என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 24, 2011

16 தேர்தல் நேரம்

 
கு ண்டும் குழியுமாய் சாலைகள்
அதில் நாளுக்கு மூன்று தடவை வரும்
ஒரேயொரு லொட லொடா பேருந்து

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கண்சிமிட்டும் தெருவிளக்குகள்
ஒரு நாளுக்கு பத்து மணிநேரம் விடுமுறை
எடுத்துக்கொள்ளும் மின்சாரம்

வாரத்திற்கு இருதடவை முறைவைத்து வரும்
அழுக்கு தண்ணீர்
மழை பெய்தால் தற்காலிக குளமாகிவிடும்
பள்ளி மைதானம்

இந்த குறைகளையெல்லாம் தீர்க்கக்கோரி
எங்க தொகுதி எம்.எல்.ஏ.,எம்.பி.-யிடம்
கால்கடுக்க செருப்புதேய நடையாய்
நடந்ததுதான் மிச்சம்
ஒன்றுமே நடக்கவில்லை.

என்ன ஆச்சர்யம்?
திடீரென ஒருநாள் நாங்கள்
கேட்டதெல்லாம் நடந்தது
அட... இப்போதாவது
இந்த அரசியல்வாதிகளுக்கு
புத்திவந்ததே என நினைத்து
திரும்பிப்பார்த்தால்...
ஆம்... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. கூப்பிடு தூரத்தில் இடைத்தேர்தல் இருந்திருந்தால்
    இன்னும் நடந்திருக்கும். . நிறையவும் கிடைத்திருக்கும்.
    நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.இடைத்தேர்தலுக்கு வரவேண்டிய பதிவு, பொதுத்தேர்தல் சமயம் தவறுதலாய் வந்து விட்டதோ?பின்னே...?கடைசி பாரா..? சாத்தியமே இல்லையே..!

    பதிலளிநீக்கு
  3. ரோடு போட்டு, ஓட்டுக்கு காசு தராம ஏமாத்தப்பாக்குறாங்க..மக்களே உஷார்..

    பதிலளிநீக்கு
  4. உண்மையான பதிவு. எல்லாம் மாறும். எப்போதென்றுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. அரசியல்வாதிகளின் உண்மையான முகம் தெரியட்டும் மக்களுக்கு..
    கவிதை அருமை..
    லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

    பதிலளிநீக்கு
  6. அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  7. வோட்டு.... வோட்டு...... வோட்டு.... படுத்தும் பாடு!

    பதிலளிநீக்கு
  8. அருவருக்கத்தக்க செயல்

    பதிலளிநீக்கு
  9. பொதுநலம் னு மக்கள் நம்பி ஒட்டு போடுவாங்க னு தான் இந்த மாற்றம் ...

    பதிவு அசத்தல்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா24 ஜன., 2011, 2:31:00 PM

    அதுக்கும் மக்கள் பணத்தில தான் செய்யிறாங்கள்.

    பதிலளிநீக்கு
  11. கூடவே அமண்டும் கிடைச்சுருக்குமே...

    பதிலளிநீக்கு
  12. எல்லாம் பதவி படுத்தும் பாடு...

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. intha murai yarukku adharavu kodukka poringa?

    A.cheating karuna
    B.The great dictator jeya
    C.Backpiper Black m.g.r

    பதிலளிநீக்கு
  15. இப்படி எந்த வசதியும் செய்து தராமல் ஓட்டு போடச்சொன்னால் எப்ப்டி போடுவதாம்? அட உங்க பதிவுக்குத்தான் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  16. இன்னொரு தளம் ஆரம்பிச்சிருக்கீங்க போல... சொல்லவே இல்லை...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.