என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 05, 2011

65 முதலமைச்சர் தேவை( கண்டிப்பாக 18+ மட்டும்)

இதோ கூப்பிடும் தூரத்தில் தேர்தல் வந்துவிட்டது.நான் முதல்வர், அவன் முதல்வர் என்று அவரவர் வரிந்து கட்டிக்கொண்டு இனிமேல் வருவார்கள். ஆனால்,  நேர்மையான முதலமைச்சர் வேட்பாளர் கிடைப்பது அரிது . முதல்வர் பதவிக்கான தகுதிகளை நான் இப்போது பட்டியலிடப்போகிறேன்.

குடும்பத்திற்கு பதவிகள் வழங்க கூடாது.
டாஸ்மாக் கடைகள்மூலம் பலரின் தாலிகளை அறுத்துஅந்த வருவாயினால்  இலவசங்கள் வழங்க கூடாது.
ஊழல் அறவே கூடாது
தன் கட்சியினர் ஊழல் செய்தால் அந்த ஆட்சியைவிட இது கம்மி, அந்த மாநிலத்தைவிட இது கம்மி என்று சப்பை கட்டு கட்டக்கூடாது.
ஈழத்திற்காக அரைநாள் உண்ணாவிரதம் கூடாது.
சொந்தமாக தொலைக்காட்சி தொடங்க கூடாது
முக்கியமாக தந்தி அடிக்கவே கூடாது

மலை வாசஸ்தலங்களில் படுத்துக்கொண்டு அறிக்கை அரசியல் செய்யக்கூடாது.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அரைவேக்காடுகளை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க கூடாது
நாங்கள் தூய்மையானவர்கள் என்று ஊர் சிரிக்க சொல்ல கூடாது
காலில் விழும் கலாச்சாரம் கூடவே கூடாது.
கூட்டணி தலைவர்களை காக்க வைக்க கூடாது
மந்திரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது

தனக்கு கட்சியிருப்பதையே மறந்து இன்னொரு கட்சி கிளை செயலாளர் போல் நடந்து கொள்ளக்கூடாது
பொது மேடைகளில் நீலிக்கண்ணீர் வடிக்க கூடாது
அய்யகோ இப்படித்தான் அந்த நாட்டில்...என்று உலக வரலாறு கூறல் கூடாது

தொட்டதற்கெல்லாம் புள்ளிவிபரங்கள் கூறக்கூடாது
மக்களோடும்,தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று குழப்பக்கூடாது
சினிமாவில் நடிக்க கூடாது

மகனுக்கு மந்திரி பதவி தரும்பட்சத்தில்  யாரோடும் கூட்டணி என்று சொல்லக்கூடாது
வாக்கெடுப்பு நடத்தி கூட்டணியை முடிவு பண்ணக்கூடாது
சங்க சொத்துக்களுக்கு தன் மனைவி  பெயரை வைக்கக்கூடாது


இன்னும் இருக்கு அடுத்த பதிவில் சொல்றேன்....

இப்படி பட்ட தகுதிகளில் ஒன்று இரண்டு குறைந்தாலும் பரவாயில்லை. அவர் தான் அடுத்த முதல்வர். அப்படி பட்டவரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி-1: மேற்கண்ட கட்டுரை படிக்கும்போது யாராவது உங்கள் மனக்கண்ணில் தோன்றினால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

டிஸ்கி-2: இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம்  நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது. அதான் இந்த  18+ தலைப்பு  . வேறு எதையாவது நினைத்து கொண்டு நீங்கள் வந்ததற்கு நானா பொறுப்பு?


Post Comment

இதையும் படிக்கலாமே:


65 கருத்துகள்:

  1. //இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம் நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது.//

    எப்படிங்க இப்படி? புல்லரிக்குது?

    ஆமா, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? எனக்கு வாக்களர் அடையாள அட்டை இருக்கிறது, ஆனால் என்னுடைய பெயரை வாக்காள பட்டியலில் இருந்து தூக்கி விட்டார்கள், அப்ப நாம் முதலமைச்சர் ஆகலாமா?

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொல்ற குவாலிட்டில ஏதாவது ஒண்ணாவது இருக்கற ஒருத்தராவது கண்ணுல காட்டுறீங்களா?

    பதிலளிநீக்கு
  3. R.Gopi said...

    நீங்க சொல்ற குவாலிட்டில ஏதாவது ஒண்ணாவது இருக்கற ஒருத்தராவது கண்ணுல காட்டுறீங்களா?////
    [ma]எனக்கு தெரியாதால்தானே நண்பா உங்கை போன்றவர்களிடம் கேட்டிருக்கிறேன்.[/ma]

    பதிலளிநீக்கு
  4. இப்படி ஒரு முதல்வர் தமிழகத்துக்கு தேவையா?

    பதிலளிநீக்கு
  5. கனவுகள் காணட்டும் சகோதரா... ஒரு வேண்டு கோள் தங்களின் கருத்துப்பெட்டியை தனி விண்டோவாக வரவைக்க முடியுமா காரணம் கருத்திட்டு விட்டு வாக்கிட மீண்டும் திரும்பி வரவேண்டியிருக்கிறது...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

    பதிலளிநீக்கு
  6. சின்ன புள்ளயாட்டம் கனவெல்லாம் கானபுடாது ஆமாம் ...

    பதிலளிநீக்கு
  7. நீங்க இதுவரை குறிப்பிட்ட தகுதிகளுடன் "ஒருவர்" தான் இருக்கிறார்!ஆனால்...................................தனக்குத் தானே புகழக் கூடாது இல்லையா?அதனால் சொல்ல "நாவு" கூசுது?!

    பதிலளிநீக்கு
  8. அய்யோ அய்யோ!

    நல்லத்தான இருந்தேன் என்னாச்சி எனக்கு!

    பதிலளிநீக்கு
  9. இப்படி சொன்னா தேர்தல ரத்துதான் செய்யணும்

    பதிலளிநீக்கு
  10. //இப்படி பட்ட தகுதிகளில் ஒன்று இரண்டு குறைந்தாலும் பரவாயில்லை. அவர் தான் அடுத்த முதல்வர். அப்படி பட்டவரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

    coming soon.........

    பதிலளிநீக்கு
  11. நான் ரெடி..!! இப்போ இல்ல அடுத்த 5 வருடம் கழிச்சு.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா5 ஜன., 2011, 1:26:00 PM

    அப்புறம் எப்படி ஜெயிக்கிறது

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா5 ஜன., 2011, 1:27:00 PM

    ஓட்டுக்கு 2000 கொடுக்குறவருதான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என ஓட்டாண்டி சொல்கிறார்

    பதிலளிநீக்கு
  14. பிரிச்சு மேஞ்சிட்டீங்க..

    பேசாம, என்னை முதல்வராக்குங்க..

    எல்லாப்பயலையும் நாடு கடத்திடலாம்.. ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  15. இப்படி பிளாகில் பதிவு போடரவங்களும் முதலமைச்சர் ஆக வாய்ப்பு கொடுத்தால் நீங்கதான் அடுத்த முதல்வர்..

    http://wwwsakthistudycentre.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. நான் இத படிச்சதே தப்பு! என்னா நான் 18- ஹி ஹி

    பதிலளிநீக்கு
  17. இதே தகுதிகளுடன் ஒரு ரோபோவே வேணும்னா தயார் பண்ணலாம் ....இப்பிடி எல்லாம் ஒருவர் கிடைக்கும்னு கனவு கூட காண முடியாது பாஸ்

    பதிலளிநீக்கு
  18. சூப்பர் பாஸ் நா nenaicnanuthu neengha soolitingha

    பதிலளிநீக்கு
  19. அப்ப சத்தியமா முதலமைச்சரே கிடைக்கபோரதே இல்ல.....

    பதிலளிநீக்கு
  20. இது கூடாது அது கூடாது எதுவும் கூடாதுனா என்ன அர்த்தம் ?.......

    ஆகா மொத்தம் அரசியலே பண்ணகூடாது ......
    அதானே நீங்க சொல்ல வர்றது

    பதிலளிநீக்கு
  21. டிஸ்கி 2 - வேலிட் பாயிண்ட்.. யாரும் கேள்வி கேக்கமுடியாது..

    பதிலளிநீக்கு
  22. >>>இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம் நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது. அதான் இந்த 18+ தலைப்பு . வேறு எதையாவது நினைத்து கொண்டு நீங்கள் வந்ததற்கு நானா பொறுப்பு

    super

    பதிலளிநீக்கு
  23. ஹி ஹி......கனவில் கூட இப்படிப்பட்ட ஆள் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  24. சங்கவி said... 4 இப்படி ஒரு முதல்வர் தமிழகத்துக்கு தேவையா?[ma]இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.[/ma]

    பதிலளிநீக்கு
  25. ம.தி.சுதா said... கனவுகள் காணட்டும் சகோதரா... ஒரு வேண்டு கோள் தங்களின் கருத்துப்பெட்டியை தனி விண்டோவாக வரவைக்க முடியுமா காரணம் கருத்திட்டு விட்டு வாக்கிட மீண்டும் திரும்பி வரவேண்டியிருக்கிறது...[ma]கனவிலாவது ஆறுதல் பட்டுக்கொள்வோம்[/ma]

    பதிலளிநீக்கு
  26. ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...
    ஆமா, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? எனக்கு வாக்களர் அடையாள அட்டை இருக்கிறது, ஆனால் என்னுடைய பெயரை வாக்காள பட்டியலில் இருந்து தூக்கி விட்டார்கள், அப்ப நாம் முதலமைச்சர் ஆகலாமா?
    [ma]நான் கடந்த சில வருடங்களாக இந்த நாட்டில் இல்லை. என் பெயரையும் தூக்கிவிட்டார்கள் தல...[/ma]

    பதிலளிநீக்கு
  27. கே.ஆர்.பி.செந்தில் said... சின்ன புள்ளயாட்டம் கனவெல்லாம் கானபுடாது ஆமாம் ...[ma]அண்ணாச்சி கனவு கானவாவது விடுங்களேன்[/ma]

    பதிலளிநீக்கு
  28. Yoga.s.FR said... நீங்க இதுவரை குறிப்பிட்ட தகுதிகளுடன் "ஒருவர்" தான் இருக்கிறார்!ஆனால்...................................தனக்குத் தானே புகழக் கூடாது இல்லையா?[ma]அதனால் சொல்ல "நாவு" கூசுது?!///சும்மா தைரியமா சொல்லுங்க பாஸ்.[/ma]

    பதிலளிநீக்கு
  29. விக்கி உலகம் said... அய்யோ அய்யோ! நல்லத்தான இருந்தேன் என்னாச்சி எனக்கு![ma]அதானே?[/ma]

    பதிலளிநீக்கு
  30. THOPPITHOPPI said... இப்படி சொன்னா தேர்தல ரத்துதான் செய்யணும்[ma]அய்யய்யோ...அப்படின்னா வேணாம் மக்களாவது பொழச்சு போகட்டும்[/ma]

    பதிலளிநீக்கு
  31. மாணவன் said... //இப்படி பட்ட தகுதிகளில் ஒன்று இரண்டு குறைந்தாலும் பரவாயில்லை. அவர் தான் அடுத்த முதல்வர். அப்படி பட்டவரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.// coming soon.........///[ma]சீக்கிரம் வரச்சொல்லுங்க மாணவன்[/ma]

    பதிலளிநீக்கு
  32. ஜெகதீஸ்வரன்.இரா said... நான் ரெடி..!! இப்போ இல்ல அடுத்த 5 வருடம் கழிச்சு.[ma]அப்படின்னா 2016-ல நீங்கதான் முதல்வருன்னு சொல்லுங்க...ஆனா அப்பா நிறைய போட்டி இருக்குமே....நம்ம டாக்குடரு விஜய், அன்புமணி, அவரு இவருன்னு[/ma]

    பதிலளிநீக்கு
  33. செங்கோவி said... அப்போ நீங்க என்னைத்தான் முதல்வர் ஆக்கணும். ----செங்கோவி///[ma]எதனை ச.ம.உ. ஆதரவு உங்கட்ட இருக்கு. மைனாரிட்டியா இருந்தாலும் பரவாயில்லை. எப்ப கவர்னரை பார்க்க போகலாம்?[/ma]

    பதிலளிநீக்கு
  34. ஆர்.கே.சதீஷ்குமார் said... அப்புறம் எப்படி ஜெயிக்கிறது//ஓட்டுக்கு 2000 கொடுக்குறவருதான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என ஓட்டாண்டி சொல்கிறார்//[ma]கொடுத்துட்டா போச்சு...எங்கட்டதான் ஸ்பெக்ட்ரம் பணம் நிறையா இருக்கேன்னு கலைஞர் சொல்றாரு தல...[/ma]

    பதிலளிநீக்கு
  35. மொத்தத்தில் இப்போது இருக்கும் யாருக்கும் முதலமைச்சர் ஆகும் தகுதி இல்லை என்று சொல்கிறீர்கள்! மிக சரி!

    பதிலளிநீக்கு
  36. பட்டாபட்டி.... said... பிரிச்சு மேஞ்சிட்டீங்க.. பேசாம, என்னை முதல்வராக்குங்க.. எல்லாப்பயலையும் நாடு கடத்திடலாம்.. ஹி..ஹி///[ma]அப்படியே ஆகட்டும் தல...நீங்க முதல்வர். நான் துணை முதல்வர். என்ன ஓகேயா?[/ma]

    பதிலளிநீக்கு
  37. வைகை said... நான் இத படிச்சதே தப்பு! என்னா நான் 18- ஹி ஹி///[ma]அட இதானா மேட்டரு...கவலைய விடுங்க..கனநீர தொடைங்க வைகை. கள்ள ஓட்டு போடா ஏற்பாடு பண்ணிடலாம்[/ma]

    பதிலளிநீக்கு
  38. சி.பி.செந்தில்குமார் said...

    >>>இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம் நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது. அதான் இந்த 18+ தலைப்பு . வேறு எதையாவது நினைத்து கொண்டு நீங்கள் வந்ததற்கு நானா பொறுப்பு

    சூப்பர்///
    [ma]ஆமாம் தல....இந்த பதிவுலக போலீசுக ரொம்பவே டெண்சனாக்குறாங்க மை லார்ட்.[/ma]

    பதிலளிநீக்கு
  39. சி.பி.செந்தில்குமார் said... 24 this week u will come under 5th place by this post ஒன்லி[ma]பார்க்கலாம் உங்கள் ஆரூடம் பலிக்குதான்னு....[/ma]

    பதிலளிநீக்கு
  40. NKS.ஹாஜா மைதீன் said... ஹி ஹி......கனவில் கூட இப்படிப்பட்ட ஆள் கிடைக்குமா?///[ma]இதையே நினைச்சுக்கு தூங்கினா ஒருவேளை கனவில் வந்தாலும் வரலாம்[/ma]

    பதிலளிநீக்கு
  41. கலையன்பன் said... அப்படியே கனவு காண வெச்சிட்டீங்க... -கலையன்பன்.//.[ma]காசா...பணமா? கனவுதானே....காணுங்க...காணுங்க..[/ma]

    பதிலளிநீக்கு
  42. bandhu said... மொத்தத்தில் இப்போது இருக்கும் யாருக்கும் முதலமைச்சர் ஆகும் தகுதி இல்லை என்று சொல்கிறீர்கள்! மிக சரி!//[ma]நீங்க ஒரு ஆள்தான் சார் என்னை கரக்டா புரிஞ்சு வச்சுருக்கீங்க...[/ma]

    பதிலளிநீக்கு
  43. bandhu said... மொத்தத்தில் இப்போது இருக்கும் யாருக்கும் முதலமைச்சர் ஆகும் தகுதி இல்லை என்று சொல்கிறீர்கள்! மிக சரி!//[ma]நீங்க ஒரு ஆள்தான் சார் என்னை கரக்டா புரிஞ்சு வச்சுருக்கீங்க...[/ma]

    பதிலளிநீக்கு
  44. /ரஹீம் கஸாலி said...

    சி.பி.செந்தில்குமார் said...

    >>>இதுக்கு எதற்கு 18+ என்று தலைப்பு, இது ஹிட்ஸ் கிடைப்பத்தற்க்காக ஒரு மலிவான விளம்பர யுத்தி என்று பதிவுலக காவலர்கள் கச்சை கட்டவேண்டாம். ஏனென்றால், நம் நாட்டில் ஓட்டு போடும் அடிப்படை தகுதி 18 வயதிலிருந்து தானே ஆரம்பிக்கிறது. அதான் இந்த 18+ தலைப்பு . வேறு எதையாவது நினைத்து கொண்டு நீங்கள் வந்ததற்கு நானா பொறுப்பு

    சூப்பர்///
    [ma]ஆமாம் தல....இந்த பதிவுலக போலீசுக ரொம்பவே டெண்சனாக்குறாங்க மை லார்ட்.[/ma]///

    ennai engka vampukku izhukkureengka

    பதிலளிநீக்கு
  45. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  46. ஐயோ ஐயோ. இதுகள படிச்சா பேசாம நானே முதல்வரா வந்திடாம் போல இருக்கு. ........வேண்டாம் பட்டாபட்டி
    எனக்கு முன்னாடி சொல்லிடாரு. நாவேனா துணை முதல்வரா இருக்கேன் .எல்ல பயலுவளையும் கண்டேனர்ல போட்டு மூடி நாடு கடல்ல கொண்டி தள்ளிடலாம் . இது வருங்கால துணை முதல்வரின் ஆலோசனை . ஏன்னா??

    பதிலளிநீக்கு
  47. டிஸ்கி தான் சூப்பர்... உங்க தளம் ரொம்பவும் மெதுவாக இயங்குகிறதே...

    பதிலளிநீக்கு
  48. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... im still 17. so im not coming here [ma]அண்ணே சட்டுபுட்டுன்னு வீட்டுக்கு போங்கண்ணே....உங்க பையன் காலேஜ் போகமாட்டேன்னு அடம் பிடிக்கரானாம்....உங்க வீட்டுக்காரம்மா சொன்னாங்க....[/ma]

    பதிலளிநீக்கு
  49. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... ennai engka vampukku இழுக்குறீங்க[ma]நான் உங்கள சொல்லல மை லார்ட். நீங்க சிரிப்பு போலீசு. நன் சொல்றது ஹிட்சு போலீசு[/ma]

    பதிலளிநீக்கு
  50. பன்னிக்குட்டி ராம்சாமி said... 52 வெளங்கிருச்சு............////[ma]வெளங்கிரும்[/ma]

    பதிலளிநீக்கு
  51. கக்கு - மாணிக்கம் said...

    ஐயோ ஐயோ. இதுகள படிச்சா பேசாம நானே முதல்வரா வந்திடாம் போல இருக்கு. ........வேண்டாம் பட்டாபட்டி
    எனக்கு முன்னாடி சொல்லிடாரு. நாவேனா துணை முதல்வரா இருக்கேன் .எல்ல பயலுவளையும் கண்டேனர்ல போட்டு மூடி நாடு கடல்ல கொண்டி தள்ளிடலாம் . இது வருங்கால துணை முதல்வரின் ஆலோசனை . ஏன்னா??

    [ma]துணை முதல்வர் அலார்ட் மன்ட் முடிஞ்சுருச்சு. நீங்க வேணா வாரிய தலைவரா இருங்க தல...[/ma]

    பதிலளிநீக்கு
  52. Philosophy Prabhakaran said... டிஸ்கி தான் சூப்பர்... [ma]என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...அப்படின்னா மேட்டருல ஒன்னுமில்லையா?[/ma]

    பதிலளிநீக்கு
  53. FARHAN said... இதே தகுதிகளுடன் ஒரு ரோபோவே வேணும்னா தயார் பண்ணலாம் ....இப்பிடி எல்லாம் ஒருவர் கிடைக்கும்னு கனவு கூட காண முடியாது பாஸ்//[ma]எதுக்கும் ஷங்கர்ட்ட ஒரு ஐநூறு கோடி ரூபா இருந்த கொடுங்க...நல்ல ரோபோவா செஞ்சு கொடுப்பாரு[/ma]

    பதிலளிநீக்கு
  54. ABDULMALIK said...

    சூப்பர் பாஸ் நா nenaicnanuthu neengha soolitingha
    [ma]same blood[/ma]

    பதிலளிநீக்கு
  55. பாரி தாண்டவமூர்த்தி said...

    அப்ப சத்தியமா முதலமைச்சரே கிடைக்கபோரதே இல்ல.....
    [ma]அப்படி சொல்லாதீங்க....பட்டாப்பட்டி கோவிச்சுக்க போறாரு....[/ma]

    பதிலளிநீக்கு
  56. அஞ்சா சிங்கம் said... இது கூடாது அது கூடாது எதுவும் கூடாதுனா என்ன அர்த்தம் ?....... ஆகா மொத்தம் அரசியலே பண்ணகூடாது ...... அதானே நீங்க சொல்ல வர்றது[ma]ஆஹா....கண்டு பிடிச்சுட்டீங்களே?[/ma]

    பதிலளிநீக்கு
  57. பதிவுலகில் பாபு said... டிஸ்கி 2 - வேலிட் பாயிண்ட்.. யாரும் கேள்வி கேக்கமுடியாது..[ma]கேள்வி கேட்க கூடாதுன்னுதான் அப்படி ஒரு டிஸ்கி[/ma]

    பதிலளிநீக்கு
  58. முதல்வருக்குள்ள அனைத்து தகுதியும் இல்லாத ஒரு முதல்வர் எதுக்கு. எதுக்கும் நடிகர் அர்ஜீனை கேட்டுப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  59. //ஈழத்திற்காக அரைநாள் உண்ணாவிரதம் கூடாது.// சரியாகச் சொல்லனும்னா: "காலையில டிபன் சாப்பிட்டுவிட்டு, மதியம் சாப்பாட்டு நேரம் வரை நான் உண்ணாவிரதம் இருபேன்னு சொல்லக் கூடாது" ஹா.....ஹா.....ஹா.....ஹா.....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.