என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 04, 2011

19 ஈழமும் இறையாண்மையும்


(குறிப்பு: நாடாளுமன்றத்தேர்தல் சமயத்தில் யூத்புல் விகடனுக்கு என்னால் எழுதி அனுப்பப்பட்டு என்ன காரணமோ தெரியவில்லை இந்தக்கட்டுரை நிராகரிக்கப்பட்டது. மீண்டும் உங்கள் பார்வைக்கு...)


ன்று திரும்பிய பக்கமெல்லாம் ஈழத்தமிழருக்காக நம் அரசியல்வாதிகளின் குரல் பிரதானமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. உண்ணாவிரதங்களும், வேலைநிறுத்தங்களும்,மனிதசங்கிலிகளும் இன்னபிற போராட்ட நாடகங்களும் ஜரூராக அரங்கேறிவருகிறது. இதெல்லாம் தேர்தல் வரைதான் என்ற நிஜமும், தேர்தலுக்கு பிறகு ஈழமாவது ஈனமாவது அது கிணற்றில் போடப்பட்ட கல்லாகிவிடும் என்ற நிதர்சனமும் நம் நஞ்சை சுடுகிறது.

எந்த ஒரு பிரச்சினையையுமே ஊதி பெரிதாக்கி பின் அதை வாக்குகளாக அறுவடைசெய்யும் நம் அரசியல்வாதிகள் இப்போது ஈழப்பிரச்சினையையும் அப்படியே அணுகுவதுதான் வேதனை. தோழர் முத்துக்குமார் போன்றவர்களின் சிதை நெருப்பில்கூட நம் தலைவர்கள் குளிர்காய்வதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


எந்தநேரமும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நினைப்பில் தினந்தோறும் மரணத்தின் மடியிலும் சாவின் விளிம்பிலும் நின்றுகொண்டு குண்டுமழைகளுக்கு மத்தியிலிருந்து கதறிக்கொண்டிருக்கும் இந்த அப்பாவி மக்களின் கூக்குரல், எந்த நேரமும் தம்மை சுற்றி ' இசட்' பிரிவு பாதுகாப்பு, பூனைப்படை பாதுகாப்புடன் ஏ.சி. அறையில் இருந்துகொண்டும் ஹெலிகாப்டரில் பறந்துகொண்டும் அரசியல் செய்யும் நம் தலைவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதுமட்டும் சரியாக கேட்பதுதான் விந்தை.


இந்த ஓட்டுப்பொறுக்கி தலைவர்களுக்கு ஈழத்தமிழர்களின் கதறலும்,கத்தலும் அவர்களின் ஓட்டுப்பெட்டியை நிரப்பப்போகும் ஒரு துருப்புச்சீட்டு அவ்வளவுதான். அக்கறையுமில்லை. அனுதாபமுமில்லை. எல்லாம் அரசியல் ஆதாயம்தான். அதன் பிறகு அடுத்த தேர்தல்வரும் வரை ஈழத்தமிழர்கள் என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், அந்த கத்தல் எல்லாம் கடல்கடந்து நம் தலைவர்களுக்கு கேட்பதேயில்லை.


காவேரி, ஒகேனக்கல், முல்லைபெரியாறு என உள்நாட்டிலேயே இந்த தலைவர்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் பொது இவர்கள் எப்படி அடுத்த நாட்டு பிரச்சினையை தீர்ப்பார்கள்?.
கடந்த காலங்களில் பல வருடங்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள், இப்போது ஆட்சியை அலங்கரிப்பவர்கள் எல்லோரும் தன் கூட்டணிக்கட்சி தலைவர்களின் பக்கவாத்தியங்களுடன் , எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் ஈழப்பிரச்சினையை இல்லாமல் செய்துவிடுகிறோம் என்று கோரஸ் பாடுகிறார்கள்.

இதையும் நிஜமென நினைத்து நம் இளிச்சவாய் வாக்காளர்கள் இவர்கள் பின்னால் அணிவகுக்கவும், கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் தயங்குவதில்லை. ஈழப்பிரச்சினையை இல்லாமல் செய்துவிடுவோம் என்று இவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை.
ஆம்.....இன்னும் சில மதங்களிலோ, வருடங்களிலோ ஒட்டு மொத்த அப்பாவிகளை போர் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ராஜபக்சே அரசு கனகச்சிதாமாக அழித்தொழித்து விடும்.ஈழத்தில் தமிழர்கள் என்று ஒரு இனம் இருந்தால்தானே ஈழப்பிரச்சினை வரும். தமிழர்களே இல்லாமல் போய்விட்டால்....? இந்த நம்பிக்கையில் தான் நம்தலைவர்கள் பேசுகிறார்கள்.


இதற்கிடையில் ஈழப்பிரச்சினையில் உண்மையாகவே போராடுபவர்கள் இறையாண்மை சாயம் பூசப்பட்டு சிறைக்கொட்டடிகளில் அடைக்கப்படும் கொடுமைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று இலங்கையில் தினந்தினம் குவியல் குவியலாய் செத்து மடிந்துகொண்டிருக்கும் தமிழருக்காக, சக மனிதருக்காக குரல் கொடுப்பதும், குமுறுவதும் எப்படி இறையாண்மைக்கு எதிரானதாகுமென்று விளங்கவில்லை.
ஆடு, மாடு என்று விலங்கினத்துக்காக போராடுகிறது ரெட் கிராஸ் என்ற செஞ்சிலுவை சங்கம். சினிமாவில்கூட உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்கிறது சென்சார் போர்டு என்ற தணிக்கைக்குழு.
இப்படி உயிரினத்துக்கெல்லாம் போராடுவதற்கு இயக்கங்களும் அமைப்புகளும் இருக்கும்போது, அதை விட உயர்ந்த உயிரான மனிதர்கள் சாகும்போதும்,துன்புறுத்தப் படும்போதும் சக மனிதனாக மனிதாபிமான அடிப்படியில் தட்டிக்கேட்பதும், கதறுவதும் இறையாண்மைக்கு எதிரானது என்று சொன்னால்.....எதிர்காலத்தில் மனிதாபிமானம் செத்துப்போய், மனிதாபிமானிகளே இருக்க மாட்டார்கள்.எல்லோரும் சுய நலமாக சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்.பக்கத்து வீட்டுக்காரன் மரணத்திற்கு கூட அழ ஆளில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. ஜாக்கிரதை.

Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. //இன்று இலங்கையில் தினந்தினம் குவியல் குவியலாய் செத்து மடிந்துகொண்டிருக்கும் தமிழருக்காக, சக மனிதருக்காக குரல் கொடுப்பதும், குமுறுவதும் எப்படி இறையாண்மைக்கு எதிரானதாகுமென்று விளங்கவில்லை.//

    உண்மை...

    பதிலளிநீக்கு
  2. in vikatan reader"s essay will not be published. only joks,rhymes,stoy, so dont waste your time. send it to suryakkadhir maonthly twice

    பதிலளிநீக்கு
  3. சி.பி.செந்தில்குமார் said...

    in vikatan reader"s essay will not be published. only joks,rhymes,stoy, so dont waste your time. send it to suryakkadhir maonthly twice///

    பாஸ் நான் அனுப்பியது யூத்புல் விகடன் என்ற இணைய இதழுக்கு.....அங்கு என்னுடைய கட்டுரைகள், கவிதை, கதை என்று நிறைய பிரசுரம் ஆகியிருக்கிறது. அதனால்தான் அனுப்பினேன். ஆனால், நிராகரித்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல அலசல், நல்ல கட்டுரை நண்பா

    பதிலளிநீக்கு
  5. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
    இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4 ஜன., 2011, 2:24:00 PM

    சூப்பரா சொன்னீங்க தலைவரே இவனுக மக்களை பத்தி எப்ப நினைச்சானுக..இப்ப நினைக்க?

    பதிலளிநீக்கு
  7. உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் கஸாலி..நன்று.

    பதிலளிநீக்கு
  8. //தோழர் முத்துக்குமார் போன்றவர்களின் சிதை நெருப்பில்கூட நம் தலைவர்கள் குளிர்காய்வதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.//

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு கட்டுரை... நிறைய இடங்களில் வார்த்தைகள் வழியை ஏற்படுத்துகின்றன...

    பதிலளிநீக்கு
  10. விகடனில் படிக்கும் வாசகர்களை விட உங்கள் தளத்தில் படித்த வாசகர்கள் அதிகம் என்று நினைக்கிறேன் வருத்தப் படவேண்டாம் அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  11. நான் 100 வீதம் இக்கட்டுரையை ஆதரிக்கிறேன்... இது எத்தனை நுற்றாண்ட சென்றாலும் நாம் தான் அவர்களின் முதல் ஆயுதம்..


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

    பதிலளிநீக்கு
  12. அருமையான கட்டுரை தான்...மீண்டும் அனுப்பி பாருங்களேன் சகோ...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.