என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், பிப்ரவரி 29, 2012

33 சங்கரன்கோவில் தொகுதிவாசிகள் இப்போது பாடும் பாட்டு எது தெரியுமா?.....(பொடிமாஸ் 29/02/2012)




ஒரு நகைச்சுவை

ஒருவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உடல் சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. அவர்களின் வழக்கப்படி ஒவ்வொருவரும் சவக்குழிக்குள் பணம் போடவேண்டும். போட்ட பணத்துடன் அப்படியே புதைத்துவிடுவார்கள். ஆளாளுக்கு நூறு ஐநூறு டாலர் ஆயிரம் டாலர் என்று குழிக்குள் போட்டபடி இருக்கிறார்கள். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் குழிக்குள் இறங்கி அவ்வளவு பணத்தையும் அள்ளினான். மற்றவர்கள் அவனது செய்கையை விநோதமாக பார்த்தபடி இருந்தார்கள். 

அதில் ஒருவன் அவனை பார்த்து...
"எதுக்குப்பா எல்லா பணத்தையும் எடுத்து பாக்கெட்டில் வச்சுக்கறே?, கீழே போடுப்பா" என்றான். 

இவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் பணத்தை எண்ணி சட்டை பைக்குள் வைத்தபடி......
"எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க....நம்ம வழக்கப்படி பொணத்த புதைக்கையில பணம் போட்டு பொதைக்கணும்."

"அது எல்லோருக்கும் தெரியும்.நீ ஏன் அந்த பணத்த எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கிட்டே?"

"இருங்க சொல்றேன்.....அந்த பணத்த எண்ணிப்பார்த்தேன். மொத்தம் இருபத்து நாலாயிரம் டாலர் இருந்துச்சு....நான் என் பங்குக்கு ஒரு ஆயிரம் டாலர் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா பணம் எடுத்ததுக்கு வரல....அதனால...."

"அதனால?"

"இந்த இருபத்து நாலாயிர டாலரையும் நான் எடுத்ததுக்கு அதுக்கு பதிலா இருபத்து அஞ்சாயிரம் டாலருக்கு செக் எழுதி குழிக்குள் போட்டுடுறேன்" -
என்ற படி செக் எழுதி பிணத்தின் மேல் போட்டான்.
(இது ஒரு மீள்பதிவு ஜோக்)
---------------------

ஒரு கவிதை மாதிரி.....

இப்போதெல்லாம்
மீந்துபோன சாதம் கேட்டு
ராப்பிச்சைக்காரர்
வருவதேயில்லை.....
எங்கள் வீட்டில்
ஃப்ரிட்ஜ் வாங்கிய விஷயம்
அவ்ருக்கு எப்படி
தெரிந்தது?

--------------------

ஒரு புரியாத புதிர்....

அதென்னவோ தெரியவில்லை.
ஜனநாயக நாட்டில் மட்டும்
வோட்டு பிச்சை வாங்கியவர்கள்
அம்பாரியில்...
பிச்சை போட்டவர்கள்
நடுத்தெருவில்

----------------------

ஒரு விளக்கம்....

வாக்களிப்பதை ஓட்டுப்போடுவது என்று சொல்கிறோம்...சரி...இந்த VOTE என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணக்காரர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது.இதை ஆங்கிலேயர்கள் Voice OTax payees Every where. என்று சொல்வார்கள். அதுவே காலப்போக்கில் சுருங்கி VOTE ஆனது.

------------------------------------------

ஒரு ட்வீட்டு...

பொன்மகள் வந்தாள்.....பொருள்கோடி தந்தாள்....#சங்கரன்கோவில் தொகுதி மக்கள் இப்போது பாடும் பாட்டு


Post Comment

இதையும் படிக்கலாமே:


33 கருத்துகள்:

  1. அருமையான நகைச்சுவை கலந்த பதிவு. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆறு மாசத்துக்கு ஒன்னுன்னு எல்லா தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தா ரொம்ப நல்லாயிருக்கும்....

    அப்படியாது ஜனங்களுக்கு கொஞ்சம் நல்லது கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைத்தேர்தல் நடக்கப்போற ஒரு மாசத்திற்கு மட்டும்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். அதன் பிறகு பொதுத்தேர்தல் வரை கஷ்டம்தான்

      நீக்கு
  3. vote என்ற சொல்லுக்கு இப்போதுதான் அர்த்தம் தெரிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சில நாட்களுக்கு முன்புதான் தெரியும்.அதான் பகிர்ந்துகொண்டேன்

      நீக்கு
  4. vote
    c.1460, from L. votum "a vow, wish, promise, dedication," noun use of neut. of votus, pp. of vovere "to promise, dedicate" (see vow). The verb in the modern sense is attested from 1552; earlier it meant "to vow" to do something (1533).

    பதிலளிநீக்கு
  5. vote
    c.1460, from L. votum "a vow, wish, promise, dedication," noun use of neut. of votus, pp. of vovere "to promise, dedicate" (see vow). The verb in the modern sense is attested from 1552; earlier it meant "to vow" to do something (1533).

    பதிலளிநீக்கு
  6. "இந்த இருபத்து நாலாயிர ரூபாயை நான் எடுத்ததுக்கு அதுக்கு பதிலா இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி குழிக்குள் போட்டுடுறேன்" -
    என்ற படி செக் எழுதி பிணத்தின் மேல் போட்டான்.//அர்த்தம் தெரிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள். வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. நல்லதாம்யா ஒட்டரிங்க...நகைசுவை

    பதிலளிநீக்கு
  8. பொன்மகள் வந்தாள்...., ட்வீட்டுதான் டாப்.

    பதிலளிநீக்கு
  9. //ஒரு புரியாத புதிர்....


    அதென்னவோ தெரியவில்லை.
    ஜனநாயக நாட்டில் மட்டும்
    வோட்டு பிச்சை வாங்கியவர்கள்
    அம்பாரியில்...
    பிச்சை போட்டவர்கள்
    நடுத்தெருவில்///

    அதுதான் விஞ்ஞானம்-ங்கறது!!

    :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விஞ்ஞானம்தான் நம் மரமண்டைக்கு புரியல

      நீக்கு
  10. 100 டாலர், 500 டாலர் குழிக்குள் போட்டார்கள். எண்ணிப் பார்த்தால் 24,000 ரூபாய் இருந்தது.

    அடடே, டாலர்லாம் ரூபாயா மாறிடுச்...சே!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. மாத்திட்டேன்....மாத்திட்டேன்.

      நீக்கு
    2. சகோ NIZAMUDEEN ,

      கலக்கல் சகோ. சூப்பர் பாயிண்ட். தலைவர் சறுக்கிட்டாறு. ரொம்ப சந்தோசமா இருக்கு. அனேகமா செக்கு போட்டதே கசாலி யா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  12. இது சங்கரன் கோவில் இடை தேர்தல் ஸ்பெஷல் பதிவா? கலக்குங்க, கலக்குங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.