என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 10, 2011

21 திருட்டு - சிறுகதை

தான் நடத்தும் மளிகை கடையை திறக்க தன் மகனுடன் வந்த  மாரிமுத்து ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டான். காரணம், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. பதட்டத்துடன் உள்ளே நுழைய  முயன்றவனை அவனது மகன் தடுத்தான்.
"அப்பா...இப்ப உள்ளே போக வேணாம். திருடங்க ஏதாவது தடயத்த விட்டுட்டு போனாலும் போயிருப்பாங்க...எதுக்கும் போலீசுக்கு போன் பண்ணலாம்".
சரியென்று தலையாட்டினார் மாரிமுத்து.
சிறிது நேரத்தில் போலீஸ் வந்தார்கள்.
" என்ன திருட்டு போயிருக்குன்னு பாத்தீங்களா?"
"நீங்க வந்த  உடனே போகலான்னு பையன் சொன்னான்"
"நல்லது. சரி வாங்க போகலாம்"
உள்ளே போய் பார்த்தார்கள். எல்லாம் அப்படியே இருந்தது. திருட்டு போன அடையாளமே இல்லை.
"என்னங்க...எல்லாம் அப்படியே இருக்கு. திருடு போனது போல தெரியலியே?"
"அதான் சார் எனக்கும் புரியல"
"எதுக்கும் கல்லாவப்பாருங்க"
"கல்லாவுல காசேதும் வைக்கிறது இல்லை சார். அன்னன்னிக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போயிருவேன்"
"என்னங்க இது....மர்மமா இருக்கு...பூட்டை உடைச்சு கதவ திறந்திருக்காணுக...ஆனா, உள்ளே இருக்க சாமான்லாம் பத்திரமா இருக்கு. அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வந்திருப்பாங்க?"
"சார் ஒரு நிமிஷம் இருங்க" என்ற மாரிமுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கத்தினார்
"சார் ரெண்டு மூட்டை வெங்காயத்தை காணோம். அதத்தான் திருடிட்டு போயிருக்கானுங்க..."

Post Comment

இதையும் படிக்கலாமே:


21 கருத்துகள்:

  1. வெங்காயம் ரொம்ப பிரபலம் ஆகிட்டே வருது..........

    பதிலளிநீக்கு
  2. பாவம் இந்த வெங்காய மேட்டர் இன்னும் முடியலையா ?

    பதிலளிநீக்கு
  3. இனி வெங்காயம் நா என்னனு கேக்கற நெலம வராம இருந்தா சரி

    பதிலளிநீக்கு
  4. இந்த வெங்காய மேட்டர் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. அந்த Tamil10ல் kkarun09 அப்படீன்னு ஓட்டு போடரது நான்தான் தலைவரே..

    பதிவுலக நண்பர்களே..
    அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்..

    பதிலளிநீக்கு
  6. அது எப்படிங்க டைமிங்கா அடிக்கிறிங்க....

    பதிலளிநீக்கு
  7. கதை அப்படி போகுதா?அருமை.

    பதிலளிநீக்கு
  8. திருட்டு சிறுகதை... அப்படினா இது சொந்த சிறுகதை இல்லையா?

    பதிலளிநீக்கு
  9. இது நல்ல எண்ணைதானே?

    பதிலளிநீக்கு
  10. அவ்வளவு காஸ்டிலியான பொருளையே திருடிட்டு போயிட்டாங்களே, வருத்தமா இருக்கு :-(

    பதிலளிநீக்கு
  11. the story is qualified to published in kumudham. so send it to it. congrats.

    the twist is timing and expectable..

    பதிலளிநீக்கு
  12. தொப்பி தொப்பி, அஞ்சாசிங்கம், smilzz, sakthistudycentre கருண், அரசன், nks.ஹாஜா மைதீன், சித்ரா, ஆசியா ஒமர், பாரத் பாரதி, இரவு வானம், நண்டு நொரண்டு,அட்ராசக்க சி.பி.செ, ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. பாரத்... பாரதி... said...திருட்டு சிறுகதை... அப்படினா இது சொந்த சிறுகதை இல்லையா?///
    [co="yellow"]அய்யய்யோ சொந்தசிறுகதை தானுங்க...சிறுகதையின் தலைப்பின் பெயர் திருட்டு. அவ்வளவே...(என்னமா யோசிக்குதுங்க....)[/co]

    பதிலளிநீக்கு
  14. சி.பி.செந்தில்குமார் said... the story is qualified to published in kumudham. so send it to it. congrats. the twist is timing and expectable..////
    [si="4"]முயற்சிக்கிறேன் தல....[/si]

    பதிலளிநீக்கு
  15. சார் வெங்காயத்தை பற்றியெல்லாம் எழுதுறிங்க நீங்க பெரிய ஆளுதான் சார்.

    பதிலளிநீக்கு
  16. விலை மதிப்பில்லா கதை..குட்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

    நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.