என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 18, 2012

20 நரேந்திரமோடி மீது சோ ராமசாமியின் கோபமும், ஜெயாவின் அவசரமும்......


ஜெயலலிதா- சசிகலா பிரிவிற்கு பின் போயஸ் கார்டனில் எல்லாம் சோ மயமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.சசிகலாவின் இடத்தை பிடித்துக்கொண்டு  கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் ஆலோசகராக சோ செயல்படுவதாகவே தெரிகிறது.

சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில், பா.ஜ.க.,ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில்  ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் சோ, அதுவும் அடுத்த பிரதமர் கனவில் மிதக்கும் மோடியை அருகில் வைத்துக்கொண்டே....இதைகேட்ட மோடி ரசித்திருப்பாரா? நெளிந்திருப்பாரா என்று அவருக்கே வெளிச்சம்.
ஒரு உறையில் இரு கத்தி எப்படி இருக்கமுடியும்?. நரேந்திரமோடி மீது சோவிற்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. இல்லாவிட்டால் மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படி ஒரு குண்டை போடுவாரா சோ....

ஜெயாவை பிரதமராக பார்க்க சோ ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால், அதற்கு தமிழ்நாட்டிலிருக்கும் 39 எம்.பி.க்கள் மட்டும் போதுமா?. மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டாமா?. முதலில் பி.ஜே.பி., ஒத்துழைக்க வேண்டுமே?. தமிழ் நாட்டிலும் அண்ணா.தி.மு.க.,விற்கு 39 எம்.பி.க்கள் மொத்தமாக கிடைக்குமா என்பதே சந்தேகமே. 

பி.ஜே.பி.,யில் மோடியை தவிர யாருக்கும் ஜெயா மேல் நல்ல அபிப்ராயம் இருக்காதென்றே நினைக்கிறேன்.ஜெயாவிடம் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றிருப்பார்கள் வாஜ்பாயிம், அத்வானியும்..
யாருக்கும் செலெக்டிவ் அம்னீசியா இருக்காது.

ஒருவேளை இந்தியாவின் பிரதமராக ஜெயா வருவாரென்று என்று வைத்துக்கொள்வோம். என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது?
கடந்த எட்டு மாதங்களாக மின்வெட்டு, பால், பஸ் கட்டணம் விலையேற்றம் என்று தமிழகத்தை கதறவைத்தது போல இந்தியாவையும் கதறவைப்பார் ஜெயா. தன் எம்.பி.க்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மத்திய அமைச்சராக்கி அழகுபார்ப்பார். இதை தவிர என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது?
ஆனால்,அப்படி ஜெயலலிதா பிரதமராக இருக்கும் பட்சத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்..... இந்தியாவின் ராஜகுருவாக சோ இருப்பார்.அதற்கு தானே ஆசைப்படுகிறார் சோ /////

----------------

 நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.,வேட்பாளரை அறிவித்திருக்கிறார் ஜெயா.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் முத்துசெல்வி என்பவரை வேட்பாளராக்கி இருக்கிறார்.

யாரோடவாவது கூட்டணி வைத்திருந்தாலே அவர்களை மதிக்காமல் முந்திக்கொண்டு வேட்பாளரை அறிவிப்பது ஜெ ஸ்டைல். ஆனால், யாரிடமும் இப்போது கூட்டணி இல்லை என்பதால் சொல்லவும் வேண்டுமா?
தேர்தல் ஆனையம் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருக்கும்போதே இவ்வளவு அவசரம் காட்டியிருக்கிறார் ஜெ....

அதுசரி.....தேர்தல் ஆனையம் தேதியை அறிவித்து, வேட்புமனு தாக்கல் முடியும் முன் எப்படியும் ஒரு பத்துபேரையாவது வேட்பாளராக அறிவித்து வழக்கம்போல் மாற்றிவிடுவார் ஜெ.
அதற்கு இப்போதிலிருந்தே ஆரம்பித்தால் தானே சரியாக இருக்கும்?





Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    பதிலளிநீக்கு
  2. ////ஆனால்,அப்படி ஜெயலலிதா பிரதமராக இருக்கும் பட்சத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்..... இந்தியாவின் ராஜகுருவாக சோ இருப்பார்./////

    நச் நச்னு இருக்கு

    பதிலளிநீக்கு
  3. \\\\சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில், பா.ஜ.க.,ஆர்சியமைக்க முடியாத பட்சத்தில் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் சோ, அதுவும் அடுத்த பிரதமர் கனவில் மிதக்கும் மோடியை அருகில் வைத்துக்கொண்டே....இதைகேட்ட மோடி ரசித்திருப்பாரா? நெளிந்திருப்பாரா என்று அவருக்கே வெளிச்சம்.////

    நரமாமிச மோடி மற்றும் அத்வானி இருவரும் பாப்பான் அல்ல. அதனால் சோவுக்கு இருவரும் பிரதமராவது நிச்சயமாக விரும்ப மாட்டார் ஆர் எஸ் எஸ் ஸும் விரும்பாது . அதனால் ஜெயாவை பிரதமராக்க கனவு காண்கிறார். பகல் கனவு காண்பதை நாம் ஏன் தடுக்கவேண்டும்.

    செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயாவை பிரதமராக பார்க்க சோ ஆசைப்படுவதில் தப்பில்லை.பகல் கனவு காண்பதை நாம் ஏன் தடுக்கவேண்டும்.
      ஒருவேளை இந்தியாவின் பிரதமராக ஜெயா வருவாரென்று என்று வைத்துக்கொள்வோம். என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது?

      நீக்கு
    2. ///நரமாமிச மோடி மற்றும் அத்வானி இருவரும் பாப்பான் அல்ல. அதனால் சோவுக்கு இருவரும் பிரதமராவது நிச்சயமாக விரும்ப மாட்டார் ஆர் எஸ் எஸ் ஸும் விரும்பாது . அதனால் ஜெயாவை பிரதமராக்க கனவு காண்கிறார்.///---ஒளிந்திருந்த பூனைக்குட்டியை ரிலீஸ் பண்ணிட்டீங்க....

      நீக்கு
  4. இப்ப என்ன பிரச்சனை?

    ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆனால் என்ன செய்வீர்கள்?

    மோடிக்கு ஆதரவாக முகமதுவின் மதத்திலிருந்து வெளியே வருவீர்களா?

    சும்மா கேட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயலலிதா பிரதமராகக்கூடாது என்று நான் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நானும் சும்மாதான் கேட்டேன்.

      நீக்கு
  5. சிறந்த அலசல். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான நிகழ்கால அரசியல் அலசல் பதிவு நண்பா

    பதிலளிநீக்கு
  7. ///ஜெயாவை பிரதமராக பார்க்க சோ ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால், அதற்கு தமிழ்நாட்டிலிருக்கும் 39 எம்.பி.க்கள் மட்டும் போதுமா?. மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டாமா?. முதலில் பி.ஜே.பி., ஒத்துழைக்க வேண்டுமே?. தமிழ் நாட்டிலும் அண்ணா.தி.மு.க.,விற்கு 39 எம்.பி.க்கள் மொத்தமாக கிடைக்குமா என்பதே சந்தேகமே.///-----அந்தோ பரிதாபம் சோ.

    பதிலளிநீக்கு
  8. JAYA PM aanaal MAATRAM vendi vote potta sirupaanmai makkalukku irukku..,
    appuram thaan theriyum,

    Aahaa! arasanai nambi purusanai vittome-nnu..,

    Anubavikkanum! Vaazhga!

    பதிலளிநீக்கு
  9. கோமாளிகளின் செய்கைகள் சிரிக்க மட்டுமே பயன்படும். சோவும் ஒரு கோமாளி என்பதால் அவரின் செய்கையை கண்டு சிறிதுநேரம் சிரித்துக் கொள்ளலாம். பதிவு சூப்பர்..

    பதிலளிநீக்கு
  10. Modiye paravayillai- intha paapppathiyum, Thuklak CHO Paappaanum RSS kolgaigalai Dravida iyakkathin vayilaagave puguthuvaargal!

    Paavam Periyaarum, Anna-vum!

    ADMK-banaril photo-kkalaai sirithu kondirukkiraargal, CHO vin pidiyil ADMK enbathu theriyaamal!

    Ha Ha Ha!

    Ithukkagavaa aasaip pattaai, ANNA DURAI?????????

    பதிலளிநீக்கு
  11. கடந்த எட்டு மாதங்களாக மின்வெட்டு, பால், பஸ் கட்டணம் விலையேற்றம் என்று தமிழகத்தை கதறவைத்தது போல இந்தியாவையும் கதறவைப்பார் ஜெயா. தன் எம்.பி.க்கள் அனைவரையும் சுழற்சி முறையில் மத்திய அமைச்சராக்கி அழகுபார்ப்பார். இதை தவிர என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது?

    200% absolutely Correct Words and to be written by Gold.

    After 10 years 8 Months you understand @ JAYA very clear and whynot the others?
    Hope they are "ROSE POWDER" makeup followers.

    பதிலளிநீக்கு
  12. தெளிவான அரசியல் அலசல் பதிவு!
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. என்னது, அம்மா பிரதமர் ஆகணும்னு சோ ஆசைபடுகிறாரா? ஐயோ பாவம் இந்தியா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.