என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 03, 2011

27 அந்த இரவில்-சிறுகதை

 பஸ்சுக்காக காத்திருப்பது என்பது கொடுமை. அதுவும் இரவு நேரத்தில் என்றால் இன்னும் கொடுமை. அதிலும் பஸ் ஸ்டாப் சுடுகாட்டுக்கு அருகில் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படித்தான் அன்று சிவா மாட்டிக்கொண்டான்.

'ஐயோ கடவுளே இந்த பாழப்போன பஸ் ஸ்டாப்பா சுடுகாட்டுக்கு பக்கத்திலா கட்டி தொலைப்பாங்க, மணி வேற ஒன்பதுக்கு மேல ஆச்சே...' என்று நினைத்துக் கொண்டே சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான் சிவா.

ஆள் அரவமே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. பக்கத்தில் சுடுகாட்டில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. ஈன சுரத்தில் நாய்களின் ஊளை சப்தம் எங்கிருந்தோ வந்து அந்த சூழ்நிலையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.
முடிந்தவரை பார்வையை சுடுகாட்டுப்பக்கம் திருப்பாமல் இருந்தான் சிவா. இருந்தாலும் சுடுகாட்டிலிருந்து கிளம்பும் புகை பல உருவங்களில் வந்து இவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

மணியை பார்த்தான் பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
'ஒன்பது மணிக்கு பஸ் வருமென்று சொன்னார்களே இன்னும் வரக் காணோமே?' - என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை ஒரு சப்தம் கலைத்தது. காதை கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தான்.
யாரோ மூச்சு விடும் சப்தம். இல்லை இல்லை மூச்சிரைக்கும் சப்தம்.

'இங்கு யார் இருக்கிறார்கள். இது நமது பிரமையாக இருக்கும்' என்று நினைத்து கொண்டிருக்கையில், சப்தம் இன்னும் அருகாமையில் கேட்டது. இவனுக்கு சப்த நாடியும் ஒடிங்கிவிட்டது. மனம் திக்திக் என்று அடித்துக்கொண்டது.
ஓரளவு மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு திரும்பிபார்த்தான்.
யாரையும் காணோம்.
இப்போது அந்த சப்தம் நின்றிருந்தது.
சில நொடிதான் இருக்கும் மீண்டும் அதே சப்தம். இன்னும் வித்தியாசமான ஒலியுடன். கீழே குனிந்து பார்த்தான் ஒரு கல் கிடந்தது. அதை கையில் எடுத்து சப்தம் வந்ததிசையை நோக்கி பலம்கொண்டமட்டும் வீசினான். கல்வீசிய திசையிலிருந்து
ஒரு நாய் ஓடியது, வாயில் எதையோ கவ்வியபடி.

'ச்சே... கேவலம் ஒரு நாய் நம்மை இந்தப்பாடு படுத்திவிட்டதே..?'
அப்போது தூரத்தில் வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது.
'கடவுளே அது பஸ்ஸா இருக்கணுமே?'
தூரத்தில் பஸ் ஆடி அசைந்து வந்தது.
கைகாட்டினான். நிற்பதுபோல தெரியவில்லை. இருந்தாலும் மெதுவாகத்தான் வந்தது.
ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் வேகமாக ஏறினான்.

முகம் வியர்த்திருந்தது.
கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு ஏறிட்டுப் பார்த்தவனுக்கு மூச்சே நின்று விடுவதுபோல் இருந்தது.
டிரைவரே இல்லாமல் பஸ் போய்க்கொண்டிருந்த்தது. அப்போதுதான் கவனித்தான், பஸ்சில் ஒரு ஆள்கூட இல்லை.
'கடவுளே டிரைவர் கூட இல்லாமல் பஸ் எப்படி ஓடும்? இது நிச்சயமாக காத்து கருப்பு வேலைதான்'
பஸ்சிலிருந்து குதிக்க நினைத்து எழுந்தான். பஸ் தானாக நின்றது.
'நாம் இறங்க வேண்டும் என்று நினைத்ததும் பஸ் தானாகவே நிற்க்கறதே...சந்தேகமே இல்லை... பேயோட வேலைதான்'

அதே நேரம் கீழிருந்து ஒரு சப்தம் வந்தது.
"யார்யா அது. பஸ்சுக்குள்ளே... வண்டி செல்ப் எடுக்காம நாங்களே வேர்க்க விறுவிறுக்க தள்ளிக்கு வாரோம். நீ என்னடான்னா... சொகுசா உக்கார்ந்துக்கு வாறே....முதல்ல இறங்குயா கீழே!"


Post Comment

இதையும் படிக்கலாமே:


27 கருத்துகள்:

  1. ஹி ஹி ஹி .அனுப கதையா ?

    பதிலளிநீக்கு
  2. பிரமாதம் நல்லா இருக்கு ....................

    பதிலளிநீக்கு
  3. இது கதையா:) அப்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. சாரி பாஸ் , ரெண்டு நாள் லீவ் அதான் உங்க லேட் ..........

    நல்லா கிளப்புறாங்கையா பீதிய

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3 ஜன., 2011, 12:12:00 PM

    நல்ல பதிவுதான் கதையில் நல்ல எழுத்து நடை மிளிர்கிறது வாரம் ஒண்ணு போடுங்க

    பதிலளிநீக்கு
  6. நல்ல பயமுறுத்தற மாதிரி ஆரம்பிச்ச கதை இறுதியில் புன்னகைக்க வைத்து விட்டது. நன்று.

    பதிலளிநீக்கு
  7. கனவு என்று முடிப்பீர்கள் என்று நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  8. மன்னிக்கவும், தமிழ் மணத்தில் வாக்களிக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  9. :-) நல்லா இருக்கு நண்பா, வாக்களித்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமை தோழரே .... வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. அந்த இரவில்-சிறுகதை

    தலைப்பு என்ன ஒரு மாதிரியா வைக்கிறிங்க

    பதிலளிநீக்கு
  12. கடைசியில் எல்லாம் கனவாக இருக்குமோ என்று நினைத்தால் ... செம காமடி கலாட்டா...

    பதிலளிநீக்கு
  13. அட்டகாசமான ட்விஸ்ட்

    பதிலளிநீக்கு
  14. ////////////////////////
    இடுகைத்தலைப்பு:
    அந்த இரவில்-சிறுகதை ரஹீம் கஸாலி

    Voting from other sites not allowed
    Please vote from the Blog

    சன்னலை மூடு
    /////////////////////////


    ----என்ன இது....? யாருக்கு ஓட்டுப்போட்டாலும் தமிழ்மணத்தில் இன்று இப்படி வருகிறதே...? ஏன்? எனக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமா? என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  15. முஹம்மத் ஆஷிக் said...
    ----என்ன இது....? யாருக்கு ஓட்டுப்போட்டாலும் தமிழ்மணத்தில் இன்று இப்படி வருகிறதே...? ஏன்? எனக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமா? என்ன செய்வது?////

    [si="3"]உங்களுக்கு மட்டுமல்ல நண்பரே.....என் தளம் உட்பட யார் தளத்தில் ஒட்டு போடா முடியாமல் நிறைய நண்பர்களுக்கு இப்படித்தான் வருகிறதாம். ஆனால், என்னால் எல்லோருக்கும் ஓட்டளிக்க முடிகிறது. ஒருவேளை mozila firefox browser- இல் முடியுமோ என்னவோ....[/si]

    பதிலளிநீக்கு
  16. சகோ ஆஷிக்

    //
    ----என்ன இது....? யாருக்கு ஓட்டுப்போட்டாலும் தமிழ்மணத்தில் இன்று இப்படி வருகிறதே...? ஏன்? எனக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமா? என்ன செய்வது?//

    எனக்கும் காலையில் அதே போல் தான் வந்தது. ஒரு முறை சைன்இன் பண்ணிய பிறகு சரியானது....

    பதிலளிநீக்கு
  17. ஒரு வேள அந்த பேய் ஓட்டு பட்டய ஏதாவது பண்ணியிருக்குமோ??

    பதிலளிநீக்கு
  18. கதை கலக்கல்... உங்களது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.... உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  19. உங்கள் தளம் கொஞ்சம் மெதுவாக இயங்குவது போல தெரிகிறது... சரி பார்க்கவும்...

    பதிலளிநீக்கு
  20. கதை நல்லாருக்கு நண்பா... இதை குமுதம் இதழுக்கு அனுப்பலாமே

    பதிலளிநீக்கு
  21. தமிழ்மணம் ஓட்டு விழலைன்னா 3 முறை முயற்சிக்கவும் விழுந்துடுது

    பதிலளிநீக்கு
  22. வாக்களித்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.