என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 12, 2012

20 கெட்டுப்போன சட்டம் ஒழுங்கும், சி.பி.,செந்தில்குமாரும்......




ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகமே அமைதி பூங்காவாக மாறிவிடும். சந்துக்கு சந்து சட்டம் ஒழுங்கு சிரிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நடப்பதோ வேறு மாதிரியாக இருக்கிறது.
நக்கீரன் பிரச்சினையில் ஆளுங்கட்சி ச.ம.உ.,வே தலைமையேற்று வன்முறையை தூண்டிவிடுமளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி கைதுசெய்வதென்பதெல்லாம் தி.மு.க.,வினரை மட்டும்தான் போல


முணுக்கென்றால் கலவர நெருப்பு பற்றிக்கொள்ளும் தென்மாவட்டங்களில், பரமக்குடி பற்றவைத்த கலவர நெருப்பு லேசாக அணைந்திருந்தது. இப்போது மீண்டும் பெட்ரோல் ஊற்றியிருக்கிறார்கள் பசுபதி பாண்டியன் கொலை மூலம். இப்படியே போனால் தமிழகம் அமைதி பூங்காவாக மாறுமோ இல்லையோ.... வன்முறை பூங்காவாக மாறிவிடும் போல.....



அடுத்து மின்சாரம், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைத்து, தமிழகமே ஜொலிக்கும் என்றும் சொன்னார்கள். ஆனால், தமிழ் நாடு ஒளிர்வதுபோல் தெரியவில்லை. நாளுக்கு நாள் இருள்கிறது. ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஒன்பது அல்லது பத்து மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இது குளிர்காலம் என்பதால் ஓரளவிற்கு வியர்ப்பதில்லை. இதுவே கோடை காலமாக இருந்தால் நினைக்கவே உடம்பு எரிகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் மூன்று மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும் போது, அய்யோ தமிழகம் இருட்டில் தத்தளிக்கிறது, கற்காலத்திற்கு திரும்புகிறது என்றெல்லாம் எழுதி குவித்த பதிவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இலவசமாக மிக்சி, கிரைண்டர் கொடுப்பதற்கு பதிலாக ஒரு இன்வெர்ட்டர் கொடுத்தால் ஓரளவு மின்வெட்டிலிருந்து மீளலாம். இதை சோ தான் ஜெயலலிதாவிடம் சொல்லனும்.

ஆமா இதையெல்லாம் பார்ப்பதற்கு எங்கே ஜெயலலிதாவிற்கு நேரம் இருக்கிறது என்றுதானே சொல்லுகிறீர்கள். உண்மைதான்.மழை விட்டும் தூவானம் விடாதகுறையாக  அவருக்குத்தான் மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்பு வைத்திருக்கும் கட்சிக்காரர்களை கண்காணித்து நீக்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறதே.....

-----------------------


நேற்று சி.பி.செந்தில்குமார் அவர்கள் தனது ஆயிரமாவது பதிவை எழுதியுருந்தார். அவர் தளத்திலேயே பின்னூட்டம் வாயிலாக வாழ்த்துசொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், அப்படி பத்தோடு பதினொன்றாக வாழ்த்த மனம் வரவில்லை. அதுதான் இந்த கிளைப்பதிவு.

இந்த ஒன்றரை வருடங்களில் 1000 பதிவு என்பதே ஒரு அசாத்திய சாதனைதான். அடப்போப்பா.... ஒரு நாளைக்கு நாலு பதிவு போட்டால் யார்தான் குறுகிய காலத்தில் 1000 பதிவை போடமுடியாது என்று குற்றம் சொல்பவர்களுக்கு....

ஏனோ தானோ வென்று எழுதினால் ஒரு நாளைக்கு நாலு பதிவென்ன நாற்பது பதிவு கூட போடலாம்தான். ஆனால், அத்தனையிலும் குவாலிட்டி இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும். ஒரு பதிவிற்காக அவர் எடுக்கும் சிரத்தை அதிகம். சும்மா வந்தோம் எழுதினோம் சென்றோம் என்றில்லாமல், மிகவும் சிரத்தையுடன் ஒவ்வொரு பதிவிற்கும் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறார் என்றால் அது மிகையில்லை. அவரது ஞாபக சக்திக்கு சினிமா விமர்சனத்தில் வரும் வசனங்களே சாட்சி.

நாமெல்லாம் ஒரு நாளைக்கு தொடர்ந்து இரண்டு படம் பார்த்தால் கதையையே மறந்துவிடுவோம். ஆனால் ஒரு நாளுக்கு நான்கு படம் பார்த்தாலும், வசனங்களை நினைவில் நிறுத்தி, அதை துல்லியமாக தன் எழுத்தில் கொண்டுவரும் திறமை மிக்கவர்.

சில நேரங்களில் சில சர்ச்சை பதிவுகளை போட்டாலும், வலையுலகில் அனைவருடனும் நட்பு பாராட்டுபவர் சி.பி.,
இவரைப்பற்றி எப்படி எழுதினாலும் கோபப்படாமல் ஹி...ஹி..என்றே பதில் சொல்வார். இவரது பொறுமையும் நிதானமும் மற்ற பதிவர்களுக்கு ஒரு பாடம்.

இவரிடம் எனக்கு சில குறைபாடுகள் உண்டு.....

சினிமா விமர்சனம் எழுதும்போது முடிந்தவரை கவர்ச்சி படங்களை தவிருங்கள். அது போல்... இரட்டை அர்த்தங்கள் வரும் வார்த்தைகளை கையாளுவதையும் தவிருங்கள்.
இதுமாதிரியான குறைகள் இருந்தால் பெண்கள் உங்கள் தளத்திற்கு வருவதற்கு சங்கோஜப்படுவார்கள்.

சர்ச்சைக்குரிய பதிவிடும்போது (உதாரணம்: பதிவர்களில் கேபிள் குரூப்- ஜாக்கி குரூப்) இரு தரப்பு பிரச்சினைகளையும் ஆராய்ந்தே போடுங்கள். ஒரு யூகத்தின் அடிப்படையில் எழுதுவதென்பது உங்கள் தகுதிக்கும், நீங்கள் இருக்கும்உயரத்திற்கும் அழகல்ல....

சி.பி. இன்னும் பல்லாயிரம் பதிவுகளிட்டு பல்லாண்டு காலம் வலையுலகில் நீடித்திருக்க ஒரு சக வலையுலக நண்பனாக வாழ்த்துகிறேன்



Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. தலைப்பு வைப்பதில் உன்னை அடிக்க ஆளில்லை கஜாலி நானா..... நான் CP க்கு நேற்றே பின்னூட்டம் வழியாக வாழ்த்து சொல்லி விட்டேன்... முதல் முறையாக அவருக்கு வோட்டும் போட்டேன்...

    பதிலளிநீக்கு
  2. யோவ் அது என்ன பத்தோடு பதினொன்னு...கொய்யால அந்த மாதிரி பத்து பேரு ஓட்டு போட்டு தான் நீரும் இன்று பிராப்ள ச்சே பிரபல பதிவரா இருக்கீரு ஞாபகம் இருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  3. சட்டம் ஒழுங்கு கெட்டு போனதுக்கு சிபி சார்தான் காரணமோன்னு பார்க்க வந்தால் வாழ்த்து பதிவா? சரி நானும் வாழ்த்திக்குறேன் சகோ

    பதிலளிநீக்கு
  4. { விக்கியுலகம் } said...

    யோவ் அது என்ன பத்தோடு பதினொன்னு...கொய்யால அந்த மாதிரி பத்து பேரு ஓட்டு போட்டு தான் நீரும் இன்று பிராப்ள ச்சே பிரபல பதிவரா இருக்கீரு ஞாபகம் இருக்கட்டும்!

    யோவ்...மாம்ஸ்... நீபாட்டுக்கு திசை திருப்பி விட்டுறாதய்யா....
    இது அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல.... வழக்கமாக ஒரு சில பின்னூட்டங்கள் இருந்தாலே நிறையபேர் படிப்பதில்லை. ஆனால், சி.பி.யின் பதிவில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இருந்ததால் அங்கு நான் கமெண்ட் போட்டால் எடுபடாமல் போய்விடும். அதனால் தனியாக ஒரு பதிவிட்டு விடுவோம் என்று நினைத்தேன். அதனால் தான் அப்படி எழுதினேன். தயவுசெய்து வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் கஸாலி

    நாட்டு நிலைமை குறித்த கருத்துகளையும் சி.பி.செந்தில் குமாரின் 1000 வது பதிவு பற்றியும் எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. ஸலாம் சகோ.கஸாலி,

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை அபாயகரமாக உள்ளது..!

    தங்களின் முதல் பாதி பதிவு
    மிக அருமையானது சகோ..!

    அப்புறம் அதில்....
    //ஒரு இன்வெர்ட்டர் கொடுத்தால் ஓரளவு மின்வெட்டிலிருந்து மீளலாம்.//--எப்படி சகோ..?

    இதற்கு ரீசார்ஜ் செய்ய குறைந்த பட்சம் அதற்கு 12 மணி நேரம் மின்சாரம் விட வேண்டாமா..?

    ஆகவே,
    இலவச இன்வெர்டர் மட்டும் போதாது..!

    கூடவே...
    இலவச ஜெனரேட்டரும்...
    அதுக்கு இலவச எரிபொருளும் வேண்டும்..!

    ஜெ.விடம் கேட்டு வாங்கிதாங்க சகோ.கஸாலி..! ஹி...ஹி...

    அப்புறம், பேருந்தில் டிக்கெட் வாங்கும் காசில், இன்னொரு பேருந்தையே வாங்கிரலாம்போல என்றும்... பால் வாங்கும் காசில் பசு மாட்டையே வாங்கிரலாம் போல என்றும்... எண்ணத்தொன்றும்..!

    பதிலளிநீக்கு
  7. சி.பி.க்கு சிறப்பு வாழ்த்துகள்..!!

    நாட்டு நடப்பு என்று எடுத்துக்கொண்டால்.. ஒவ்வொரு நாளும் எங்காவது இப்படி நடந்துக்கொண்டே இருக்கிறது.. வெளிச்சத்திற்கு வருபவை ஒன்றிரண்டு.. !!

    மற்றவை மூடி மறைக்கப்படுகிறது..!!!

    ஆட்சி எந்த ஆட்சி இருந்தாலென்ன.. கொலைகாரர்கள், கொடூரர்களும், கொள்ளையடிப்பவர்களும் இருக்கும்வரை..!! முதலில் இவர்கள் மனம் திருந்த வேண்டும்..!!!

    ஒரு பாட்டில் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும்,ஒரு ரூபாய் நோட்டுகளுக்கும், மனித உயிரை துச்சமென மதித்து.. உயிர் எடுக்கும் இந்த கொடுரர்களுக்கும் ஒரு நாள் தன்னுயிரும் இதுபோல்தான் போகப்போகிறது என்கிற எண்ணத்தை வரவழைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள்.. !!!

    பதிலளிநீக்கு
  8. CP க்கு இதவிட பெரிய பரிசு வேறு ஏதாவது இருக்கா என்ன ?

    பதிலளிநீக்கு
  9. CP க்கு இதவிட பெரிய பரிசு வேறு ஏதாவது இருக்கா என்ன ?

    பதிலளிநீக்கு
  10. //இதுமாதிரியான குறைகள் இருந்தால் பெண்கள் உங்கள் தளத்திற்கு வருவதற்கு சங்கோஜப்படுவார்கள்//

    நேற்று அவர் தளத்திலேயே இதனை வெளிபடுத்தினேன். இனிவரும் காலங்களில் மாற்றுவார் என நம்புகிறேன். சிபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. சிபி பெண்கள் படம் போடலைன்னா...ஆம்பளைக வர கூச்சப்படுவாங்களே...? சீரான மின்சாரம்...கிடைக்குமா?சந்தேகம்தான்....

    பதிலளிநீக்கு
  12. ///சினிமா விமர்சனம் எழுதும்போது முடிந்தவரை கவர்ச்சி படங்களை தவிருங்கள். அது போல்... இரட்டை அர்த்தங்கள் வரும் வார்த்தைகளை கையாளுவதையும் தவிருங்கள்.
    இதுமாதிரியான குறைகள் இருந்தால் பெண்கள் உங்கள் தளத்திற்கு வருவதற்கு சங்கோஜப்படுவார்கள்.///

    அப்படியென்றால்...

    அப்படியென்றால்...

    ஆண்கள் மட்டும் சகொஜப்படுவது இல்லை என்கிறீர்களா...?

    'ஆபாசமாக பிறன்மனை நோக்கா பேராண்மை' எல்லாம் இனி நமக்கு வேண்டாமா..?

    என்னங்க சொல்ல வறீங்க..?

    முன்பு நான் இரண்டாம் பாதியை படிக்கவே இல்லை..!

    சகோ.ஆமினா தன் கமேண்டில் எடுத்து போட்ட பின்னர்தான்...

    அடடே... இது தப்பான விமர்சனம் ஆச்சேன்னு என் கருத்தை சொல்ல வந்தேன்...!

    பிற பெண்களை ஆபாச படங்களாக போடுவதும் அதை காண்பதும்....

    ஆண் ஆகிய எனக்கும் சங்கோஜமாக இருக்கிறது என்று இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்..!

    ஆகவே சகோ.கஸாலி,
    சிபி செந்தில் குமார் மீதான உங்கள் விமர்சனத்தை...

    //....இதுமாதிரியான குறைகள் இருந்தால் எவரும் உங்கள் தளத்திற்கு வருவதற்கு சங்கோஜப்படுவார்கள்...// என்று மாற்றலாமே..!

    பதிலளிநீக்கு
  13. உடனடி தேவை கூலி படைகளுக்கு என்கவுன்டர்

    பதிலளிநீக்கு
  14. உடனடி தேவை கூலி படைகளுக்கு என்கவுன்டர்

    பதிலளிநீக்கு
  15. ///சினிமா விமர்சனம் எழுதும்போது முடிந்தவரை கவர்ச்சி படங்களை தவிருங்கள். அது போல்... இரட்டை அர்த்தங்கள் வரும் வார்த்தைகளை கையாளுவதையும் தவிருங்கள்.
    இதுமாதிரியான குறைகள் இருந்தால் பெண்கள் உங்கள் தளத்திற்கு வருவதற்கு சங்கோஜப்படுவார்கள். ///


    படிப்பதற்கு சந்கோஜபடமாட்டார்கள் கருத்திட தயங்குவார்கள்

    பதிலளிநீக்கு
  16. //சினிமா விமர்சனம் எழுதும்போது முடிந்தவரை கவர்ச்சி படங்களை தவிருங்கள். அது போல்... இரட்டை அர்த்தங்கள் வரும் வார்த்தைகளை கையாளுவதையும் தவிருங்கள்.//

    ஐயையோ என்ன வார்த்த சொல்லிட்டீங்க . அவரு ப்லாகுக்குப் போறதே அதுக்குத் தான்

    @ செந்திலண்ணன் - அண்ணே இவரு பேச்சக் கேட்டுக் கேட்டுப் போயிராதன்னே

    பதிலளிநீக்கு
  17. //நா.மணிவண்ணன் said

    //படிப்பதற்கு சந்கோஜபடமாட்டார்கள் கருத்திட தயங்குவார்கள்//

    யோவ் மணி. ரவுசு மன்னரே. எங்கய்யா போனீரு? ஆளைக்காணும்?

    பதிலளிநீக்கு
  18. சட்டம் ஒழுங்கு கெட்டு போனதுக்கு சிபி சார்தான் காரணமோ

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.