என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 13, 2011

29 பதிவுலகில் என் கொசுவர்த்தி

வாங்க....என்னடா இவன் கொசுவர்த்தி...ஆல் அவுட்டுன்னு என்னவோ எழுதியிருக்கானே...என்னன்னு பார்ப்போம்ன்னுதானே வந்துருக்கீங்க....அது ஒன்னுமில்லேங்க....உள்ளே வெளியே பார்த்திபன் ஸ்டயில்ல ஃப்ளாஷ்  பேக்கைத்தான் கொசுவர்த்தின்னு சொல்லிருக்கேன்.

ரெண்டுநாளைக்கு முன்னாடி நம்ம நல்ல நேரம் சதீஷ் குமார் 
திரும்பி  பார்க்கிறேன்னு எழுத சொல்லி கூப்பிட்டு இருந்தாப்ல...
நான் பதிவுலகத்துக்கு வந்து அஞ்சு மாசந்தான் ஆகுது.
அதுக்குள்ளே என்னத்த திரும்பி பாக்கறது?
ஒரு அஞ்சு வருஷம் ஆகிருந்தாக்கூட பரவாயில்ல....
திரும்பிபாக்க ஏதாவது விஷயம் இருக்கும்.
அதான் எழுதாம விட்டுறலாம்ன்னு நம்ம சதீஷ் கிட்டயே
ஏதாவது பரிகாரம் கேக்கலாம்ன்னு
இருந்தேன்.(ஏன்னா....அவருதான் ஜாதகம், ஜோசியம்ன்னு இருக்காரு...நல்லா பரிகாரம் சொல்லுவாருன்னு நினைச்சேன்).

ஆனா அவரு கடுப்பாகி சூன்யம், கீன்யம்ன்னு வச்சுட்டாருன்னா என்ன பண்றது நமக்கெதுக்கு வம்புன்னு  பயந்து எதையாவது எழுதி வைப்போம்ன்னு எழுதிட்டேன்.

தென்றலை தீண்டியதில்லை , நெருப்பை தாண்டியிருக்கிறேன்னு
பராசக்தி சிவாஜி ரேஞ்சுக்கெல்லாம் நம்ம திரும்பி பார்க்கப்போவதில்லை. அதுக்கு நமக்கு வயசுமில்லை, அனுபவமுமில்லை.
வேறெப்படி திரும்பி பார்ப்பது?.

சரி நிஜமாகவே திரும்பி பாக்கலாம்ன்னு நினைச்சு திரும்பினா நம்ம தோள் பட்டைவிட்டு கழுத்து திரும்ப மாட்டேன்னு அடம் பிடிக்குது.
அய்யய்யோ ரொம்ப திரும்பி சிலுக்கு சீ.. சீ...சுளுக்கு,  பிடிச்சுக்குமோன்னு பயந்து அந்த முயற்சிய  அதோடு விட்டுட்டேன்.
எப்படியாவது திரும்பி பார்த்திடனும், இல்லாட்டி ஒரு பிரபல பதிவர அவமதிச்சதா பதிவுலகம் நம்மள குற்றம் சாட்டிருமே என்ன பன்றதுன்னு ராத்திரி எல்லா விளக்கையும் அணைச்சுட்டு லைம் லைட் வெளிச்சத்துல (ஜீரோ வாட்ஸ் பல்பு...அதுதாங்க நமக்கு லைம் லைட்டு ) மல்லாக்க படுத்துக்கு யோசிச்சேன் யோசிச்சேன் என்னைய மறந்து யோசிச்சேன்.
அப்பவும் ஒரு ஐடியாவும் வரல...சரி இதோடு விட்டுடுவோம்...மீதிய காலைல பார்த்துக்கலாம்ன்னு படுத்தேன்.
பளிச்சுன்னு லைட்டு எரிஞ்சுச்சு. நம்ம மூளையில இல்லங்க...ரூம்ல...
"இன்னும் தூங்காம என்ன பண்றீங்க"...ன்னு என் பொண்டாட்டிதான் கேட்டா....
"இல்லையே தூங்கிட்டேனேன். தூங்குனவனை எழுப்பி இப்ப எதுக்கு தூங்கலையா கேள்வி கேக்குறே"னு பதில் சொல்லி சமாளிச்சேன்.
"நீங்க தூங்கற லட்ச்சனந்தான்  உங்க மொகரகட்டையில தெரியுதே,நானும் அப்பவுலேர்ந்து  பாத்துக்கு இருக்கேன். லூசு மாதிரி கைய கைய ஆட்டிக்கு இருக்கீங்க..அப்படி என்னத்த யோசிக்கிறீங்க...ராத்திரி ஒரு மணி வரை"ன்னு கேட்டா...
அப்போதான் மணிய பார்த்தேன் ஒன்னு ஆகி பத்து நிமிஷம் ஆகிருச்சு.
"அய்யோ...மணி ஒன்னாச்சா...காலைல வெள்ளன எந்திருக்கனுமே என்ன பண்றதுன்னு" பொலம்பினேன்.
"வெள்ளன  எந்திருச்சு எங்க போகப்போறீங்க...ஆபீசுக்கா"ன்னு எதிர் கேள்வி கேட்டா...
"இல்லே...காலையில சீக்கிரமே ஒரு பதிவு போடணும் அப்பத்தான் எல்லா நாட்டையும் கவர் பண்ணி ஹிட்ஸ் வாங்கலாம்"ன்னு சொன்னேன்.
"நீங்கல்லாம் எங்கே உருப்பட போறீங்க"...ன்னு அந்த அர்த்த ராத்திரில சாபம் கொடுக்குறா...
"சரி அதவிடு எனக்கு ஏதாவது ஐடியா கொடு"ன்னு கேட்டு விபரத்தை சொன்னேன்.
"அட இதுக்குத்தான் இவ்வளவு தூரம் யோசிச்சீங்களா. இப்படி பண்ணுங்க"....ன்னு கொடுத்தா பாருங்க ஒரு ஐடியா. எந்த ஒரு பதிவரும் யோசிக்க முடியாத ஐடியா...நல்லவேளை அவ பதிவுலகத்துக்கு வரல...வந்திருந்தா நமக்கெல்லாம் சங்குதான்னு நினைச்சுக்கு தூங்கப்போனேன்.இல்லை...இல்லை..தூங்கிப்போனேன்...அப்படி என்ன ஐடியான்னு தானே கேக்குறீங்க....
நான் அவட்ட கேட்டது  திரும்பி பார்க்கிறேன்னு எழுத ஏதாவது ஐடியா கொடுன்னு....
இப்படி எழுதிடுங்கன்னு அவ சொன்ன ஐடியா கீழே....



கீழே 



கீழே 




 இன்னும் கீழே 



அவ்வளவுதாங்க வந்துட்டீங்க....


இதுதாங்க அது....






எப்படி இருக்கு நான் திரும்பி பார்த்தது?.

டிஸ்கி-1:இது நூறு சதவீதமும் கற்பனை அல்ல...

டிஸ்கி-2: என்னை போன்ற பதிவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத டாக்டர் பட்டத்தை எனக்கும் சக பதிவர்களுக்கும் வழங்கிய டுபாக்கூர் யுனிவர்சிடியின் முதல்வர் கல்வித்தந்தை அண்ணன் கக்கு மாணிக்கம் அவர்களுக்கு நன்றி....


Post Comment

இதையும் படிக்கலாமே:


29 கருத்துகள்:

  1. இதுக்கு நீங்க தூங்கவே செய்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  2. திரும்பிப்பார்த்தது போதும், இனி நேரா பாருங்க...

    பதிலளிநீக்கு
  3. டாக்டர் பட்டம் பெற்ற அண்ணன் ரஹீம் கஸாலி வாழ்க...

    மேலும் நர்ஸ், கம்பௌண்டர், மணியகாரர், தலையாரி, நாட்டாமை ஆகிய பட்டங்களை பெறவும் பதிவுலகின் 19 வது வார்டின் சார்பில் வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு வேணும் காலங்காத்தால.

    பதிலளிநீக்கு
  5. ல்கக்லக வுதிப....மைருஅ!

    பதிலளிநீக்கு
  6. நான் பாரத் பாரதி அவர்களின் அனைத்து பொன்னான கருத்துகளையும், வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து ஒன்று விடாமல் வழிமொழிகிறேன் :-)

    பதிலளிநீக்கு
  7. காலைலேயே பல்பா? முடியல

    பதிலளிநீக்கு
  8. //நான் பதிவுலகத்துக்கு வந்து அஞ்சு மாசந்தான் ஆகுது.அதுக்குள்ளே என்னத்த திரும்பி பாக்கறது?//

    சரி திரும்பி பார்க்கவேணாம் சைட்லயாவுது பார்க்கலாம்ல?

    பதிலளிநீக்கு
  9. //இல்லே...காலையில சீக்கிரமே ஒரு பதிவு போடணும் அப்பத்தான் எல்லா நாட்டையும் கவர் பண்ணி ஹிட்ஸ் வாங்கலாம்"ன்னு சொன்னேன்.//

    ங்கோயாலே

    பதிலளிநீக்கு
  10. நல்லா திரும்பி பார்த்திங்க போங்க இனிமே எவனும் திரும்பி பார்க்க மாட்டான். முடிஞ்சுது தொடர் பதிவு போங்க

    பதிலளிநீக்கு
  11. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சரியா போச்சு!

    பதிலளிநீக்கு
  12. அது எப்படிங்க ஒன்னுமே இல்லாம இவ்வளவு சுவாரஸ்யமா எழுதுறிங்க.....

    பதிலளிநீக்கு
  13. அடங்கப்பா சரியான பல்புடா சாமி .

    பதிலளிநீக்கு
  14. ஆஹா இந்த தொடர் வியாதி உங்களுக்கு தொத்திடுச்சா ?

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா13 ஜன., 2011, 1:39:00 PM

    ரொம்ப நல்லா திரும்பி பார்த்து இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பதிவை திறந்து வாசகர்கள் எத்தனை பல்புதான் வாங்குவதோ..!

    பதிலளிநீக்கு
  17. ரோபோ ரஜினி கூட இந்த அளவுக்கு திரும்பி பார்த்திருக்க மாட்டாருங்க.. ரொம்ப திரும்பி பார்த்திருக்கீங்க.. கக்கு அண்ணன் அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா?

    பதிலளிநீக்கு
  18. அப்புறம்... ஒரு முக்கிய விஷயம்.
    என் பதிவின் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்...

    http://www.petitiononline.com/megha00/petition.html

    இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. என்னது இது ஒரேயடியா கழுத்து முதுக்குக்கு வந்தா மாதிரி இருக்கு!?

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா13 ஜன., 2011, 5:39:00 PM

    ஆனா அவரு கடுப்பாகி சூன்யம், கீன்யம்ன்னு வச்சுட்டாருன்னா என்ன பண்றது நமக்கெதுக்கு வம்புன்னு பயந்து எதையாவது எழுதி வைப்போம்ன்னு எழுதிட்டேன்.///
    ஹஹா

    பதிலளிநீக்கு
  21. கழுத்து சுளுக்கெல்லாம் சரி ஆச்சா?

    பதிலளிநீக்கு
  22. அப்பா முடியலடா சாமி

    பதிலளிநீக்கு
  23. இருங்க... நானும் ஆரம்பிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  24. இந்தாளு நெட் கனெக்ஷனைப்புடுங்குங்கப்பா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.