என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 31, 2012

20 இன்னும் 45 ஆண்டுகளில் அழியப்போகும் காங்கிரஸ்- ஒரு ஆரூடம்



இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகளானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியாது என்று தன் திருவாய் மலர்ந்துள்ளார் மணிசங்கர் அய்யர். அதென்ன 45 வருடம் என்று விளங்கவில்லை. ஒருவேளை 2050-க்கு பின் காங்கிரஸ் என்ற கட்சியே தமிழ் நாட்டில் இருக்காது என்பதைத்தாம் இப்படி சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ.....அதுசரி....இன்னும் 45 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி நீடித்து இருக்குமா என்பதே சந்தேகம்தான். எப்படியோ நல்லது நடந்தா சரி.....

======================

தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் போது அண்ணா.தி.மு.க., செய்த வேலையை இப்போது தி.மு.க., செய்கிறது...அதாங்க....சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்வதைத்தான் சொல்கிறேன். ஆளுங்கட்சியாக இருந்தால்தான் சபையில் இருப்போம். மக்கள் பிரச்சினையை பேசுவோம். இல்லாவிட்டால் வெளியில் நடப்போம் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தே....அப்படியானால், எதிர்கட்சிக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினையை எப்படி, எங்கே பேசுவதாம்?..

======================


நேற்றுவரை பிளாக் எல்லாம் blogspot.com என்ற பொது URL -இல் இயங்கிவந்தது. ஆனால், இன்றுமுதல் blogspot.in என்ற முகவரிக்கு மாறிவிட்டதாகவே தெரிகிறது. இதில் in என்பது இந்தியாவிலிருந்து இயக்கப்படும் வலைத்தளத்தின் பொதுவான URL.அதாவது india என்பதன் சுருக்கம்தான் இந்த in. இதுவே மலேசியாவாக இருந்தால் my என்று முடியும்.
ஆனால், இது எல்லா நாடுகளுக்கும் பொதுவான முகவரியாக இருக்க வாய்ப்பில்லை.இந்த மாற்றம் இந்தியாவில் இருக்கும் domain-க்கு மட்டும்தானா...மற்ற நாட்டிலிருக்கும் domain-னுக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் .in, my என்பதுபோல் மாறினால் அதுவும்கூட ஒரு வகையில் நன்மைக்கே...
காரணம், இப்போதெல்லாம் நிறைய சர்ச்சைக்குரிய வலைப்பதிவுகள் நிறைய வந்துவிட்டது. அது எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது அல்லது பதியப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டால் நன்றாக இருக்கும். ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் நண்பர்களை நாம் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

ஆனால், இதனால் தமிழ்மணம் திரட்டிக்குத்தான் அதிக வேலை. தமிழ்மணத்தில் மீண்டும் ஒரு முறை அங்கீகாரம் வாங்கவேண்டும். மற்ற திரட்டிகளுக்கு இந்த பிரச்சினையில்லை. தமிழ்மணம் blog traffic rank  1, 2, 3, என்று போட்டுக்கொண்டவர்கள் இனி கடைசி எண்ணிலிருந்து துவங்க வேண்டும். அதேபோல்தான் அலெக்சா ரேங்கும்....
மேலதிக விபரங்களுக்கு...இங்கே கிளிக்செய்யவும்.

==================
உலவு வாக்குப்பட்டை எலவு வாக்குப்பட்டையானதால் அதை தற்காலிகத்திற்கு நீக்கி வைத்துள்ளேன். 





Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. வெளிநடப்பு செய்வதற்கு பதிலாக அவங்க சபைக்கே வராம இருக்கலாமே....#டவுட்டு

    பதிலளிநீக்கு
  2. 45 ஆண்டுகள் காங்கிரஸ் இருக்குமா என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்!

    பதிலளிநீக்கு
  3. மறுபடியும் முதலில் இருந்தா..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

    பதிலளிநீக்கு
  4. என்னாங்க நீங்க பொதுமக்கள் பிரச்சனையை பேசுவதற்கா சட்டசபைக்கு போறாங்க? அப்புறம் தமிழ்மணம் என்னிடமும் அதை சொல்லியது. அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுமக்கள் பிரச்சினையை பேச யாருங்க சட்டசபைக்கு போறது? பொழுதுபோகலைன்னு தான் போறாங்க

      நீக்கு
  5. ரேங்கிங்கில் கவனம் செலுத்தும் பதிவர்களுக்கு அடிவயிற்றில் பூச்சி பறக்கும். நம்ம மாதிரி ஆளுகளுக்குத் தான் எந்த கவலையும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூச்சி மட்டுமா பறக்கும்ன்னு நினைக்கிறே?....அமிலமே சுரக்கும்

      நீக்கு
  6. பதில்கள்
    1. என்னங்க..இப்படி ஒன்னுமே சொல்லாம சலிச்சுக்கறீங்க..

      நீக்கு
  7. யோவ்...இன்னொரு தடவை வந்து இப்படி ஸ்மைலி போட்டே...மவனே..கூகுளிடம் கம்ப்ளைண்ட் செஞ்சு, உன்னை தடை பன்னிடுவேன். சொல்லிட்டேன்.அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  8. //இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகளானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியாது என்று தன் திருவாய் மலர்ந்துள்ளார் மணிசங்கர் அய்யர்
    //
    அவ்வளவு வருடம் இருக்குமா ?

    பதிலளிநீக்கு
  9. ஒன்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு , வடிவேலு எடத்த காங்கிரஸ் ஆட்கள் பிடித்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேலு இடத்தை என்றால் நீங்க எதை சொல்றீங்க?
      காமெடி செய்வதிலா? காணாமல் போனதிலா?
      ரெண்டுமே ஒன்னுதானோ...

      நீக்கு
    2. சரியாய் புரிந்து கொண்டீர்கள்

      நீக்கு
  10. காங்கிரஸ் இருக்குமா என்கிற சந்தேகம் நியாமானது தான் !

    Blogger-இல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுதோ !

    "உலவு வாக்குப்பட்டை எலவு வாக்குப்பட்டையானதால்"

    ஹா ஹா சிரித்துக் கொண்டே இருந்தேன் சார்! நன்றி !

    பதிலளிநீக்கு
  11. இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகளானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியாது என்று தன் திருவாய் மலர்ந்துள்ளார் மணிசங்கர் அய்யர். அதென்ன 45 வருடம் என்று விளங்கவில்லை. //

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 ஆண்டுகளாகிறது. அதைச் சொல்கிறார்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.