என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 03, 2012

7 எமெர்ஜென்சியும் எம்.ஜி.ஆரின் பங்கும்.......


முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4, 5


உத்திரப்புரதேசம் மா நிலத்தில் இருக்கும் ரேபராலி நாடாளுமன்றத்தொகுதியில் இந்திராகாந்தி வெற்றிபெற்றது செல்லாது என்று உத்தரவிட்டது அலகாபாத் நீதிமன்றம்.
இந்ததீர்ப்பிற்கு பின்பும், பிரதமர் பதவியில் இந்திரா நீடித்ததால், அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் நாடெங்கும் போராட்டத்தில் குதித்தனர்.

நிலமையை சமாளிக்க 1975 ஜூன் 12-ஆம் தேதி எமெர்ஜென்சி என்னும் அடக்குமுறையை அறிவித்தார். தன்னை எதிர்க்கும் தலைவர்களையெல்லாம் மிசா(MISA) அதாவது Maintenance of Internal Security Act என்ற சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார். தமிழகத்தில் தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அண்ணா.தி.மு.க.,வின் செயற்குழுவை கூட்டினார் எம்.ஜி.ஆர்., எமெர்ஜென்சியை கொண்டு வந்ததற்காக இந்திராவை பாராட்டி தீர்மானம் போடப்பட்டது செயற்குழுவில். அந்த தீர்மானத்தின் நகலை டெல்லிக்கே கொண்டு சென்று பிரதமர் இந்திராவிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.,

ஆனால், தி.மு.க., எமெர்ஜென்சியை எதிர்த்ததால், தமிழகத்தில் தி.மு.க,வின் ஆட்சியை கலைத்தார் இந்திரா. இந்த ஆட்சிக்கலைப்பை வரவேற்றார் எம்.ஜி.ஆர்.
தி.மு.க.,அரசு கலைக்கப்பட்ட இந்த தைரியமான நடவடிக்கையை அண்ணா.தி.மு.க., வரவேற்கிறது, ஜனநாயகத்தை(?) காப்பாற்ற பிரதமர் இந்திரா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அண்ணா.தி.மு.க,வின் முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அறிவித்தார்.

இதற்கிடையில், 1972-ஆம் ஆண்டு, தி.மு.க,வை விட்டு நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க., அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியிடம் கொடுத்திருந்தா அல்லவா.....அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, இப்போது அதாவது தி.மு.க.,ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, சர்க்காரியாவை தலைவராக கொண்டு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் இந்திரா. அதற்கு சாட்சிசொல்வதற்கு தயாரானார் எம்.ஜி.ஆர்.,

அப்போது ஒரு வதந்தி கிளம்பியது. கிளம்பிய வதந்தி விஸ்வரூபமெடுத்து எம்.ஜி.ஆரையே அசைத்தது.......

இன்னும் வ(ள)ரும்....





Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. வெரி இண்டேறேச்டிங், மிசா பற்றிய மேலும் தகவல் வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******
    புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
    **********
    …….


    2. *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    .

    பதிலளிநீக்கு
  3. பழைய நிகழ்வுகளைத் தெளிவாகச் சொல்கிறீர்கள்.நன்று.

    பதிலளிநீக்கு
  4. பழைய தகவல்களாக இருந்தாலும் விளக்கமாக உள்ளது. நன்றி!

    பதிலளிநீக்கு
  5. எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி முக ஆட்சி கலைக்கப்பட வில்லை .இந்திரா காந்தியை விதவை மறுவாழ்வு திட்டத்தில் இணைய ஆற்காடு வீராசாமி பேசிய உயர்ந்த சிறந்த சொற் பொழிவிர்காகக் கலைக்கப்பட்டது.வரலாற்றை மாற்ற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்..இது தி.மு.க.,ஆட்சி ஏன் கலைக்கட்டது என்பதை அலசும் பதிவல்ல...எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாற்று பதிவு.... இதில் எம்.ஜி.ஆரை பற்றிய குறிப்புகளே பிரதானம். தி.மு.க.,வை பற்றி லேசாக தொட்டுக்கொண்டுதான் போக முடியும். முழுவதுமாக எழுத முடியாது.

      நீக்கு
  6. கிழக்கு பதிப்பகத்தின் லேட்டஸ்ட் வெளியிட்டான எம்.ஜி.ஆரின் 'வாத்தியார்' புத்தகத்தில் இதை பற்றி தெளிவாக போட்டிருந்தார்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.