என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 16, 2012

21 ஸ்டாலின் - விஜயகாந்த் சந்தித்து பேசியது என்ன?- முழு விபரம்.......வெளிவராத தகவல்கள்.



துரை விமான நிலையத்தில் தி.மு.க.,பொருளாளர் மு.க.ஸ்டாலினும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்தும் என்ன பேசினார்கள் என்ற விபரத்தை எங்கள் சிறப்பு புலனாய்வு நிருபர் அள்ளிவிட்டான் அவர்கள் நமக்கு வழங்குகிறார் கேளுங்கள்.

ஸ்டாலின்: வாங்க கேப்டன். என்ன இந்தப்பக்கம்?

விஜயகாந்த்: அதை நான் கேட்கனும்? அழகிரி ஏரியாவுல நீங்க சுத்திட்டு இருக்கீங்க?

ஸ்டாலின்: அதை ஏங்க கேட்கறீங்க? இளைஞர் அணிக்கு ஆள் சேர்க்க வந்திருக்கேன்.

விஜயகாந்த்: ஓ..ஆள் பிடிக்க வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க....சரி....அதுக்கு இளைஞர்ல வரனும்? நீங்க வந்திருக்கீங்க?

ஸ்டாலின்: ஏன்? என்னை பார்த்தா இளைஞரா தெரியலியா?

விஜயகாந்த்: இல்லே....உங்க இளைஞரணிக்கு முப்பது வயசுக்குள்ள இருந்தாத்தான் பதவின்னு கேள்விப்படேன்.

ஸ்டாலின்: அது எனக்கு இல்லை. மற்றவங்களுக்குத்தான்.

விஜயகாந்த்: இதையெல்லாம் ஆளுங்கட்சியாக இருக்கும்போது செஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் ஓட்டு அதிகமா கிடைச்சிருக்கும்ல?

ஸ்டாலின்: என்ன பன்றது? எங்களுக்கு தோற்றாத்தான் மக்களை பத்தியே ஞாபகத்துக்கு வரும். அதாவது எதிர்கட்சியா இருக்கும்போதுதான் கெட்டது கூட தைரியமா செய்வோம்.

விஜயகாந்த்: அப்படின்னா இப்ப ஆள் சேர்க்கறதை கெட்டதுன்னு சொல்றீங்களா?

ஸ்டாலின்: அப்படியும் வச்சிக்கலாம்...எனக்கு நல்லது. அழகிரிக்கு கெட்டது. ஏன்னா, இளைஞர் அணிக்குத்தானே ஆள் சேர்க்கறேன். அதுக்கு நான் தானே தலைவரு.

விஜயகாந்த்: ஆஹா....கலைஞரையே வார்த்தை ஜாலத்தில் மிஞ்சிடுவீங்க போல....

ஸ்டாலின்: ஆமாம்....அன்னைக்கு சட்டசபையில கடுமையா கோபப்பட்டுட்டீங்க போல...எனக்கே கொஞ்சம் பயமாகிடுச்சுன்னா பார்த்துக்கங்களே?

விஜயகாந்த்: அது வேறொன்னும் இல்லைங்க.... அந்த சம்பவம் நடக்கறதுக்கு முதல் நாள் ராத்திரி என் மகன் நடிக்கப்போற படத்துக்கு ஒத்திகை பார்த்துட்டு இருந்தான்.  எப்படி நாக்கை துருத்தறது, எப்படி கையை நீட்டுறதுன்னு  நான் அவனுக்கு ட்ரைனிங்க் கொடுத்துக்கு இருந்தேன். அந்த சிந்தனையிலேயே சட்டசபைக்கு வந்தேனா....அங்கே இருக்க கேமராவை பார்த்ததும் சூட்டிங்க் ஞாபகம் வந்திடுச்சு. அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.

ஸ்டாலின்: அப்படியா? அப்புறம் எதுக்கு வெளியே வந்து கோபமா பேட்டிலாம் கொடுத்தீங்க?

விஜயகாந்த்: அப்படி என்ன பன்னிட்டேன்னு ஜெயலலிதா கோபப்பட்டாங்க...அதான் எனக்கும் கோபம் வந்திடுச்சு.பின்னே என்னங்க? என்னாலதானே அவங்க முதலமைச்சர் ஆனாங்க...

ஸ்டாலின்: என்ன சொன்னீங்க உங்களால் அவங்க முதலமைச்சர் ஆனாங்களா.... நல்ல காமெடி போங்க.....அவங்க எங்களால் தான் முதல்வர் ஆகிருக்காங்க?

விஜயகாந்த்: இதென்னங்க புதுக்கதை? நீங்கதான் அவங்களுக்கு எதிரியாச்சே... நீங்க எப்படி அவங்கள் முதலமைச்சர் ஆக்கிருக்க முடியும்? அதோடு நாங்கதானே அவங்க கூட்டணியில் இருந்தோம்.

ஸ்டாலின்: நீங்க கூட்டணியில் இருந்ததெல்லாம் உண்மைதான். ஆனால், நாங்க ஆட்சில இருக்கும்போது ஸ்பெக்ட்ரம், ஒரு லட்சத்து சொச்சம் கோடி, லஞ்சம்ன்னு இவங்களோடு மட்டும் கூட்டணி வச்சிக்கு தேர்தலை சந்திச்சோம். மக்களுக்கு எங்க கூட்டணி பிடிக்காம உங்க கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாங்க...இப்ப சொல்லுங்க ஜெயலலிதா சி.எம்.மா இருக்கறதுக்கும் நீங்க எதிர்கட்சி தலைவரா இருக்கதுக்கும் யார் காரணம்?

விஜயகாந்த்: நீங்கதான்... நீங்கதான்..ஒத்துக்கறேன்....

அப்போது ஒருவர் வந்து

சார்...ஃப்ளைட் கிளம்ப போகுது சீக்கிரம் வாங்க என்றார். உடனே இருவரும் விமானத்தை நோக்கி நடந்தனர்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. நீங்க பா.ம.க. தொண்டரா இருந்தாலும் மனசுல பட்டதை பளிச்னு எழுதறீங்க கஸாலி. உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவ்..ஜூனியர் சென்னை பித்தன்,

      பமக வில்தான் தொண்டர்களே இல்லையே. ஒன்லி தலைவர்கள் தான் இருக்காங்க. இந்த லட்சணத்தில தொண்டராம்ல தொண்டர்.

      நீக்கு
    2. அது என்னப்பா ஜூனியர் சென்னை பித்தன்?
      பாவம் சென்னைப்பித்தன் அய்யா....அவரு பேரை இந்த ஜூனியர் கெடுத்திடுவார் போல...

      நீக்கு
  2. என்னாது நான் பா.ம.க.,தொண்டரா? எனக்கு தெரியாத ரகசியமா இருக்கே இது. அதுசரி என்னை எப்பய்யா உங்க கட்சியில் சேர்த்தீர்?

    பதிலளிநீக்கு
  3. கலக்கல் காமெடி...அண்ணன் தீவிர தங்கபாலு ஆதரவாளர் என்பதை இந்த இடத்தில சொல்ல கடமைபட்டுள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவி... நீயுமா? இன்னும் யார்யார் என்னன்ன சொல்லப்போறாங்களோ?

      நீக்கு
  4. //ஆமாம்....அன்னைக்கு சட்டசபையில கடுமையா கோபப்பட்டுட்டீங்க போல...எனக்கே கொஞ்சம் பயமாகிடுச்சுன்னா பார்த்துக்கங்களே?//

    ஹா ஹா ஹா புகைப்படத்தில் இன்னும் தலையை கனகச்சிதமாக ஓட்டி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம். வருகைக்கு நன்றி சகோ....அந்த புகைப்படம் நம்ம தயாரிப்பல்ல. அது நக்கீரன் தயாரிப்பு

      நீக்கு
  5. salaam..............

    //ஆனால், நாங்க ஆட்சில இருக்கும்போது ஸ்பெக்ட்ரம், ஒரு லட்சத்து சொச்சம் கோடி, லஞ்சம்ன்னு இவங்களோடு மட்டும் கூட்டணி வச்சிக்கு தேர்தலை சந்திச்சோம்.////

    ha ha ha ha ha ha ha..........classic

    பதிலளிநீக்கு
  6. நல்ல கலக்கல் காமெடி கற்பனை தான் போங்க...

    பதிலளிநீக்கு
  7. அண்ணே நீங்க எப்பண்ணே கட்சி ஆரம்பிக்க போறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏண்ணே இப்படி ஒரு ஆசை உங்களுக்கு... சரி...சரி... நான் கட்சி ஆரம்பித்தால் தலைவர் நாற்காலியை உங்களுக்காக காலியாக வைத்திருப்பேன்.

      நீக்கு
  8. புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் கசாலி வாழ்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் கட்சியின் புதிய கொ.ப.செ., நக்கீரன் வாழ்க...

      நீக்கு
  9. நல்லா ஒ(ஓ)ட்டு கேக்குறீரு...

    கலக்கல்!!!

    பதிலளிநீக்கு
  10. கலக்கறீங்களே கஸாலி.
    நடுவில நான் எங்க வந்து மாட்டினேன்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அய்யா... நீங்க எங்கே வந்து மாட்டினீங்கன்னு சிவாவுக்கும் சிராஜிற்குமே வெளிச்சம்.

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.