என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 30, 2012

6 முடிந்தது எம்.ஜி.ஆர்., கதை........



முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4, 5, 6,7,



காங்கிரசோடு அண்ணா.தி.மு.க., கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஏமாற்றம் அடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்திய கம்யூனிஸ்டும் எம்.ஜி.ஆரின் கூட்டணிக்கு வந்தது.
அண்ணா.தி.மு.க.,கூட்டணியில்,

அண்ணா.தி.மு.க = 20 இடங்களிலும்
இந்திரா காங்கிரஸ் = 16 இடங்களிலும்
இ.கம்யூனிஸ்ட் = 3 இடங்களிலும் போட்டியிட்டது.

தி.மு.க.,கூட்டணியில்
தி.மு.க = 19 இடங்களிலும்
ஜனதா =18 இடங்களிலும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் = 2 இடங்களிலும் போட்டியிட்டது.

இதில்
அண்ணா.தி.மு.க = 18 இடங்களிலும்
இந்திரா காங்கிரஸ் = 14 இடங்களிலும்
இ.கம்யூனிஸ்ட் = 3 இடங்களிலும் வெற்றிபெற்றது.

தி.மு.க.,கூட்டணியில்
தி.மு.க = 1 இடத்திலும்
ஜனதா = 3 இடங்களிலும் வெற்றிபெற்றது.
தி.மு.க.சார்பில் வடசென்னையில் போட்டியிட்ட ஏ.வி.பி. ஆசைத்தம்பி மட்டுமே வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்திய அளவில் ஜனதா கட்சிக்கு 269 இடங்களும், காங்கிரசுக்கு 152 இடங்களும் வெற்றிபெற்றது.
தமிழகத்தில் அதிக இடங்களை பிடித்தும் அண்ணா.தி.மு.க,விற்கு உபயோகமில்லை. மத்தியில் ஜனதாவே ஆட்சியமைத்தது.

அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபைக்கு ஜூன் 12, 14 என இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத்தேர்தல் கூட்டணி இப்போது மாறியிருந்தது. கடந்த தேர்தலில் தி.மு.க.,கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இப்போது அண்ணா.தி.மு.க.,கூட்டணிக்கு இடம் பெயர்ந்தது. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த தி.மு.க.,வுடன் கூட்டணியை முறித்திருந்தது ஜனதா கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரசுடன் தொடர்ந்தது.
தி.மு.க.,தனித்து போட்டியிட முடிவு செய்தது. ஆனால், மணலி கந்தசாமி தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க., வுடன் கூட்டணியில் இணைந்தது.
திராவிடர் கழகமும் தி.மு.க.,வை ஆதரித்தது. ஆக, மூன்றே மாதங்களில் காட்சி மாறியிருந்தது.

இதில் அண்ணா.தி.மு.க., கூட்டணியில்
அண்ணா.தி.மு.க., = 200 தொகுதிகளிலும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் = 20 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிட்டது.

தி.மு.க.,கூட்டணியில்
தி.மு.க.= 230 தொகுதிகளிலும்
தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சி = 4 இடங்களிலும் போட்டியிட்டது.

காங்கிரஸ் கூட்டணியில்
காங்கிரஸ் = 198 இடங்களிலும்
இ.கம்யூனிஸ்ட் = 32 தொகுதிகளிலும் போட்டியிட்டது

அதே நேரம் மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த ஜனதா கட்சி 233 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அண்ணா.தி.மு.க = 130 இடங்களை பிடித்து அபார வெற்றிபெற்றது. அந்த கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12 இடங்களில் வென்றது.

தி.மு.க., = 48 இடங்களை பிடித்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.
காங்கிரஸ் = 27 இடங்களை பிடித்தது. அந்த கூட்டணியில் இருந்த இ.கம்யூனிஸ்ட் = 5 இடங்களை பிடித்திருந்தது. ஆனால், அனைத்து தொகுதியிலும் போட்டியிட்ட ஜனதா கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தது. 120 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருந்தது. பார்வார்டு பிளாக், முஸ்லிம்லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

கடந்த சட்டசபைதேர்தலில் பரங்கிமலை தொகுதியிலிருந்து தி.மு.க.,சார்பில் போட்டியிட்டு வென்ற  எம்.ஜி.ஆர்., இப்போது அண்ணா.தி.மு.க.சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு 43065 வாக்குகள் பெற்று வென்றிருந்தார்.

1977-ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் தேதி தமிழக முதல்வராக எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார் ஆளுனர் பிரபுதாஸ் பட்வார். முதல்வரான எம்.ஜி.ஆர்.,
காவல்துறை, சுகாதாரம், தொழில் துறையை தன்வசமே வைத்துக்கொண்டார்.
அவருடன் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டவர்களின் பட்டியல்

பெயர் இலாகா
நாஞ்சில் மனோகரன் நிதி
நாரயணசாமி முதலியார் சட்டம்
ஜி.ஆர்.எட்மண்ட் உணவு
பன்ரூட்டியார் பொதுப்பணி
ஆர்.எம்.வீரப்பன் செய்தி, விளம்பரம்
அரங்கநாயகம் கல்வி
காளிமுத்து உள்ளாட்சி
சௌந்தரபாண்டியன் தாழ்த்தப்பட்டோர் நலம்
எஸ்.ராகவானந்தம் தொழிலாளர் நலம்
பொன்னையன் போக்குவரத்து
பி.டி.சஸ்வதி சமூக நலம்
ப.குழந்தைவேலு விவசாயம்
ராஜா முகம்மது கைத்தறி
முனுஆதி சபாநாயகர்
எஸ்.திருநாவுக்கரசு துணை சபாநாயகர்

இத்துடன் முற்றும். 

இது எம்.ஜி.ஆர்., தி.மு.கவிலிருந்து விலகி, ஆட்சியை பிடித்தவரை நடந்த வரலாற்றின் சுருக்கம். நண்பர் செங்கோவி கேட்டதற்கினங்க இது தொகுக்கப்பட்டது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. நல்ல தொடர், அருமையான தகவல் களஞ்சியம்!

    பதிலளிநீக்கு
  2. தலைப்பைப் பார்த்ததும் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தேன். படித்தபின்தான் புரிகிறது. பழைய பதிவுகளையும் படிக்க இதோ விழைகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  3. அப்பாடா.... ஒரு வழியா MGR கதை முடிந்தது. ஆனால், இன்னும் நிறைய அரசியல் வாதிகள் இருக்கிறார்களே??? அவர்கள் கதையை சொல்ல ஆரம்பிப்பீர்களே.
    பரவாயில்லை அரசியல் பதிவுகளும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பதிவுலகின் ஒரே அரசியல் பதிவர் கஜாலி நானா வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. வரலாறு ரொம்ப முக்கியம் தலைவா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.