என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 26, 2011

13 குடியரசும் முதல்ஜனாதிபதியும்

 சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு 1948 ஜுன் 21_ந்தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக அப்போது மேற்கு வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி புதிய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பர் 26_ந்தேதி அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26_ந்தேதி இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942_ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
1942_ல் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க...

    http://krpsenthil.blogspot.com/2011/01/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  2. என்ன இன்ட்லிக்கு போன பரிமாறச் சொல்லுது... ஒருவேளை இட்லியா...?

    பதிலளிநீக்கு
  3. தெரியாத தகவல்கள் பல தெரிந்து கொண்டேன்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. குடியரசு தின வாழ்த்துகள்!!!!!

    பதிலளிநீக்கு
  5. குடியரசு தின நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல்கள்.....பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக சகோ கஸாலி...

    நாமெல்லாம் குடியரசுக்காக இத்தினத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    ஆனால், பாஜக மட்டும் இதை "துக்க தினம்" என்று அறிவித்துள்ளது. அக்கட்சித்தலைவர், தேசத்துரோகி நிதின் கட்காரி, 'குடியரசு தினம் ஒரு துக்க தினம்' என்று இன்று அறிவித்துள்ளார். தேசத்துரோகிகள் ஒழிக. (--ராஜ் நியூஸ்)

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..

    லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

    பதிலளிநீக்கு
  9. வரலாற்றின் பக்கங்களை புரட்டிக் காட்டியதற்கு நன்றி.
    குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. குடியரசு தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.