என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 02, 2012

49 பொங்கிய கேப்டனும்-பொறுமிய ஜெயலலிதாவும்-தப்பிய சபாநாயகரும்....



சும்மா இருந்த சிங்கத்தை சீண்டியதுபோல் ஆகிவிட்டது நேற்றைய சட்டசபை நிகழ்வுகள். தான் ஒரு எதிர்கட்சி தலைவர் என்பதையே மறந்திருந்த விஜயகாந்தை உசுப்பேற்றி விட்டிருக்கிறார் ஜெயா....

இன்று காலை பத்திரிகையிலிருந்து பதிவுலகம் வரை இதுதான் ஹாட் டாபிக்காக இடம் பிடித்திருக்கிறது.ஒரே நாளில் நிறையவே இது அலசப்பட்டிருப்பதால் நானும் இந்த சப்ஜெக்டுக்கு போக விரும்பவில்லை. அதே நேரம் இந்த சப்ஜெக்டுடன் ஒட்டிய சில விளக்கங்கள்.

விஜயகாந்த் அண்ணா.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்காவிட்டால் இந்த இடம் கிடைத்திருக்காது என்று ஜெயலலிதா சொல்வது ஓரளவு உண்மைதான். அதைப்போல ஜெயலலிதாவும் சில இடங்களை இழந்திருப்பார் என்பதையும் மறுக்கமுடியாது.  எங்களால் தான் இந்த வெற்றி என்று ஜெயலலிதா சொல்வது எதற்காக?
அதற்காக காலம் முழுவதும் விஜயகாந்த் எங்களுக்கு அடிமையாகவே இருக்கவேண்டும் என்கிறாரா? உங்களால் தே.மு.தி.க.,வினருக்கு வெற்றி என்றால்...மக்களால்தானே உங்களுக்கு இந்த வெற்றி? அதற்கு நன்றிக்கடனாக உங்கள் அரசு மக்களுக்கு விசுவாசமாக இல்லையே?

தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூட புரியாமல், மிகவும் அருவருதக்க வகையில் நடந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து, அதிமுக தேர்தலை சந்தித்ததே என்று நினைக்கும்போது நான் வருத்தப்படுகிறேன். உள்ளபடியே நான் அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். என்றும் சொல்லியுள்ளார் ஜெ....

இதில் யாருக்குத்தான் தகுதியிருக்கிறது? உங்களுக்கோ...கலைஞருக்கோ, விஜயகாந்திற்கோ இந்த நாட்டை ஆளும் தகுதி இல்லவேயில்லை. வேறு வழியில்லாமல்தான் மக்கள் உங்களிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளியும் நல்ல கொள்ளியில்லை. அந்த நேரத்தில் எது நல்லகொள்ளியாக நடிக்கிறதோ அந்தக்கொள்ளிக்கே ஆட்சி அதிகாரம் கிடைக்கிறது.

அடுத்ததாக, என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லியுள்ளார். அதுசரி, அப்புறம் எதுக்கு அவர்களை தேடிப்போனீர்கள்...
உங்களோடு தோள் நின்ற,  அரசியலிலும், அனுபவத்திலும் உங்களை விட சீனியரான வைகோவையே ஒதுக்கிவிட்டு எதற்காக 41 இடங்களை விஜயகாந்திற்கு கொடுத்தீர்கள்? அவர் பிரிந்துபோனால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற அச்சத்தில்தானே?

அடுத்ததாக, இன்று எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொண்ட விதத்திற்கும், அவருடைய கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்திற்கும், தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், மிகவும் குறைந்த பட்ச நடவடிக்கையாக இந்தப் பிரச்சனையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார்.
ஆகவே, பேரவைத் தலைவர் தனது முடிவை அறிவித்த பிறகு, வேறு எந்த உறுப்பினரும் அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
என்றும் சொல்லியிருக்கிறார் ஜெ...

பேரவை தலைவர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் என் விருப்பமும் கூட, ஆனால் பேரவை தலைவர் என் விருப்பத்திற்கு மாறாக, நடந்துகொண்டுவிட்டார் என்று (கோபத்தை மறைத்துக்கொண்டு)  சொல்லாமல் சொல்லி சபாநாயகரையே மிரட்டியிருக்கார்.  நல்லவேளையாக  சபாநாயகராக இருக்கப்போய் தப்பித்தார் ஜெயக்குமார். இதுவே மந்திரியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக நடந்த  இவரின் பதவி பிடுங்கப்பட்டிருக்கும்.  சபாநாயகராக இருப்பதால் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பதவியை பறிக்கமுடியாது. சபையில் நம்பிக்கையில்லா தீர்மானமெல்லாம் கொண்டு வர வேண்டும். ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் இருக்கே?.... என்ன இருந்தாலும் ஜெயலலிதாவிற்கு சேடப்பட்டி முத்தையா போல ஒருவர் கிடைப்பது அரிது. அவர்தான் ஜெயாவின் கண்ணசைவிற்கேற்ப சபாநாயகர் வேலை பார்த்தவர்.

ஆனால், ஜெயாவின் விருப்பம் இன்று நிறைவேறியே விட்டது. ஆம்....விஜயகாந்த் பத்து நாட்கள் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.

அடுத்ததாக விஜயகாந்த் போகிற போக்கில் ஒரு தவறான செய்தியையும் சொல்லிவிட்டு போயிருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டிலேயே முதல் அமைச்சர்ன்னு தோற்ற வரலாறு ஜெயலலிதா அவர்கள் பர்கூரில் தோற்றதுதான் என்று சொல்லியிருக்கிறார். அது உண்மையில்லை.
முதலமைச்சராக இருந்து முதலில் தோற்றது பக்தவத்சலம் தான். ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடமே இதில். காமராஜர் முதலமைச்சராக இருந்து தோற்றவர் என்ற ஒரு தவறான தகவல் உலவுகிறது.அதுவும் அறியாமையே... ஆனால், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசனிடம் தோற்றபோது அவர் முதலமைச்சராகவே இல்லை. அதற்கு முன்பே கே பிளான் மூலம் பக்தவத்சலத்திடம் தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார். அதைப்போல முதல்வராக இருந்து தோற்றவர்களில் யாரும் முதல்வர் பதவியிலேயே இருந்து தேர்தலை சந்தித்து தோற்றவர்கள் அல்ல.... ஜானகி அம்மாள், நாவலர் நெடுஞ்செழியன் உட்பட....
அறிஞர் அண்ணாவும் காஞ்சிபுரத்தில் தோற்றவர்தான். ஆனால், அவர் முதலமைச்சர் ஆகும் முன்பு தோற்றவர்.

எப்படியோ.... கேப்டன்-ஜெயா மோதல் பரபரப்பான தீனியாகிவிட்டது எல்லோருக்கும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


49 கருத்துகள்:

  1. பெயரில்லா2 பிப்., 2012, 1:32:00 PM

    முதலில் தோற்ற முதல்வர் யார் என்று தெரியாமலே கேப்டன் பேசியதை என்னவென்று சொல்ல..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதாவது பரவாயில்லை. சில அறிவு ஜீவிகள் இந்த லிஸ்டில் காமராஜரையும் சேர்த்துக்கிட்டாங்க

      நீக்கு
  2. பெயரில்லா2 பிப்., 2012, 1:36:00 PM

    // உங்களுக்கோ...கலைஞருக்கோ, விஜயகாந்திற்கோ இந்த நாட்டை ஆளும் தகுதி இல்லவேயில்லை.//

    எங்க ஆளுக்கே அனைத்து தகுதியும் உண்டு என்பதை திட்டவட்டமாக......

    இவண்,

    கிளிப்பச்சை சட்டை ராமராஜன் ரசிகர் மாமன்றம்,
    மத்திய தென்மேற்கு ஆசியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவ்.... நீ மேதை பார்த்ததிலிருந்து ஒரு மார்க்கமாத்தான்யா அலையுறே....

      நீக்கு
  3. /* முதலமைச்சராக இருந்து முதலில் தோற்றது பக்தவத்சலம் தான். ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடமே இதில். காமராஜர் முதலமைச்சராக இருந்து தோற்றவர் என்ற ஒரு தவறான தகவல் உலவுகிறது.அதுவும் அறியாமையே... ஆனால், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசனிடம் தோற்றபோது அவர் முதலமைச்சராகவே இல்லை. அதற்கு முன்பே கே பிளான் மூலம் பக்தவத்சலத்திடம் தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்.முதலமைச்சராக இருந்து முதலில் தோற்றது பக்தவத்சலம் தான். ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடமே இதில். காமராஜர் முதலமைச்சராக இருந்து தோற்றவர் என்ற ஒரு தவறான தகவல் உலவுகிறது.அதுவும் அறியாமையே... ஆனால், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டு தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசனிடம் தோற்றபோது அவர் முதலமைச்சராகவே இல்லை. அதற்கு முன்பே கே பிளான் மூலம் பக்தவத்சலத்திடம் தன் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார். */

    நானும் கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் காமராஜர் முதல்வராக இருக்கையில் தோற்றார் என்ற தவறான செய்தியை படித்தேன். சரியான விளக்கங்கள் தந்ததற்கு உமக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. அரசியல் பதிவர் என்ற முறையில் இது உம்முடைய கடமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவி கண்ணன் அவர்கள் மட்டுமல்ல....இன்னும் நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பதிவு அவர்களை தெளிவுபடுத்தினால் நல்லதுதான்

      நீக்கு
  4. பெயரில்லா2 பிப்., 2012, 2:16:00 PM

    //சிராஜ்

    //நானும் கோவி கண்ணன் அவர்களுடைய தளத்தில் காமராஜர் முதல்வராக இருக்கையில் தோற்றார் என்ற தவறான செய்தியை படித்தேன்.//

    :)))))))))))))))))))))))))

    //சரியான விளக்கங்கள் தந்ததற்கு உமக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. அரசியல் பதிவர் என்ற முறையில் இது உம்முடைய கடமை.//

    :((((((((((((((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  5. ஜெ. பேசும்போது, சபாநாயகர் முகத்தைப் பார்க்கணுமே!! பாவம், அதுமட்டும் சட்டசபையா இல்லாம இருந்திருந்தா, அவர் நிலைமை என்னாவாகிருக்கும்!! :-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாவே ஏற்கனவே அரண்டு போயிருக்காரு...நீங்க வேற எதுக்கு சகோ அவரை பயமுறுத்தறீங்க...

      நீக்கு
  6. செம காமெடி கூத்து....இனி இது தொடரும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுமட்டுமா? இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் தொடரப்போகுதோ?

      நீக்கு
  7. / உங்களுக்கோ...கலைஞருக்கோ, விஜயகாந்திற்கோ இந்த நாட்டை ஆளும் தகுதி இல்லவேயில்லை.//

    அருமையான அலசல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்தானே சகோ...இவர்களுக்கெல்லாம் நம்மை ஆள தகுதியே இல்லை.
      ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அன்று இந்த கூத்தாடிகள் ஒன்றுபட்டு ஊரை ரெண்டாக்கிவிட்டார்கள்.

      நீக்கு
  8. அண்ணே அந்த நியூஸ் வீடியோவுல சரியா 2.57 நிமிசத்துல கேப்டன் எந்திரிச்சி கைய காட்டி ஆவேசமா என்னமோ சொல்றாரே அது என்ன? மைக்கை ஆஃப் பண்ணி வெச்சிருப்பாங்க போல, ஒண்ணும் கேட்கல.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என்ன பேசினார் என்று விளங்கவில்லை. நானும் டி.வி.,யில் சவுண்டை அதிகமாக கூட வைத்து பார்த்துவிட்டேன். சரியாக கேட்கவில்லை. தெரியவரும்போது சொல்கிறேன்.

      நீக்கு
  9. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.9 கோடி. தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.45கோடி. வித்தியாசம் 45 லட்சம்தான். தே.மு.தி.க தனித்துப் போட்டியுடும்போதேல்லாம் 30 லட்சம் வாக்குகள் பெறுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் தே.மு.தி.க சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து 100-120இடங்கள் பெற்றிருக்கும் என்று புரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அளவுக்கு சுதந்திரமாக ஜெ வால் ஆட்சி செய்ய முடியாது. கூட்டணியால் தே.மு.தி.க எவ்வளவு பலனைப் பெற்றதோ அதே அளவு
    அ.தி.மு.க வும் பெற்றுள்ளது. ஜெ இதை மறந்து விட்டு தன் ஆணவத்தைக் காட்டுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நன்பரே...அதே நேரம், விஜயகாந்து அண்ணா.தி.மு.க.,கூட்டணியில் இல்லாவிட்டால் கூட ஆட்சியை பிடித்திருக்கும். அன்றைய நிலைமை அப்படித்தான் இருந்தது.

      நீக்கு
  10. அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக...
    //எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளியும் நல்ல கொள்ளியில்லை.//
    சரியாக சொன்னீர்கள் சகோ.கஸாலி.
    அப்புறம்,
    இந்த விஜயகாந்த்...
    முன்பு ஒருமுறை விருத்தாசலத்தில் தனியே நின்று திமுக&அதிமுக இருவரையும் தோற்கடித்து ஜெயித்தவர்தானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ...தனியாக நின்று ஜெயித்தவர்தான். அது விஜயகாந்தின் நட்சத்திர கவர்ச்சியால் தான். எங்கு நின்றாலும் அவர் மட்டும் ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது எனக்கு.

      நீக்கு
  11. எனக்கொரு சந்தேகம்...

    மக்கள் சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை என்பது....
    இப்போது...
    வீராப்பு பேசும் 'சவால் பேரவை'யா..?
    அல்லது
    வீண் வெட்டி 'சவடால் பேரவை'யா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லாவற்றையும் விட வெறும் கூச்சல் மட்டும் போடும் சத்தசபை

      நீக்கு
    2. //சத்தசபை//---சரியான பெயர்..!

      இப்படி நீங்கள் சொன்னது அப்படியே என் காதில் எம்ஜிஆர் பேசியது போல அவர் குரலில் ஒலிக்கிறது....

      நீக்கு
    3. என் குரலை நேரில் கேட்டாலும் அப்படித்தான் இருக்கும். எம்.ஜி.ஆர்., குண்டடி பட்டபின் பேசுவதை போல

      நீக்கு
    4. salam brothers....
      /// என் குரலை நேரில் கேட்டாலும் அப்படித்தான் இருக்கும். எம்.ஜி.ஆர்., குண்டடி பட்டபின் பேசுவதை போல///

      namma kitta ulla kuraiyai optimistic eduthukolla vendum ...mikka nanru ... naanum kooda appadi thaan pesuven

      நீக்கு
    5. அடடே... வா ரியாஸ், நல்லா இருக்கியா? ஆளையே காணோமே...குடும்பஸ்தன் ஆனதிலிருந்து ரொம்ப பிஸியோ

      நீக்கு
  12. ஹாட் டாபிக்காகான விஷயத்தை மாறுப்பட்டவிதத்தில் தந்த விளக்கம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

      நீக்கு
  13. நடப்பு நிகழ்வுகளுடன், முன்பு நடந்த நிகழ்வுகளையும் இணைத்து கூறி நல்லதொரு பதிவாக வழங்கியமைக்கு நன்றி.!

    அரசியலில் இதெல்லாம் சகசம்தானே.. கசாலி..! நீங்க விளாசுங்க..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலில் இன்னும் என்னன்னவெல்லாம் சகஜாமாக போகுதோ..என்ன எழவோ?

      நீக்கு
  14. கோவி.கண்ணன்,ஹாஜா மைதீன் கடைல நின்று விட்டு நீங்களும்தான் என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாமென்று வந்தால் உங்க கடைல மட்டும் கூட்டம் நிரம்பி வழியுதே:)

    சன் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தா விஜயகாந்த் கையை எல்லாம் கட்டிகிட்டு பம்மிகிட்டுத்தான் இருந்திருக்காரு.ஒருவேளை கையை நீட்டிடுவோமோன்னு பயத்துலதான் கையை கட்டிகிட்டு உட்கார்ந்திருந்தாரோ!அவரையே அறியாமல் நிகழ்ந்த அனிச்சை செயலுக்கு அவர் எப்படி காரணமாவார்?

    ஒருவேளை ஜெயலலிதாவும்,விஜயகாந்தும் பேசி வச்சிக்கிட்டு சவால் விடுறாங்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம கடையில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிய காரணம், இன்னைக்கு சரக்கு கொஞ்சம் சூடா இருக்கு போல...

      நீக்கு
    2. விஜயகாந்த் எதார்த்தமாகவே அப்படித்தான் பேசுவார்ன்னு நினைக்கிறேன். இவர் மட்டுமா கைய நீட்டி பேசினாரு...அண்ணா.தி.மு.க.வினரும்தான் அப்படி பேசினார்கள். ஏன், ஜெயலலிதாவே அப்படித்தான் பேசினாங்க...

      நீக்கு
  15. //உங்களுக்கோ...கலைஞருக்கோ, விஜயகாந்திற்கோ இந்த நாட்டை ஆளும் தகுதி இல்லவேயில்லை. வேறு வழியில்லாமல்தான் மக்கள் உங்களிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள்.//

    அப்படி போடுங்க கஸாலி!

    பதிலளிநீக்கு
  16. //உங்களோடு தோள் நின்ற, அரசியலிலும், அனுபவத்திலும் உங்களை விட சீனியரான வைகோவையே ஒதுக்கிவிட்டு எதற்காக 41 இடங்களை விஜயகாந்திற்கு கொடுத்தீர்கள்? அவர் பிரிந்துபோனால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்ற அச்சத்தில்தானே?//

    ஆஹா!அரசியல் விமர்சகர்ங்கிற பெயரில் இன்னும் சுத்திகிட்டிருக்கிற சோவையெல்லாம் மூட்டை கட்டச்சொல்லுங்க.அரசியல் விமர்சனங்களை இனி நீங்க பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க

      நீக்கு
  17. அருமையான கலைஞர் ஸ்டைல் கேள்விபதில் தொகுப்பு. சுவையானது. ருசிமிகுந்தது இந்த ஸ்னாக்ஸ். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நல்ல அலசல் சார் ! நல்ல விளக்கங்கள் !

    பதிலளிநீக்கு
  19. ரொம்ப நாள் கழிச்சு உங்களின் இந்தப் பதிவில் பின்னூட்டம் இட வேண்டும் என்று தோன்றியது... தோன்ற வைத்தது உங்களின் இந்தப் பதிவு.. நல்ல அலசல்.. "பால் விலையை உயர்த்திய பிறகு, பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகு".. இது போன்ற வசனங்களைத் திரைப்படத்தில் பார்க்கும்போது.. இது போல நேரில் நடக்க வாய்ப்புகள் இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.. காலம் பின்னோக்கி நகர்கிறதோ.. இனி நீதி மன்றங்களிலும், விஜயகாந்த் புள்ளி விவர வசனங்களும், டி ராஜேந்தரின் ஆங்கிலமும் பேசப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

    பதிலளிநீக்கு
  20. சட்டசபை சண்டையை டிவியில் பார்த்தபோது செம காமெடியாக இருந்தது. என்னமா கோபப்படுறாரு கேப்டன்?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.