என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, பிப்ரவரி 04, 2012

19 ஒரு பொதுக்குழுவும், இரு பேனர்களும்.....-பாலிட்டிக்ஸ் பொடிமாஸ்- 04/02/2012



கடந்த சில நாட்களாகவே, தி.மு.க.,வின் துணை தலைவராகிறார் ஸ்டாலின், கொள்கை பரப்பு செயலாளராகிறார் கனிமொழி, குஷ்புவிற்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம் என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்தது.

நேற்று (3-2-2012)நடைபெற்ற தி.மு.க.,பொதுக்குழுவில் இதைப்பற்றி அறிவிப்பு வருமென்று காத்திருந்தார்கள் அனைவரும்.

அதேநேரம் மற்றவர்களுக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ  ஸ்டாலின் கண்டிப்பாக துணை தலைவராகி விடுவார் என்று ஸ்டாலினை விட அவரது ஆதரவாளர்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால் அந்த நினைப்பிற்கு முட்டுக்கட்டை முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள் பேராசிரியரும், வீரபாண்டியாரும்....

கலைஞர் இருக்கும்போது வேறு தலைவர்கள் தேவையில்லை என்ற ரீதியில் வீரபாண்டியார் பேசும்போது ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரை பேசவிடாமல் சத்தம் போட்டார்களாம்.

அதனை தொடர்ந்து எழுந்த பேராசிரியர் அன்பழகன், திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை. மடாதிபதி பதவியை ஸ்டாலினுக்குக் கொடுப்பதற்கு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். என்னை விட வயது குறைவான கருணாநிதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்னுடைய வீட்டார் என்னை மதிப்பார்களா என்றுகூட நினைத்திருக்கிறேன். பிறகு நானே அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

அதாவது என்னை விட இரண்டு வயது குறைவான கலைஞரையே நான் தலைவராக ,ஏற்றுக்கொள்வதற்கு யோசித்துள்ளேன். அப்படி இருக்கும்போது என்னை விட ஏறக்குறைய முப்பது, முப்பத்தைந்து வயது குறைவாக இருக்கும் ஸ்டாலினை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும் என்று தன் உள்ளக்குமுறலை மறைத்தபடி பேசியிருக்கிறார் பேராசிரியர்.

இதையெல்லாம் கவனித்த கலைஞர், வேண்டுமானால், அடுத்த பொதுக்குழுவில், தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று வைத்து, அதில் ஓட்டளிக்கச் செய்து, அதை எண்ணிப் பார்த்து, யார் தலைவர்  என்று அறுதியிட்டு, முடிவு செய்யலாம்.என்று வேதனையுடன் சொல்லியிருக்கிறார்.

அண்ணா காலத்தில் வேலூரில் பொதுக்குழு கூடிய போது ஈ.வி.கே.சம்பத்தை தாக்குவதற்கு மறைமுகமாக ஏற்பாடு செய்திருந்தாராம் கலைஞர்...அதன்படியே சம்பத் தக்கப்பட்ட சம்பவமும் நடந்ததாக சொல்கிறார்கள் அப்போதைய அரசியலை கவனித்தவர்கள். அன்று கலைஞர் சம்பத்துக்கு செய்த துரோகம் இப்போது அவருக்கு எதிராக திரும்புகிறது போலும்...என்ன செய்வது?.... முற்பகல் செய்யின்.....

=============================

தே.மு.தி.க.,வோடு அண்ணா.தி.மு.க.,கூட்டணி முறிந்ததாக ஜெயலலிதா அறிவித்தாலும் அறிவித்தார்....கூட்டணி முறிந்ததோ இல்லையோ இரு கட்சிகாரர்களின் கை, கால் முறிந்துவிடும் போல் தெரிகிறது, அவர்கள் மோதிக்கொள்வதை பார்க்கும்போது....

நேற்று திண்டிவனத்தில் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டனவாம். அதில் ஒன்று....தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்எல்ஏ பதவிக்கேட்டு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கெஞ்சுவதைப்போல் இருந்ததாம், இதை பார்த்து ரோஷப்பட்ட தே.மு.தி.க.,வினரும் முதல் அமைச்சர் பதவியை தருமாறு விஜயகாந்த்திடம், ஜெயலலிதா கேட்பது போல ஒரு பேனரை வைத்திருக்கின்றனர்.

இந்த இரு பேனர்களும் அருகருகே வைக்கப்பட்டிருந்ததால் இரு கட்சியினர் இடையே பெரும் வாக்குவாதம் வந்து கைகலப்பு அளவிற்கு போய்விட்டதாம். தே.மு.தி.க.,தொண்டர்கள் இரண்டுபேர் பெரும் சேதாரத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார்களாம்.
இப்படியெல்லாம் பேனர் வைப்பது தேவையில்லாதது.

பேனர் வைக்க வேண்டும் என்று நினைத்தால், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஆளுக்கு ஒரு திருவோட்டுடன் அய்யா...அம்மா...எங்களுக்கு பிச்சை போட்டு எங்களை வாழ வையுங்கள் என்று  மக்களை பார்த்து பிச்சை கேட்பதுபோல் பேனர் வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?....

====================

அப்படியே இந்த ட்வீட்டையும் படித்துவிடுங்கள்....

ஜெயலலிதாவை பார்க்க அருவருப்பாக இருக்கிறது-விஜயகாந்த் # ஒருவேளை மேடத்தை மேக்கப் இல்லாமல் பார்த்திருப்பாரோ கேப்டன்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. //பேனர் வைக்க வேண்டும் என்று நினைத்தால், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஆளுக்கு ஒரு திருவோட்டுடன் அய்யா...அம்மா...எங்களுக்கு பிச்சை போட்டு எங்களை வாழ வையுங்கள் என்று மக்களை பார்த்து பிச்சை கேட்பதுபோல் பேனர் வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?....//

    ரைட்டு...

    பதிலளிநீக்கு
  2. பேனரால் இரு ஸ்பேனர்கள் மோதிக்கொள்கிறதே ஹிஹி!

    பதிலளிநீக்கு
  3. அறிவாலயத்தில் நடை பெற்ற தி.மு.க பொதுக் குழுவில் தலைவர் பதவிக்கு யாரென ஒரு முடிவும் எடுக்கப் படவில்லை. அடுத்த கூட்டத்தில் எடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கலைஞர் யோசனை தெரிவித்திருக்கிறாரே...

      நீக்கு
    2. அடுத்த பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கலைஞர் யோசனை தெரிவித்திருக்கிறாரே....

      நீக்கு
  4. திமுகவின் நிலை காங்கிரஸை விட மோசமாகி விடும் போலிருக்கிறதே. சாகும்வரை தானே தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். அடுத்த பொதுக்குழுவில் மட்டும் எப்படி முடிவு எட்ட முடியும்?

    நீங்கள் வேணா பாருங்கள், பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதைப்போல பேனர் வைக்கப்போகிறார்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் வேணா பாருங்கள், பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதைப்போல பேனர் வைக்கப்போகிறார்கள்,/////
      நான் சொன்னதைவிட இது இன்னும் நல்ல யோசனையா இருக்கே?

      நீக்கு
  5. Vaalga Jeya!
    Vaalga Kalaignar!
    Vaalga Vijayakanth!
    Oliga Makkal!
    (hi...hi...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இதோடு நிறுத்திட்டீங்க....இன்னும் வைகோ., ராமதாஸ், சரத்குமாரை எல்லாம் விட்டுட்டீங்களே...

      நீக்கு
  6. இன்றைக்கும், என்றைக்கும் நீங்கள் சொன்ன சுவரொட்டியே
    எல்லா காலத்திற்கும், எல்லா தலைவர்களுக்கும்
    பொருந்தும்!
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. Congrats for coming in as Tamil Manam No: 1 star this week !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சார்.....இது உங்களைப்போன்றவர்களால் தான் சாத்தியமாயிற்று. அதேநேரம் இந்த தரவரிசையை எதிர்பார்த்தெல்லாம் நான் பதிவிடுவதில்லை.

      நீக்கு
  8. Congrats for coming in as Tamil Manam No: 1 star this week !
    WOW SUPER BRO

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஆச்சர்யப்படுவத்ற்கோ... சந்தோஷப்படுவதற்கோ ஒன்றுமில்லை. இது ஒரு செய்தி அவ்வளவே...

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.