என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 07, 2011

41 நாங்களும் பல்பு வாங்கியிருக்கோம்ல....

பல்பு வாங்காத பதிவர் பதிவரே இல்லை என்ற புதுமொழி உருவாகிவிடுமோ என்னுமளவிற்கு இப்போது எல்லா பதிவர்களும் பல்பு வாங்கிய கதையை சிலாகித்து எழுதிவருகிறார்கள். சரி நம்மட்டையும்தான் இது மாதிரி பல்பு வாங்கிய கதை நூற்றுக்கணக்கில் இருக்கே...அதுல ஒன்ன எடுத்து விட்டுட்டு பல்பு வாங்கிய பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி களத்துல குதிச்சுட்டேன்.
சமீபத்துல நடந்த கதைய சொல்லுறேன். நான் வாங்கிய பல்பு எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க....
கடந்த வாரம் நானும் என் நண்பனும் ,என் நண்பனின் குழந்தை பிறப்பு சான்றிதல் வாங்க புதுக்கோட்டை நகராட்ச்சிக்கு போனோம். முதலில் பைக்கில் போவதாகத்தான் முடிவு. திடீரென்று மழை பேஞ்சதால கார்ல போனோம். இதுல இன்னொரு விஷயத்தை சொல்லி ஆகணும்.
நான் இப்ப உபயோக படுத்துவது பி.எஸ்.என்.எல்.- என் நண்பன் பிரிபெய்டு   கார்டு. இதுல இருக்க பலன் என்னன்னா ஏதாவது ஒரு லேன்ட்லைன் நம்பருக்கு நம்ம செல்லுல சார்ஜ் இருக்க வரைக்கும் காச பத்தி கவலைப்படாம மணிக்கணக்குல இலவசமா அரட்டை யடிக்கலாம். அதுனால, நானும் ஒரு கார்டு வாங்கிப்போட்டு அதுல எங்க வீட்டு நம்பர இலவசமா பேச பதிஞ்சு வச்சுருக்கேன். என்னைக்காவது அத்தி பூத்தமாதிரி வீட்டைவிட்டு வெளிய போனா...அந்த நம்பரைத்தான் எடுத்துட்டு போவேன். அன்னைக்கும் புதுக்கோட்டைக்கு அந்த நம்பராத்தான் எடுத்துட்டு போனேன். போகும் வழியெல்லாம் ஒரே ரன்னிங் கமெண்டரிதான்.
இப்ப மழை பெய்யுது, புதுக்கோட்டையில போயி இறங்கிட்டோம், இப்ப டீ குடிக்கிறோம், மறுபடி  கார்ல ஏறி நகராட்சிக்கு போறோம்ன்னு விடாம பேசிட்டு வாரேன். என் நண்பன்(இது பிரி பெய்டு கார்டு இல்லை. என் நிஜமான ஃபிரண்டு ) கடுப்பாகி
"டே...வைடா..நாயே ...இலவசமா கொடுத்தாலும் கொடுத்தாங்க...இப்படி போட்டு தாளிக்கிறே, உன்னாலதாண்டா கவர்மெண்டுக்கு நட்டம்" ன்னு கத்தினான்.
"ஆமா, டெலிபோன்ல ராசாவால வராத நட்டம், நான் ஒரு மணிநேரம் பேசறதுலதான் வரப்போகுது வேலைய பாரு" ன்னு  அந்த நேரத்திலும் அசராம பாலிடிக்ஸ் பேசினேன்.
அதுக்கப்புறம் அவன் ஒண்ணுமே பேசல..ஒருவேளை என் போனுக்கும் வாயிருந்தா அவன் சொன்னதத்தான் சொல்லிருக்குமோ என்னவோ...
சரி விசயத்துக்கு வருவோம்....ஒரு வழியா நகராட்சியில் எல்லா வேலையும் முடிஞ்சு கிளம்பும் நேரத்தில் மறுபடியும் வீட்டுக்கு போன் போட்டு புதுக்கோட்டையில ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேட்டு தொலைஞ்சுட்டேன். அப்பத்தாங்க நமக்கு ஏழரை ஆரம்பிச்சுச்சு.
உடனே என் மனைவி "நம்ம வீட்டு டாய்லட்டுல ரெண்டு நாளா லைட் எரியல....வரும்போது ஒரு இருபது வாட்ஸ் CFL பல்பு ஒன்னு வாங்கிட்டு வாங்க...நல்ல நயம் பல்பா வாங்குங்க....லோக்கல்ல வாங்கி சும்மா சும்மா அடிபட்டு போயிடுது" ன்னு சொன்னாள்.
அப்புறம் என்ன,  நல்ல எலக்ட்ரிக் கடையில கார நிப்பாட்டி 120-ரூபாய்க்கு ஒரு CFL பல்பு வாங்கிட்டு போனேன்.
இதுதாங்க நான் பல்பு வாங்கிய கதை. எப்படிங்க இருக்கு?

டிஸ்கி: CFL பல்பின் படம் அவசரத்துக்கு கிடைக்கல...அதான் சாதா பல்பு படம் போட்டு சமாளிச்சிருக்கேன். மன்னிச்சுக்கங்க....



Post Comment

இதையும் படிக்கலாமே:


41 கருத்துகள்:

  1. ஏம்பா சாமி ஏதோ சொல்ல வரீங்க-ன்னு பதிவை படிக்க ஆரம்பித்தேன். பதிவும்
    இன்ட்ரஸ்டிங்கா போச்சு..
    ஆனா கடைசியில் குடுத்தீங்க பாரு ஒரு பல்பு ஐயோட சாமி!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நீங்களும் பல்பு வாங்கிட்டீங்களா பார்த்துகுங்க தல கரன்ட் பில் எகிறிடபோகுது

    பதிலளிநீக்கு
  3. பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு
    ஐயோட சாமி

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ஒரு அரிய சந்தேகம். இந்த மாதிரி மாட்டிக்கொண்ட விஷயத்தை எல்லாம் பல்பு வாங்குறதுண்ணு சொல்றாங்களே? பல்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

    பதிலளிநீக்கு
  5. ????? ????? ??? ????? ?????? ????????????..... ???? ?????????????..................

    பதிலளிநீக்கு
  6. பாலா said...

    எனக்கு ஒரு அரிய சந்தேகம். இந்த மாதிரி மாட்டிக்கொண்ட விஷயத்தை எல்லாம் பல்பு வாங்குறதுண்ணு சொல்றாங்களே? பல்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?////

    [CO="YELLOW"][SI="4"]அதான் தல..நமக்கும் புரியல...ஆனா நான் நிஜமாகவே பல்பு வாங்கிய கதையைத்தான் எழுதியிருக்கேன்.[/SI][/CO]

    பதிலளிநீக்கு
  7. இதுக்பேர்தான் பல்பு வாங்கறதா?

    பதிலளிநீக்கு
  8. சரி பல்பு வாங்கியத சொல்லீட்டிங்க.. அப்புறம் என்னமோ ”ஜோதீ”னு காதில விழுந்ததே..அத பற்றியும் சொல்லுங்க..ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  9. பட்டாபட்டி.... said...

    சரி பல்பு வாங்கியத சொல்லீட்டிங்க.. அப்புறம் என்னமோ ”ஜோதீ”னு காதில விழுந்ததே..அத பற்றியும் சொல்லுங்க..ஹி..ஹி

    [ma]அய்யய்யோ....அத மட்டும் சொல்லமாட்டேன்....அப்புறம் வெறும்பய, கோவிச்சுக்குவார்[/ma]

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் வாங்கிய பல்புன்னு படிச்சா எங்களுக்கு தான் பல்பா...

    பதிலளிநீக்கு
  11. அமுதா கிருஷ்ணா said...

    நீங்கள் வாங்கிய பல்புன்னு படிச்சா எங்களுக்கு தான் பல்பா...[co="yellow"]ஆமா,ஆமா அதிலென்ன சந்தேகம்?[/co]

    பதிலளிநீக்கு
  12. நண்பரே நீங்கள் வாங்கியது சின்ன பல்ப்புதான். தேர்தல் வரட்டும் அப்பா பாருங்க பெரிய பல்ப்புலாம் பாப்பிங்க

    பதிலளிநீக்கு
  13. பல்பு வாங்கினேன் இப்படி எங்க ஃபியீசை பிடுங்கிடீங்களே!

    பதிலளிநீக்கு
  14. நல்ல பல்பாத்தான் தெரியுது!

    பதிலளிநீக்கு
  15. பல்பு நாங்கதான் இப்போ வாங்கிருக்கோம்

    பதிலளிநீக்கு
  16. மென்மேலும் பல்புகள் பல பெற்று பெருவாழ்வு வாழ்க!!

    பதிலளிநீக்கு
  17. இத படிச்ச எனக்கு தான் பெரிய பல்ப்

    பதிலளிநீக்கு
  18. ஏன் sodium lamp வாங்க வேண்டியது தானே?

    பதிலளிநீக்கு
  19. Blogger பட்டாபட்டி.... said...

    சரி பல்பு வாங்கியத சொல்லீட்டிங்க.. அப்புறம் என்னமோ ”ஜோதீ”னு காதில விழுந்ததே..அத பற்றியும் சொல்லுங்க..ஹி..ஹி

    repeattu

    பதிலளிநீக்கு
  20. பல்பு வாங்குன கதையைச் சொல்றேன்னுட்டு, இப்படி எங்களுக்கு பல்பை கொடுத்திட்டீங்களே..க்லக்கல்.

    பதிலளிநீக்கு
  21. ஏதோ எதிர்பார்த்து பதிவை படிச்சிட்டு...அட... கடைசியில....இது.... நான் உங்களிடம் பல்பு வாங்கின கதையாக போய்விட்டதே..! இப்படி பண்ணீட்டிங்களே... சகோ...!

    பதிலளிநீக்கு
  22. [im]http://www.freeimagehosting.net/uploads/a6b04a3a43.jpg[/im]
    [si="4"][ma]நான் பல்பு வாங்கிய கதையை படிக்கவந்து ஏமாந்து பல்பு வாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி[/ma][/si]

    பதிலளிநீக்கு
  23. பல்பு வியாபாரம் எப்படிங்க போகுது?

    பதிலளிநீக்கு
  24. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு முதல்ல ஒரு பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி அந்த பதிவுக்கான மற்றவர் கருத்து முதல் 5ஐ படிப்பேன்.. அப்படி படித்ததில் நீங்கள் உள்கூறிய கருத்து புரிந்துவிட்டது.. உங்க பல்ப்ப என்கிட்ட விக்கமுடியாது.. ஹை ஹை..

    பதிலளிநீக்கு
  25. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு முதல்ல ஒரு பதிவ படிக்கிறதுக்கு முன்னாடி அந்த பதிவுக்கான மற்றவர் கருத்து முதல் 5ஐ படிப்பேன்.. அப்படி படித்ததில் நீங்கள் உள்கூறிய கருத்து புரிந்துவிட்டது.. உங்க பல்ப்ப என்கிட்ட விக்கமுடியாது.. ஹை ஹை..

    பதிலளிநீக்கு
  26. ஏங்க ஒரு சின்னபல்ப் வாங்கினதுக்கே இப்படில்லாம் புலம்பினா எப்படீங்க. இன்னும் எவ்வளவோ இருக்கே.:))))

    பதிலளிநீக்கு
  27. பல்ப் வாங்கறதுன்னா என்னான்னு இப்பத்தான் எனக்குப் புரிந்தது!

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. பல்பு நல்லா எரியுதா...அதைச் சொல்லவே இல்லையே...!!

    பதிலளிநீக்கு
  30. நல்லதொரு மொக்கை... ஒரே ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அதை நீங்கள் விவரித்த விதம் அருமை...

    பதிலளிநீக்கு
  31. //டிஸ்கி: CFL பல்பின் படம் அவசரத்துக்கு கிடைக்கல...அதான் சாதா பல்பு படம் போட்டு சமாளிச்சிருக்கேன். மன்னிச்சுக்கங்க.... //

    ********

    பல்பு எரியுதா?

    அப்டியே அழுக்கா இருந்தா அப்டியே விட்டுடுங்க... என்னடா, அழுகா இருக்கேன்னு தொடச்சுட போறீங்க... அப்புறம் “ஆலம்பனா”ன்னு சொல்லிட்டே அசோகன் மாதிரி ஒரு பூதம் வந்துட போகுது!!!

    பதிலளிநீக்கு
  32. தல பலப் வாங்குன கதை சொல்லபோரன்னு நம்பி இந்த பக்கம் வந்த எனக்கு பலப் காட்டிட்டியே தல அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்

    பதிலளிநீக்கு
  33. நல்ல பல்பு...... ஆனா ஷாக்தான் கொஞ்சம் அடிக்குது

    பதிலளிநீக்கு
  34. நல்ல நகைசுவை. தொடருங்கள் அன்பரே.பசுபதி

    பதிலளிநீக்கு
  35. பல்பின் ஆரம்பம் ஒரு பல்பிளிருந்தே - இது எப்படி இருக்கு!?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.