என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 27, 2012

15 மந்திரி- எந்திரி- மீண்டும் மந்திரி- ஜெயாவின் சடுகுடு.....


இங்கு வருகைதரும் அண்ணன் அவர்களை வருக...வருக...என்று வரவேற்கிறேன்

ஆஹா....வரவேற்பெல்லாம் பலமா இருக்கே....என்ன விஷயம்?

ஒரு விஷயமும் இல்லை. சும்மாதான். சரி..எங்கே போனீங்க ஆளையே காணலை

ரெண்டு மூணு நாளா என் ஃபிரண்டோட ஊர் சுத்தப்போயிட்டேம்பா...அதான்.

உங்களுக்கென்னண்ணே.... நீங்கள்லாம் மந்திரி மாதிரி...ஜாலியா இருக்கலாம்...

யோவ்..யாருய்யா சொன்னது மந்திரின்னா ஜாலியா இருக்கலாம்னு....மந்திரியா இருக்கவங்களுக்குத்தான் அந்த பயம் தெரியும். அது தலைக்கு மேல தொங்குற கத்தி மதிரின்னு

என்ணண்ணே...கோபப்படுறீங்க?...

பின்னே என்னய்யா....பாவம் நம்ம மந்திரிகளெல்லாம் எப்ப யாருக்கு மந்திரிப்பதவி போகுமோன்னு பயந்து போய் இருக்காங்க....

அப்படின்னா.... நித்திய கண்டம்..பூரண ஆயுசுன்னு சொல்லுங்க....

நீ சொல்றதுல ஒரு பாதி உண்மை.அதாவது நித்திய கண்டம் தான் ஆனா, பூரண ஆயுசில்லை. அல்பாயுசு....மந்திரி பதவிகளுக்கு... நேத்துக்கூட ரெண்டுபேரை நீக்கி, ரெண்டுபேரை சேர்த்திருக்காங்க ஜெயலலிதா....

ஆமாம்...காலைல நியூஸ்ல சொன்னாங்க...எதுக்கு இப்படி?

யாருக்குத்தெரியும்?...எல்லாம் ஜெயாவுக்குத்தான் வெளிச்சம். அவங்க மந்திரிசபை...உக்காருன்னா மந்திரி...எந்திரின்னா மாஜி

அதுக்காக இப்படியா? எட்டுமாசத்துக்கு ஏழுதடவை மாத்துவாங்க? சிவபதிய மூனு மாசத்துக்கு முன்னாடித்தான் பதவிலேர்ந்து தூக்கினாங்க...இப்ப மறுபடியும் சேர்த்திருக்காங்க....இது எத்தனை நாளைக்கோ?

எல்லாம் அவங்க இஷ்டம்....இதுல நம்ம என்ன கேக்கறது?

இதுமாதிரி மக்களுக்கும்  ரீகால் வசதி இருந்தா எப்படி இருக்கும்?

என்ன ஆறுமாசத்துக்கு ஒரு முதலமைச்சரை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுக்குத்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே....

அதுசரி....இந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திய போன வாரம்தானே இலாகா மாத்துனாங்க...இப்ப டிஸ்மிஸ் பன்னிருக்காங்களே...இதை போனவாரமே செஞ்சிருக்கலாமே?

செஞ்சிருக்கலாம் தான். நம்ம கவர்னர் சும்மாதானே இருக்கார். வாராவாரம் வேலை வைப்பமேன்னு இப்படி பன்றாங்க போல...

கவர்னருக்கு நல்ல வேலைதான் கொடுத்திருக்காங்க....



Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. /* உக்காருன்னா மந்திரி...எந்திரின்னா மாஜி */

    பார்த்தேன்... படித்தேன்....ரசித்தேன்...
    TM 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணத்தில் ஓட்டு போட்டதியும் இப்படி விளம்பரம் செய்யனுமா? என்ன?

      நீக்கு
  2. //நம்ம கவர்னர் சும்மாதானே இருக்கார்.// ROFL :)

    பதிலளிநீக்கு
  3. //என்ன ஆறுமாசத்துக்கு ஒரு முதலமைச்சரை மாற்றி மாற்றி விளையாடலாம். அதுக்குத்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே....//

    சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் அப்படி வந்தா சொல்லுங்க அரசியலுக்கு போலாம் ஒரு மாசம் நீங்க ஒரு மாசம் நான் டீலா நோ டீலா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த டீலுக்கு நான் ஓக்கே.... ஆனால், மக்கள் ஒத்துக்கனுமே நண்பரே

      நீக்கு
  4. ஜெயலலிதா ஆட்சியில் கவர்னருக்குதான் work ஜாஸ்தியோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமா? ஒரு வாரம் கூட கவர்னரை ரெஸ்டில் இருக்க விடமாட்டார் ஜெயலலிதா

      நீக்கு
  5. பதில்கள்
    1. குஜராத் பக்கம் குளிர் ஜாஸ்தியாயிருச்சு போல....அதான் தும்மல் வருது உமக்கு

      நீக்கு
  6. கஜாலி நானா,
    இப்ப கூட கவர்னர் மாளிகை வழியாகத் தான் வந்தேன். ஒரே போலீஸ் கூட்டம். நான் நெனைக்கிறேன், அம்மா மறுபடியும் கவர்ணர பாக்க இன்று வருகிறார்கள் என்று. யார் யார் தல உருளப் போகுதோ???
    ஒரு வேலை, நேத்து மந்திரி ஆக்கியவர்களை என்று தூக்கப் போறாங்களோ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியேற்பு இன்றைக்குத்தான். அதான் கவர்னரை பார்க்க ஜெயா வந்திருப்பாங்க....அதற்கிடையில் இப்படி அவசரப்பட்டா எப்படி....பாவம் ஒரு வாரமாவது அவங்க மந்திரியா இருந்துட்டு போறாங்க...

      நீக்கு
  7. சரியாச் சொன்னீங்க சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.