என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், பிப்ரவரி 01, 2012

68 பதிவர்களுக்கு கூகுள் அடித்த ஆப்பு- சமாளிப்பது எப்படி?


யாரும் எதிர்பாராவண்ணம், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி கூகுள் தன் அதிரடியை ஆரம்பித்து பதிவர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. இதுவரை blogspot.com என்பதை blogspot.in என்று சப்தமில்லாமல் மாற்றிவிட்டது.
இரு பதிவர்கள் சந்தித்து கொண்டாலும், தொலைபேசிக்கொண்டாலும் முதலில் கூகுளின் இந்த (ஏ)மாற்றத்தை பற்றி பேசுவிட்டுதான் நலம் விசாரித்து கொள்ளுமளவிற்கு இது விவாதத்திற்கு உரியதாகவே நேற்றிலிருந்து ஆகிவிட்டது.

இதனால், சில பிரபல பதிவர்களின் அலெக்சா ரேங்க், தமிழ்மணம் ட்ராபிக் ரேங்க் என்று எல்லாமே ஒரே நாளில் பாதாளத்திற்கு சென்று விட்டது. தமிழ்மணம் ரேங்க்(blog traffic rank), அலக்சா ரேங்க்(alexa) என்று தரவரிசையை குறிவைத்து எழுதிகுவித்த பதிவர்களெல்லாம் நேற்றிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இனி, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே.....

மீண்டும் தமிழ்மணத்தில் இணைத்து, அலெக்சா ரேங்கை உயர்த்தும் போது, கூகுள் மறுபடியும் இதைப்போல் ஒரு இடியை இறக்காது என்று என்ன நிச்சயம்?


இப்போது blogspot.com என்பதை blogspot.in என்று மாற்றிவிட்டது போல் இதையும் எதிர்காலத்தில் blogspot.net என்று மாற்றாது என்று சொல்ல முடியுமா?
மறுபடியும் மறுபடியும்  நம் உழைப்பு வீணாவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாவோம்.

இதை தவிர்க்கவேண்டுமானால், கூகுள் தரும் கஸ்டம் டொமைனை(custom domain) பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக தெரிகிறது.இதுவரை சொந்தமாக வாங்கப்பட்ட டொமைன் மீது கைவைக்கவில்லை கூகுள் என்பதே இதற்கு சாட்சி.

வருடத்திற்கு ரூபாய் 500 சிலவு செய்தாலே போதும். நம் வலைத்தளத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். மற்ற தளங்கள் நமக்கான டொமைன்களை ரூபாய் 500-க்கு குறைவாக கொடுத்தாலும் கூகுளில் வாங்குவதே உத்தமம். காரணம், தனியாரில் டொமைன் வாங்கினால்....ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அப்லோட்(upload) செய்யமுடியாது.
கூகுளில் அந்த பிரச்சினை இல்லை. இப்போது போலவே பயன்படுத்தலாம். கூகுள் டேஷ்போர்ட்(dashboard)  நமக்கு பழகி விட்டதால் மற்றவர்கள் தரும் டேஷ்போர்ட் நமக்கு பழகுவதற்கு கஸ்டமாக இருக்கும்.

எதிர்காலத்தில் கூகுள் சில மாற்றங்களையும் சலுகைகளையும் கொண்டுவந்தால், கூகுளில் டொமைன் வாங்கியிருந்தால் அந்த சலுகைகளை பெற நமக்கு பிரச்சினை இருக்காது. html போன்ற கோடிங்(code) இணைப்பதிலும் கூகுளில் சிக்கல்கள் இருக்காது.
மற்ற தளங்களானால் நாம் சொந்தமாகத்தான் கோடிங் எழுதவேண்டும் என்கிறார்கள்.

எவ்வளவோ சிலவு செய்கிறோம். நம் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஐநூறு ரூபாய் சிலவழிப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. அப்போதுதான் எதிர்காலத்தில் கூகுள் தரும் இலவச சேவைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அது நம்மை பாதிக்காமல் இருக்கும்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


68 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி..வாங்கிடலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது. பிரச்சினையும் இல்லை.

      நீக்கு
  2. திடீரென அறிவித்து நிலைதடுமாற வைத்து விட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம் என்றாலே இப்படிப்பட்ட சங்கடங்களும் இலவச இணைப்பாக வந்துவிடும் சிவா....

      நீக்கு
  3. அன்பின் ரஹீம் கஸாலி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. கஸாலி அண்ணே, சொந்த டொமைனின் முக்கியத்துவம் கூகிளின் இந்த மாற்றத்தால் பதிவர்களிடையே அதிகமாக உணரப்படுகிறது.

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. விளக்கப் பகிர்விற்கு நன்றி,
    கூகிள் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனாலும் பாதிக்கப்படப் போவது நாம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நிறைய மாற்றங்கள் வருவதற்குள் நாம் சொந்த டொமைனுக்கு மாறி விடுவது நல்லது.

      நீக்கு
  6. கஸ்ட்டமான டொமைன்னா? அப்ப ஏன் சகோ கஷ்ட்டத்த வெல கொடுத்து வாங்கணும் ஹி...ஹி...ஹி...

    சரி விடுங்க

    எந்த கடைல விக்கும்னு சொல்லுங்க. சாயங்காலமே போயி வாங்கிட்டு வரேன். :-))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப இந்த கஷ்டத்தை விலைக்கு வாங்காட்டி...பின்னாடி கூகுள் கொடுக்கும் நிறைய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா?

      எந்தக்கடையிலும் விக்காதுங்க தொண்டையில் தான் விக்கும்...ஹா...ஹா...யாருகிட்ட நம்மகிட்டேவா?

      நீக்கு
    2. பதிலுக்கு பதில்..மொக்கைக்கு மொக்கை.. உங்கள் இருவர் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.

      நீக்கு
  7. எனக்கும் வாங்கிடறது உத்தமம்னுதான் தோணிச்சு. உடனே முயற்சிகள்ல இறங்கிட வேண்டியதுதான். நன்றி பிரதர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ இந்தபிரச்சியினால் கூகுள் கல்லா நிரம்பபோகுது

      நீக்கு
  8. Hi hi hi. Yov. Naangellam fennoile freeya kedachchaththan use pannuvom. Nee vera domain maththunnu yezhuthittu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்..அப்பாடா... இன்னிக்காவது ஸ்மைலி போடாமே கமெண்ட் போட்டிருக்கியே... நன்றிய்யா...
      முதல்ல பெனாயில ஃபிரியாத்தான் கொடுப்பான் குடிக்க சொல்லி....குடிச்சபின்னாடி காசு கேட்பான் வைத்தியம் பார்க்க

      நீக்கு
  9. தகவல் பகிர்வுக்கு நன்றி கஸாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி அய்யா... நீங்கள் எப்போது டொமைன் மாறுவதாக உத்தேசம்?

      நீக்கு
  10. நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. முதலில், இந்த தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!!

    இப்பொழுது என் சந்தேகத்திற்கு வருகிறேன், இன்ட்லி வாக்குப்பட்டை என் வலைப்பூவில் இணைக்க பல மாதங்களாக முயற்சித்து வருகிறேன், கோடு கிடைக்கவில்லை, வெறும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வாக்குப்பட்டை தான் கேடிகிறது. உதவுங்களேன், ப்ளீஸ்!!!

    பதிலளிநீக்கு
  12. நண்பரே, இந்த பதிவிலிருந்து ஒன்று தெளிவுபடுகிறது, பலர் சொந்த டொமைன் வாங்கபோகிரார்கள்(என் உட்பட!!!), பலநாள் குழப்பம் இன்று முடிவிற்கு வந்தது!!! :) :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த டொமைன் எப்படி வாங்கனும்னு சொல்லுவீங்களா?
      எனக்கு அதுபத்தி தெரியல்லே.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கு நன்றிம்மா.....
      மேலதிக விபரங்களுக்கு
      http://www.vandhemadharam.com/2010/11/blog-post_6492.html
      என்ற முகவரிக்கு செல்லவும்.

      நீக்கு
    3. இதையும் பாருங்க....
      http://www.bloggernanban.com/2012/02/how-to-buy-custom-domain.html

      நீக்கு
  13. சொந்த டொமைன் வாங்கிடுவோம் சகோ. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. சொந்த டொமைன் வாங்கிடுவோம் சகோ. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இந்த பதிவைப் படித்தபின் தான் தெரிந்தது...தகவலுக்கு நன்றி....
    ஒரு 500 செலவு செய்வதில் ஒன்றும் தப்பில்லை....
    உண்மை...கூகுள் தரும் வசதி அதிகம் தான் !

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பதிவு அலெக்சா ரேங்க்,ட்ராபிக் ரேங்க் காரங்களுக்குத்தானே:)

    ஆனாலும் கூகிளின் சேவைக்காக ரூ 500 செலவு செய்வதில் தப்பேயில்லை.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எல்லோருக்குமான பதிவு. நிஜம்தான் கூகுளின் சேவைக்காக ரூ 500 சிலவு செய்யலாம். எதிர்காலத்திற்கு நல்லது

      நீக்கு
  17. கண்டிப்பா வாங்குவோம் .. ( அம்மா ஆட்சில இதை இலவசமா தர சொல்லி போராட்டம் நடித்ததினால் என்ன ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம்ன்னு சொன்னா ஜெயலலிதாவுக்கு பிடிக்காது....விலையில்லா என்று சொல்லனும்.

      நீக்கு
  18. நன்றி...தலைவா..
    நான் எல்லாம் டொமைன் வாங்குற அளவுக்கு...
    வொர்த் இல்லை தலைவா...

    பதிலளிநீக்கு
  19. //சொல்லவந்ததை நாகரீகமா சொல்லிட்டு போங்க பாஸ்....//

    எங்களைப்பற்றி என்ன நினைச்சுக் கிட்டிருக்கீங்க!
    அதைவிடுங்க அவசியமான அருமையான தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. இந்தச்சிக்களில் இருந்து விடுபட ஒரே வழி, தனி டொமைன் எடுப்பது தான். eg. www.example.blogspot.com / www.example.blogspot.in என்று இருக்கும் வலைப்பூவை www.example.in அல்லது www.example.com என்ற இணையதளமாக மாற்றும் வழி முறைகள்,

    நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ehostings4u.com இணையதளம் 100 ரூபாய்க்கு .in இணைய பெயரையும் , 500 ரூபாய்க்கு .com இணைய பெயரையும் வழங்குகிறது. கூடவே ஒரு கண்ட்ரோல் பேனலும். eg. www.example.blogspot.com என்று இருக்கும் வலைப்பூவை www.example.in அல்லது www.example.com என்ற இணையதளமாக மாற்றும் வழி முறைகள்,

    1. ehostings4u.com சென்று உங்களுக்கு வேண்டிய பெயர் இருக்கா என செக் பண்ணிடுங்க.

    2. உங்கள் .in அல்லது .COM பெயர் இருந்தால் அதை விலைக்கு வாங்கிவிடுங்கள். அதற்கு கட்டணம் 100 ரூபாய் (.IN) OR 500 ரூபாய் (.COM) மட்டுமே. வேறு எந்தக் கட்டணமும் இல்லை.இப்போது வெறும் கிரெடிட்/டெபிட் கார்ட் மூலம் எளிதாக டொமைன் வாங்கலாம்.

    அவர்களை தொடர்புகொள்ள‌ : 9176668411 / 044- 25651010 , ehostings4u@gmail.com

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  22. பெயரில்லா1 பிப்., 2012, 8:28:00 PM

    தக்க நேரத்தில் ஏற்ற பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  23. ப்ளாக் டிசைனிங் தொடர்பா யாருக்கு என்ன உதவி வேணும்னாலும் கஸாலி கிட்ட கேளுங்க. தலைவர் இந்த விசயத்தில் மாஸ்டர் பிளாஸ்டர்.
    நான் ஒரு சாப்ட்வேர் Engineer , இருந்து என்ன பிரயோஜனம், என்னோட ப்ளாகோட மொத்த டிசைனும் கஸாலி செய்ததுதான்.

    பதிலளிநீக்கு
  24. இப்போது அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! பகிர்வுக்கு நன்றி Sir !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  25. அருமையான தகவல்களை அள்ளி தந்திருக்கிறிங்க நண்பா, ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  26. அருமையான தகவல். ஆனால் நான், கூகுள்காரன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வரை, இருக்குமிடமே சொர்க்கம் என்று இருந்துவிடப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா...இது ரொம்பவும் ஆபத்தான பழக்கம்.திடீரென எல்லாத்தையும் பறிச்சுக்கு அம்போன்னு விட்டுடுவானுங்க

      நீக்கு
  27. சரியான நேரத்தில் சரியாக சொல்லப்பட்ட தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே...வருகைக்கு நன்றி அடிக்கடி வாருங்கள்

      நீக்கு
  28. நேற்று தான் எனது வலை பூவிற்கு செல்லும் போது பார்த்தேன்..இன்று அது உண்மை என்பதை நிருபித்து விட்டீர்..பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பரே தகவலுக்கு மிக்க நன்றி நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  30. தகவல்களுக்கு நன்றி பாஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.