என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

24 நான் வழங்கும் விருதுகள் இவர்களுக்கே.....இது விருதுக்காலம்


விருதும் சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல......தெரிந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது, தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்படுகிறது, சிபாரிசு இருந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று விருதுகள் எப்போதும் சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வருகிறது. ஆனாலும், விருது மீது எல்லோருக்கும் காதல் இருக்கத்தான் செய்கிறது. நம் உழைப்புக்கான அங்கீகாரமாக நாம் கருதுவது விருதைத்தான்.

கடந்த வருடம் கூட எனக்கு சில நண்பர்கள் விருது தந்து கவுரவித்தார்கள். அந்த வரிசையில் இந்த வருடம் எனக்கு விருது தந்திருக்கிறார் பதிவுலகில்  நான் மதிக்கும் மூத்த பதிவர் அய்யா சென்னைப்பித்தன் அவர்கள். பதிவுலகில் நான் பெரிதாக எதையும் சாதித்ததில்லை. ஏதோ எனக்கு தோன்றும் மொக்கைகளை பதிவு என்ற பெயரில் எழுதிக்கொன்று கொண்டு வருகிறேன். என் எழுத்துக்களில் ஏதோ ஒன்று சென்னை பித்தன் அய்யாவை கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்த விருது தந்திருக்கிறார் போல. அய்யாவிற்கு நன்றிகள்.



versatile blogger award என்ற விருதை எனக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த விருதை என்னோடு வைத்துக்கொள்ளாமல் எனக்கு பிடித்த தகுதியானவர்களுக்கு வழங்குமாறு அன்புக்கட்டளையும் இட்டு என்னை சங்கடத்திற்குள்ளாக்கி இருக்கிறார். இந்த பரந்து விரிந்த பதிவுலகில் எல்லோரும் விருதுக்கு தகுதியானவர்களாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஐந்து பேருக்கு வழங்குவதென்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவதுபோல மிக சிக்கலான ஒன்று.

அதே நேரம் யாருக்கும் விருது கொடுக்காமல் விட்டுவிட்டால் அது விருதின் விதிமுறைகளுக்கு புறம்பானதொரு விஷயமாகிவிடும். ஆகவே ஐந்து பேரை நான் இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளேன். அதற்காக இந்த ஐந்து பேரைத்தவிர மற்ற பதிவர்களுக்கு தகுதி இல்லை என்று ஆகிவிடாது. நிச்சயம் இந்த சுழல் விருது மற்ற பதிவர்களால்அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



1) அரசியலை நொறுக்குத்தீனியாக நமக்கு வழங்கும் அதிரடி ஹாஜா

2) சமகால நிகழ்வுகளை  நக்கல், நையாண்டியுடன் மிக்சராகவும் ஸ்பெஷல் மீல்ஸாகவும் படைக்கும் மெட்றாஸ் பவன் சிவக்குமார்

3) கவிதையையும், மருத்துவத்தையும் கலந்து கொடுத்து கலக்கும் துரை டேனியல்

4) மறைந்த தலைவர்களின் கடைசி காலத்தை கச்சிதமாய் தரும் ஆரூர் மூனா செந்தில் 


இதில் நான் கடைசியாய் கொடுக்கப்போகும் நபர் பற்றி ஒரு சர்ச்சையும் சந்தேகங்களையும் உங்களுக்கு எழலாம். இவர் உங்கள் நண்பர் என்பதற்காக இந்த விருதை வழங்கியிருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கலாம். ஆனால், என் நண்பன் என்பதையும் தாண்டி ஒரு தரமான பதிவர் இவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மிக குறுகிய காலத்தில் எல்லோராலும் கவனிக்கப்பட்டவன்.  நிச்சயம் இந்த விருது வளர்ந்துவரும் அவனுக்கு பொருத்தமாய் இருக்கும். அவன்....எஸ்....உங்கள் யூகம் கரெக்ட்...

5) சிராஜ்

இந்த ஐவருக்கும் versatile blogger award என்ற விருதை வழங்கி கவிரவிப்பதோடு நானும் மகிழ்கிறேன்.

ஓக்கே... நண்பர்களே.....என் கோட்டா முடிந்துவிட்டது. இனி, விருது பெற்றவர்கள் கவனத்திற்கு....

இந்த விருதை ஒவ்வொரு(விருது பெற்ற பதி)வரும் தலா ஐந்து தகுதியான பதிவர்களுக்கு வழங்கி கவுரவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

விருதுதந்த சென்னப்பித்தன் அய்யாவிற்கு நன்றி.....விருது பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...



Post Comment

இதையும் படிக்கலாமே:


24 கருத்துகள்:

  1. பெயரில்லா14 பிப்., 2012, 12:51:00 PM

    சிராஜ்...நம்ம ரெண்டு பேருக்கும் விருதா? நேத்து வரைக்கும் கசாலி நல்லாதான இருந்தாரு?? திடீர்னு இப்படி ஒரு முடிவை எடுத்துப்புட்டாரே. ரைட்டு. அப்படியே அந்த 1000 பொற்காசையும் மறக்காம வாங்கிக்குவோம். கைச்செலவுக்கு ஆகும். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருதுகொடுத்ததற்காக நீங்கள் ஒரு 2000 பொற்காசுகளை எனக்கு அனுப்பவும். அதிலிருந்து 1000 பொறாகாசுகளை நான் தருகிறேன்

      நீக்கு
  2. பெயரில்லா14 பிப்., 2012, 12:52:00 PM

    ஹாஜா, ஆரூர் முனா செந்தில், டேனியல் ஆகியோருக்கு வாழ்த்துகள். 'கிங்மேக்கர்' (நாளைய 'சோ') கஸாலி வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கிங் மேக்கர்ன்னா நீங்களெல்லாம் கிங் ஒக்கேயா?
      அதுசரி... சோவோட ஏன்யா என்னைய சேர்த்த உங்கள் கொலைவெறி வாழ்க...

      நீக்கு
  3. முதலில் விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள்...ஐ....எனக்கும் விருதா?!!நன்றிண்ணே....

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் எல்லாருக்கும்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  6. பெயரில்லா14 பிப்., 2012, 4:55:00 PM

    ஒரு அரசியல் வரலாற்றுப் பதிவரின் சிரமம் மற்றொரு அரசியல் வரலாற்றுப் பதிவருக்குத்தான் தெரியும் என்பதை புரிய வைத்து விட்டீர்கள் நன்றி கஸாலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே.....வருகைக்கு நன்றி...சீக்கிரம் நீங்களும் எழுதுங்க

      நீக்கு
  7. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கஜாலி நானா,

    என்ன சொல்றதுன்னு தெரியல. என்னைய கேட்டா நீ எனக்கு கொடுக்காம வேற யாருக்காவது கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
    விருது பெற்ற மற்ற அனைவரும் நிச்சயம் தகுதியானவர்களே. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    அது சரி, இதுக்கு யாரு மைனஸ் வோட்டு போட்டது???? சிவாவ தேர்ந்தெடுத்தது பிடிக்கலையா???

    பதிலளிநீக்கு
  9. Santhosathai pakirnthu kolvathu enpathu mikavum inbamanathu... Athu pool viruthinai vaanki athanai mattravarkalukku valanki makilvathilum inbamae... VALTHUKKAL anaivarukkum...

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கும் , உங்களாள் விருது பெற்றாவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக்குறேன்.

    பதிலளிநீக்கு
  11. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  12. தகுதியானவர்களுக்கு விருது வழங்கியிருக்கும், எந்த விருதுக்கும் தகுதியான உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.