என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜனவரி 23, 2011

20 சைக்கிள்

கல்லூரி முதல் நாள்.புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் ராக்கிங் செய்து கொண்டு இருந்தார்கள். புதிதாய் சேர்ந்த மாணவர்களான கணேசும், சிவாவும் உள்ளே நுழைந்தார்கள். சீனியர்  மாணவரான தன் சகாக்களுடன் இருந்த விக்னேஷ்  அவர்களை அழைத்தான்.
"ரெண்டு பெரும் இங்கே வாங்க...."
கணேசை பார்த்து கேட்டான்.
உன் பேரு என்ன?"
"கணேஷ்"
"தசாவதாரம் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"
"கே.எஸ்.ரவிக்குமார்ண்ணே"
"குஸ்பு ஹஸ்பன்ட் பேரு என்ன?"
"சுந்தர்.சி"
"தமிழ்நாட்டோட துணை முதலமைச்சர் பேரு  என்னன்னுதேரியுமா?"
"மு.க.ஸ்டாலின்"
"ஏண்டா...இவ்வளவு பேரையும் இன்ஷியலோட சொல்றே....உன் பேர மொட்டையா சொல்றே....உங்கப்பா பேரு என்ன?"
"கந்தசாமி"
"ஆங்.....இனிமே உன் பேரை யாரு கேட்டாலும் இன்ஷியலோடதான் சொல்லணும் சரியா"
இப்போது சிவா....
"உன் பேரு என்ன"
"ஆர்.சிவா"
"யாரு உன் இன்சியலை கேட்டது. உங்கப்பா பெரிய கலக்டரு.....எந்த ஊரு உனக்கு"
"அரசர்குளம்."
"பெரிய அமெரிக்கா மேப்புல இருக்கதுக்கு....அது எங்கே இருக்குன்னு சொல்லு?"
"புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கிக்கு  பக்கம்"
"அவனுக்கு....."
""அவனும் எங்க ஊருதான்"
"நீங்க நல்லா சைக்கிள் ஓட்டுவீங்களா?"
"ஓட்டுவோம்..."என்றார்கள் கோரசாக....
"முதல்ல சிவா...நீ ஓட்டு பார்ப்போம்"
"சைக்கிள் எங்கேன்னே...."
"ஆங்...இப்பத்தான் ஆர்டர் போட்டிருக்கு....சைக்கிள்லாம்   தரமாட்டோம். சும்மா சைக்கிள் இருக்கிறதா நெனைச்சுக்கு ஓட்டிக்காட்டு"
சிவாவும் கையையும் காலையும் ஆட்டிக்கு சைக்கிள் ஓட்டுவது போல சுத்தி வந்தான்.
"போதும் நிறுத்து...சைக்கிள கனேஷ்ட்ட கொடு....அவன் ஓட்டட்டும். நீ என்ன பண்றேன்னா....நேர அந்த கிளாஸ் ரூம் வாசல் வரை போயி திரும்பி வரணும்"
"சரிண்ணே...." என்றவாறு சைக்கிள் ஒட்டிக்கொண்டு போனவன் திரும்பி வரவேயில்லை.
"எங்கேடா சிவா. உன் பிரண்டு ஆளை காணாம்?"
"தெரியலேன்னே...."
"எங்களையே ஏமாத்திட்டு போயிட்டானா....நாளைக்கு வரட்டும் வச்சுக்கிறேன்"
-----------------------------------------------------
ஹாஸ்டல்....
"டே கணேஷ்....நீ இப்படி பண்ணிருக்க கூடாது....அவங்க உன் மேல கடுப்பா இருக்காங்க...நாளைக்கு என்ன பண்ண போறாங்களோ...."
"ஒன்னும் பண்ண முடியாது. நான் எப்படி சமாளிக்கிறேன்னு பாரு"
"எப்படிடா...."
"நாளைக்கு பாரு...."
-------------------------------------------------

அடுத்த நாள்....
இருவரும் கல்லூரிக்குள் நுழையும் போது விக்னேஷ் மறித்தான்.
"வாடா....கணேஷு....நேத்து எங்களுக்கே டிமிக்கி கொடுத்துட்டே...."
"அண்ணே...நான் உங்களப்போயி ஏமாத்த முடியுமான்னே."
"அப்பறம் ஏண்டா..போனவன் திரும்பி வரல..."
"போங்கண்ணே....நீங்க ரொம்ப மோசம். கொடுத்ததுதான் கொடுத்தீங்க ஒரு நல்ல சைக்கிளா கொடுக்க கூடாதா"
"என்னடா சொல்றே? நாங்க எப்ப சைக்கிள் கொடுத்தோம்?"
"சைக்கிள் கொடுத்ததா நெனைச்சுக்கு ஓட்டிட்டு போக சொன்னீங்களா...அந்த சைக்கிள் பழைய சைக்கிள்ன்னே....நானும் ஓட்டிக்கு போயி திரும்பலாம்ன்னு நெனைச்சு பிரேக் பிடிக்கிறேன். சைக்கிள்ள பிரேக்கே இல்லை.நிப்பாட்டவும் முடியல...நேரா போயி அந்த சுவத்துல மோதிட்டேன். இங்கே பாருங்க நல்ல காயம்"
"பரவாயில்லையே சமாளிச்சுட்டியே....அரசர்குளத்து காரங்க  புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்." என்றான் விக்னேஷ். சிவா வாயடைத்து போய் நின்றான்...

டிஸ்கி: எப்படியோ எங்க ஊர் காரங்களை புத்திசாலியா காட்ட ஒரு சிறுகதை எழுதிட்டேன். 

நன்றி டிஸ்கி: கடந்த வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் பாலாவின்  பக்கங்கள் பாலா அவர்களுக்கு நன்றி




Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. யாரங்கே... டாக்டர் வலைப்பூவில் வடை வாங்கி இருக்கிறோம்... இன்னும் ஏன் அமைதி...
    ம்ம்ம்ம்ம்ம்.. ஆரம்பியுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. @பாரத்... பாரதி...

    ஞாயிறு காலையில் யாரும் இருக்க மாட்டங்க

    பதிலளிநீக்கு
  4. கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (நீங்க காலேஜ் போயிருக்கீங்க...ஒத்துக்கிறோம்... நாங்களும் போயிருக்கோம், ஏற்றுக்கொள்ளுங்கள்.)

    பதிலளிநீக்கு
  5. //எல் கே said...//

    தினம் ஒரு படம் போடுறீங்களே...இந்த படம் சுமார் தான்.. வரைந்தது யாரோ?

    பதிலளிநீக்கு
  6. பாரத்... பாரதி... said...

    கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (நீங்க காலேஜ் போயிருக்கீங்க...ஒத்துக்கிறோம்... நாங்களும் போயிருக்கோம், ஏற்றுக்கொள்ளுங்கள்.)////
    [co="yellow"]நான் கல்லூரிக்கு நண்பர்களை பார்க்கத்தான் போயிருக்கிறேன். நான் பத்தாம் வகுப்பை தாண்டாத மக்கு மாணவன்.[/co]

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்.. காலேஜுல சீனியர்கிட்ட நல்லா நாலு அப்பு வாங்கிட்டு, இங்க வந்து பீலா விடுறதப் பாத்தியா?

    பதிலளிநீக்கு
  9. அரசர்குளத்து காரங்க புத்திசாலின்னு ஒத்துக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அதுக்கப்புறம் சீனியர்கள் அந்தப் பசங்களைப் போட்டு பின்னு பின்னுனு பின்னி இருப்பாங்களே.. அதைப் பற்றி ஏன் எழுதவில்லை..?? ஒரு ஊர்க்காரர்கள் என்ற பாசமா..??

    பதிலளிநீக்கு
  11. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  12. பத்தாவது தேறாத மக்கு பையன் ,,DR .ஹசாலி ,,இதுதான் அரசர்குளம் குசும்பு ,,

    பதிலளிநீக்கு
  13. parattugal nalla pasumaiyana ninaivukal ithupondra nalla padaippukalai thodarnthu veliyiduga. pasumaiyana ninivukal needukkumallava ?

    பதிலளிநீக்கு
  14. அரசர்குளமா?அறிவாளி குளமா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.