என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜனவரி 29, 2012

12 பிரபுதேவா- நயந்தாரா பிரிஞ்சுட்டாங்களாமே......



வாய்யா.....என்ன ஏதோ பரபரப்பா செய்தி கொண்டுவருகிறதுபோல தெரியுது?

ஒன்னுமே இல்லப்பா....

என்ன ஒன்னுமே இல்லேங்கறே..... நயனும் பிரபு தேவாவும் பிரிஞ்சுட்டதா சேதி வருதே?

அட...அவங்க பிரிஞ்சா என்ன? சேர்ந்தா என்ன இதையெல்லாம் பார்க்கறதுதான் நம்ம் வேலையா?

இல்லேப்பா...சும்மா கேட்டேன்....

இதெல்லாம் சினிமாக்காரங்கட்ட சகஜம்பா...இதைப்பார்த்தா நம்ம பொழப்பு ஓடாது....

சரி...சரி... நீ என்னவோ புத்தக கண்காட்சிக்கு போனத ரெண்டு பாகமா போட்டிருந்தியே....அதோட நிறுத்திட்ட....அடுத்த பாகம் எப்போ?

அதை நான் மறந்தே போயிட்டேன்பா.....நல்ல வேளையா ஞாபகப்படுத்தினே....

அதுவும் இரண்டாம் பாகத்துல பெரிய சவால் கிவால்ன்னு சஸ்பென்செல்லாம் வச்சிருந்தே?

அது சும்மா பிலடப்புக்குப்பா....

அப்படினா...சவால் ஏதும் இல்லையா?

இல்லேப்பா.....சிராஜ் புக் வாங்கினானா?

எந்த சிராஜ்?

அந்த டீக்கடை பதிவ்ருப்பா...வடைபஜ்ஜிலாம் விற்பானே?

அவரு சென்னையில டீக்கடை வச்சிருக்காரா?

விளங்கிரும்....அவன் வலைப்பதிவோட பேருதான் டீக்கடை....அவன் வேலை செய்யறது சாஃப்ட்வேர் இஞ்சினியரா?

அப்படியா...சரி சரி மேலே சொல்லு?

புத்தக கண்காட்சியில் நிறைய புக் வாங்கினான்பா....அந்த புக்கே மூணு பேக் வந்திருச்சுன்னா பார்த்துக்கவே?

என்ன மூனு பேக்கா....அப்படினா வளைச்சு வளைச்சு வாங்கினாருன்னு சொல்லு

ஆமாப்பா...அதெல்லாம் 11000 ரூபாய் பில் வந்துடுச்சு....

சிராஜ் வாங்கிய புத்தகங்களில் ஒரு பகுதி

அப்ப சரிதான். சரி அடுத்து....

அவ்வளவு புக்கையும் எப்படி கொண்டு போறதுன்னு எனக்கு ஒரே கவலையா போச்சு..

இருக்காதா பின்னே....

நம்ம மெட்ராஸ் பவன் சிவக்குமாரும், பிலாசபி பிரபாகரனும் என்னை கிண்டல் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க

எதுக்கு?

ஏன்னா... நாங்க போனது பைக்கில...சிராஜ் நிம்மதியா பைக் ஓட்டிக்கு போவான். பின்னாடி உட்கார்ந்திருக்க நாந்தானே எல்லா பேக்கையும் பத்திரமா வச்சிக்கனும்....

அதைத்தான் போன பாகத்துல் சவால்ன்னு சொன்னியோ

அதே....

அப்புறம்?

அப்புறமா? அதை வீடு போய் சேர்க்கறதுக்குல போதும் போதும்ன்னு ஆச்சு.... முதுகுல ஒரு பேக்கை மாட்டிக்கிட்டேன். ரெண்டு கைலையும் ரெண்டு பேக் வச்சுக்கிட்டேன். தோள் கடுமையா வலிக்க ஆரம்பிச்சுருச்சு...சும்மாவா ஒரு இருபது கிலோமீட்டர் தூரம் அப்படியே தூக்கிட்டு போகனுமே....

ரொம்ப பெரிய சவால்தான். அப்புறம்?

வீடு போய் சேர்ந்ததுதான்  நிம்மதி.

அதுசரி..... அங்கே சென்னைபித்தன் அய்யாவா பார்த்ததா அவரு ஒரு பதிவில் சொல்லியிருந்தாரே?

ஆமாப்பா.... அடுத்த நாள் நான் ஊருக்கு கிளம்பனும்...அதற்கிடையில் அவரையும் பார்க்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா போன் நம்பர் இல்லை. பிரபாகரன்கிட்ட கேட்டேன். அவரு மேதை படம் பார்த்துக்கு இருந்திருப்பார் போல....இருந்தாலும் போன் நம்பர் கொடுத்தாரு...அதை வாங்கி சென்னை பித்தன் அய்யாவை தொடர்புகொண்டு பேசிட்டு மதியம் அவரை பார்க்க வருவதாக சொன்னேன். அதைப்போல் நானும் சிராஜும் போய் பார்த்தோம். ஒரு கால் மணி நேரம்தான் பேசிட்டு இருந்தோம். அது ஒரு இனிமையான சந்திப்பு.

அடுத்து யாரையும் பார்க்கலியா?

நேரம் இல்லைப்பா.....அன்னிக்கு நைட்டே கிளம்பி ஊருக்கு வந்துட்டேன்.

அடுத்த பாகத்துல இதையெல்லாம் எழுதிடுவியா?

எழுதுறதா? அதான் உங்கிட்ட சொல்லிட்டேன்... இனிமே அதை தனியாவேற சொல்லனுமா?

வேற ஏதும் விஷேசம்?

ஒன்னும் இல்லைப்பா....

அப்படின்னா...இதை சொல்லத்தான் வந்தியா?

அப்படித்தான் வச்சுக்கவே....


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. பிரபுதேவா-நயன்தராவை எப்படியெல்லாம் லிங்க பண்றாங்க பாருயா...

    பதிலளிநீக்கு
  2. நீங்க...மேதை படம் பார்த்தா மட்டுமே அய்யாவின் போன் நெம்பரை பிரபா கொடுத்திருக்கனும்...

    பதிலளிநீக்கு
  3. சாரி! படம் பார்த்தாத்தா போன் நெம்பர் தருவேன் என்று பிரபா சொல்லியிருக்கனும்

    :)

    பதிலளிநீக்கு
  4. he he....கல்யாணமா கட்டிகிட்டாங்க பிரிஞ்சு போறதுக்கு...திருட்டு ஜோடி...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பேச்சு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. என்னை போல அநாதை(எந்த குழுவிலும் சேராதவர்கள்) பதிவாளர்களை எப்ப வந்து பார்க்க போறீங்க....ஒரு வேளை அப்படியே பார்க்கனுமுனு தோணுச்சுண்ணா மறக்காம உங்கள் நண்பர் வாங்கிய புக்கை எல்லாம் அப்ப்டியே எடுத்துட்டு வாங்க

    பதிலளிநீக்கு
  7. கஸாலி சார்!

    உங்க முந்தைய பதிவுகளை தவறவிட்டு விட்டேன். பதிவுகள் போடத்தான் டைம் இருக்கு.கமெண்ட் முன்பு போல போட முடியல்ல. இருந்தாலும் அடிக்கடி தளம் பக்கம் வர முயற்சி பண்றேன்.

    அப்புறம் இந்த பதிவு சூப்பர். ரொம்ப இயல்பா பேச்சு நடையில கலக்கலா இருக்கு. தொடரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஸாலி,

      என் வீட்டு அட்ரெஸ் மட்டும் தான் நீ குடுக்கல, பாக்கி எல்லாத்தையும் சொல்லிட்ட. ஏற்கனவே என்னைய நெறைய பேரு தேடிகிட்டு இருக்காங்க.
      அது சரி, இந்த புத்தக கண்காட்சி மேட்டரு முடிஞ்சிச்சா? இல்ல இன்னும் ஓடுமா???

      பதிவுலகமே,
      இந்த கசாலி யையும் மெட்ராஸ் பவன் சிவா வையும் எங்கயும், எந்த சந்திப்புக்கும் கூப்பிடாதீங்க. அத பத்தி தொடர் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.

      நீக்கு
  8. நல்ல கலந்துரையாடல் ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  9. என்னது? இந்தியாவுககு சுதந்திரம் கிடச்சிட்டுதா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.