என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 17, 2012

8 எம்.ஜி.ஆரும் ’பச்சை’யும்.....



முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4, 5, 6


எமர்ஜென்சியை அறிவித்த இந்திராகாந்தி மாநில கட்சிகளை தடை செய்யப்போவதாக ஒரு செய்தி அல்லது வதந்தி பரவியது. உடனே சுதாரித்த எம்.ஜி.ஆர்., அண்ணா.தி.மு.க.,என்ற கட்சியை அனைத்திந்திய அண்ணா.தி.மு.க., என்று மாற்றம் செய்து தேசிய கட்சியாக அறிவித்தார்.

அடுத்ததாக தன் கட்சியினர், வேறு கட்சிக்கு செல்லாமல் தடுக்க ஒரு உத்தியை கையாண்டார். தன் கட்சியினர் அனைவரும் அண்ணா.தி.மு.க.,கொடியை தன் கையில் பச்சை குத்திக்கொள்ளுமாறு கட்டளையிட்டார். தொண்டர்கள் ஆர்வத்துடன் பச்சை குத்திக்கொள்ள முன்வந்தாலும், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அது பிடிக்கவில்லை. குறிப்பாக,
ஆர்.எம்.வீரப்பன், ஹண்டே, கோவை செழியன் போன்றோர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. தங்களை ஆலோசிக்காமல் கட்சியின் பெயரையும் மாற்றிவிட்டார். இப்போது பச்சை குத்திக்கொள்ளவும் சொல்கிறார் எம்.ஜி.ஆர்., என்று புகைச்சல் கிளம்பியது. இதை எம்.ஜி.ஆரிடம் கேட்டே விட்டார் ஆர்.எம்.வீ.,

உடனே, கடுப்பான எம்.ஜி.ஆர்., யாரைக்கேட்டு புது கட்சி துவங்கினேன்? யாரைக்கேட்டு அண்ணா.தி.மு.க., என்று பெயரிட்டேன்? இப்போது கட்சியின் பெயரை மாற்றினேன், பச்சை குத்திக்கொள்ள சொல்கிறேன்.இதற்கு மட்டும் யாரை கேட்கவேண்டும்? இந்த கட்சியை எப்படி நடத்துகிறேன், கட்சி நடத்த எப்படி சிலவு செய்கிறேன்? என்று யாராவது என்னிடம் கேட்டிருக்கிறார்களா? இப்போது மட்டும் கேட்கிறார்கள். இதையெல்லாம் யாரும் என்னிடம் கேட்கவில்லை. இப்போது,நானும் யாரிடமும் கேட்க தேவையில்லை என்று சூடாக பதிலடி கொடுத்தார்.

ஆனாலும், புகைச்சல் அடங்கவில்லை. கோவை செழியன், ஜி.விஸ்வனாதன், விருதுநகர் சீனிவாசன் போன்றோர் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.
பச்சை குத்திக்கொள்வதென்பது பகுத்தறிவிற்கு எதிரானது. பச்சை குத்துவதால் சில  நோய்கள் வரக்கூடும் என்று மருத்துவம் சொல்கிறது. இஸ்லாம், பவுத்தம், கிறிஸ்துவம் போன்ற மதங்களில் பச்சை குத்தக்கூடாது. பச்சை குத்துவதென்பது சுதந்திரமாக பணியாற்றும் நம் கட்சி தொண்டர்களை கொத்தடிமையாக்கும் செயல். என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டனர்.

உடனே, கோபமான எம்.ஜி.ஆர்., கடிதம் எழுதிய மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். விருப்பம் உள்ளவர்கள் பச்சை குத்திக்கொள்ளலாம். கட்டாயமில்லை என்றும் அறிவித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனிடையே படிப்படியாக எமெர்ஜென்சியை தளர்த்தினார் இந்திரா. 1977 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தேர்தலை நடத்த திட்டமிட்டார்.
காங்கிரசோடு அண்ணா.தி.மு.க., கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்த்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஏமாற்றம் அடைந்தார்.

இன்னும் வ(ள)ரும்..........



Post Comment

இதையும் படிக்கலாமே:


8 கருத்துகள்:

  1. நண்பா, இன்னும் பெருசா தொடரை எழுதுங்க.. இலை போட்டு சோறு போடாத மாதிரி இருக்கு.
    உங்களோட எல்லா தொடரையும் விரும்பி படிச்சு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா நண்பா......அடுத்த தடவை விருந்தே வச்சிடலாம்

      நீக்கு
  2. விரிவான, சரியான தகவல்களுடன் செறிவாகச் செல்கிறது இத்தொடர். நீண்ட இடைவெளி விடாமல் அடிக்கடி தொடருங்கள் பிரதர்.

    பதிலளிநீக்கு
  3. தகவல் களஞ்சியம்.கணேஷ் சொன்னதை வழிமொழிகிறேன்.-இடைவெளி பற்றி.

    பதிலளிநீக்கு
  4. After searching for the history of ADMK in English and not finding it anywhere, I stumbled upon your site. Very very informative and exhaustive, thank you.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.