என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், பிப்ரவரி 06, 2012

18 புது மனைவியும்-போலி ஜோசியக்காரனும்....



காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது.

”சாமி கைரேகை பார்க்கறீங்க?”

கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம்.

“அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை”

“சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி”

“ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்”

“என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி”

“ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி ஒரு வேலை செஞ்சு பிழைக்கலாம்ல?”

“ சாமி...இதுவும் தொழில்தான், யாரையும் ஏமாத்தல.... தட்சணையெல்லாம் பெருசா இல்லை சாமி...ஒரு பதினொரு ரூபா தான். உங்களுக்கு ஒரு டீக்குடிக்கற காசு”

இவன் நம்மை விடவே மாட்டான் போல என்று மனதுக்குள் நினைத்த செல்வம், யாராவது நம்மை பார்த்தால் அசிங்கமாக போய்விடுமே என்று சுற்றிலும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாருமில்லை என்றதும் தயக்கத்துடன் கையை நீட்டினான்.

“சாமி...உங்களுக்கு இப்பத்தானே கலியாணம் ஆகிருக்கனும்?”

“அட..ஆமாப்பா..எப்படி கண்டுபிடிச்சே”

“உங்க ரேகை சொல்லுது சாமி....இந்த ரேகைப்படி ஜாம் ஜாம்ன்னு நடந்த உங்க தொழிலு இப்ப நட்டத்துல போகுமே?”

“ நிஜம்தான்பா...சரி நான் என்ன தொழில் செய்றேன்னு கண்டுபிடிச்சு சொல்லு பார்ப்போம்”என்று ஜோசியக்காரனை மடக்கினான்.

”சாமி... நீங்க பேப்பர் சம்பந்தப்பட்ட தொழில்ல இருக்கீங்க...சரியா? அதுகூட இங்கே பக்கத்தில் இல்லை. ரொம்ப தூரத்துல இருக்க ஒரு ஊர்ல”

“யோவ்....எப்படியா...கரக்டா சொல்றே?.... நான் பேப்பர் சம்பந்தமான தொழில்தான் செய்றேன். பிரிண்டிங்க் ப்ரஸ் வச்சிருக்கேன். பெங்களூர்ல...அப்படியே...என் தொழிலு டல்லடிக்க காரணம் என்னன்னு ரேகையை பார்த்து சொல்லிடுவே?”

“சொல்றேன் சாமி.... நல்லா நடந்துக்கு இருந்த தொழிலு இப்ப நட்டத்துல நடக்கறதுக்கு காரணம்....சாமி நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?

“சே...சே...எல்லா விஷயத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி சொல்றே.... நீ தாராளமா சொல்லு... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”

“அதுவந்து சாமி..இது எல்லாத்துக்கும் காரணம் உங்க புது மனைவிதான். அவங்க உங்க வீட்டுக்கு வந்த நேரமே சரியில்லை.”

“ஏப்பா... நீ என்ன என் குடும்பத்துல குழப்பம் உண்டாக்க பார்க்கறே?”

”சாமி நான் ஏன் உங்க குடும்பத்துல குழப்பம் உண்டாக்கனும். நான் சொல்றது அத்தனையும் உண்மை.”

“இப்ப அதுக்கு நான் என்ன செய்யனும்?... மறுபடியும் என் தொழில் நல்லா நடக்கனும்னா ஏதாவது பரிகாரம் இருக்கா?”

“பரிகார்ம்ன்னு பார்த்தா..”

அப்போது செல்வத்தின் நண்பர் வந்தார்.

”என்ன செல்வம் கைரேகை பார்க்கற மாதிரி இருக்கு?”

”சே..சே...அதெல்லாம் இல்லை. சும்மா” என்றபடி
ஜோசியக்காரனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

“இந்தா இதுல பதினொரு ரூபாய் இருக்கு...உன் கூலி. சரியா மத்தியானம் ரெண்டு மணிக்கு இங்கே வந்திடு, நானும் வந்திடுறேன்... அந்த பரிகார விஷயத்தை பற்றி அப்புறன் பேசிக்கலாம்..இப்ப இடத்தை காலி பன்னு”

ஜோசியக்காரன் நகர்ந்தான்.

====================

”என்ன நான் சொன்னமாதிரி அவன்கிட்ட சொல்லிட்டே தானே...எப்படி... அவன் உன் நடிப்புல ஏமாந்துட்டானா?”

“ஏமாறாம இருப்பானா? எல்லத்துக்கும் காரணம் உன் பொண்டாட்டி தான்னு சொன்னதும் ஆடிப்போயிட்டான். இனிமே அவன் பொண்டாட்டி மேல கடுமையான கோபத்துல இருப்பான்”

“இருக்கட்டும்...எனக்கு அதுதானே வேனும்...என்னை காதலிச்சிட்டு, அந்த செல்வத்தை கட்டிக்கு போனாள்ல என் முன்னாள் காதலி... அவளுக்கு இதுதான் சரியான தண்டனை. இனி அவ புருஷன் அவ பக்கமே திரும்ப மாட்டான். அவ நிம்மதியே போச்சு ஹா....ஹா...”

==================

இந்த விஷயம் தெரியாமல் மதியம் இரண்டு மணியிலிருந்து அந்த (போலி) ஜோசியக்காரனை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான் செல்வம். ஆனால், ஜோசியக்கரன் தான் வரவேயில்லை.

++++++++++++++++++++++++


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. சும்மா நச்சுன்னு இருக்க கதை....

    பதிலளிநீக்கு
  2. கதையின் முடிவை யூகிக்க முடியாமலே கதையை நகர்த்தியிருக்கீங்க. வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  3. அட நாய்களா!
    இப்படி வேற பண்ணுறாங்களா?
    நம்பிக்கை இல்லாதவனையே குழப்பிட்டாங்களே!
    பாவம் அந்த புதுமனைவி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.