என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 05, 2012

15 தை பிறந்தால் வழி பிறக்கும்- உண்மையா?


நண்பர்களே இந்தப்பதிவு நான் கேட்டதை,படித்ததை, படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்வதற்காகவே....

நான் கேட்டது.....

ஒரு பட்டிமன்றத்தில் நான் கேட்டது...
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
பந்திக்கு முந்து.....அதாவது சாப்பிடுவதற்காக பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, இலையில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுவதற்காக குனியும்போது  நம் உடல் சற்று இலையை நோக்கி முன்னேறும். அதாவது முந்தும். அதுதான் பந்திக்கு முந்து.

படைக்கு பிந்து....அதாவது, படைவீரன் போர் புரியும் போது, வில்லில் பூட்டியிருக்கும் அம்பை விடுவதற்காக வில்லின் நாணை இழுப்பான். அப்படி இழுக்கும்போது அவன் உடல் சற்று பின்னேறும். அதாவது பிந்தும். அதுதான் படைக்கு பிந்து.
இதைத்தான் நம் ஆட்கள் பந்திக்கு முந்தி போகவேண்டும், படைக்கு பிந்திப்போகவேண்டும் என்று திரித்துவிட்டார்கள்.


======================

நான் படித்தது.....

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்த விளக்கம்....
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால்....
வழக்கமாக, மார்கழி மாதம் அதிகாலையில் பனி அதிகமாக இருந்து, எதிரில் இருக்கும் ஆட்களைக்கூட தெரியாமல் செய்துவிடும். வழி(பாதை)யும் தெரியாது. ஆனால், அதற்கடுத்த தை மாதத்தில், பனியின் கடுமை குறைந்து வழி நம் கண்களுக்கு புலப்படும். அதாவது வழி(பாதை) தெரியும் அல்லது பிறக்கும். இதுதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும்.

மேலும் பழமொழிகளின் விளக்கம் அறிய சுட்டி

==============================

படித்ததில் பிடித்தது....

நான் சமீபத்தில் துரை டேனியல் என்ற பதிவரின் தளத்தை படித்தேன். மிக அற்புதமாக எழுதுகிறார். அவரின் அவிழ்க்க முடியாத முடிச்சுகள்
என்ற கவிதை ஒன்றைப்படித்தேன். சிம்பிளாக, அருமையாக இருந்தது....படித்ததும் பிடித்தது. நீங்களும் படித்துப்பாருங்களேன்...

 நான் போடவில்லை
ஆனாலும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முடிச்சுகள்

ஒருபக்கம்
ஒவ்வொன்றாய்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறேன்
நான்

மறுபக்கம்
கொத்துக் கொத்தாய்
போட்டுக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை.

அவரின் தள முகவரி: துரை டேனியல்



Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. அனைத்தும் சுவாரஸ்யமாயிருந்தன. அந்த கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. மாப்ள விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கு பிடித்தது படித்தது நானும் ரசித்தேன்...

    அழகிய தொகுப்பு

    பதிலளிநீக்கு
  4. தை பிறந்தால், பந்திக்கு முந்து..சரியான விளக்கம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். தேங்க்ஸ் கஸாலி!

    பதிலளிநீக்கு
  5. உண்மை தகவலை அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. பழ்மொழி விளக்கமும் கவிதை அறிமுகமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 7

    பதிலளிநீக்கு
  7. அறிமுகத்திற்கு நன்றி .. போய் பார்கின்றேன்

    பதிலளிநீக்கு
  8. Romba Nanri Sir!Evvalo periya manasu ungalukku. Again and again i says a lot of thanks for you for this. God bless you and your family!.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தொகுப்பு அழகியகோர்வை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.