என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 09, 2012

25 பீர்பாலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் பின்னே கலைஞரும், ராமராஜனும்......(அரசியல் கேள்வி-பதில்கள்)


கச்சத்தீவை மீட்பதால் ஒரு பலனும் இல்லை என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன்?

முகலாய மன்னன் அக்பரின் அரசவையில் இருந்தவர் விகடகவி பீர்பால்...ஒரு முறை அக்பரும் அவரும் இன்னொருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அங்கு பறிமாறப்பட்ட கத்தரிக்காய் கூட்டின்  ருஷியில் ஈர்க்கப்பட்ட அக்பர் அதை விரும்பி சாப்பிட்டபடி பீர்பாலை பார்த்து, ”கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது” என்றாராம். அதற்கு பீர்பாலும் ”ஆமாமாம்....கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது அரசே” என்றாராம். 

சில நாட்கள் கழிந்ததும், மீண்டும் அவர்கள் ஒன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கத்தரிக்காய் கூட்டை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்த அக்பர், பீர்பாலை பார்த்து “கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு கெடுதி” என்றாராம். அப்போது பீர்பால் ”ஆம் மன்னா...கத்தரிக்காய் உடம்புக்கு கெடுதி” என்றாராம்.

இந்த இரண்டு தடவையும் இதை கவனித்த அந்த இன்னொருவர் பீர்பாலிடம் ”அன்றைக்கு மன்னர் கத்த்ரிக்காய் கூட்டு உடம்புக்கு நல்லது என்ற போது ஆமாம் என்றீர்கள். இன்றைக்கு கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு கெடுதி என்றபோதும் ஆமாம் என்கிறீர்களே? ஏன் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்” என்று கேட்டாராம்.
 

அதற்கு பீர்பால்
”நான் மன்னரிடம் தான் வேலை செய்கிறேன். கத்தரிக்காயிடம் இல்லை. கத்தரிக்காயிற்கு ஆமாம் போட முடியாது” என்று பதில் சொன்னாராம் .

அதுபோல் தான் ஞானதேசிகன் பேச்சும்...அவர் காங்கிரசின் வேலைக்காரன்...அப்படித்தான் பேசுவார்.


--------------------





எட்டு மணி நேர மின்வெட்டை கிண்டல் செய்கிறாரே கலைஞர்?

கலைஞர் ஆட்சியில் ரெண்டு அல்லது மூன்று மணி நேரம் மின்வெட்டு இருந்ததற்கே கலைஞரையும், ஆற்காட்டாரையும் வறுத்து எடுத்தார்கள் ஜெயலலிதாவும், மற்றவர்களும். இப்போது கலைஞர் முறை.

-------------------------



தேர்தல் நேரத்தில் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார் என்கிறாரே  நடிகர் ராமராஜன்?

எதை நிறைவேற்றி எதில் சாதனை படைத்துள்ளார் ஜெ?....
மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது எட்டு மணி நேரமாக அதிகரித்துள்ளது. பஸ் கட்டணம், பால் விலை எழுப்பத்தைந்து சதவீதம் உயர்ந்துள்ளது.
இதெல்லாம் சாதனையாக ராமராஜனுக்கு தெரிந்தால் அவர் பார்வையில்தான் கோளாறு.




Post Comment

இதையும் படிக்கலாமே:


25 கருத்துகள்:

  1. J AVARGALIN SAATHANAIYAI PADIKKA INTHA THALATHTHAI PAARKKAVUM
    http://nallavandaa.blogspot.com/2012/02/blog-post_09.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் முதன்முதல் வருகைக்கும் நன்றி....படிக்கிறேன்

      நீக்கு
  2. கழுகார் கேள்வி பதில் பாணியில் அருமையாக இருக்கு....

    பதிலளிநீக்கு
  3. கேள்விகளும் பதில்களும் அருமை.. மின் வெட்டு உண்மையில் மோசமான விசயம்தான்.. பல தொழில்களை நசிவடையவைக்கும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்வெட்டு என்பது மிக மோசமான விஷயம் தான். மின்சாரம் தட்டுப்பாட்டினால் தொழில்கள் நசிவடைவதோடு மட்டுமல்லாமல் அதை காரணம் காட்டி விலைவாசியும் உயர்ந்துவிடும்.

      நீக்கு
  4. நல்லாத்தான் இருக்கு - கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. இது என்னோட முதல் பின்னூட்டம். தலைவா உன்னை தெரியாதவங்க gmail id வச்சுருக்கிறது வேஸ்ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி...பாராட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்று

      நீக்கு
  6. innumaa intha ulagam raamaraajanai nambuthu....

    anaiththum A one

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை யார் சார் நம்புவது...ஏதோ அவர் கருத்தை சொல்லிட்டு போயிருக்கிறார்

      நீக்கு
  7. நல்ல சூடான கேள்விகள்

    பதிலளிநீக்கு
  8. கசாலி,

    இந்த கதைய சொல்ல பீர்பாலு அக்பர் வரை போன பாரு... அங்க தான் நீ நிக்கிற.
    TM - 7 .0

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் சின்ன வயசில் படிச்சதெல்லாம் எப்பத்தான் வெளியாக்கறதாம்....

      நீக்கு
  9. கூலிக்கு மாரடிக்கிறாங்க!
    விட்டு தள்ளுங்க சகோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உண்மைதான். எல்லோருமே கூலிக்காரகள்தான்...

      நீக்கு
  10. புரட்சி தலைவியின் அடிமைகளும் சரி,முத்தமிழ் அறிஞரின் தொண்டர்களும் சரி எல்லோரும் பீர்பால் மாதிரிதான் இருக்கிறார்கள்,இதில் என்ன ஞானதேசிகனுக்கு மட்டும் ஸ்பெஷல் mention .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே பீர்பாலை போல்தான் என்பதும் உண்மைதான்

      நீக்கு
  11. //ஞானதேசிகன் பேச்சும்...அவர் காங்கிரசின் வேலைக்காரன்...//

    நன்னா சொன்யேல் போங்கோ

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.