என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

25 விஜயகாந்தை தி.மு.க.,வின் பக்கம் அனுப்பிய ஜெயலலிதா.......மாறும் காட்சிகள்.....


நேற்று முன்தினம் சத்தசபையில் சட்டசபையில் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் நடந்த காரசாரமான விவாதங்களையும், அதைத்தொடர்ந்து விஜயகாந்த் சட்டசபையிலிருந்து பத்து நாள் இடை நீக்கம் செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்காக கண்டனங்களை சில கட்சிகள் தெரிவித்திருந்தாலும், தி.மு.க.,இந்த பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சபையை விட்டு வெளிநடப்பு செய்ததும் அரசியலில் கூர்ந்து நோக்கப்படுகிறது.






இதுவரை விஜயகாந்தா அவர்தான் குடிகாரனாச்சே என்று பிரச்சாரம் செய்துவந்த கலைஞர் டி.வி., சன் டி.வி.,கூட இப்போது விஜயகாந்தின் பேட்டியை சுற்றி சுற்றி ஒளிபரப்பி முந்தைய தவறுகளுக்கு பிராயசித்தம் தேடிக்கொண்டுவிட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்....விஜயகாந்த் ஜெயலலிதாவை திட்டிய பேச்சை மட்டும் போட்டு, அழகிரியைப்பற்றி விஜயகாந்த் கூறிய ஐந்து  ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார்? என்ற கேள்வியை மட்டும் கச்சிதமாக அல்லது எச்சரிக்கையாக எடிட்செய்து வீசி எறிந்துவிட்டார்கள். இனி விஜயகாந்தின் கூத்துக்களை செய்திகளை கேப்டன் டி.வி.,தவிர இந்த டி.வி.க்களிலும் கண்டு களிக்கலாம்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதிகமாக கலைஞரையே திட்டினார், ஏசினார், சாடினார்(எல்லாமே ஒரே அர்த்தம்தானோ?). அதைப்போல்தான் கலைஞரும்.....விஜயகாந்தை திட்டியிருக்கிறார். ஆனால் இப்போது , எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளிக்காமல் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் ஜெயலலிதா
என்று விஜயகாந்திற்கு ஆதரவாக சந்தில் சிந்து பாடியிருக்கிறார்
கலைஞர்.( கவனிக்க: இங்கே எதிர்கட்சி என்பது தே.மு.தி.க.,தான்...தி.மு.க.அல்ல),

விஜயகாந்தும், மைனாரிட்டி தி.மு.க.,அரசு என்று ஜெயலலிதா கூறியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், விஜயகாந்தை தி.மு.க., நெருங்குவதாகவே தெரிகிறது.

விஜயகாந்தின் முந்தைய பேச்சுக்களை மறந்து கலைஞர் அவரோடு கூட்டணிக்கு முன் வரலாம். இவர்களுக்காத்தானே அரசியல் அகராதியில் இது காலத்தின் கட்டாயம் என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.
அரசியலில்தான் யாருக்குமே வெட்கமில்லையில்லையே?......



Post Comment

இதையும் படிக்கலாமே:


25 கருத்துகள்:

  1. பெயரில்லா3 பிப்., 2012, 12:31:00 PM

    //விஜயகாந்தின் முந்தைய பேச்சுக்களை மறந்து கலைஞர் அவரோடு கூட்டணிக்கு முன் வரலாம்//

    கஸாலி...அடுத்த சோ நீங்கதானா? அச்சச்சோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேணாம்யா.... நான் நானாகவே இருந்துட்டு போறேன்

      நீக்கு
  2. இது நடந்து காங்கிரசும் அந்த அணியில் இடம் பெற்றால் பாராளுமன்ற தேர்தலில் முப்பது இடங்கள் அந்த அணிக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத் தேர்தல் முடிவுகள் ஓட்டு வங்கி மற்றும் கூட்டணி பலத்தை அடிப்படையாகக் கொண்டவைதானே. இப்படி நடந்தால்தான் முதல்வரின் ஆணவம் அடங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பலமான கூட்டணிக்கு வழி சொல்றீங்க பார்க்கலாம் அப்போதைய சூழ்நிலைகளை....

      நீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி

    //ஐந்து ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார்? என்ற கேள்வியை மட்டும் கச்சிதமாக அல்லது எச்சரிக்கையாக எடிட்செய்து வீசி எறிந்துவிட்டார்கள். இனி விஜயகாந்தின் கூத்துக்களை செய்திகளை கேப்டன் டி.வி.,தவிர இந்த டி.வி.க்களிலும் கண்டு களிக்கலாம்.///

    அரசியலில் சகலராசதந்திரங்களையும் கற்றுத் தெர்ந்தவர்களல்லவா அவர்கள்

    பதிலளிநீக்கு
  4. விஜயகாந்த் பொறுமையாக சொல்ல வேண்டியதை சரியாகச் சொல்லி இருக்கிறார். அவரின் உணர்வுகள் சரியானவையாகத் தான் தோன்றுகின்றன. பகிர்வினிர்க்கு நன்றி கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. காலத்தின் கட்டாயம்....இந்த வார்த்தைக்குதான் எவ்வளவு மதிப்பு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழக அரசியலை பொறுத்தவரை இந்த வார்த்தைக்கு மரியாதையே இல்லை

      நீக்கு
  6. காலம் திணிக்கும் கட்டாயமே ... இப்படி சொல்லிக்கொண்டு விஜயகாந்த் மாறுவார் என்றே தெரிகிறது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயகாந்த் மட்டுமல்ல...எல்லா அரசியல்வாதிகளுமே கூட்டணி மாற இந்த வார்த்தைகள் தான் தாரக மந்திரம்

      நீக்கு
  7. கூட்டணி மாறலாம் அரசியல் தான் சாக்கடையாச்சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட...அரசியல் சாக்கடையெல்லாம் கிடையாது நண்பா.... சில பன்றிகள் அதை சாக்கடையாக மாற்றிவிட்டது என்பதுதான் நிஜம்.

      நீக்கு
  8. ஸலாம் சகோ.ரஹீம் கஸாலி...

    ஆளுங்கட்சியை திட்டுறவன் வீரன்...
    எதிர்க்கட்சியை திட்டுறவன் கோழை...
    அதுவும், தன்னை விட குறைந்த சீட் வைத்திருக்கும் திமுக-வை இப்போது திட்டுறது 'செத்த பாம்பை அடிப்பது' போல...
    ---என்ற அரசியலில் அஞ்சாம் கிளாஸ்ஸில் கேப்டன் பாஸ் பண்ணிட்டார்...!

    வெல்டன்..!

    வழக்கம் போலவே...
    திமுக, மறப்போம்... மன்னிப்போம்...
    அடுத்த தேர்தல் கூட்டணிக்கு கலைஞர் தயராகிட்டார்...

    இனி அடுத்த சீன்...
    ஜெ & வைகோ... 'இணைந்த கைகள்' திரைப்படம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /* ஜெ & வைகோ... 'இணைந்த கைகள்' திரைப்படம்...! */

      சகோ ஆசிக்,

      இதைவிட வைகோ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடலாம்.

      நீக்கு
    2. கலைஞரை எப்படி திட்டினாலும் பதவி என்று வந்துவிட்டால் கண்டுகொள்ள மாட்டார். அவர்தான் எதையும் தாங்கும் இதயத்தை அண்ணாவிடம் இரவல் வாங்கி வைத்துள்ளாரே...

      நீக்கு
    3. சிராஜ் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்

      நீக்கு
  9. காலத்தின் கட்டாயம் = வேறு வழி !? நன்றி சார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வார்த்தையை வைத்துதான் பகைவர்கள் நண்பர்களாகிறார்கள். நண்பர்கள் பகைவர்கள் ஆகிறார்கள் அரசியலில்

      நீக்கு
  10. இந்த அரசியல்வாதிகளை நினைச்சாலே வாந்தி வர மாதிரி இருக்கு சார். ச்சே...என்னய்யா பொழப்பு இவங்களது?!.....

    பதிலளிநீக்கு
  11. //நேற்று முன்தினம் சத்தசபையில் சட்டசபையில் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் நடந்த காரசாரமான விவாதங்களையும், அதைத்தொடர்ந்து விஜயகாந்த் சட்டசபையிலிருந்து பத்து நாள் இடை நீக்கம் செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்//

    நாங்கள் அறிவதென்ன, ஊரே நாறிடுச்சு சகோ. இப்ப அதை பத்தி பேசலன்ன நமக்கு அரசியல் தெரியலங்கிற மாதிரி பாக்கிறாய்ங்க. அதிலும் கேப்டன் நான் இறங்குனே பத்து பேர அடிப்பேன் போன்ற வசனங்கள் ஆஸ்க்காருக்கு அனுப்பப்படுகின்றன:)

    //கஸாலி...அடுத்த சோ நீங்கதானா? அச்சச்சோ!!//

    என்ன சகோ சிவகுமார் உங்களுக்கு கவிதை கூட அசால்டாக வருகிறதே!

    //கலைஞரை எப்படி திட்டினாலும் பதவி என்று வந்துவிட்டால் கண்டுகொள்ள மாட்டார். அவர்தான் எதையும் தாங்கும் இதயத்தை அண்ணாவிடம் இரவல் வாங்கி வைத்துள்ளாரே...//

    இது கஸாலி பஞ்ச்.

    //இதைவிட வைகோ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடலாம்//
    இது உச்சகட்ட காமெடி. ஆனால் இதையல்லாம் விட எங்கள் மருத்துவர் அடிக்கிறார் பாருங்க காமெடி. இனி இவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறார்களாம், அதுவும் திமுக, அதிமுக துணையின்றி. சரியான தமாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...எல்லா பின்னூட்டத்திற்கும் நீங்களே பதில் சொல்லிட்டீங்களே சகோ...

      நீக்கு
  12. அரசியலிலே வெட்கம் மானம் இழந்து, பதவிக்காக யாருடனம் ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை - கொள்கையாகவே வைத்திருப்பவர் கருணாநிதி..
    பாஜக, ராமதாஸ், காங்கிரஸ்,,ரஜினி, வாலி..(இத்தனை நாளாக கலைஞருக்கு ஜால்ரா அடித்து வந்த வாலி, இப்போது துக்ளக்கில் எம்ஜியார் பற்றி ஜால்ரா தட்டுகிறார் ) குஷ்பு, வடிவேலு , விஜயகாந்த் என்று எவ்வளவும் தரமிழந்து அரசியலை நாறடிக்க திட்டமிடுகிறார்..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.