ரௌடிகளின் என்கவுண்டர். சிலவற்றை ஆதரிக்க முடியாது. உதாரணம் சென்னையில் 5 திருடர்கள் கொள்ளப்பட்டது. 12 .30 மணிக்கு போன் வந்திச்சாம், ஒரு மணிக்கு அங்கு போலீஸ் போச்சாம், திருடர்கள் கதவை மூடினார்களாம், இவர்கள் சுட்டார்களாம். என்னையா கதை விடறீங்க. அந்த அஞ்சு பெரும் திருடியவர்கள் தான் என்று எப்படி ஐயா confirm பண்ணினீர்கள்?
    என்ன விசாரணை நடந்தது?

    மேலும் திருட்டுக்கு உயிர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிருக்கு உயிர் சரி. இந்த விசயத்தில் திருடனுக்கு கையை மட்டும் மணிக்கட்டு வரை வெட்டுவது என்ற இஸ்லாமிய சட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மொத்தத்தில 2 நாளை இத வச்சு ஓட்டிருவ.... நடத்து.

    பதிலளிநீக்கு
  6. என்கவுண்டர் மிக மோசமான, கண்டிக்கத் தக்க செயல்- சராசரிக் குடிமகனாக நான்.
    என்கவுண்டர் மிகவும் வரவேற்கத் தக்க விஷயம்- அரசியல்வியாதியாக/அதிகாரியாக நான்.

    #இதுதான் நிதர்சனம் அப்பு....

    பதிலளிநீக்கு
  7. Lat encounter is right other wise north indian theifs all will be in Tamil nadu and our state will change like Bihar,U.P,Jarghant

    பதிலளிநீக்கு
  8. what mr.tirupurvalu is trying to tell us?we have enough local thiefs,why should we have it from north india?is it his concern?

    பதிலளிநீக்கு
  9. என்கவுண்டர் முற்றிலும் சரியே....ஆனால் அதை தவறாக பயன்படுத்தாதவரை

    பதிலளிநீக்கு
  10. kadumaiyana sattam irunthum thantikka mudiyavillai eppati thandicha than payam erkum entha kollakarana sututom ana kannukku theriyama evalavo kollai nadakkuthu athai yeppa thandikka poranga islamiya atchi vanthal matumea kutrangal kuraium..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.