என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், பிப்ரவரி 23, 2012

21 என்கவுண்டர்- எதற்காக போலீசுக்கு பாராட்டு?......



போலீசார் நினைத்தால் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் அல்லது கதையை முடித்து விடுவார்கள் என்பது இரவு நடந்த வங்கி கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் நிருபனமாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக போலீசாரின் தூக்கம் தொலைய காரணமாயிருந்த வங்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை எண்ணி முடிப்பதற்குள் ஆயுளை விட்டிருக்கிறார்கள்.
பெரிய அளவில் கொள்ளையடித்தவர்கள் எல்லோருக்கும் இதன்மூலம் கிலி பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், போலீசாருக்கு விடப்பட்டிருக்கும் சவால் இத்தோடு முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. இன்னும், செயின் பறிப்பு செய்யும் திருடர்கள் உட்பட எத்தனையோ ராப்பரி திருடர்கள் நடமாடியபடிதான் இருக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடித்து தண்டிப்பதன் மூலம்தான் தமிழகம் அமைதிபூங்காவாக திகழும்.

சபாஷ்...இவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்று சொல்லத்தோன்றினாலும்,
இந்த நடவடிக்கைகளுக்காக, பொலீசாரை பாராட்டவேண்டியதில்லை என்பது என் கருத்து. இதுதான் இவர்களின் கடமையும் கூட, கடமையை செய்வதற்கு எதற்கு பாராட்டு?
ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக பாராட்டுவது எவ்வளவு அபத்தம். அப்படி,பாராட்டை எதிர்பார்த்து ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டினால் அதைவிட கேவலம் ஏதுமில்லை.

அதைப்போல்தான் இதுவும். பாராட்டுவதற்கும், கைதட்டி ஊக்கப்படுத்துவதற்கும் போலீசார் ஒன்றும் கழைக்கூத்தாடி இல்லை.


Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. சரிதான்...ஆனாலும் கடமையை செய்யாத போலிசின் தவறுகளை சுட்டிகாட்டுவதைபோல அந்த கடமையை செய்ததற்காக பாராட்டுவதில் ஒன்றும் தவறில்லை என கருதுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமையை மறந்திருக்கும்போது சுட்டிக்காட்டுவது நம் வேலை. அதற்காக கடமையை செய்வதற்கே பாராட்டவேண்டியதில்லை.

      நீக்கு
  2. அன்பின் கஸாலி - பாராட்டுவது தவறில்லை - அவர்களைத் திட்டும் போது பாராட்டவும் செய்யலாம். தவறில்லை. இது அவர்கள் கடமை தான். இல்லை என்று கூற வில்லை- இருப்பினும் ஒரு துப்பும் கிடைக்காத போது கண்டு பிடித்தமைக்குப் பாராட்டுவது சரியான செயல். நல்வாழ்த்துகள் கஸாலி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஜாவிற்கான பதிலையே இந்த பின்னூட்டத்திற்கான பதிலாக எடுத்துக்கொள்ளவும்

      நீக்கு
  3. What you said is Right. Its a Police man Duty. Thanks for Sharing.

    பதிலளிநீக்கு
  4. /இவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்று சொல்லத்தோன்றினாலும்,
    இந்த நடவடிக்கைகளுக்காக, பொலீசாரை பாராட்டவேண்டியதில்லை
    //
    ஆனால் திட்டாமல் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமையை சரிவர செய்யாமல் இருக்கும்போது சுட்டிக்காட்டலாம் தவறில்லை. ஆனால், திட்டக்கூடாது....சரிதான்

      நீக்கு
  5. mmmmmmmmmm........

    Rightu....

    #Yov... ithu template comment illa sollipputten...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
      லெஃப்டு.....
      #யோவ்....இதுவும் டெம்ப்லேட் கமெண்டுக்கான பதில் இல்லை....சொல்லிப்புட்டேன்

      நீக்கு
  6. கஸாலி,

    நேற்றைய உனது மட்டும் எனது பதிவை படித்தவுடன் தான் காவல் துறைக்கு ரோசம் வந்து இப்படி செய்து விட்டார்கள். சோ, இந்த ஆபரேஷன் ல நமக்கு முக்கிய பங்கு இருக்கு. ஹி.ஹி.ஹி..

    ஆனாலும் திருட்டிற்க்கு உயிர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இவர்கள் தான் அவர்களா? 5 பேருமே அதில் தொடர்புடையவர்களா??? போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் சந்தேகங்கள் நியாயமானதுதான். ஆனால், கொல்லப்பட்டவர்கள் திருடர்களாக இருக்கும்பட்சத்தில் இது சரியானதுதான். அப்போதுதான் மற்றவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. எதுக்கு போற இடத்திலெல்லாம் இப்படி விளம்பரம் செஞ்சுக்கே இருக்கே?

      நீக்கு
  8. உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர் குற்றவாளிகளை சரியாக அடையளங் கண்டு தைரியமாக போலீசுக்கு துப்பு கொடுத்தவர்தான். இந்த பொருப்புணர்வு பொதுமக்களுக்கு அரிதாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... நண்பரே.... நாமும் கொஞ்சம் ஒத்துழைத்தால்தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  9. சார். கடமை என்றாலும் பாராட்டுவது தவறல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதெல்லாம் ஒரு உற்சாக டானிக் மாதிரிதான். இதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  10. ஒருநாள் தாமதித்திருந்தாலும் தப்பியிருப்பார்கள். மற்ற வங்கிகளில் உள்ள ரகசிய கேமராக்களிலுள்ள படங்களை பார்க்கவேண்டும் என்ற ஐடியாவுககு 100 கோடி கொடுக்கலாம். ஒரு ராயல் சல்யூட் டூ தமிழ்நாடு போலீஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.