என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 27, 2011

48 ஒரு நகைச்சுவை-ஒரு தத்துவம்-ஒரு டவுட்டு-ஒரு விளக்கம் (வானவில் பக்கங்கள்)

ஒரு நகைச்சுவை
ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி இந்தியா வந்து ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான். அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று பயணி கேட்க "தெரியல....ஒரு அஞ்சாறு வருஷம்  கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர். "அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" ன்னு பீத்திக்கிட்டான.
அடுத்து இந்தியா கேட்....
"இது என்ன?"
இது இந்தியா கேட்."
"இதை கட்டி முடிக்க எத்தனை  நாளாச்சு?"
"தெரியல....ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா...ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பீத்திக்கிட்டான் வெளிநாட்டான்.
டாக்சி டிரைவர் கடுப்பாகிட்டன் இருந்தாலும் காட்டிக்கல....
அடுத்து தாஜ் மஹால்
"ஓ.....இதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே....இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"
இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னா....உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான் ன்னு மனசுல நினைச்சுக்கு.....கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.
"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதுக்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சயமா இருக்கு"ன்னு போட்டான் பாருங்க ஒரு போடு....அதோடு வெளிநாட்டான் வாயே திறக்கல.....
----------------------------------------------------------

ஒரு தத்துவம்

கல்யாணம் என்பது பரமபத விளையாட்டு மாதிரி....
சிலருக்கு ஏணியாக ....சிலருக்கு பாம்பாக ....
-----------------------------------------------------------------
ஒரு டவுட்டு.
மன்னிக்க வேண்டுகிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பகுதியில் இடம் பெற்றிருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டு விட்டது.
-----------------------------------------------------------
ஒரு விளக்கம் 

குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு

டிஸ்கி: என் மனதில் தோன்றுவதை அவ்வப்போது வானவில் பக்கங்கள் என்ற பெயரில் பகிர்ந்து கொள்வேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


48 கருத்துகள்:

  1. ஃஃஃஃகுடியரசு-முடியரசு ஃஃஃ

    மிக மிக அருமை...

    பதிலளிநீக்கு
  2. சுடு சோறு எனக்கு தானே....

    பதிலளிநீக்கு
  3. அடடா.. நம்ம சுதா முந்திக்கிட்டாரா? சரி பரவால்ல அவரும் நம்ம ஆளுதான்

    பதிலளிநீக்கு
  4. ஆமாய்யா ஆமாம் உங்களுக்குத்தான்..

    பதிலளிநீக்கு
  5. ஹாய் சீபி தம்பிகிட்ட மாட்டிகிட்டியா...

    பதிலளிநீக்கு
  6. >>>அதேபோல....விபச்சாரியாக நடிப்பதாக இருந்தால் என்ன செய்வார்கள்?

    அது சரி.. இன்னைக்கு சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கீட்டீங்க போல.. எத்தனை பேரு இதுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்போறாங்களோ...ஹி ஹி

    பதிலளிநீக்கு
  7. யோவ் .. யார்யாருக்கு தம்பி.. உங்களை விட எனக்கு 5 வருஷம் வயசு கம்மி.. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. சி.பி.செந்தில்குமார் said... 7

    >>>அதேபோல....விபச்சாரியாக நடிப்பதாக இருந்தால் என்ன செய்வார்கள்?

    அது சரி.. இன்னைக்கு சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கீட்டீங்க போல.. எத்தனை பேரு இதுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்போறாங்களோ...ஹி ஹி/////
    என்ன தல.....தம்பிய பயமுறுத்துறீங்க....

    பதிலளிநீக்கு
  9. ஃஃஃஃயோவ் .. யார்யாருக்கு தம்பி.. உங்களை விட எனக்கு 5 வருஷம் வயசு கம்மி.. ஹி ஹிஃஃஃஃ

    சீபி அது அடுத்த பிறப்பில...

    பதிலளிநீக்கு
  10. தத்துவம், டவுட்டு, விளக்கம் மூன்றும் சூப்பர்
    தொடர வேண்டி வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  11. @ ரஹீம் கஸாலி... என்ன சகோதரா ஏதாச்சும் சண்டையிண்ணா மட்டும் தான் நம்ம புளொக்கிற்கு வருவிங்க போல இருக்கே...

    பதிலளிநீக்கு
  12. மொத்தத்துல மதிசுதா, சி.பி. ரெண்டு பேருக்கும் நான்தான் தம்பி

    பதிலளிநீக்கு
  13. வந்துட்டு கமன்ட் மட்டும் போட்டுட்டு தப்பிச்சடலாம்ன்னு நினைக்காதீங்க....ஓட்டு போட்டு போங்க....இல்லாட்டி வாயில ரத்தம் கக்குவீங்க....சொல்லிட்டேன்

    பதிலளிநீக்கு
  14. தமிழ்மணப்பட்டை எங்கே வருகுதே இல்ல..

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மணப்பட்டை எங்கே வருகுதே இல்ல..

    அது ரஜினி மாதிரி எப்ப வரும் எப்ப போகும்ன்னு யாராலும் சொல்ல முடியாது

    பதிலளிநீக்கு
  16. உள்ளேன் ஐயா,... :-))

    தமிழுக்கு பெருமை........

    பதிலளிநீக்கு
  17. டவுட்டை தவிர்த்து இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  18. நகைச்சுவை சூப்பர் நண்பா..டவுட் தேவையில்லாதது, ஏன்னா அதுக்கு பதில் உங்களுக்கே தெரியும்..ஹி..ஹி..வானவில் நல்லாயிருக்கு..அடிக்கடி எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க டவுட்டு தூக்கபடுகிறது.

    பதிலளிநீக்கு
  20. செங்கோவி said... நகைச்சுவை சூப்பர் நண்பா..////
    நகைச்சுவை மட்டும் நம்ம கை சரக்கில்லை. என்றோ படித்தது. இன்று பகிர்ந்துள்ளேன் நண்பா...

    பதிலளிநீக்கு
  21. பேயாக நடிக்க எங்க பயிற்சி எடுப்பாங்க ...........

    பதிலளிநீக்கு
  22. தத்துவம், டவுட்டு, விளக்கம் மூன்றும் சூப்பர் வெற்றிபெற.. வாழ்த்துக்களுடன்...

    See,

    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  23. உங்களுக்கு விவகாரமான டவுட் எல்லாம் வருதுங்க. சரி என்ன முடிஞ்ச அளவு கிளியர் பண்றேன்.

    குதிரை சவாரி, கத்திசண்டை எல்லாம் நிஜமாகவே செய்யப்படுவது. ஆகவே பயிற்சி தேவை. ஆனால்...

    பதிலளிநீக்கு
  24. குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
    மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
    மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு

    hahahahahahah

    பதிலளிநீக்கு
  25. குடியரசு - முடியரசு ----ரெண்டுமே தொல்லையரசுக்களே

    பதிலளிநீக்கு
  26. நறுக்குன்னு நாலு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

    பதிலளிநீக்கு
  27. டவுட்டு

    பத்த வெச்சிட்டியே பரட்டை

    பதிலளிநீக்கு
  28. பதிவு அருமை.

    உங்க கமாண்ட்ஸ் சூப்பர்

    பதிலளிநீக்கு
  29. வானவில் பக்கங்கள் அருமை. இனி அடிக்கடி வரட்டும் இன்னும் கொஞ்சம் வண்ணங்கள் சேர்த்து தாருங்கள்..

    பதிலளிநீக்கு
  30. >>>ரஹீம் கஸாலி said... 13

    மொத்தத்துல மதிசுதா, சி.பி. ரெண்டு பேருக்கும் நான்தான் தம்பி

    எங்கள் அண்ணன் கசாலி இப்படி கூறியது எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.. அய்யகோ...நான் உங்களை விட 6 வயது இளையவன் அண்ணே

    பதிலளிநீக்கு
  31. சி.பி.செந்தில்குமார்

    எங்கள் அண்ணன் கசாலி இப்படி கூறியது எனக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.. அய்யகோ...நான் உங்களை விட 6 வயது இளையவன் அண்ணே//////

    அண்ணே விளையாடாதீங்க....சீக்கிரம் போங்கண்ணே....உங்க பையனை காலேஜ்லேர்ந்து அழைத்துவரனுமாம்

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா27 ஜன., 2011, 4:19:00 PM

    ////குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
    மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
    மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு /// அருமை அருமை

    பதிலளிநீக்கு
  33. குடியரசு-முடியரசு--நல்லாச்சொன்னீங்க!
    வாழ்க்கையே ஒரு பரம பத விளையாட்டுதானே!
    நன்று.

    பதிலளிநீக்கு
  34. குடியரசு-முடியரசு--நல்லாச்சொன்னீங்க!
    வாழ்க்கையே ஒரு பரம பத விளையாட்டுதானே!
    நன்று.
    ஓட்டுப் போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
  35. ////////குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்?
    மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
    மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு ///////

    மக்களிடம் ஓட்டை விலைக்கு வாங்கின்னு இருந்திருக்கலாம்.... ஹி...ஹி...!

    பதிலளிநீக்கு
  36. வானவில்லு நல்லா அழகா இருக்கு நண்பா, கண்டிப்பாக தொடரவும் ...

    பதிலளிநீக்கு
  37. இந்த பதிவை படித்துவிட்டு வாக்களித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கமும், உற்சாகமும் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. இந்த பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இந்த வானவில் பக்கங்களை தொடரலாம் என்றிருந்தேன். நான் எதிர் பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்ததால் இந்த வானவில் பக்கங்கள் இன்னும் மெருகுடன் அவ்வப்போது தலை காட்டும் என்பதை இதன் மூலம் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. // என் மனதில் தோன்றுவதை அவ்வப்போது வானவில் பக்கங்கள் என்ற பெயரில் பகிர்ந்து கொள்வேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். //

    ம்ம்ம்... பல்சுவைப் பதிவுகளா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  41. நல்லா இருக்கு பாஸ் உங்க வானவில்! தத்துவம் அருமை! ஆமா டவுட்ட தூக்கிட்டீங்க, அப்படி என்னதான் எழுதினீங்க! எனக்கு இப்போ உங்க டவுட்டு மேலேய டவுட்டு வந்துட்டுது! ஹி ....... ஹி .........



    இப்பதிவுக்கு நான் 14 வதாக வாக்களித்து இருந்தேன். பதிவை இப்போதுதான் படிக்கிறேன்! நண்பா உங்களுக்கும் நண்பர்களது வாக்குகள் அவசியம்! எம் அனைவருக்கும் அது அவசியம். நான் இதுவரை இன்ட்லியில் உங்களுடைய இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகளுக்கு வாக்களித்து உள்ளேன்! ஆனால் நீங்கள் எனக்கு எத்தனை வாக்குகள் போட்டுள்ளீர்கள்? மனசுக்கு கஷ்டமாக இருக்கு அதுதான் எழுதினேன்!!



    நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  42. வந்து சுத்திப்பார்த்தாச்சு...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.