என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், பிப்ரவரி 15, 2012

24 ஹலோ சொன்ன கேப்டனும், கட்சிமாறும் எம்.எல்.ஏ.க்களும்,வீரபாண்டியாரின் கடுப்பும்..... (பாலிடிக்ஸ் பொடிமாஸ்-15/02/2012)




 நேற்று முன்தினம் விருதுநகர் சென்று திரும்பிய தளபதியும் அருப்புக்கோட்டை சென்று திரும்பிய கேப்டனும் மதுரை விமான நிலையத்தில் சந்தித்து தனியாக பேசிக்கொண்டிருந்தார்களாம். இருவரும் பரஸ்பரம் ஹலோ சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அரசியல் வானில் புதிய கூட்டணி உதயம், தி.மு.க.,கூட்டணிக்கு விஜயகாந்த் வருகிறார் என்று அவர்கள் பயணம் செய்த விமானம் பறப்பதற்குள் வதந்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. எதிரெதிர் முகாமில்  இருந்தாலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவரை பார்த்தால் புன்முறுவல் பூப்பதும் நலம் விசாரித்துக்கொள்வதும் மரபு.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் அந்த மரபு பரபரப்பு செய்தியாகி விடுகிறது. ஒரு ஹலோ சொல்வதையே ஃப்ளாஷ் நியூஸ் போட்டு பரபரப்பை கிளப்பும் அளவிற்கு தமிழக அரசியல் நாகரீகம் இருக்கிறது. இதுவே வடநாடாக இருந்தால் அத்வானியும் சோனியாவும் ஒரே மேடையில் ஏறினால்கூட அதை ஒரு செய்தியாகத்தான் பார்ப்பார்கள். என்ன செய்வது? அவர் முதல்வராக இருந்தால் நான் சபைக்கு வரமாட்டேன் என்று இவரும், இவர் முதல்வராக இருந்தால் நான் சபைக்கு வரமாட்டேன் என்று அவரும் சத்தியம் செய்துவிட்டு இருக்கும் மாநிலத்தில் நாம் வாழ்ந்து வரும் பட்சத்தில் ஒரே விமானத்தில் தனித்தனியாக உட்கார்ந்து ஏதும் பேசாமல் வந்தாலே அதையே பரபரப்பு செய்தியாகத்தான் போடுவார்கள். வாழ்க ஜனநாயகம்.

===========================



தி.மு.க.,மீது குறிப்பாக ஸ்டாலின் மீது ஏக கடுப்புடன் திரிகிறார் வீரபாண்டி ஆறுமுகம். ஏற்கனவே பொதுக்குழுவில் ஸ்டாலின் மீது தன் கடுப்பை காட்டினார். இப்போது சேலம் மாவட்டத்தில் இளைஞரணிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கலைஞரால் வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார். வீரபாண்டியார் இப்படி தன்னிச்சையாக செயல்படுவது தவறு என்று முரசொலியில் செய்தி வெளியிட்டதோடு அல்லாமல், அவருக்கு  நோட்டீசும் அனுப்பி விட்டார்கள். இதனை கண்ட வீரபாண்டி கடும் அதிருப்தியுடன் இருக்கிறாராம். இந்த அதிருப்தி மேலும் வளர்ந்தால் கட்சியிலிருந்தே அவர் நீக்கப்படலாம் என்கிறது தி.மு.க.,வட்டாரம்.

ஏற்கனவே 1993-இல் வைகோ பிரிந்தபோது அவருடம் போட்டி தி.மு.க(அப்போது ம.தி.மு.க.,ஆரம்பிக்க படவில்லை) வின் வாசல் வரை போய்விட்டு அவர்களை வழியனுப்பிய கையோடு திரும்பி வந்தவர் வீரபாண்டி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது ஸ்டாலினுக்கு எதிராக திரும்பிய இவர், தாய்க்கழகத்திலேயே நீடிப்பாரா? அல்லது வேறு வழியில் செல்வாரா என்று போகப்போக தெரியும். இந்த இரண்டில் வீரபாண்டியார் எதை தேர்ந்தெடுத்தாலும் அவருக்கு நட்டமே...பிரகாசிக்க முடியாது.

==========================




கேப்டன் ஜெயலலிதாவிடம் சவால் விட்டதன் தொடர்ச்சியாக அவருடைய எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை பத்து நாட்களுக்கு இடை நீக்கம் செய்தது போதாது. நிரந்தரமாகவே அவருடைய எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பறித்துவிடவேண்டும் என்று அண்ணா.தி.மு.க.,முயற்சி செய்வதாகவும், சில எம்.எல்.ஏ.,க்களை விலை பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். அப்படியே சபலத்திற்கு ஆசைப்பட்டு சில எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறினாலும், விஜயகாந்திற்கு எதிர்கட்சி தலைவர் பதவி மட்டும்தான் பறிபோகும். மற்றபடி நட்டமில்லை. ஒரு தனிஆளாக சட்டமன்றம் போனவர் விஜயகாந்த். இப்போதும் அவர் ஒருவர்தான் அங்கு பேசுகிறாரே தவிர மற்ற யாரும் வாயைத்திறப்பதில்லை.

இன்று தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.க்களில் விஜயகாந்த், பண்ரூட்டி ராமச்சந்திரன் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களே...இவர்கள் யாரும் தங்கள் முகத்தை வைத்து ஜெயிக்கவில்லை. விஜயகாந்தின் சினிமா கவர்ச்சியே இவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது என்பதையும் இவர்கள் உணர்ந்தால் நல்லது. கட்சி மாறினால் இவர்களுக்கு மக்களிடம் அவப்பெயரே மிஞ்சும். 

======================

சங்கரன் கோவில் போட்ட்யிடப்போவதில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை பா.ம.க.,எடுத்தேவிட்டது சங்கரன்கோவிலை பொறுத்தவரை அண்ணா.தி.மு.க.,தவிர மற்றகட்சிகள் மந்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பா.ம.க.,வை யாரும் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தாலும், தன் இருப்பை காட்டவே ராமதாஸ் இப்படி காமெடி செய்திருக்கிறார் போல....

=======================


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 கருத்துகள்:

  1. பெயரில்லா15 பிப்., 2012, 12:58:00 PM

    பா.ம.க. --- புலி பம்முவதும், பதுங்குவதும் பாய்வதற்கே... :))

    பதிலளிநீக்கு
  2. திமுகாவின் சூடான அரசியல் செய்திகள்....

    தற்போதைய செய்தி தலைவர் பதிவி கொடுத்தால் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார் அழகிரி...

    திமுக இன்னும் என்ன ஆகும் பொருத்திருந்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  3. ! சிவகுமார் !Feb 14, 2012 11:28 PM
    பா.ம.க. --- புலி பம்முவதும், பதுங்குவதும் பாய்வதற்கே... :))

    >>>>>>>>>

    பார்ரா!

    பதிலளிநீக்கு
  4. //இவர்கள் யாரும் தங்கள் முகத்தை வைத்து ஜெயிக்கவில்லை. இவர்கள் உணர்ந்தால் நல்லது. கட்சி மாறினால் இவர்களுக்கு மக்களிடம் அவப்பெயரே மிஞ்சும்//

    காசுதான் முக்கியம் அட போங்கப்பா....

    பதிலளிநீக்கு
  5. தி மு க ஒடையுமோ??????? காலம் - நேரம் - பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காக ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்

      நீக்கு
  6. //சங்கரன் கோவில் போட்ட்யிடப்போவதில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை பா.ம.க.,எடுத்தேவிட்டது சங்கரன்கோவிலை பொறுத்தவரை அண்ணா.தி.மு.க.,தவிர மற்றகட்சிகள் மந்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பா.ம.க.,வை யாரும் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தாலும், தன் இருப்பை காட்டவே ராமதாஸ் இப்படி காமெடி செய்திருக்கிறார் போல....//


    அவரு இப்படிதான் அடிகடி காமெடி பண்ணுவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலில் எல்லோரும் சீரியசா இருந்தா நல்லாவா இருக்கும்.அதுக்குத்தான் இந்த மாதிரி காமெடிகளும் தேவைப்படுகிறது

      நீக்கு
  7. பொடிமாஸ் நல்லா சூடாகவும் சுவையாகவும் இருக்கு....

    பதிலளிநீக்கு
  8. தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசியலையும், தனி மனிதர்களையும் போட்டு குழப்பி கொள்கிறார்கள். இரண்டு தலைவர்கள் சந்திப்பதே பெரிய நியூஸ் ஆகி விடுகிறது. இதை உருவாக்கியவர்கள் இப்போது பதவியில் இருப்பவரும், முன்னால் இருந்தவரும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். அரசியல் நாகரீகம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் மாநிலத்தில்தான் நாம் இருக்கோம்

      நீக்கு
  9. vijayakaanthukku vakkaalaththu nallaave vankureengka...makkal kuttaniyai vaiththu thaan ottu pottaangka.. mukaththai vaiththu alla...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது விஜயகாந்திற்கு வக்காலத்து வாங்கவில்லை நண்பரே.... கூட்டணியை வைத்து ஓட்டுப்போடுவதெல்லாம் ஓரளவு உண்மைதான். அதேநேரம், இதைவிட வலுவான கூட்டணியெல்லாம் மன்னை கவ்வியும் இருக்கிறது. ஒரு எதிர்கட்சி ஆளுங்கட்சியாக வருவதற்கு முந்தைய ஆளுங்கட்சி செய்யும் தவறுகளே பிரதான காரணம். அதன்படிதான் இங்கு ஆளுங்கட்சி எதிர்கட்சியாகவும், எதிர்கட்சி ஆளுங்கட்சியாகவும் வருகிறது. அதே நேரம் விஜயகாந்தின் தனி மனித சினிமா கவர்ச்சியே தே.மு.தி.க.,வின் வெற்றிக்கு காரணம்.

      ஜானகி அம்மையாரை விட ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டதன் காரணம் சினிமா கவர்ச்சிதான். ஜெயலலிதாவின் முகம்தான் காரணம்.

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.