என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 23, 2012

12 வரும் தேர்தலுக்குள் உலகம் அழிந்துவிடும்- டாக்டர் ராமதாஸ் சூசகம்......



நேற்று வெளிவந்த நக்கீரனில் மருத்துவர் ராமதாசிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கான பதிலையும் படித்ததிலிருந்து ஒரே மரண பயம் என்னை ஆட்கொண்டுள்ளது...
வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்குள் உலகம் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு தூக்கமே வரவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டார் ராமதாஸ்...இப்படி பயப்படும் அளவிற்கு என்று கேட்கறீங்களா? கீழே படிங்க புரியும்....

ராமதாசிடம் கேட்கப்பட்ட கேள்வி: திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என பா.ம.க., பகிரங்க படுத்துவது பிரசவ வைராக்கியம் போல் இருப்பதாகவும், தேர்தல் வந்தால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கிற நிலையிலேயே பா.ம.க.,வின் பலம் இருப்பதாகவும் அரசியல் ஆலோசகர்களால் விமர்சிக்கப்படுகிறதே?

ராமதாசின் பதில்: கார்(மேகம்) உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார்(உலகம்) உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும், பா.ம.க.,எடுத்த முடிவில் இனி மாற்றம் இருக்கப்போவதில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது காலம் இட்ட கட்டளை.

இனி நான்: இப்போது சொல்லுங்கள், தேர்தல் வருவதற்குள் உலகம் அழிந்துவிடும்தானே......
=============================



சென்னையை சேர்ந்த சாந்தவேல் என்பவர் கேரளாவிற்கு சென்றபோது மலையாளிகள் அவர் மீது வெண்ணீர் ஊற்றி கொலை செய்தார்கள். அவரின் உடலை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றிய போலிசார் அம்பத்தூர் மின்சார சுடுகாட்டில் தகனம் செய்துள்ளார்கள் என்ற செய்தியை படித்ததும் என் மனதில் தோன்றிய ஒரு ஜோக்....( நான் ஜோக் என்று சொல்லியதால் மன்னிக்கவும்... வேறு வழி இல்லாமல் இதை ஜோக் என்று குறிப்பிட்டுள்ளேன்).

அந்த போலீஸ் ஸ்டேசன் முன்பு எதுக்கு பிணத்தைப்போட்டு போராட்டம் நடத்தறாங்க? லாக்கப் மரணமா?

அதெல்லாம் இல்லை. இப்பல்லாம் போலீசே பிணத்தை எரிக்கறதால் இந்த அனாதை பிணத்தையும் அவங்களையே எரிக்க சொல்லி போராடுறாங்க...
======================


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. அண்ணே நலமா?
    ஹி ஹி ....பத்திரிக்கைகாரங்க இன்னுமா அவரிடம் பேட்டி எடுக்குறாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்த பத்திரிக்கை கூட அருமையான நடுநிலை பத்திரிகை (நக்கீரன் )

      நீக்கு
  2. இதே கதையை சாரி கருத்து பாலிமர் டிவி லையும் புலம்பினார் சாரி சொன்னார்

    பதிலளிநீக்கு
  3. அவர விட்டா தமிழகத்துக்கு வேறு ஆளே இல்லையே! என்ன செய்றது?

    பதிலளிநீக்கு
  4. அண்ணே ராமாதாஸ் அறிக்கை எல்லாம் படிக்கறீங்க. சே இத அவங்க கட்சிக்காடங்களே படிச்சுருக்க மாட்டாங்க்கண்ணே. இவரு மட்டும் தமிழ்நாடு என்னத்துக்கு ஆகும். சிரிப்புக்கு எங்க போகும்.

    போலீசின் நடவடிக்கை :
    தா.நா அரசு : அண்ணே அவங்க அடிக்கவே இல்லன்னே
    கே.அரசு : அதத் தானடா யானும் பரஞ்ச்சாது
    மத்திய அரசு : எப்டியோ போங்க. சாண்டியும், தேசியும் ( "யான" தேசிகன் ) எங்கள்ட்ட ஏதும் ரிப்போர்ட் குடுக்கல.

    பதிலளிநீக்கு
  5. இவெரெல்லாம் இல்லாம போனா அரசியல் போரடிச்சுடும் நண்பா...........

    பதிலளிநீக்கு
  6. ஜோக்கர் இருந்தால் தானே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  7. ஒரு வேள தலைவரு கேப்டனோட கூட்டணி வெக்க போறாரோ?

    பதிலளிநீக்கு
  8. போலீஸ் பண்ணது தவறுதான், ஆனா அப்படி பண்ணலேன்னா ஒருவேலை அதை வெச்சி கலாட்டா ஏதாவது வந்திருக்கலாம். இந்த மாதிரி சம்பவங்கள் ஒரு ஃப்ளாஷ்பாய்ண்ட் மாதிரி.

    பதிலளிநீக்கு
  9. என்னத்த சொல்றது போங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.