என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜனவரி 07, 2012

14 தாக்கப்பட்ட நக்கீரனும்....தறிகெட்ட அ,தி.மு.க.,வினரும்......




ஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றான பத்திரிகைகள், எப்போதும் ஜனநாயகத்தப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை. அது கவலைப்படுவதெல்லாம் எதை எழுதினால் கல்லா கட்டலாம்,  எதை எழுதினால் காசு பார்க்கலாம் என்பதைப்பற்றித்தான்.

ஒரு வாசகர் கொடுக்கும் காசுக்கு கொஞ்சமாவது உபயோகமான செய்தியை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில்தான் செய்திகள் வெளியிட்டு காசு சம்பாதித்து விடுகின்றன....

பெரும்பாலான பத்திரிகைகள், எப்போதும் இரு நிலைப்பாடுகளைத்தான் கொண்டிருக்கும். ஒன்று....ஆளுங்கட்சி ஆதரவு நிலை, மற்றொன்று ஆளுங்கட்சி எதிர்ப்பு நிலை. ஆனால், அதில் நக்கீரன் மட்டும் எப்போதும் விதிவிலக்கு. அ.தி.மு.க.,ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாடுதான். இது இன்று, நேற்றல்ல...ஜெயலலிதா முதன்முதலில் முதல்வரானதிலிருந்து இந்த கீரி பாம்பு விளையாட்டு துவங்கிவிட்டது.
(தனக்கும் ஜெயலலிதாவிற்கும் என்ன பகையென்று தன் நக்கீரனில் யுத்தம் தொடர்மூலம் எழுதியும் வருகிறார் கோபால் என்பது வேறு கதை)

ஜெயலலிதா எப்போதெல்லாம் ஆளுங்கட்சியாக வருகிறாரோ அப்போதெல்லாம் நக்கீரனுக்கு உற்சாகம் வந்துவிடும்.  நம்பகத்தன்மை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதாவிற்கு எதிராக எதையாவது எழுதி காசு பார்த்துவிடுவார்கள்.ஜெயலலிதாவை பற்றி செய்தி கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள். ஒரு மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு இறங்கி எழுதுவார்கள்.

இன்று காலையும் அப்படித்தான்
என்ற தலைப்பை முகப்பில் தாங்கி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது நக்கீரன்.

செய்தியை படிக்க படத்தை கிளிக் செய்யவும்

இந்த செய்தியை படித்ததும் ரத்தம் கொதித்துவிட்டது ரத்தத்தின் ரத்தங்களுக்கு.... நக்கீரன் பத்திரிகையை வாங்கி கொளுத்த ஆரம்பித்தன்ர். நக்கீரன் அலுவலகமும் தாக்கப்பட்டது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்தது. மக்கள் பிரதி நிதிகளான எம்.எல்.ஏ.,க்கள் தலைமை தாங்கி வன்முறையை கட்டவிழ்த்து விடுமளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.



இப்படி ஒரு செய்தியை இப்போது வெளியிடும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் வந்தது நக்கீரனுக்கு?
இந்த செய்தியால் நாட்டிற்கு என்ன பலன்?
ஒன்றுமில்லை...அந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை தவிர்த்து...

ஒரு ஆட்சிக்கு எதிராக...அவர்கள் செய்யும் ஊழலையும், குற்றங்களையும் வெளிக்கொண்டுவருவதுதானே ஒரு பொறுப்பான பத்திரிகையின் நோக்கமாக இருக்கவேண்டும். அதை விடுத்து, அவர் என்ன சாப்பிடுகிறார்? என்ன குடிக்கிறார் என்றெல்லாமா செய்தி வெளியிடுவது?

பத்திரிகைகளுக்கு எழுத்து சுதந்திரம் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாமா?

சரி.... நக்கீரன் தான் இப்படி புத்திகெட்டுப்போய் எழுதிவிட்டது என்றால் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு எங்கே போனது புத்தி? அதற்காக வன்முறையையா கையில் எடுப்பது?
பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லா வகையான விமர்சனமும் வரத்தான் செய்யும். அதற்கான தீர்வு வன்முறைதானா? சட்டரீதியாக நக்கீரன் பிரச்சினையை அணுகியிருக்கலாமே.....

இதில் இன்னொரு முக்கியமான விஷயம்......இந்த பிரச்சினைக்கு கலைஞர் கண்டனம் தெரிவித்திருப்பதுதான்.
தன் ஆட்சிக்காலத்தில் தினகரனுக்கு எதிராக கிளம்பிய உடன்பிறப்புக்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு மூன்று உயிர்கள் பலியானதே....அப்போது என்ன சொன்னார் கலைஞர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை அந்த பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகத்தானே இருக்கிறது.அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது தன் ஊதுகுழல் இன்னொரு முரசொலியாக செயல்பட்ட நக்கீரன் தாக்கப்பட்டதும் கண்டனம் தெரிவிப்பது வேடிக்கை
கண்டனம் தெரிவிப்பது தவறென்று சொல்லவில்லை. கலைஞருக்கு அந்த தகுதி இல்லை என்றுதான் சொல்கிறேன்.

தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல்.... ஆளுங்கட்சிக்காரர்களும், பத்திரிகையும் நடந்துகொள்வதென்பது நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் பேராபத்து.

ஒன்று மட்டும் விளங்குகிறது.... ஜெயா மீது நக்கீரனும், நக்கீரன் மீது ஜெயாவும் கொண்டிருக்கிற வெறுப்பே இத்தனைக்கும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. எப்படியோ நக்கீரன் கோபாலுக்கு யுத்தம் தொடருக்கான அடுத்த அத்தியாயத்திற்கு விஷயம் கிடைத்துவிட்டது.

இதற்கு பொருத்தமானஒரு அல் குர்ஆன் வசனத்துடன் முடிக்கிறேன்.

ஒரு சாரார் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை நீதியிலிருந்து பிறழ செய்து விட வேண்டாம். நீங்கள் ஒரு போதும் நீதி தவறாதீர்கள்.( 4:135) 





Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. நச் ..........நடுநிலை நாயகனே நீங்கள் தான் நக்கீரனோ??

    பதிலளிநீக்கு
  2. தீராத பகை இருவருக்கும் ...அதான்

    பதிலளிநீக்கு
  3. என்னதான் வெறுப்பும் கோபமும் இருந்தாலும் அது அரசியல் ரீதியான விமர்சனங்களாக வெளிப்பட வேண்டுமே தவிர, ‘மாமிசம் சாப்பிடும் மாமி நான்’ என்று இழிவுபடுத்தும் தலைப்புடன் வெளியிட்டிருப்பது என்ன பத்திரிகை தர்மமோ தெரியவில்லை. பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டால் அதுவும் விளம்பரம்தானே என்பது நக்கீரனின் எண்ணமாக இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. எப்படியோ நக்கீரனோட சரிந்திருந்த சர்க்குலேசன் மறுபடியும் பிக்கப் ஆகி இருக்கும்.... (அதுக்குத்தானே இதெல்லாம்....!)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா7 ஜன., 2012, 9:19:00 PM

    நக்கீரனின் அடுத்த தொடர்க்கு செய்தி கிடைத்துவிட்டது ....இதுல என்ன ஒரு காமடின இந்த பிரச்சினைக்கு கலைஞர் கண்டனம் தெரிவித்திருப்பதுதான்..

    பதிலளிநீக்கு
  6. நடுநிலை விமர்சனம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. Ivanga ellam thirunthave maattanga Thalaivare! Arumaiyana Pathivu.

    பதிலளிநீக்கு
  8. ஸலாம் சகோ.கஸாலி,
    நான் அந்த நக்கீரன் என்ற பத்திரிக்கையை எல்லாம் படித்ததில்லை.
    இப்போதும் அதன் மீது கிளிக்கவும் இல்லை. ஒன்று மட்டும் புரிகிறது. நடுநிலையாக உண்மையை எழுதினால் மக்கள் யாரும் கண்டு கொள்வதில்லையோ..?

    எனக்கு நக்கீரனின் இன்னொரு பிர(பிராப்ள)பல அட்டைப்படம், நியாபகம் வருகிறது. புலி பிரபாகரன் சோபாவில் சாய்ந்த வண்ணம், கையில் அன்றைய தினசரியுடன், எல்ஸிடி டிவி யில் அவரின் சடலம்... செய்தி ஒளிபரப்பு..!

    இதற்கு நக்கீரன் இன்றுவரை என்ன பதில் சொன்னது என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  9. சந்தில் சிந்து பாடிய கருணாநிதியையும் சந்தடி சாக்கில் மொத்தி தங்கள் நடுநிலையை பறை சாற்றியுள்ளீர்கள் சகோ.கஸாலி. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நக்கீரன், ஜெயலலிதா ஆதரவாளர்கள், கருணா-நிதி மூன்று சாராரின் தவறுகளையும் சுட்டினீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்டபோது அதை கடுமையாக கண்டனம் செய்த அதிமுக இப்பொழுது நக்கிரனை தாக்குவது மட்டும் நியாயமா?

    பதிலளிநீக்கு
  12. நக்கீரன் செய்தது தவறு . எதை வேண்டுமானாலும் எழுத கூடாது. நக்கீரன் னுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் .

    பதிலளிநீக்கு
  13. nothing said...

    நக்கீரன் செய்தது தவறு . எதை வேண்டுமானாலும் எழுத கூடாது. நக்கீரன் னுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் ./////
    கட்டுரையை மீண்டும் ஒருமுறை முழுவதாக படிக்கவும். நான் எந்த இடத்தில் நக்கீரனுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறேன் என்று அதன்பின் சுட்டிக்காட்டுங்கள் நண்பா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.