என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜனவரி 01, 2011

19 கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் -ஒரு பார்வை

2001



தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து அதில் அ.தி.மு.க- வென்றதும், அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முதல்வர் ஆனதும், பின்னர் பதவி விலகி  ஒ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருந்ததும், கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டதும்  இந்த ஆண்டில்தான்


2002
  ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு  ஜெயித்து  மீண்டும் முதல்வரானதும், பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதும், மதமாற்ற தடை சட்டம், வேலை நிறுத்த தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதும், மூப்பனார்  மறைவிற்கு பின்னால் அவரது மகன் வாசனால் நடத்தப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் காங்கிரசில் இணைந்ததும் இந்த ஆண்டில்தான்.

2003
தைரியம் மற்றும் சாகச செயல்களுக்காக கல்பனாசாவ்லா விருதை தமிழக அரசு  அறிவித்ததும், இந்தியாவின் முதல் பெண்கள் கமாண்டர் படை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆறாவது தமிழ் இணைய மாநாடு சென்னையில் நடத்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்

2004
கும்பகோணம் தீ விபத்து 


ஸ்ரீரங்கம்  திருமண மண்டபத்தில் தீவிபத்து 
வீரப்பன் கொலை 


சங்கராச்சாரியார் கைது
சுனாமி

ஸ்ரீரங்கம்  திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டு 51 உயிர்கள்  பலியானதும், கும்பகோணம் சரஸ்வதி வித்யாலயம் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90 குழந்தைகள் பலியானதும், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக்கொல்ல பட்டதும், கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதும், உலகமெங்கும் சுனாமி எற்பட்டுலட்சக்கணக்கான  உயிர்கள் மாண்டதும்  இந்த ஆண்டில்தான்

2005



டாக்டரு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்ததும், எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது வழங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.


2006
சட்டப்பேரவை தேர்தல் நடந்து கலைஞர் மீண்டும்  முதல்வரானது இந்த ஆண்டில்தான்.

2007 



பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்க தமிழக அரசு தடைச்சட்டம் கொண்டு வந்ததும்,
ஈரோடு, திருப்பூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.

2008


தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததும், ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் வழக்கம் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.

2009 



தமிழக துணை முதல்வராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும், கலைஞர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டதும், இலங்கையில் போர்  நிறுத்தம் கோரி, சாஸ்திரி பவனருகில்  முத்துக்குமார் தீக்குளித்து இறந்ததும் இந்த ஆண்டில்தான்.

2010




உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றதும், கலைஞருக்கு அதிக பாராட்டு விழா நடந்ததும், பதிவர் ரஹீம் கஸாலி பதிவுலகத்திற்குள் காலடி வைத்ததும் இந்த ஆண்டில்தான்(ஹி....ஹி.....)

பதிவு திருடர்கள் கவனத்திற்கு:
நண்பர்களே கொஞ்சம்சிரமப்பட்டு தொகுத்த பதிவு இது. தயவு செய்து சுலபமாக காப்பி& பேஸ்ட் செய்து உங்கள் தளத்தில் உங்களின் பதிவு போல இணைத்துவிட  வேண்டாம்.
இந்த பதிவு காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. மீறி யாராவது திருடினால் ஆப்புதான்.மன்னிக்கவும் காப்புதான். இதோ இதற்க்கான காப்புரிமை 

Copyright :: All Rights Reserved
Registered :: Sat Jan 01 10:41:03 UTC 2011
Title :: கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் -ஒரு பார்வை
Category :: Blog
Fingerprint :: e2463f953c32f29f11c77ca6fbe28d
4524994e0b28b1fb45a8556b733c1b6c24
MCN :: EG5N6-8Y3PD-WT8EN


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. பத்தாண்டுகளில் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் அருமை நண்பரே,

    பகிர்வுக்கு நன்றி

    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

    பதிலளிநீக்கு
  2. இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1 ஜன., 2011, 2:23:00 PM

    ரொம்ப அருமையான பதிவு நல்ல தொகுப்பு நண்பரே ,

    பதிலளிநீக்கு
  4. நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க ...
    நல்லா இருக்குங்க .. கலக்கல் பயணம் தொடரட்டும் ...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இன்டலி தளத்திற்கு சென்று பார்த்தேன்... அங்கே இன்டலி தமிழ் ஓட்டுப்பட்டையை இணைப்பது குறித்த செய்திகள் எதுவும் காணப்படவில்லை... அது பற்றிய இணைப்பு வைத்திருந்தாள் விரைவாக மெயில் மூலம் அருளவும்...

    nrflyingtaurus@gmail.com

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு...பதிவுத்திருடர்களுக்கான வேண்டுகோள் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  7. மிக மிக சிறப்பான தொகுப்பு

    பதிலளிநீக்கு
  8. ஆபாசமில்லாம கமென்ட் போடும் பன்றிகளுக்காவது இடம் உண்டா? ஹி...ஹி......!

    பதிலளிநீக்கு
  9. நல்ல தொகுப்பு, இன்னும் கொஞ்சம் விரிவாக போட்டிருக்கலாமே.....?

    பதிலளிநீக்கு
  10. ஆமா, ஆமா திருட்டுப்பசங்க தொல்ல ரொம்ப அதிகமா இருக்கு.... இது கஸாலி ரஹீம் வலைப்பூவிலிருந்து திருடியதுன்னு மேல போட்டிருக்கலாம்ல?

    பதிலளிநீக்கு
  11. Delete Comment From: *கஸாலி from ரஹீம்*

    Blogger ரஹீம் கஸாலி said...

    [si="4"][co="yellow"]பன்னிக்குட்டி ராம்சாமி said...[/co][/si]
    ஆபாசமில்லாம கமென்ட் போடும் பன்றிகளுக்காவது இடம் உண்டா? ஹி...ஹி......!///
    [si="4"][co="yellow"]உங்களுக்கு தடையில்லேங்கன்னா.....[/co][/si]
    நல்ல தொகுப்பு, இன்னும் கொஞ்சம் விரிவாக போட்டிருக்கலாமே.....?///
    [si="4"][co="yellow"]இதுக்கே கொஞ்சம் சிரமப்பட்டேங்கன்னா....[/co][/si]
    ஆமா, ஆமா திருட்டுப்பசங்க தொல்ல ரொம்ப அதிகமா இருக்கு.... இது கஸாலி ரஹீம் வலைப்பூவிலிருந்து திருடியதுன்னு மேல போட்டிருக்கலாம்ல?//
    [si="4"][co="yellow"]போட்டிருக்கலாம்தான். திருட்டு நாதாரிகளுக்கு இதுவே போதுங்கன்னா.[/co][/si]

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப சிரமப்பட்டு தொகுத்த பதிவு என்பது ரொம்ப நல்லா தெரியுது...வாழ்த்துகள் ,அருமை..சார். 3 மணி நேரம் ஆகி இருக்கும் தொகுக்க

    பதிலளிநீக்கு
  13. பத்தாண்டுகளை இவ்வளவு சுருக்கமாகவும், சுவையாகவும் தொகுத்து இருப்பது பெரிய விஷயம்......சூப்பர்.....

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  14. ஒரு ஆண்டில் நடந்ததை திரட்டி பதிவாக போடுவதே கடினம் நீங்கள் பத்தாண்டுகளில். ஒவ்வொரு பதிவுக்காகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி வியப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நல்ல தொகுப்பு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. நண்பர் கஸாலி அவர்களூக்கு
    அருமையான பதிவு தெளிவான நடை
    உங்கள் தளத்தில் சமூக அக்கறையோடு வரக்கூடிய பதிவுகள் உங்கள் ப்ளாக்கின் கொள்ளலவை ஆக்கிரமித்து கொள்ளட்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.