என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 06, 2012

18 அம்மாவின் அதிரடி.....



வேகமாக போய்க்கொண்டிருந்த பொன்னம்மாவை வழி மறித்துக்கேட்டாள் கற்பகம் பாட்டி

“எங்கே பொன்னம்மா இம்புட்டு வேகமா போறே?”

“வயசானவங்களுக்கு அரசாங்கம் இலவசமா பணம் கொடுக்குதில்ல....அதுக்கு இன்னைக்கு புதுசா பதியறாங்களாம். அதான் போறேன்.”

“எங்கே பதியிறாங்க?”

“ நம்ம ஊரு பஞ்சாயத்து கொட்டாயிலதான்”

“இருடி.... நானும் வாறேன்”

“ நீ அங்கே வந்து என்ன செய்யப்போறே?...இது புள்ள குட்டி இல்லாதவங்களுக்குத்தான்  அரசாங்கம்  பணம் கொடுக்கும்....உனக்குத்தான் ஒண்ணுக்கு மூனு புள்ளைங்க இருக்காங்களே?”

“போடி...பொச கெட்டவளே....புள்ளைங்க இருந்து என்னடி புண்ணியம்?... யாரும் தான் எனக்கு கஞ்சி தரமாட்டேன்னுட்டாங்களே....அவங்க தந்தா நான் ஏண்டி இப்படி திரியப்போறேன்”

”என்னமோக்கா.... எனக்கு எதுவும் தெரியாது. எல்லாரும் சொன்னத நான் சொன்னேன். அதுக்குமேல கேக்குறதா இருந்தா பதியிற ஆபீசருட்ட கேட்டுக்க”

பொன்னம்மாவுடன் கற்பகம் பாட்டியும் நடக்க ஆரம்பித்தாள்.

பஞ்சாயத்து ஆபிசில் கனிசமான வயசானவர்கள் குழுமியிருந்தனர்.
வழக்கமான சம்பிரதாய கேள்விகளை எல்லோரிடமும் கேட்டார் அங்கே நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி...

இது கற்பகம் பாட்டியின் முறை.

“அம்மா...உங்க பேரு?”

“கற்பகம்”

”வயசு?”

“ஒரு அறுபது...எழுபது இருக்கும்”

“இப்படி சொன்னா எப்படிம்மா....சரியான வயசு சொல்லுங்க”

“ அய்யா.... நான் படிக்காத தற்குறிங்க...அந்த காலத்துல யாருங்க இதையெல்லாம் பதிஞ்சு வச்சிக்கிட்டது? எல்லாம் ஒரு ஊகத்துல தான் சொல்றோம்”

“சரிம்மா.... உங்களுக்கு வீடு, நிலம் ஏதாவது இருக்கா”

“எல்லாம் இருந்துச்சு.....இப்ப இல்லை”

”இல்லையா? என்னாச்சும்மா”

“அந்த கதைய எதுக்குய்யா கேக்குறீங்க.... எனக்கு கலியாணம் ஆகி ஒரு பத்து வருஷத்துல.... என் புருஷன் செத்துப்போயிட்டாருங்க....அப்ப எனக்கு குஞ்சும் குளுவானுமா மூனு புள்ளைங்க....அதை படிக்கவச்சு, கலியாணம் செஞ்சுக்கொடுக்க எனக்கு இருந்த நிலம் நீச்செல்லாம் வித்துப்புட்டேன். கடைசியா கொஞ்சம் நிலம் இருந்துச்சு...அதையும் என் புள்ளங்க பறிச்சுக்கு என்னை விரட்டி விட்டுட்டாங்க”

“அம்மா...மன்னிச்சுக்கங்க....குழந்தை இல்லாதவங்களுக்காக அரசாங்கம் இலவசமா மாசா மாசம் பணம் கொடுக்கும். உங்களுக்கு மூனு புள்ளைங்க இருக்கதால இந்த பணம் உங்களுக்கு கிடைக்காது”

“அய்யா...எனக்கு மூனு புள்ளைங்க இருந்தும் நான் அனாதையாத்தான் இருக்கேன்.அவங்க இருக்கதும் ஒன்னுதான். இல்லாததும் ஒன்னுதான். அவங்க செத்துப்போயிட்டதாவே கணக்குல வச்சிக்கங்க.எனக்கும் பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கய்யா...”

அதிரடியாய் சொன்னாள் கற்பகம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. அரிதாரம் பூசாத வாழ்வியல் நடப்பைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  2. Arumai Sago. Sinthikka vendiya visayam. Government kavanam eduththaal nanraga irukkum.

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்..வேறு வழி..வயதான காலத்தில் தவிக்க விட்டுச் சென்றவர்கள் உயிரோடு இருந்தாலென்ன செத்தாலென்ன அந்த அம்மா சொன்னதுபோல செத்ததாகவே கணக்கில் வைத்துக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
  4. கசப்பான உண்மையே நிகழ்காலம் அப்படி

    பதிலளிநீக்கு
  5. எழுத்து நடை இயல்பாக இருக்கு
    விழிப்புணர்வு பதிவு சகோ

    பதிலளிநீக்கு
  6. தயவு செய்து நீங்கள் உயிருடன் இருக்கையில் பிள்ளைகள் பெயரில் உங்கள் சொத்துக்களை மாற்றிவிடாதீர்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரியே. மாத்துநீங்க மவனே அப்புறம் கஞ்சிக்க அலைய வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு புள்ளி கெடச்சா அதவச்சு கோலம் போட்டிட்றியே கஜாலி நானா.

    பதிலளிநீக்கு
  8. இத வச்சு நான் ஒரு பதிவு தேத்திர்றேன் பாரு...

    பதிலளிநீக்கு
  9. சிராஜ் சொன்னது....
    தயவு செய்து நீங்கள் உயிருடன் இருக்கையில் பிள்ளைகள் பெயரில் உங்கள் சொத்துக்களை மாற்றிவிடாதீர்கள். அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரியே. மாத்துநீங்க மவனே அப்புறம் கஞ்சிக்க அலைய வேண்டியதுதான்.////

    [co="yellow"]நீ சொன்ன இந்தக்கருத்தையும் ஏற்கனவே கவிதையாக்கி இருக்கிறேன். பார்க்க.....[/co]
    http://www.rahimgazzali.com/2010/09/blog-post_8532.html

    பதிலளிநீக்கு
  10. அண்ணே அந்த பாட்டி யாருன்னே ?தெரிஞ்ச முகம் மாதிரி இருக்கு..

    பதிலளிநீக்கு
  11. உண்மையிலேயே அதிரடி அம்மாதான்...

    பதிலளிநீக்கு
  12. இதெல்லாம் ரொம்ப பழைய கதை. புதுசா எதுவும் இல்லையா ப்ரதர்?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.