என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, பிப்ரவரி 11, 2012

16 இதுவரை எம்.ஜி.ஆர்.,வழியில் நடக்கவில்லை- ஜெயா ஒப்புதல் (பாலிடிக்ஸ் பொடிமாஸ்- 11-02-2012)



எம்.ஜி.ஆர்.,தன் பிறந்த நாளை கொண்டாடமாட்டார். அவரை போலவே நானும் பிறந்த நாள் கொண்டாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா....
இது ஏற்கப்படவேண்டிய ஒரு கருத்துதான் என்றாலும் இத்தனை வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடினாரே ஜெ....அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.,வழியில் தான் நடக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறாரோ?....

ஆண்டுக்கு ஒரு முறை வரும் பிறந்த நாளில் மட்டும் எம்.ஜி.ஆர்.,வழியில் நடப்பது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர்.,வழியில் நடந்தால் தான் எம்.ஜி.ஆர்.,இன்னும் மறக்கப்படாமல் மக்கள் மனதில் இருப்பதுபோல...ஜெயாவும் மக்கள் மனதில் நீடித்திருப்பர்.

==========================

அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம் என்பவரும், கார் ட்ரைவர் ராஜசேகர் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அமைச்சர்கள் வீட்டு வாட்ச்மேனைக்கூட கைது செய்வது நடக்காத காரியமாக இருக்கும் போது அமைச்சர் ஒருவரின் உதவியாளரே கைது என்பது ஆச்சர்யமான செய்தியாகத்தான் இருக்கிறது.
ஒருவேளை இவர்களும் ராவணன் ஆட்களாக இருப்பார்களோ?

==========================

ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்கள் மாத்திரமல்ல; ஜனநாயகத்தை உடைத்தெறியும் காரியங்கள், இந்த ஆட்சியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு ஒரு உதாரணம், விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும்,அட்டூழியங்களும் என்று கூறியுள்ளார் கலைஞர்.
தொடர்ந்து விஜயகாந்திற்கு ஆதரவாகவே தி.மு.க.,தலைவர் பேசி வருவதை பார்க்கும்போது தி.மு.க., தே.மு.தி.க.,வை நெருங்கிவருவதாகவே எனக்கு தோன்றுகிறது.
எப்படியும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் பூனைக்குட்டி வெளியே வந்துவிடும் என்றே நினைக்கிறேன்.

==========================

 தமிழக முன்னாள் அமைச்சர் தமிழரசி வீட்டில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை செய்யும்போது மிக்ஸி, கிரைண்டர் வாங்க எப்படி பணம் வந்தது? அதற்கான பில் எங்கே? என்று கேட்டார்களாம். இன்று மிக்சி, கிரைண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழகம் தன்னிறைவு(??) பெற்ற மாநிலமாக விளங்குகிறது. எல்லோர் வீட்டிலும் இந்த பொருட்கள் இருக்கிறபோது. முன்னாள் அமைச்சர் வீட்டில் இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம்.
இப்படி கேள்வி கேட்பதை விடுத்து கார், பங்களா, நகை வாங்கியது எப்படி? எப்போது? அதற்கான பில் எங்கே என்று கேட்டிருந்தால் நியாயம்.
விட்டால் டீத்தூள் எப்படி வாங்கினீர்கள்? காபித்தூள் வாங்கிய பில் எங்கே என்று கேட்பார்கள் போல...அய்யோ...அய்யோ....

======================


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. ஐய்யோ..ஐய்யோ.. நாடகமே உலகம் நாளை நடப்பதை நாம் அறிவோம்

    பதிலளிநீக்கு
  2. அய்யோ..அய்யோ.. நாடகமே உலகம்...? நேற்று நடந்ததையும் நாம் அறிவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... நாடகமே உலகம் அதில் நாமெல்லாம் ஜோக்கர்கள்.

      நீக்கு
  3. என்னய்யா மாப்ள கலர் கலரா ரீல் சுத்துறாங்க ஹிஹி!~

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமாக காதில் பூ சுற்றுவார்கள். ஏற்கனவே நம் காதில் ஒரு பூக்கூடையே தொங்குவதால் ஒரு மாற்றத்திற்காக இப்படி ரீல் விட ஆரம்பித்திருக்கிறார்கள்.

      நீக்கு
  4. இப்படி எல்லாம் நடக்காட்டிதான்ஆச்சரியம்...

    பதிலளிநீக்கு
  5. கஜாலி நானா,

    /* தமிழக முன்னாள் அமைச்சர் தமிழரசி வீட்டில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை செய்யும்போது மிக்ஸி, கிரைண்டர் வாங்க எப்படி பணம் வந்தது? அதற்கான பில் எங்கே? என்று கேட்டார்களாம். */

    விடுங்க.... போன போலிசு பிச்சைகாரனா இருந்திருப்பார்.... அவர் லெவல் லே கேள்வி கேட்டு இருப்பாரு. யார் கண்டா, லஞ்சமே வாங்காத நேர்மையான போலிசாகூட இருந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. என்ன... இன்னும் கொஞ்ச நாள் கழித்து சோதனை நடந்திருந்தால், அம்மா இலவசமா கொடுத்தது என்று சொல்லி தப்பி இருக்கலாம்...... ஹே..ஹே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம்ன்னு சொல்லாதே அரச துரோகம் ஆகிடும்.....இனி, விலையில்லா என்றுதான் சொல்லனும்

      நீக்கு
  7. பேரறிஞர் ஆட்சி...
    புரட்சித்தலைவர் ஆட்சி தருவோம்...
    கர்மவீரர் ஆட்சி அமைப்போம்...
    இப்படி சொல்லி சொல்லியே தமிழனையும் தமிழ்நாட்டையும் மொட்டை போட்டனர்.

    வளர்ப்பு மகனின் மீதே கஞ்சா கேஸ் வரும்போது இதெல்லாம், சரி விடுங்க! துபாயில் மன்னராட்சியே மேல்.

    தங்கத்தில் மிக்ஸி கிரைண்டர் செஞ்சிருப்பாங்களோ என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கத்தில் மிக்ஸி கிரைண்டர் செஞ்சிருப்பாங்களோ என்னவோ?///
      இது கரக்டு.....

      நீக்கு
  8. உங்களுக்கு versatile blogger விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.